Thursday, 27 September 2012

மீனம் ராசிக்கு அஷ்டம சனி என்ன செய்யும்..?

மீனம் ராசிக்கு அஷ்டம சனி என்ன செய்யும்..?

அஷ்டம சனி என்பது சந்திரன் நின்ற ராசிக்கு எட்டாம் இடத்தில் கோட்சாரப்படி சனி வருவது ஆகும்..சனி ராசிக்கு எட்டில் வந்தால் என்ன ஆகும்..? எதற்கு இந்த பயம் என பார்த்தால் சந்திரன் உடல்காரகன்,மனசுக்கு அதிபதி..அதாவது சிந்தனை,செயல்,அழகு,உடல்,தாய் என இவற்றிற்க்கெல்லாம் பொறுப்பு வகிக்கிறார்...அதுக்கு எட்டில் சனி வரும்போது சனி சந்திரனௌக்கு இரண்டாம் இடத்தையும் பார்வை செய்கிறார்..இதனால் இவர் பொறுப்பு வகிக்கும் இடங்கள் எல்லாம் முடங்கிப்போகும்..காரணம் சனி இருள் கிரகம்..முடக்கும் கிரகம் .

நம்ம மனசு முடங்கிப்போறதுன்னா என்னாகும்..? பயம் அதிகமா இருக்கும்..நினைச்சது சரியா நடக்காது தன்னம்பிக்கை குறைஞ்சு போகும்..கவலை,சோகம் அதிகமா இருக்கும்..உடல் ஸ்தானம் பாதிப்பதால் வயசானவங்களுக்கு உடல்கோளாறுகளும்,நடு வயது இருப்பவர்களூக்கு சிந்தனை தடுமாற்றத்தால்,கவனக்குறைவால் விபத்துகளும் உண்டாகும்..

சில ஜோசியர்கள் அஷ்டம சனியா...அப்போ கொள்ளி வைக்கிறது,வக்கீலை பார்க்குரது,போலீஸை பார்க்குறது,ஆஸ்பிடல் போறது எல்லாம் நடந்துச்சா என ஜாதகத்தை விரித்ததும் சொல்வார்கள்..இதை கேட்டதும் ஜாதகம் கேட்க வந்தவர் தலை சுர்றி விழுந்துவிடுவார்...

ஒரு வீட்டில் அண்ணன் ,தம்பி..இவர்களது குழந்தைகள் அனைவருக்கும் மீனம் ராசி...மொத்தம் 7 பேர் ஒரே குடும்பம்..அதில் நாலு பேர்க்கு அஷ்டம சனி...போன மாதம் அண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் ஏதோ சண்டை..அந்த பெண் தன் இரு குழந்தைகள் உட்பட தானும் தீக்குளித்து தர்கொலை செய்து கொண்டார்...அதில் அந்த தாய்க்கும் பெரிய குழந்தைக்கும் மீன ராசி...இந்த செய்தி தின மலர்,தினத்தந்தி யில் எல்லாம் வந்தது..விபரீத முடிவு எடுக்க அதிக மன உளைச்சல்,அதிக மன இறுக்கம்,அதிக மன தளர்ச்சி,அதிக அவ நம்பிக்கை ,தாழ்வு மனப்பான்மைதான் காரணம் ...இதை அஷ்டம சனி கொடுத்து விடுகிறது..இதுதான் காரணம்.

கொஞ்சம் தொழில் மந்தமானவுடன் அஷ்டம சனியால் இது நேர்ந்தது என தெரிந்து இன்னும் 2 வருசத்துக்கு இப்படித்தான் இருக்கும் என ஜோசியர் சொல்லிட்டார் என அதே குழப்பத்தில் இன்னும் தொழில் படுத்துவிடும்..

அஷ்டம சனி எல்லோருக்கும் அப்படி செய்து விடுகிறதா என பார்த்தால் இல்லை..சிலர் வீடு கட்டுகிறார்கள்..சிலர் கல்யாணம் செய்கிறார்கள்..இவர்களுக்கு நல்ல திசா புத்தி நடப்பது ஒரு காரணம்..இவர்கள் குழந்தைகளுக்கு நல்ல திசையும்,ராசிக்கு யோகமாக குரு,சனி கோட்சாரம் இருப்பதும் ஒரு காரணம்...

