Monday, 28 May 2012

ஜோதிடம்;சுக்கிரன்,செவ்வாய் லீலைகள்

ஜோதிடம்;சுக்கிரன்,செவ்வாய் லீலைகள்

ராசிபலன்;ஜாதகத்தில் சுக்கிரன்,செவ்வாய் பங்கு மிக முக்கியமானதுஎனலாம்..செவ்வாய் நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு அதிபதி ஆகிறார்..போர் தளபதி செவ்வாய்...கோபம்,வீரம் போன்றவற்றுக்கு முக்கிய காரண கர்த்தா செவ்வாய்....இவருக்கு உரிய தெய்வம் முருகன்....

ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் பயம் அதிகரிக்கும்...தனக்கு எப்போது பிரச்சினை வருமோ என பயம் கொள்ள வைக்கும் கீழான ஆட்களால் தொந்தரவுகளை சந்திக்க நேரும்....ஆனாலும் பலரால் விரும்பபடுவார்கள்..இவங்ககிட்ட எதிர்ப்புணர்வு அதிகம் இல்லையே அதனால்...ஆனால் கோபம் சட்டென வரும்..அதைவிட பயம் அதிகம் இருக்கும்...பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது..கணவனுக்கு பாதிப்பு தருகிறது...பலமுள்ள செவ்வாய் கணவனை அடக்கி ஆளவும் ,கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது..செவ்வாய் அதிக வீரியமுள்ள கிரகம் என்பதால் காம உணர்வை தூண்டுவதில் அதாவது எண்ணத்தை செயல்படுத்துவதில் வல்லவனாக திகழ்கிறது

களத்திரகாரகன் சுக்கிரன்..இவர் ஆணின் விந்தணுக்களுக்கும்,பெண்களின் கருமுட்டைகளுக்கும் காரகத்துவம் ஆகிறார்..சுக்கிரன் கெட்டால் இவை கெட்டுப்போகும்...விந்தணு குறைபாடு,கருமுட்டை வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகள் உண்டாகும்...

சுக்கிரன் பலம் அழகிய தோற்றத்தை உண்டாக்குவார்..சுக்கிரன் பலம் பெற்றால் சினிமா நடிகை குஷ்பூ,ஹன்சிகா போல,,கார்த்தி ,மாதவன் போல அழகிய தோற்றம் பெறுவார்கள்....

பெண்கள் சம்பந்தமான பாலியல் நோய்களையும்,சிறுநீரக கோளாறுகளையும் சுக்கிரனே கொடுக்கிறார்...

சுக்கிரன்,செவ்வாய் இணைந்தால் அதிக உணர்வுகளை தூண்டிவிடுகிறார்..இதனால் எதிர்பாலினரால் பல பிரச்சினைகளை சந்திக்க வைக்கிறார்..செவ்வாய் 7ல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்..பார்க்கும் கிரகங்களை பொறுத்து பலன் மாறும்...

Tuesday, 22 May 2012

குரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்?

குரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்?


நல்ல நேரம் பார்ப்பது;

ராசிபலன் பார்ப்பதில் இருக்கும் சூட்சுமம் என்னன்னா,நாம ஒரு முக்கிய காரியம் நினைச்சிக்கிட்டு இருப்போம்..அதை எப்போ எப்படி செய்றது என்பதில்தன் முதல் குழப்பம் வரும்..அரம்பிக்கிற காரியம் நல்லபடியா முடிக்க ஸ்வீட் சாப்பிட்டா மட்டும் பத்தாது...நல்ல நாளிலும் ஆரம்பிக்கணும்..சந்திராஷ்டமம் இல்லாத நாளாகவும் ராசிக்கு சந்திரன் மறையாத நாளாகவும்..அதாவது கெடாத நாளாகவும் இருக்கணும்..சந்திரன் 2,3,6,10,11, இவைகளில் இருந்தால் மிக நல்லது...இவற்றை லாபமான நாளாக ராசிபலனில் குறிப்பிடுவோம்....அதை அனுசரித்தும் குருபலம் அமைப்பு இருக்கிறதா என்பதை பொறுத்தும் நல்ல காரியத்தை செய்யலாம்..குருபலம் இல்லாவிட்டாலும் ராசிபலன் முறையில் உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சந்திரன்,8ல் சந்திரன்,12ல் சந்திரன் இருக்கும் காலங்களில் நமக்கு தடை,தோல்வி,விரயம்,அலைச்சலே உண்டாகின்றன....

சரி,குருபெயர்ச்சி ஆகிவிட்டது..குருபெயர்ச்சியால் அதிக நன்மை பெறும் ராசிகள் எதுவென பார்ப்போம்....மேசம் ராசிக்கு இரண்டில் குரு வந்துவிட்டார்..இது குருபலம்..தனஸ்தானத்தில் நிற்கும் குரு தனத்தை அள்ளித்தருவார்..சுபகாரியத்தை நடத்தி வைப்பார்...பேச்சில் இனிமை கூட்டுவார்...குடும்பத்தில் மகிழ்சியை புரள வைப்பார்....அது மட்டுமில்லாமல் குரு பெயர்ச்சியாகி செல்லும் முதல் நட்சத்திர சாரமே கிருத்திகை..இவர்களுக்கு யோகாதிபதி நட்சத்திரம்..மேலும்..தொடர்ச்சியாக 10 மாதங்கள் சுகாதிபதி சந்திரனின் சாரமான ரோகிணியில் வேறு தங்குகிறார்..எனவே மேசம் ராசியினருக்கு குரு அதிக பலனை அள்ளி வழங்குவார் என எதிர்பார்க்கலாம்...கன்னி,விருச்சிகம் ராசியினருக்கும் இந்த குருபெயர்ச்சி சிறப்பான பலன்களை அள்ளிதரப்போகிறது...பபுண்ணிய நதி நீராடல்களும்,வெண்டுதலை நிறைவேற்றும் பாக்யமும் வாழ்வில் பல முக்கிய மகிழ்ச்சியான சம்பவங்களும் இந்த ஆண்டில் இவர்களுக்கு நடக்கும்!

