Wednesday, 28 March 2012

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013


குரு பகவான் வைகாசி மாதம் 4 ஆம் தேதி 17.5.2012 வியாழக்கிழமை மாலை 6.24 அளவில் திருக்கணிதம் பஞ்சாங்கப்படி மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்...

17.5.2012 முதல் 31.5.2013 வரை ரிசப ராசியில் சஞ்சாரம் செய்கிறார்..

குரு பார்க்க கோடி புண்ணியம்,,,குரு பார்க்க சகல தோசங்களும் நிவர்த்தி என்பதற்கேற்ப வருடம் ஒரு ராசிக்கு பெயர்ச்சியால் அனேக குற்றங்கள்,தோசங்கள் குறையும்...சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்..

இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நன்மையும் குருபலமும் பெறக்கூடியவர்கள் யார் ..?

மேசம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் குருபலம் பெறுகிறார்கள் இதனால் உத்யோக உயர்வு,வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல்,திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்தல் ,குழந்தை பாக்யம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும் காலம் இது.


எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள்;


மிதுனம்-விரய குரு


மீனம்-மூன்றாமிட குரு


சிம்மம் ராசி-10 ஆம் இட குரு


துலாம் ராசி-அஷ்டம குரு


தனுசு ராசி-ஆறாமிட குரு


கும்பம் ராசி- 4 ஆம் இட குரு


இவர்களுக்கான பலன்களும் பரிகாரமும் விரைவில் எழுதுகிறேன்...ராசிபலன் ஆகட்டும்,குரு பெயர்ச்சி ஆகட்டும்,சனி பெயர்ச்சி ஆகட்டும்..பொதுவாக ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக பலத்தாலும்,திசா புத்தியாலும் பலன்கள் மாறலாம்..உதாரணமாக 4ஆம் அதிபதி திசை...ஒருவருக்கு நடக்கிறது என்றால் அவருக்கு குரு பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ பெரிய கெடுதல் செய்வதில்லை...குரு திசை,சுக்கிர திசை...லக்னத்துக்கு சுபர் திசைகள் அதிக பாதிப்பை தருவதில்லை..தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்..போலீஸ் ஸ்டேஷன் வம்பு வழக்கு என்றால் ஒருவர்க்கு டூ வீலர் லைசன்ஸ் பிரச்சினையில் கோர்ட்டில் தண்டம் அழலாம்..இன்னொருவர் செய்யாத தப்புக்கு ஜெயிலில் தண்டனையும் அனுபவிக்கலம்..இருவருக்கும் ஒரே ராசிதான்..ஆனால் திசா புத்தி வேறு வேறு ஆச்சே..ஜாதகம் வேறு ஆச்சே..எனவே இது எச்சரிக்கை பதிவுதான்..!!.

Saturday, 24 March 2012

பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்

பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்


அலுவலகத்தில் நியாயமான முறையில் வர வேண்டிய பதவி உயர்வு சில காரணங்களால் தட்டிப் பறிக்கப்படும்.அல்லது தள்ளிப் போகும்..இதற்கு எளிய பரிகாரம்,பிள்ளையார்ப்பட்டி கற்பக வினாயகர் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் அல்லது ஆறாவது நட்சத்திரம் வரும் நாளில் சென்று ஆறு தேங்காயில் நெய்தீபம் போடவும்.பின் பதவி உயர்வு வேண்டி அர்ச்சனை செய்யவும்.பின் கோயிலின் வெலியே கொடிமரம் அருகில் 21 தேங்காய் சிதறு தேங்காயாக உடைத்து நன்கு பிரார்த்தனை செய்து விட்டு நேரே வீட்டிற்கு வரவும்.வேறு கோயிலுக்கோ,உறவினர் வீட்டுக்கோ செல்ல வேண்டாம்..!!இம்முறையினால் பலர் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்..!
Saturday, 17 March 2012

காலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்


விவசாய ஜோதிடம்;
மரம்,பழச்செடிகள்,பூச்செடிகள் நட..ஏற்ற நட்சத்திரங்கள்;

பழம்,பூ செடிகள் நட;சுவாதி,கேட்டை,ஹஸ்தம்,புனர்பூசம்,அனுஷம்,மிருகசிரீடம்,ரேவதி,சித்திரை

பாக்கு கன்றுகள் நட;அசுவினி

மரக்கன்றுகள் நட;ரோகிணி

கரும்பு;புனர்பூசம்
பயிறு வகைகள்;சித்திரை

எள்ளு;அனுஷம்

கிழங்கு வகைகள்:மூலம்
உளுந்து;சதயம்

ஞாயிற்றுக்கிழமையில் சூரிய உதயத்தின் போது நெல் விதைகளை விதைக்க வேண்டும்..