பழைய ஜோதிட நூல்களில் மீனம் ராசிக்கு அதிக பாதிப்பாக அஷ்டம சனி பற்றி சொல்லவில்லை...சனி வீடன மகரம்,கும்பம் இவர்களுக்கு லாபம்,விரயம் இரண்டுக்கும் பொறுப்பாவதால் வருகிற பணம் விரயமகும்...கடன் உண்டாகலாம்..அதை வீடு கட்டுதல்,திருமணம் செய்தல் போன்ற நல்ல செலவாக கடன் வாங்கியாவது செய்தால் நல்லது..இல்லையே ஏமாற்றம்,நஷ்டத்தால் இழக்க நேரலாம் என சொல்லப்பட்டிருக்கிறது..புதிய தொழில் ஆரம்பிக்கவும் அஷ்டம சனி நல்ல காலம் ஆகும்..சிலர் அஷ்டம சனி நடக்குது புது தொழில் ஆரம்பிக்கக்கூடாது என முடிவில் இருப்பர் தொழில் ஆரம்பிக்கலாம்..கூட்டாளிகள் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்..

அன்னதானம் செய்தல்,செருப்புகள் வாங்கி ஏழைகளுக்கு கொடுத்தல்,ஊனமுற்றோர் பள்ளிகள்,காப்பகம் சென்று பொருளுதவி செய்தல் அவசியம்..சிலர் குடை வாங்கி தருவர்..கறுப்பு நிற காராம் பசு வாங்கி தருவர் இவை எல்லாம் நல்ல பலன் கொடுத்த அருமையான பரிகாரம் ஆகும்..அன்னதானம் செய்ய பரிகாரங்கள் செய்ய உதவி தேவைப்பட்டால் என் மெயிலுக்கு எழுதுங்கள்..sathishastro77@gmail.com என் தொலைபேசியிலும் அழைக்கலாம் 9443499003 உங்களுக்கு தேவையான உதவிகளை,உங்கள் பரிகாரம் முறைப்படி சென்று சேர உதவி செய்ய தயாராக இருக்கிறேன்...ஜோதிடத்தை நம்புபவர்களுக்கு இது சிறந்த வழிகாட்டியாகும்..வருமுன் காப்பது போல பெரும் துன்பங்கள் வரும் முன் சிறு பரிகாரங்கள் மூலம் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனாற்போல தடுக்க முயற்சிக்கலாம்..

புரட்டாசி 20 அக்டோபர் 6 முதல் குரு வக்ரம் ஆகிறார்..இதனால் இதுவரை பணப்பிரச்சினை,வருமானம் இன்மை,கடும் கடன் நெருக்கடியில் இருந்த மீன ராசிக்காரர்கள் அன்று முதல் அப்பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள்....இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்..

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..? rameshwaram templeராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ., தூரத்தில் உள்ளது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது. 22 தீர்த்தங்கள் உள்ளன. அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடும் பக்தர்கள் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர்.

ஜாதகத்தில் பித்ரு தோசம் இருந்தால் அதை கழிக்க இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து ஜோதிடர்களும் சுட்டிக்காட்டும் ஒரே இடம் ராமேஸ்வரம் தான்... குடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டால் விபத்து,தற்கொலை, அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம்,திதி கொடுப்பது அவசியம்..அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் உண்டாகும்..