பொதுவான சில குறிப்புகள்;

பங்கு சந்தை இந்திய ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்ததும் கவனித்திருப்பீர்கள்..முன்பு குரு மகரத்தில் நீசமானபோது உலக பொருளாதார வீழ்ச்சி உண்டானது..இப்போது குரு தன் பகைவீடான ரிசபத்துக்கு சென்றதும் ரூபாய் (தனம்) மதிப்பு சரிந்தது..!

ரோஹிணி சாரத்தில் குரு இருப்பது எந்த ராசியினருக்கு எல்லாம் அவயோகமோ அவர்களுக்கு சுமாரான பலன்களே தரும்...தனக்கு எதிர்கிரகமான சுக்கிரனின் வீட்டில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட்,கட்டிடத்துறை,பாதிக்கப்படும்..புகழ்பெற்ற மூத்த கலைஞர்கள்,வயதான பெரும் தலைவர்களுக்கும்,மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகழ்பெற்ற கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பு உண்டாக்கும்....குரு செவ்வாயை பார்ப்பதால் கொடிய நோய்களான புற்றுநோய்,எயட்ஸ் போன்றவற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம்...

ஏழைகளுக்கு மருத்துவ செலவுகள் குறையும் விதத்தில் அரசால் புதிய திட்டங்கள் வழங்கப்படலாம்..அவை பெரும் வரவேற்பை பெறும்..சந்திரன் சாரத்தில் குரு செல்வதால் தண்ணீர்ல கண்டம் இருப்பவர்கள் கவனம்....தொற்று நோய்கள் அதிகரிக்கும்...பழைய புகழ்பெற்ற தொற்று நோய்கள் திரும்ப வரலாம்......மத்தியில் இருக்கும் முக்கிய பெண் தலைவருக்கு பாதிப்பான வருடமாகவும் இருக்கும்!!


ஜோதிடம்;மாணவர்களுக்கு ராசிபலன் பார்க்கலாமா?

ஜோதிடம்;மாணவர்களுக்கு ராசிபலன் பார்க்கலாமா?

என் மகன் ராசிக்கு குருபெயர்ச்சி எப்படி இருக்கு..அவனுக்கு சரியில்லாம போனா ரிசல்ட் சொதப்பிடுமே என பிளஸ் டூ ரிசல்டுக்கு காத்திருக்கும் பெற்றோர்களுக்கு பதட்டம் தொற்றிக்கொள்வது இயற்கை...நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்குற பையனுக்கு குரு பெயர்ச்சி சாதகம இல்லைன்னா என்னாகும்..? ஒண்ணும் ஆகாது...அவன் மார்க் குறையுமா...குறையாது..என்ன சார் இப்படி சொல்றீங்கன்னு கேட்கிறிங்களா..?ஆமாங்க அதான் உண்மை..காரணம் என்னன்னா..வெறும் ராசிபலன் மட்டும் பார்த்து அவன் த்லைவிதியை நிர்ணயிக்க முடியாதுன்னு சொல்றேன்...

ஜாதகத்தில் கல்வி கிரகங்கள்..அதாவது நினைவாற்றல் கிரகம் புதன்...ஞானத்தை தரக்கூடிய குரு,மனபலத்தை ,மனத்தெளிவை தரக்கூடிய சந்திரன் கெடாமல் இருந்தால் லக்னத்துக்கு 2,3,4 ஆம் இடங்கள் கெடாமல் இருந்தால் நல்ல கல்வி அமையும்...அது ஜெயிக்கிற குதிரை..எந்த கோட்சாரத்துக்கும் கட்டுப்படாது..புதன் திசை அல்லது குரு திசை..அல்லது லக்னத்துக்கு சுபர்,யோகாதிபதி திசை நடந்தா படிப்பு ஜம்முன்னு இருக்கும்..புதனுடன் கேது இருந்தால் அவன் படிப்புக்காக பெற்றோர் படாதபாடு படணும்..எவ்வளவு படிச்சாலும் தலையில ஏறாது ...ன்னு நாடி ஜோதிடம் சொல்லுது....ராகு இருந்தாலும் இந்த சிக்கல் உண்டு...