வியாழக்கிழமையில் குரு லக்னத்தில் இருக்கும்போது அதிக காலம் விளைச்சல் தரக்கூடிய பழமரக்கன்றுகளை நடவேண்டும்!

-
காலப்பிரகாசிகை என்ற பழமையான ஜோதிட நூலில் இருந்து

Wednesday, 14 March 2012

சதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்..


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அற்புதம்;


சதுரகிரி சித்தர்கள் வாழும் பூமி.தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம்.இக்கோயில் பற்றி நான் நேற்று எழுதியதை படித்த கோவை மணிகண்டன் என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டார்..என்ன சார்..முக்கியமான நிறைய விசயம் எழுதாம விட்டுட்டீங்க..அங்க எவ்ளோ அற்புதங்கள் இருக்கு தெரியுமா..என்றார்..எனக்கு தெரிஞ்சத மட்டும் எழுதினேன்...எனக்கு வழிகாட்டி யாரும் இல்லாம தான் போனேன்..அதனால நிறைய எழுத முடியல..உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க என்றேன்...அவர் சொல்ல ஆரம்பித்தார்.நான் சின்ன வயசுல இருந்து அங்க அடிக்கடி போய்கிட்டு இருக்கேன்..மலையை சுத்தி ஜோதி விருட்சம் மரங்கள் நிறைய இருக்கு...இந்த இலைகளை பறித்து திரிக்கு பதிலாக தீபம் போடலாம்...கல்தாமரை எனும் இலைகள் இங்கு நிறைய இருக்கு.இது சர்க்கரை நோயை முற்றிலும் குணமாக்கும்..நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகம் தரும்..இதை வெளியூர் வைத்தியர்கள் நிறைய பறித்து செல்வார்கள்..இது தாமரை இலை போல இருக்கும்..இது 10 இலை சேர்ந்தாலே ஒரு கிலோ வரும்...இது மார்க்கெட்டில் 350 விலை மதிப்பு இருக்கு..குங்கிலியம் மரம் அதிகம் இருக்கு.அந்த மரத்தின் அடியில் இருக்கும் மண் அவ்வளவு மணமாக இருக்கும்.இந்த மரத்தின் பிசிந்தான் சாம்பிராணி தூள் ஆக்குகிறார்கள்...இந்த மரத்தின் அடியில் இருக்கும் மண் மதிப்பு மட்டும் கிலோ 150 ரூபாய்.இங்குள்ள மக்கள் இதைதான் அதிகம் விற்று பிழைக்கிறார்கள்...பெரியாநங்கை செடி இங்கு அதிகம் உண்டு..இதன் வேரை 48 நாட்கள் ஊற வைத்து அருந்தி வந்தால் பாம்பின் விஷம் கூட உடலில் ஏறாமல் முறியும்...பாம்பு இந்த செடியை கண்டால் நடுங்கும்..இதைபோலவே நாகதாளி வேரும்...பாம்பு அஞ்சும் மூலிகை....செந்நாயுருவி இங்கு நிறைய இருக்கு..இதை மென்று சிலர் வசியமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...செங்குமரி,கருப்பு மஞ்சள் போன்றவையும் இங்கு உண்டு..இது இரும்பை தங்கமாக்கும் மூலிகயில் முக்கியமானவை ....

நாங்கு குன்றுகளிலும் நான்கு காவல் தெய்வங்கள் இருந்து காவல் காக்கின்றனர்...நடுவில் சுந்தரமகாலிங்கம்,சந்தன மகாலிங்கம் இருக்கின்றனர்..வெள்ளைப்பிள்ளையார்...தவசிப்பாறை..குகை மகாலிங்கம் சிவனை அவசியம் தரிசிக்கணும்..மலையின் உச்சியில்,சிறிய குகை இருக்கும்..இங்கு ஒரு புலி செல்லும் அளவுக்கு குகை வாசல் இருக்கும்.இதனுள் சிறிது தூரம்..தவழ்ந்து சென்று..சிறிது தூரம்..ஊர்ந்து சென்று,நுழைந்தால் நின்று கொள்ளும் அளவு இடம் இருக்கும்.அங்கு பெரிய மகாலிங்கம் தரிசனம் செய்யலாம் என்றார்..இன்னும் பல அற்புதங்கள் சொன்னார்..எழுதுகிறேன்..!!!

Friday, 9 March 2012

குழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக அலங்காரம்

குழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக அலங்காரம்

’’மானேகேள் குதிரை மூல மகமுதற்காலும் பின்னும்
ஈனரேவதியுங்கேட்டை யாயில்யமிவைபிற்காலும்
ஊனநாழிகையோர் நான்குட்டாதை மூன்றாய்ரெண்டுக்கும்
ஆனநற்றுணைவர் மூன்றினான்கிற் சேய்க்குறுமரிட்டம்.’’