காசிக்கு போய் விட்டு வந்தாலும் ராமேஸ்வரம் போய் வந்தால்தான் இந்துக்களின் இந்த ஜென்ம புனித பயணம் நிறைவடையும் என இந்துமத சாஸ்திரம் சொல்கிறது எனவே காசியில் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு யாத்திரையை முடிக்கிறார்கள்..இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய ஜோதிர் தலங்களில் இது ஒன்றாகும்..இந்தியாவின் மிக முக்கிய சிவ ஸ்தலம் என உலகெங்கும் இருக்கும் இந்து மக்கள் வழிபடும் கோயில் இது..இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்ப்படுகிறது..இந்த கடல் நீருக்கு விசேஷ சக்தி இருப்பதாகவும்,முன்னோர்களின் சாபத்தை நீக்கும் சக்தி பெற்றதாகவும் புராணம் சொல்கிறது..அதனால் இக்கடலில் நீராடுவது மிக முக்கியம்.இக்கோயிலுக்குள் அமைந்துள்ள 21 வகையான தீர்த்தங்கள் பல அபூர்வ சக்தி பெற்றவை..ஒவ்வொரு கிணற்று நீரும் ஒவ்வொரு சுவை...கொண்டது..இவற்றில் நாம் நீராடுவதால் பல புன்ணிய ஆத்மாக்களின் ஆசி கிடைக்கிறது..நம் உடல் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி பெறுகிறது

சுவாமி சன்னதியில் தினம்அதிகாலை 5.10 மணி ஸ்படிகலிங்க அபிஷேகம் முக்கியமானது. தீர்த்தங்களில் நீராட நபர் ஒன்றுக்கு ரூ.7 கட்டணம். சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.25, அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.10, ஸ்படிக லிங்க தரிசனம் ரூ.15, சுவாமி சன்னதி மேடையில் அமர்ந்து தரிசனம் செசய்ய ரூ.50, கங்காபிஷேகம் செய்ய ரூ.30, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ20,பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய ரூ 750. ருத்ராபிஷேகம் செய்ய ரூ.900, 108 சங்காபிஷேகம் செய்ய ரூ 1000,108 கலச அபிஷேகம் செய்ய ரூ.1000, 1008 சங்காபிஷேகம் அல்லது கலச அபிஷேகம் செய்ய ரூ 5,000 கட்டணமாகும். ராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ளது திறக்கும் நேரம்: காலை 5.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 9 மணி

Wednesday, 26 September 2012

ஜோதிடம்;விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சியுள்ளவராயிருப்பர். பெண்களின் மீது அன்பு வைத்திருப்பார். சற்று முன்கோபம் என்பது இருந்தேயிருக்கும். செல்வவான் என்று பெயர் எடுப்பார். எடுத்த காரியத்தை விரைவுடன் செய்யும் ஆற்றல் உடையவராக இருப்பார். கொஞ்சம் அவசரகுணம் இருந்தேயிருக்கும்.
விருச்சிக லக்னத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள். லக்னத்தை சுபர்கள் பார்க்க இவர்கள் 90 வயது வரையில் வாழ்ந்திருப்பார்கள் என்று கூறலாம். சூரியனும், சந்திரனும் கூடினால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். செவ்வாய், புதன், சுக்கிரன் மாராதிபர்கள். குருவும், சனியும் கொல்லமாட்டார்கள். அவ்வாறே புதனும் கொல்லமாட்டார். மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்.

விருச்சிக லக்னத்தார் பணம் முக்கியமில்லை..மரியாதை தான் முக்கியம் என நினைப்பவர்...இவர்களை மதித்தால் போதும்...காரியம் நடக்கும்..கோபம் அதிகம் உண்டு..

விருச்சிக லக்னத்துக்கு சந்திரன் 5,9 ஆம் இடங்களில் அமர்ந்தால் நல்ல வசதி வாய்ப்புகளும் செல்வமும்,செல்வாக்கும்,நிறைய சொத்துக்களும் இருக்கும் என புலிப்பாணி ஜோதிடத்தில் புலிப்பாணி முனிவர் சொல்கிறார்..

இவரது குணத்தை பார்க்கும்போது,பிறரைபற்றி தன் கருத்தை சொல்லும்போதும் கிண்டலும்,கண்டனமும்,அறிவுரை சொல்லும்படியும் இருக்கும்..இவரை எளிதில் ஏமாற்ற முடியாது..ஏமாற்றினாலும் சும்மா விட மாட்டார்..இவரது லக்னத்துக்கு குரு பூர்வபுன்ணியாதிபதி..வாக்குக்கும் அதிபதி எனவே இவர் சொல்வது ,சிந்திப்பது,நினைப்பது,பிறருக்கு சொல்வது பெரும்பாலும் பலிக்கும்..இவரது கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.,.தீர்க்கதரிசி என்றே சொல்லலாம்..