நல்லா படிக்கிற பசங்களை உனக்கு டைம் சரியில்லை..பார்த்து படின்னு நீங்களும் பதட்டம் ஆகி,அவனையும் பதட்டம் அடைய வெச்சிடாதீங்க..குருப்பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி எதுவானாலும்..உங்கள் குழந்தைகளிடம் சொல்லி சோர்வடைய வைத்துவிடாதீர்கள்...உன் ராசிக்கு அஷ்டம சனி வேற ...குருபலமும் இல்லையாம்...பிளஸ்டூ ரிசல்ட் எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு...மார்க் குறையுமோ இல்ல..ஏதாவது பாடத்துல கோட்டை விட்ருவியோ தெரியலை என தன் மகனிடம் புலம்பிய ஒரு அப்பாவை பார்த்து கேட்டேன்..,

இன்னும் பாதி பரீட்சையை அவன் எழுதலை..அதுக்குள்ள அவனுக்கு சோர்வை உண்டாக்குற மாதிரி பேசுறீங்களே..இது அவனுக்கு மனரீதியா தெம்பு கொடுக்காது...படிப்புல சலிப்பை உண்டாக்கும் தெரியுமா என்றேன்...அவர் அப்போதும் ராசிபலன் கவலையிலேயே இருந்தார்....ஜாதக கட்டம் நல்லாருந்தா எந்த பாதிப்பும் கோட்சாரம் தரமுடியாது..அப்படி தந்தாலும் நல்லா படிக்கிற பையனுக்கு உடல்நலக்குறைவு அடிக்கடி வரலாம்...அவன் படிப்பை தலைகீழாக மாற்றிவிடும் என எண்ணாதீர்கள்..

Sunday, 20 May 2012

திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம்

திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம்;

சினிமா ஹீரோ விஜய்,சூர்யா மாதிரி இல்லைன்னாலும் நமக்குன்னு ஒரு ஹீரோ கிடைச்சா பரவாயில்லையே என தகுதி இருந்தும் பல வித சூழல்களால் திருமணம் தாமதமகிக்கொண்டே வரும் கன்னிப்பெண்கள் அதிகம்....ஆரம்பத்துல சினேகா,நயன்தாரா மாதிரி பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம் பிடிச்சிட்டு அப்புறம் ஏதோ சுமாரா இருந்தாக்கூட போதும் கல்யாணம் ஆனா சரி என்ற சலிப்புக்கே வந்துவிட்ட ஆண்களும் இன்று அனேகம்....

திருமண தாமதம் என்றால் திரும்ணஞ்சேரி,காளகஸ்தி என ஒரு ரவுண்ட் அடிச்சி பரிகாரம் செஞ்சிட்டு வருகிறோம்...இங்க வந்துட்டு போனா லேட் ஆகுறதே இல்லை என்பதுதான் காலம் காலமாக இருக்கும் முக்கிய நம்பிக்கை..ஆனா அங்கு போய் வந்து சில ஆண்டுகளாகியும் கல்யாணம் ஆகாமல் தடைபடுவது ஒரு சோகம்...பவானி,கொடுமுடியை பொறுத்தவரை நல்ல ராசியான பிராமணரை வைத்து பரிகாரம் செய்தால் உடனே திருமணம் ஆகிவிடும்...

களகஸ்தி,திருமணஞ்சேரி மட்டும் போய்விட்டு வந்து பரிகாரம் எல்லாம் முடிச்சாச்சு என சொல்பவர்கள்தான் அநேகம்..குருபலம் வந்தாலும்,ஜாதகத்தில் கோட்சாரத்தில் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்,அல்லது சுக்கிரனை எப்போது பார்க்கிறதோ அந்த வருடம் திருமணம் தடையில்லாமல் நடந்துவிடும்..வெறும் குருபலனை மட்டும் வைத்து திருமணம் நடந்துவிடும் என சொல்லிவிட முடியாது...7க்குடையவன் ,சுக்கிரன்,குரு,பாக்யாதிபதி புத்தியும் திசாபுத்தியில் நடக்கவேண்டும்...இவை இருந்தால் திருமண தாமதம் இருப்பதில்லை...எப்போது இவை வருகிறதோ அப்போது திருமணம் கூடி வரும்...

பெண்கள்,ஆண்கள் ஜாதகத்தில் சில கிரகங்கள் ஏடகூடமாக அமரும்போது ,திருமண பொருத்தத்துக்கு நம் ஜாதகம் போகும்போது இதை ஜோசியர் தவிர்த்துவிடுகிறார்..இதனால் பல தாமதம் உண்டாகிறது...இது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்...

சிலருக்கு குடியிருக்கும் வீடு அல்லது பூர்வீகம் சரியில்லாமல் சுபகாரியம் நடத்த முடியாமல் தடை ஏற்படுத்தலாம்..அதையும் கவனித்து இடம் மாறும்போது பலருக்கு திருமணம் ஆகியிருக்கிறது..

கரூர் அருகில் உள்ள தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்டரமர் கோயில் வழிபாடு செய்தால் திருமணம் தாமதமில்லாமல் நடக்கும் என ஏற்கனவே எழுதியிருந்தேன்......சினேகா,பிரசன்னா வெண்டுதல் நிறைவேறுதலுக்காக,இங்கு வந்தபோதுதான் பலர் ஓடிச்சென்று தாங்களும் வழிபட்டு வந்தனர்...இந்த கோயில் திருமணம் தடை,குழந்தை பாக்ய தடை போன்ற வேண்டுதல்களுக்கு உடனே நிவர்த்தி செய்து தரும் தலம் என்பதல் மிக பிரபலம்...நெரூர் சதாசிவ சித்தர் வரைந்து வைத்த அபூர்வ ஜனவசிய யந்திரமும் இங்கு இருக்கிறது...நின்ற கோல பெருமாளான இவர் நம் துன்பங்களை உடனே நிவர்த்தி செய்து தரும் அற்புத மூர்த்தியாவார்..இங்கு வெள்ளிக்கிழமையில் சென்று நெய்தீபம் ஏற்றி,துளசிமாலை சார்த்தி வணங்கி வாருங்கள்..இங்கு நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ளுங்கள்..நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்!!