-ஜாதக அலங்காரம்

விளக்கம்;

அசுவினி,மூலம்,மகம் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்த நட்சத்திரத்தின் முதல் பாதம்,ரேவதி,கேட்டை,ஆயில்யம் ஆகிய மூன்று நாழிகைகளில் பிறந்தால் முதல் நாழிகையில் தந்தைக்கும்,இரண்டாவது நாழிகையில் தாய்க்கும் மூன்றாவது நாழிகையில் சகோதரர்களுக்கும் நான்காவது நாழிகையில் குழந்தைக்கும் கண்டமாகும்..அதாவது உயிருக்கோ,உடல்நிலை ஆரோக்யத்திலோ பாதிப்பு உண்டாகலாம்..அல்லது பிரிவு உண்டாகலாம் என ஜாதக அலங்காரம் சொல்கிறது..

ஜோதிடம்,ராசிபலன் இவற்றில் முக்கியமானது நட்சத்திரம்..அதிலும் அம்மா,அப்பா,அக்கா,அண்ணன்,அண்ணிக்கு பாதகம் இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது என்பது கடினமானது..பிரசவிக்கும் நேரம் எப்போது என அறியாமல் அதை எப்படி சரி செய்ய முடியும்..அது இயற்கையல்லவா என்றால்...அதை சரி செய்ய முடியாது.ஆனால் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணை நல்ல நாளில் பார்த்து,நல்ல நேரத்தில் கல்யாணம் செய்து,நல்ல நேரத்தில் முதலிரவு வைத்து ,நல்ல நாளில் மட்டும் தாம்பத்யம் கொண்டால் குழந்தை பிறப்பதும் நல்ல நேரத்தில்தான் அமையும்..ஆடி மாசம் செக்ச் வெச்சிக்கிட்டாசித்திரை மாதம் குழந்தை அக்னி வெயிலில் பிறந்து நோயாளியாக தவிக்கும்..நிறைய நோய்கிருமிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும்.அற்ப ஆயுளால் இறந்துவிடும் என கணித்து செயல்பட்டு ஆடி மாசம் புது மணதம்பதியை பிரித்து வைத்த நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவானவர்கள்..?

துப்பாக்கி - வீடியோ

துப்பாக்கி - வீடியோ


Tuesday, 6 March 2012

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

கீரனூர் நடராசன் என்பவர் கி.பி.1725 ஆம் வருடத்துக்கு முன் வடமொழியில் இயற்றியிருந்தஹோராசாரம்,சாராவளி,பாராசாரியம்,சந்தானதீபம்,பிரகத்ஜாதகம்,சருவார்த்த சிந்தாமணி,மணிகண்ட கேரளம் சம்புநாதம் முதலிய பல சோதிட நூல்களின் முக்கியமான கருத்துக்களை தொகுத்து சாதகாலங்காரம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.இதனை படிக்க மிக கஷ்டமாக இருக்கும்.கடினமான செய்யுள் வெண்பாக்களால் இயற்ற்ப்பட்டிருந்தது..அந்த நூலுக்கு 1900 ஆம் ஆண்டில் முதன்முறையாக கோவை அனுப்பர்பாளையம் முருகைய்யா ஜோதிடர் மூலமும்,விரிவுரையும் எழுதினார்.அதன்பிறகு பலரும் பல விரிவுறை விளக்கம் எழுதி இந்த நூலை வெளியிட்டு வருகின்றனர்..

ஆனால் சோதிடர்களுக்கு இது அடிப்படை பாட நூலாகும்..இதை கற்காமல் மனனம் செய்யாமல் ஜோதிடத்தில் அடுத்தக் கட்டத்துக்கு போக இயலாது...புலிப்பாணி ஜோதிடம் பாடல்கள் எப்படி ஜோதிடர்களின் அடிப்படை பாடமோ அது போல சாதகாலங்காரம் முக்கிய பாட நூல்.

விஷ்ணு யோகம் பற்றி ஒரு பாடல்;

உள்ள பத்தாமதிபதியு மொன்பானங்கிசந்தானேறி
மெள்ளயிரண்டாமிடத்திலுற விரும்பியான்பான்றனஞ்சேறில்
கள்ள விஷ்ணுயோக பலன் கதித்தவரசரடி தொழவே
கொள்ளும் ல்க்‌ஷம்பொன்றேடிக் குலாவிநிருப்பனீரேழ் மேல்.

விளக்கம்;

பத்தாமிடத்தோன் ஒன்பதாமிடத்தோனது அங்கிசத் தேறி இரண்டாமிடத்திலிருக்க ஒன்பதாமிடத்தோன் இரண்டாம் ஸ்தானத்தை சேர்ந்தால் விஸ்ணு யோகமாகும்..பலன் மேலான அரசர்களெல்லாம் தன்னடி தொழ பதினாங்கு வயதுக்கு மேல் லட்சம் பொன் சம்பாதித்திருப்பான்...(பாடல் 357)

-தொடரும்)