இவருக்கு தேவையானபோது பணம் கிடைக்கும்..செல்வாக்கு இருந்தாலும் சந்திரனும்,குருவும் மறைந்தால் மிக துரதிர்ஷ்டசாலியாக வறுமையில் துன்புறுவார்..பணம் இல்லாத பணக்காரனாக இருப்பார்..செல்வாக்கு மட்டும் இருக்கும்..

இந்த லக்னத்தார்க்கு நோய்கள் விரைவில் குணமாகும்...6ஆம் இடமாக சரராசி வருவதால் வரும் நோய்கள் விரைவில் தீரும்..இவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தொல்லை இருந்துகொண்டே இருக்கும்..மேசம்,ரிசபம் ராசிக்காரர்கள் இவர்களுக்கு நல்ல பார்ட்னர்களாக இருப்பர்..தனுசு,மீனம் இவர்களுக்கு சாதகமான ராசிகளாகும்..

இவருக்கு 10 அதிபதியாக சிம்மம் வருவதால் தந்தை வழி தொழில்,அல்லது அரசு சார்ந்த தொழில் பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன..அதிகாரம் செய்யும் பணியே இவருக்கு பிடிக்கும்...

1,3,9 இவருக்கு அதிர்ஷ்ட எண்களாகும்..முருகனை வழிபடுவது நன்மை தரும்..திருப்பதி சென்று வருவது நிம்மதி தரும்..

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...?

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...?

புரட்டாசி ஆரம்பிச்சிருச்சின்னா பிரியாணி,சிக்கன்,மட்டன் சாப்பிட முடியாது..இப்பவே ஒரு கை பார்த்துட வேண்டியதுதான் என புரட்டாசி பிறக்க ஒரு வாரம் வரை கறிக்கடையில் கூட்டம் அலைமோதும்..புரட்டாசி ஆரம்பிச்சிட்டா சோகமா பிரியாணி கடையை பார்த்துட்டு போறது..இது பத்தி ஒரு விளம்பரமே எடுத்துருக்காங்க...மில்கி மிஸ்ட் பனீர் காரங்க..எங்க ஊர்லதான் இந்த கம்பெனி இருக்கு (சித்தோடு) விளம்பரம் அருமையா எளிமையா இருக்கு...அசைவம் இந்த மாசத்துல சாப்பிட முடியாம ஏக்கத்துல இருக்குறவங்க,எங்க பனீர் பட்டர் மசாலா போன்றவற்றை சுவைத்துப் பாருங்கள் சைவம் போலவே இருக்காது என சீசனுக்கு தகுந்தாற்போல சொல்லி கல்லா கட்டுகிறார்கள்...

அந்த விளம்பரம்;

 


புரட்டாசி மாதத்தின் பெருமை;

புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார்...புதன் பெருமாளை குறிக்கும் கிரகம் ஆகும்...சுக்கிரனுக்கு மகாலட்சுமி என்பதை போல...கன்னி ராசி காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு 6 ஆம் வீடாகிய கன்னி ராசி என்பதால் ருண ரோக ஸ்தானம் என்பதால் இம்மாதத்தில் வயிறு சம்பந்தமான அஜீரணம் பிரச்சினைகள் அதிகரிக்கும் காலம்...மேலும் உடல் வெப்ப நிலையும் அதிகரிக்கும்..பித்தம் போன்றவையும் அதிகரிக்கும்...இதனால் இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை அஜீரணத்தை மிக அதிகப்படுத்தும்...பரவாயில்லைங்க..நான் ஜீரணத்துக்கு ரசம் சாப்பிட்டுகிறேன்னாலும் ஒண்ணும் வேலைக்காகாது..அந்தளவு தொந்தரவு செய்யும் காலம் இது...அஜீரணம் இருப்பின் கோபம் அதிகரிக்கும்,காமம் அதிகரிக்கும்,சோம்பல்,மறதி,சலிப்பு அதிகரிக்கும் எந்த வேலையும் உருப்படியா முடியாது...பித்தம் அதிகரித்து வாதம் உண்டாக்கலாம்..மயக்கம் உண்டாக்கலாம் இதனால் துளசி தீர்த்தம் பெருமாள் கோயிலில் அடிக்கடி பருகுவதால் பித்தம் தீரும்..