குருபெயர்ச்சி பலன்கள் 2012 -2013; மீனம் ராசிபலன்

குருப்பெயர்ச்சிபலன் 2012 -2013;மீனம் ராசிபலன்

பூரட்டாதி4,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை சார்ந்த மீனம் ராசி அன்பர்களே...குருவின் சொந்த வீடான மீனத்தில் பிறந்தவர் என்பதால் அன்பு,கருணை,மனிதாபிமானம்,ரசனை,பிறருக்கு உதவுவதில்அதிக விருப்பம்,உடையவர் நீங்கள்...மாறாத புன்னகையும்,தொழிலில் அதிக ஆர்வமும் உடையவர்...குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்..அதிக முன்னெச்செரிக்கை உடைவர்....

நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்தது போல அஷ்டம சனி பயமுறுத்துகிறார்..இதில் குருபெயர்ச்சியும் சுமார்தான் என்கிறார்களே என கலங்கவேண்டாம்...குரு,புதன்,சுக்கிரன் ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கும் ஆற்றல் அதிகம் இயற்கையில் இருப்பதால் இவர்களை அஷ்டம சனி அதிக கஷ்டம் கொடுப்பதில்லை..தன்னம்பிக்கை,தரியத்தை இழக்க வைக்கும் மூன்றாமிடகுரு என சொல்லப்பட்டாலும்,உங்களுக்கு 3 ஆம் இட குரு நன்மையே செய்வார்..

உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதியும்,யோகாதிபதியுமான சந்திரன் சாரத்தில் குரு 10 மாதங்கள் இருப்பதால் உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே இருக்கும்..பல வழிகளிலும் பணம் வந்து சேரும்..தொழிலில் இருந்தௌ வந்த சிக்கல்கள் தீரும்...சுப காரியங்கள் 2ஆம் இட குருவிலியே நடந்திருக்க வேண்டும்..அதில் தடைபட்டவர்களுக்கு பூர்வபுண்ணியாதிபதி சாரத்தில் செல்லும் குருவின் அருளால் நடைபெறும்...குரு ராசிக்கு 7ஆம் வீட்டை பார்ப்பதால் கணவ்ன் மனைவிக்குள் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும்...குரு தனக்காரகனின் ராசி என்பதால் பணம் சம்பந்தமான சிக்கல்கள் குரு மறையும்போதெல்லாம் உண்டாகும்..எனவே கொடுக்கல் வாங்கல் விசயத்தில் எப்போதும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்..இல்லையெனில் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்..

நீரிழிவு,ரத்தக்கொதிப்பு பிரச்சினை உள்ளவர்கள் இயற்கை வைத்தியம் ,சரியான உடற்பயைற்சி,மருத்துவர் ஆலோசனையின் படி நடத்தல் மிக அவசியம்....

பெரியவர்களுக்கு உதவி செய்யுங்கள்...இயலாதவர்களுக்கு, உடைதானம் செய்யுங்கள்.....குருவருள் உண்டாகும்!!

Friday, 18 May 2012

குருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்

அவிட்டம் 3,4,சதயம்,பூரட்டாதி 1,2,3 பாதங்களை சேர்ந்த கும்பம் ராசி..குன்று போல குணம் அமைந்த ராசி அன்பர்களே....இதுவரை மூன்றாமிட குரு சில மனச்சங்கடங்களையும்,தன்னம்பிக்கை,தரிய இழப்பையும்,சில அவமானங்களையும்,பண இழப்பையும் இதுவரை கொடுத்திருப்பார்..இனி அவ்வாறு இல்லாமல் 4 ஆம் இட குரு உங்களை காப்பார் என நம்பலாம்...

நிலம்,சொத்துக்கள் சார்ந்த முதலீடு செய்யும் காலம்..வீடு கட்டும் வேலை தொடங்குவீர்கள்..சிலர் பூர்வீக சொத்துக்களை மீட்கும்முயற்சிகளில் இறங்குவீர்கள்....

இதுவரை முடங்கி இருந்த முய்ற்சிகள் எல்லாம் இனி தடைகளை தகர்ந்து சுறுசுறுப்பாக காரியம் சாதகமாக முடியும்...உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்4 ஆம் இட குரு ஆரோக்கியத்தை பாதிக்க செய்யலாம்..தாயாருக்கு கண்டத்தை தரலாம்..மருத்துவ செலவுகள் உண்டு...

உறவினர்களிடம் வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள்...கணவன் மனைவிக்குள் ஈகோ மோதல்கள் வேண்டாம்..மனம் வருந்தும்படி பெரிய பிரச்சினையாக உருமாறலாம்..வீடு,தொழில் செய்யுமிடம் மாற்றௌம் எண்ணத்தில் இருந்தவர்கள் அதை உடனே செய்யுங்கள்...இடமாறுதல் செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும் என நம்பலாம்.......

3 ஆம் இட குரு வை விட 4ஆம் இட குரு நல்ல பலன்களே தரும்..குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் நஷ்டங்கள் ஏதும் வராது...திடீர் பண வரவுகள் உண்டாகும்..தங்கம்,வெள்ளி சேரும்..முதலீடுகள் லாபம் தரும்..குரு 10 ஆம் வீட்டை பார்ப்பதால் தொழிலில் முன்பு இருந்த இருந்த மந்த நிலை இனி இருக்காது....லாபகரமாக தொழில் இயங்கும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்கும்....

அன்னதானம்,பெரியோர்களுக்கு உதவி செய்து குருபகவானை வழிபடுங்கள்...

குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்

உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சர்ந்த அன்புள்ளமும்,கடும் உழைப்பும் கொண்ட மகரம் ராசி அன்பர்களே....உங்கள் ராசிக்கு குரு 17.5.2012 முதல் பஞ்சம ஸ்தானம் எனும் வெற்றி ஸ்தனமாகிய ஐந்தாம் இடத்துக்கு மாறுகிறார்..இது அருமையான குருபலம் ஆகும்..குருபலம் இருந்தால் பணபலம்..மனபலம் அல்லவ...எனவே இனி உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்....


இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் தடைகளை தகர்ந்து நீங்கள் நினைத்தது போல நடக்கும்..சுபகாரியம்,திருமணம் மகிழ்ச்சியாக எண்ணியதுபோல நடக்கும்...

தொழிலில் இருந்துவந்த மந்த நிலை அகன்று சுறுசுறுப்பு அடையும்..புதிய தொழில் வாய்ப்புகள் கூடி வரும்..பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..உறவு,நட்புகளில் இருந்துவந்த கசப்புகள் நீங்கி சந்தோசமும்,குதூகலமும் குடிகொள்ளும்...

உங்கள் ராசியை குருபார்ப்பதால் முகத்தில் தெளிவு பிறக்கும்...இனி சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள்..மனதில் இருந்துவந்த குழப்பமெல்லம் அகலும்..வண்டி வாகனம்,சொத்துக்கள்,நிலம்,நகைகள் வாங்கும் யோகமும் வந்து சேர்கிறது..பெரிய மனிதர்களின் தொடர்பும் அதன்மூலம் பல நல்ல விசயங்களும் சாதித்துக் கொள்வீர்கள்....சனியும் சாதகமாக அமைந்து குருவும் பலம் பெற்றுவிட்டதால் இந்த வருடம் உங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை....

அன்னதானம்,பெரியோர்களுக்கு உதவி,செய்து குருவுக்கு நன்றி செலுத்துங்கள்

Thursday, 17 May 2012

குருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்

குருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்

குருபகவானில் சொந்த வீட்டை ராசியாக கொண்ட அன்பரே....மனிதாபிமானம்,இரக்க சுபாவம்,கடவுள் நம்பிக்கை,பிறருக்கு மனம் கோணாமல் உதவி செய்தல்,ஆலயபணி,மக்கள் பணி போன்றவை உங்கள் உங்கள் முக்கிய குணம்....இதுவே உங்கள் செல்வாக்கு உயர முக்கிய காரணம்..இதனால் நண்பர்கள் மத்தியிலும்,உறவினர்கள் மத்தியிலும் ,ஊராரிடத்திலும் நல்லபெயர் எடுத்து நல்லமனுசன் என பெயர் பெற்று திகழ்வீர்கள்...அன்பும்,கருணையும் உங்கள் இரு கண்கள்...


இதுவரை உங்கள் ராசிக்கு 5ல் இருந்துவந்த குருபகவான்..இனி உங்க ராசிக்கு 17.5.2012 முதல் 6 ஆம் வீட்டுக்கு மாறுகிறார்..இது கொஞ்சம் சிக்கலான இடம்தான்..கடன்,நோய் ஸ்தானம் ஆச்சே..அதிக செலவுகள் இழுத்து விட்டுடுமே ஏற்கனவே ஊருக்கும்,நண்பர்களுக்கும் பணத்தை வாறி இறைச்சிட்டு திணறும்போது இந்த சிக்கல் வேறயா..என குருபகவானை தேடி இப்போதே பலர் திட்ட,ஆலங்குடி குருபகவானை தரிசிக்க சென்று இருப்பீர்கள்..ஏன்னா சிரமப்பட்டு,அதிக செலவழிச்சு,பெரிய லெவல்லா..கும்பிட்டாதான் சாமி கும்பிடக்கூட உங்களுக்கு பிடிக்கும்..உள்ளூர்ல கும்பிடுறது மனசுக்கு நிறைவை தராமல் உங்களுக்கு சங்கடமா இருக்கும்..

ராசிக்கு 6ல் வரும் குருவால் அதிக பண விரயம்,மருத்துவ செலவுகள் ,பணி செய்யுமிடத்தில் கடும் அலைச்சல்,பஞ்சாயத்துக்கள் உங்க பேர்ல தப்பில்லைன்னாலும் எங்கியோ போற பஞ்சாயத்து எல்லாம் அண்ணே நீங்கதான் தீர்த்து வைக்கணும்னு வாசல்ல வரிசை கட்டி நிக்கும்...அதுல உங்க பேரும் கொஞ்சம் ரிப்பேர் ஆகும்..நண்பண்டா ...அவனுக்கு உதவலைன்னா நான் வேஸ்ட்னு களத்துல இறங்குனா..லைட்டா உங்களுக்கு சேதாரம் இருக்கு..சொல்லிட்டேன்...

பணம் கொடுக்கல் வாங்கலில் புதிய நபர்களை நம்ப வேண்டும்..நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு அள்ளிக்கொடுத்தா...பார்த்த விழி பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான் பணம் அம்போ...! எதையும் அவசரமா செய்யாம கொஞ்சம் நிதானிச்சு செயல்படுங்க....ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்குறவங்க..இதுவரை அலட்சியமா இருந்தது ஓகே..இனி அப்படி முடியாது..மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழல் வரலாம்...