சும்மாவே மட்டன் பிரையாணி,மட்டன் சுக்கா சாப்பிட்டா 2 நாளைக்கு மதமதன்னு இருக்கும்..வயித்துக்குள்ள கல்லை கட்டி போட்டாப்புல இருக்கும்..அதுவும் இய்றகையாகவே வயிறு பாதிப்புகளை தரும் மாதம்னா எச்சரிக்கையாத்தானே இருக்கணும்..அதுக்குத்தான் நம் முன்னோர்கள்..மலை ஏறு....பெருமாளை கும்பிடு...துளசி தீர்த்தம் குடி ந்னு சொல்லி வைச்சாங்க..கூட பெருமாள் அருளும் மிக பிரமதமா நமக்கு கிடைக்கும்...டிவி சீரியல் பார்த்துட்டு சும்மா படுத்து வீட்டில் தூங்கும் பெண்கள் இப்பல்லாம் மலையே ஏறுவது இல்லை..அடிவாரத்துல சூடம் பொருத்தி கும்பிட்டுட்டு ராட்டினம் ஆடிட்டு கோய்யாப்பழம் சாப்பிட்டுக்கிட்டு அடேயப்பா எவ்ளோ கூட்டம்னு வந்துடுறாங்க..

குருவாயூர் கண்ணனை வழிபடுவதும்,திருப்பதி பெருமாளை வணங்குவதும் கேட்ட வரம் உடனே கிடைக்கும் அருமையான காலம் இது..

Monday, 17 September 2012

கடகம் லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..? ராசிபலன்


கடகம் லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..? ராசிபலன்கடக லக்னம் சந்திரனின் ஆட்சி பெற்ற வீடாகும்..சந்திரன் மனதுக்கு அதிபதி..உடலுக்கு அதிபதி என்பதால் இவர்கள் ம்னதும்,உடலும் தூய்மையானது..அழகானது..அன்பு நிறைந்தது..அழகிய கவர்ச்சியான உடல் அமைப்பு,கண்களையும்,வசியமான பேச்சையும் உடையவர்கள்..சந்திரன் லக்னத்துல பிறந்துட்டு காதல்,காமம்,ஆசை இல்லாமலா..? நிறைய இருக்கும்..மன்மத ராசா தான்...அல்லது தீர்க்கதரிசி..பெரும் லட்சியக்கனவு கொண்டவர்கள்,இந்த உலகிற்கு புதிய சரித்திர சாதனையை செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனலாம்...என்ன காரணம் எனில் இவரது லக்னம் பெரியது....நல்ல அறிவாற்றல்,புத்திக்கூர்மை நிறைந்தது...ஆக்கவும்,அழிக்கவும் இவர்களால் முடியும்..காம ஆசையால்,பணத்தாசையால்,சூதாட்டத்தால் பொருளை இழநதவர்கள் இந்த லக்னத்தார் மிக அதிகம்..அதே சம்யம் அருள் மட்டுமே வேண்டும்...புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும்..

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கடுமையாக உழைத்த மாகன்களும் அநேகம்..இந்து மதத்தை பரப்ப தன் வாழ்நாள் முழுவதும் இந்தியா முழுக்க நடந்து,பல கோயில்களை சீர்திருத்திய ஆதிசங்கரர் பிறந்ததும் இந்த லக்னம் தான்...