கெட்டபலனா சொல்றேன்னு சங்கடப்படாதீங்க..நீங்க நல்ல மனுசன்...சிக்கலில் சிக்கிக்க கூடாதுன்னுதான் இந்த அலரா மணி...குரு 6ல் இருந்தாலும் தனஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவுக்கு பஞ்சம் இருக்காது..அதனால் செலவுகளை சமாளித்துவிடலாம்...

குரு 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலுக்கு பாதிப்பு வராது...தொழிலில் முன்னேற்றம் உண்டு..ஆனால் கடுமையான பணி சுமையும் உண்டு..பணம் வருது ஆனா வேலை கஷ்டம் என்பீர்கள்...

ஆடம்பர செலவுகளை குறைத்து,உடல்நலனில் கவனம் செலுத்தினால் போதும்....குரு பாதிப்பு தராமல் உங்களை காப்பார்..அன்னதானம் செய்யுங்கள்..நல்லதே நடக்கும்!!


குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராசிபலன்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராசிபலன்

எதையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக பேசிவிடும் விருச்சிக ராசி அன்பர்களே....செவ்வாய் வீடு ராசிக்காரர் என்பதால் கொஞ்சம் துடுக்கென பேசிவிடுவீர்கள்..சந்திரன் அங்கே நீசம் என்பதால் பேசியதற்காக வருத்தம் அடைவீர்கள்..மனதில் அன்பும்,பாசமும் பொங்கி வழியும் அதை உங்களுடன் இருப்பவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்..அதை வெளிப்படுத்தவும் தெரியாமல் தவிப்பீர்கள்..பல சமயம் உங்கள் முன்கோபமே பிறருக்கு பெரியதாக தெரிவதால் உங்கள் அன்புள்ளம் பலருக்கு புரியாமலே போய்விடுகிறது..பலாப்பழம் மேலே முள்ளாகத்தானே இருக்கும்...

ஏழரை சனி வேறு ஆரம்பிச்சிருச்சி..குருப்பெயர்ச்சியும் நமக்கு சாதகமா இருக்குமா..இல்லை காலை வாரி விட்ருமா என நீங்கள் கவலைப்படுவது புரிகிறது...17.5.2012 முதல் குரு உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்....இது சுமாரான இடம்தான் என்றாலும் பாதகமில்லை...

குரு உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் உங்கள் முகம் மலர்ச்சியடையும்..உங்கள் குணாதிசயத்தில் மாற்றம் உண்டாகும்..இதனால் உறவினர்கள் உங்களை நாடி வருவர்..பழைய நண்பர்களும் நட்பு பாராட்டுவர்..தொட்டதெல்லாம் நினைத்ததெல்லாம் நிறைவேறும்..கணவன் மனைவிக்குள் இருந்த ஈகோ மோதல்கள்,தீரும்..அன்பு,மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வழியும்....

வீடு,சொத்துக்கள் சன்பந்தமான வில்லங்கள் அகலும்..திருமண முயற்சிகளில் இனியும் தாமதம்,தடங்கல் நேராது....மனதுக்கு பிடித்தார்போல வாழ்க்கை துணை அமையும்....

மருத்துவ செலவுகள் கட்டுபடும்..குழந்தைகளின் கல்வி சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...கடன் பிரச்சினை அகலும்...அலைச்சல்,திரிச்சல்,வேலைபளு சற்று அதிகமாகத்தான் இருக்கும்....

பெரியோர்களை வணங்கி குருவருள் பெறுங்கள்!!!

Wednesday, 16 May 2012

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013;துலாம் ராசி

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013;துலாம் ராசி

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்..அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் என்னையே சேரும் என தன்னம்பிக்கை திலகமாக செயல்படும் துலாம் ராசியினரே..ஜென்ம சனி வந்தால் என்ன..அஷ்டம குரு வந்தால் என்ன..என் வேலை தலைக்கு மேல இருக்கு..என அலட்டிக்காமல் உங்க வேலையில கண்ணும் கருத்துமா சம்பாதிக்கிறதுல குறியாக இருப்பதும்,சந்தோசமா எப்பவும் புன்னகை முகத்தோடு உலா வருவதும்தான் உங்கள் ப்ளஸ் பாயிண்ட்....

எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு இல்லாம நியாய தராசு மாதிரி அலசி ஆராய்ஞ்சிதான் எப்பவும் ஒரு முடிவுக்கு வருவீங்க...யாரைய்டும் பார்த்தவுடன் அவர்களை பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடும் நீங்கள்..மிக நாகரீகமகத்தான் எதிரிகளிடமும் நடந்துகொள்வீர்கள்..எபொபவும் சந்தோசமா இருக்கணும்..நம்மை சார்ந்து இருப்பவர்களும் சந்தோசமா இருக்கணும் என்பதுதான் உங்க முக்கிய கொள்கை...

உங்க ராசிக்கு இதுவரை 7ல் உலா வந்த குரு பகவான் இனி ராசிக்கு எட்டில் வரப்போகிறார்..17.5.2012 முதல் மாறும் இந்த குரு சங்கடம் தரும்படி இருப்பதால் அதிக கவனத்துடந்தான் இருக்கவேண்டும்..இதுவரைக்கும் இப்படி நமக்கு நடந்ததே இல்லையே என புலம்ப வைக்கும் அளவு சில குழப்பங்களை உண்டாக்கலாம்...பெரிய பாதிப்புன்னா பணக்கஷ்டம்தான்..அதனால் வரும் மனக்கஷ்டம்தான்..பனம் எப்போதும் உங்ககிட்ட புழங்கிக்கிட்டே இருக்கும்..வருமானத்துக்கும் குறைவில்ல..ஆனா அதைவிட செலவு அதிகம் வந்தா குழப்பம் வரத்தானே செய்யும்..?

வண்டி வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை..கணவன்,மனைவிக்குள் அடிக்கடி ஈகோ மோதல்கள் வரலாம்...உங்க ராசிக்கு குரு எட்டில் மறைந்தாலும் அவர் இருக்கும் நட்சத்திர சாரங்கள் ரோகிணி யில் 10 மாதங்கல் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொதுவாக குருப்பெயர்ச்சி ,சனிப்பெயர்ச்சி துலாம்,ரிசபம் ராசியியினரை அதிகம் தொந்தரவு செய்வதில்லை என்ற அனுபவ ஜோதிடம் சொல்வதாலும்,நீங்க கவலைப்பட வேண்டியதில்லை..ஆனா நீரிழிவு,ரத்த அழுத்தம் பிரச்சினை இருக்குறவங்க..கவலைப்பட்டுத்தான் ஆகணும்..இதுவரை மருத்துவர் சொல்படி கேட்காதவங்க..இனி உடல்நலனில் அதிக கவனம் எடுத்துக்கலைன்னா ரொம்ப சிக்கலாகிடும்...

சித்திரை நட்சத்திரக்காரர்கள் பேச்சில் அதிக கவனம் எடுத்துக்கணும்..நீங்க சொன்ன ஒரு வார்த்தையால் உறவினர்,நண்பர்கள் பகை சுலபமாக வந்து சேரும்..எதையும் முகத்தில் அடித்தார்போல சொல்லிவிடும் நீங்கள்..கொஞ்சம் கவனமாக இல்லைன்னா சிக்கல் ஆகிடும்..விசாகம் நட்சத்திரக்க்கரர்கள் பெரும்பண சிக்கலில் அவதிப்பட நேரும் என்பதால் பங்குவர்த்தகம்,புதிய முதலீடு இவற்றில் அதிக எச்சரிக்கை தேவை....

நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து,உங்கள் உறவினர்களில் வயதானவர்களை சந்தித்து அவர்கலுக்கு உதவி செய்யுங்கள்..நல்லதே நடக்கும்..

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;கன்னி ராசிக்கு என்ன செய்யும்.?

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;

கன்னி ராசி..க்காரர்கள் அன்பானவர்கள்..அனைவரிடமும் எளிதில் பழகிவிடக்கூடியவர்கள்..அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் எல்லாவற்றிற்கும் பயந்துகொண்டும், குழப்பமாகியும் இருப்பார்கள்..அனைவரிடமும் மரியாதையுடனும் அன்பாகவும் நடந்துகொள்வார்கள்..உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பிடிவாதம்,கோபம் அதிகம் இருந்தாலும் நேர்மை,நியாயத்துடன் நடந்துகொள்வார்கள்...சித்திரை நட்சத்திரக்காரர்களும் அப்படித்தான்..என்ன, சித்திரை காரர்கள்..எதிர்பாலினரிடம் கவனமாக இருக்கவெண்டும்..

இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானம் எனும் எட்டாமிடத்தில் குரு இருந்தார்..இதனால் அதிக செலவு..கடன்...மருத்துவ செலவு...தொழில் மந்தம்..வேலை செய்யுமிடத்தில் கெட்டபெயர்..அதிக பணி சுமை..உறவினர் பகை என தவித்துக்கொண்டு இருந்தீர்கள்...17.5.2012 முதல் குரு உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமாகிய பாக்யஸ்தானத்துக்கு செல்வதால் தெய்வ அருளால் மேற்க்கண்ட பலன்கள் எல்லாம் மாறி உங்களுக்கு சந்தோசம் தரும் பலன்களாக அதிர்ஷ்டமாக அமையபோகிறது..குருபலன் வந்துட்டா சந்தோசத்துக்கு கேட்கவா வெணும்..? பணம் வரும்,பதவி வரும்..உறவுகள் வரும்...சொத்துக்கள் வரும்ரொம்ப நாளா நினைச்சு ஏங்கிகிட்டு இருந்த விசயமெல்லாம் படபடன்னு ன்னு நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நடக்கும்....


குருபகவான் உங்க ராசிக்கு 5ஆம் இடத்தை பார்ப்பதால் தெய்வ அருள் கிட்டும்..வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்..திருமணம் ஆகாத ஆண்,பெண்களுக்கு திருமணம் கைகூடும்...சித்திரை,உத்திரம் நட்சத்திரக்காரர்கள் கார்த்தி,சூர்யா,அஞ்சலி,அனுஷ்கா ரேஞ்சிக்கு யோசிச்சு குழப்பிக்காம மனசுக்கு பிடிச்ச வரனை டக்குன்னு முடிவு பண்ணி பெரியோர்கள் மனம் கோணாமல் நடந்துக்குங்க...


சொத்துக்கள் சம்பந்தமா இதுவரை இருந்துவந்த வில்லங்கள் அகலும்...அடமானத்தில் இருந்துவந்த சொத்துக்கள் நகைகளை மீட்பீர்கள்...சண்டை போட்டுட்டு போன சொந்தக்காரங்க..சமாதானம் பேசி வருவாங்க..பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..வருமா வராதா என தவிக்க வைத்த கடன்கள் வசூல் ஆகும்...


வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்...பெரியோட்ர்களுக்கு ஆடைகள் வழங்கி சந்தோசப்படுத்துங்கள்....!!

குருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்கு என்ன செய்யும்?

குருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம்;

தன்மானமும்,வேகமும்,விவேகமும் நிறைந்த சிம்ம ராசிக்கார நண்பர்களெ...ஏழரை சனி எனும் துன்பக்கடலை நெருப்பாற்றில் நீந்துவது போல நீந்தி வந்தவரே...ஏழரை சனி முடிஞ்சிருச்சி..அது போதும் என நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருளால் இனி வெற்றி மேல் வெற்றி பெறும்..ஜெகத்தை ஆளும் மகம் நட்சத்திரத்தில் பிறந்து சிம்ம ராசியில் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு கண் முன் உதாரணமாக திகழ்கிறார்..


வரும் 17.5.2012 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 9ல் இருந்து 10 ஆம் இடத்திற்கு மாறுகிறார்...பத்தில் குரு வர பதவி பறிபோகும் என்ற ஜோதிட பாடலை நினைத்து வருந்தாதீர்கள்..சனி சாதகமக இருப்பதால் குரு உங்கள் பதவிக்கு பாதகம் செய்துவிடாது....

குரு உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தை பார்ப்பதால் பேச்சு சாதூர்யத்தால் பல வெற்றிகளை பெறுவீர்கள்...தனலாபம் உண்டாகும்...உறவினர்களால் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்..வேலைப்பளு கொஞ்சம் அதிகரிக்கும்..சொந்த தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள்...மனைவியால் லாபம் உண்டாகும்...

நீங்கள் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரனை குரு பார்த்தால் திருமண முயற்சிகள் கைகூடும்...அனுஷ்கா,அஞ்சலி போல மனைவி வேண்டும் என அடம் செய்யாமல் சூர்யா,விஜய் போல அழகான பையனைத்தான் கட்டிக்குவேன் என வாக்குவாதம் செய்யாமல் மனசுதான் முக்கியம்..நல்ல குணம் தான் முக்கியம்...நிறைய பணம் சம்பாதிக்கும் ஆடவன் வேண்டாம்..நம்மை விரும்பும் கணவன் தான் வேண்டும் என முடிவு செய்து திருமணத்தை முடியுங்கள்...பல சிம்மம் ராசியினருக்கு இந்த பிடிவாதம்தான் திருமண தாமதத்தை உண்டாக்குகிறது..

10 ல் குரு வருவதால் தொழிலில் போட்டி பொறாமை,மேலதிகாரிகளால் அதிக பணி சுமை உண்டானலும்..அதை சுலபமாக சமாளிப்பீர்கள்..அதற்கேற்ற வருமானமும் பெற்றுவிடுவீர்கள்..ஆனி 11 சனி வக்ரத்துக்கு பின் இன்னும் சிறப்பான முன்னேற்றம் உண்டு..எனவே முடிந்த பொழுது குன்றில் இருக்கும் குமரனை வணங்கி வாருங்கள்...! குறையிலா வாழ்வு தருவார்!!

Tuesday, 15 May 2012

குரு பெயர்ச்சி பலன்கள் 2012 -2013;கடகம் ராசிக்கு என்ன செய்யும்..?


குரு பெயர்ச்சி பலன்கள் 2012 -2013;


கடகம்;புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்


இதுவரை உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் அமர்ந்து தொழில் சிக்கலை கொடுத்து வந்த குரு பகவான் 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்துக்கு வரும் 17.5.2012 முதல் இடம் மாறுகிறார்..

உங்கள் ராசிக்கு 3,5,7 ஆம் இடங்களை பார்வை செய்கிறார்...தொழில் செய்த இடத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும்...இடம் மாறலாம்எனயோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய மாற்றம் கிடைக்கும்..வேலை வாய்ப்பில்லாமல் துன்பப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும்..பதவி உயர்வு எப்ப வருமோ என வருத்தப்பட்டவர்க்களுக்கு இனிப்பான செய்தி கிடைக்கும்...

திருமணம்,வீடுகட்டுதல்,போன்ற சுப காரியங்கள் குடும்பத்தில் நடைபெறும்..இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு குருபலம் தொடங்கிவிட்டது..வண்டி,வாகனம் வாங்கலாம்..திருமண முயற்சி செய்தால் தடையின்றி நடைபெறும்...வருமானம் பெருக்கும்

உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டை குரு பார்ப்பதால் புதிய வழிகள் பிறக்கும்..மனைவியால் அனுகூலம் பிறக்கும்...திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் விரும்பியவாறு வாழ்க்கை துணை அமையும்...உங்களுக்கு பகையாக இருந்தவர்க்ஜள் எல்லாம் உங்களை போற்றுவர்...கசப்பான சூழல் மாறி இனிப்பான சூழல் உண்டாகும்...

ராசிக்கு 3ஆம் வீட்டை குரு பார்ப்பதால் இந்த காரியத்தை செய்யலாமா வேண்டாமா என குழப்பத்தில் தேக்கி வைத்திருந்த காரியங்களையெல்லாம் தைரியம்,துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்..உங்கள் பலவீனமே அலட்சியம்தான்...இனி அதிக விழிப்புணர்வுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள்...

குருப்பெயர்ச்சியான மே 17 அன்று முதியோர் இல்லம் ஒன்றிற்கு சென்று அன்னதானம்,இனிப்புகள் வழங்கி பெரியோர்களை மகிழ்ச்சிபடுத்துங்கள்..எல்லாம் இனிமையாக நடக்கும்...!!