யோகா,தியானம்,சித்த மருத்துவம்,சினிமா போன்ற கலைத்துறையில் சாதித்துக்கொண்டிருப்பவர்களிந்த லக்னத்தார் அதிகம்...விஜய்,அஜீத் ,சூர்யா போல வர வேண்டும் என இன்றும் கோடம்பாக்கம் வீதிகளில் சாப்பாடு கூட இல்லாமல் சுற்றும் பல இளைஞர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அநேகம்..காரணம் கடக லக்னம் என்பது பெரிய ஆசைகளை தன்னகத்தே கொண்டது...சினிமா ஆசை மட்டும் அல்ல.அம்பானி,டாட்டா,லட்சுமி மிட்டல் போல தானும் தொழில் அதிபர் ஆக வேண்டும் என துடிப்பவர்களும் அநேகம்..
கடக லக்னத்தில் பிறந்தவருக்கு வேறு பெண்கள் பேரில் நாட்டம் இருக்கும் என்று சொல்லலாம். தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு சிறிது கெட்ட பெயர் உண்டாகலாம். தானதர்மம் செய்வதில் தாராள மனப்பான்மை இருக்கும். செல்வங்கள் இவர்களை வந்தடையும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.மனைவி இவர்களுக்கு எப்போதும் எதிரிதான்..அல்லது பிரிந்துவிடும்..காரணம் 7 ஆம் பாவம் சனி வீடாக வருகிறது...பெண்களால் சந்தேகம் அடைந்து இவர் மனைவி இவரை துன்புறுத்துவார்..அல்லது மனைவியால் இவருக்கு கெட்ட பெயர் உண்டாகலாம்...மனைவிக்கும் இவருக்கும் ஈகோ பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்..
கடக லக்னத்தில் செவ்வாயும், குருவும் சுபர்கள். செவ்வாய் யோகக்காரர்கள். செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்க்கையை உயர்த்துவார்கள். சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் பாவிகள். சனி, சுக்கிரன், புதன் மாராகதிபதிகள். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.


Monday, 10 September 2012

ஜோதிடம்;சிம்மம்,கன்னி,துலாம் லக்கினத்தில் பிறந்தவர் பலன்


ஜோதிடம்;சிம்மம்,கன்னி,துலாம் லக்கினத்தில் பிறந்தவர் ராசி பலன்;சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்திற்கு பிறந்தவர்களைக் கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப்பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திடபுத்தியுள்ளவராகவும் இருப்பார்கள். ஆனால் முன்கோபியாகவும் இருப்பர்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள் சுக்கிரனும் புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்கிரன் கூடியிருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள். சுக்கிரன் சனி, புதன் இவர்கள் மாரகாதிபதிகள். மாரக ஸ்தானத்தில் இவர்கள் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப மற்றவர்களுக்கு பல சமயங்களில் சிம்ம ஸ்வரூபமாகவே இருப்பார்கள்.

இவர்கள் வாழ்வின் பிறபகுதியில் நற்பலனும்,யோகபலனும் பெறுவார்கள்..அரசு அதிகாரிகள்,நகை,வண்டி வாகன தொழில் செய்பவர்கள்,அரசியல்வாதிகள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்களாகவே இருக்கின்றனர்...

5,10,27,30 இந்த வயதுகளில் கண்டம் உண்டாகி விலகும்..

லக்கினத்தை சுபர்கள் பார்த்து லக்னாதிபதி,அஷ்டமாதிபதி,ஆயுள்காரகன் வலுத்திருந்தால் பூரண ஆயுள் உண்டாகும்..

கோபம்,பிடிவாதம்,இவரது பலவீனம்..தன்னிடம் பழகுபவர்கள் நேர்மையாக,உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்..

கன்னி லக்னம்
கன்னியா லக்னமல்லவா? சற்று அடக்கமாகவே இருப்பார்கள். எதிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும் விவேகமும் இருக்கும். நல்ல நடத்தையுள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.
கன்யா லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள். செவ்வாய், குரு, பாவிகள் புதனும், சுக்கிரனும் யோகக்காரர்கள். புதனும், சுக்கிரனம் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தைக் கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
இவர்கள் திறமைசாலிகள் என்று பெயர் எடுத்து புகழுடன் விளங்குவார்கள்.

இவர்கள் மிக எளிதில் பணக்காரர் ஆகிவிடுவார்..நிறைய நட்பு வட்டமும்,நிறைய யோசனைகளும்,சாதூர்யமும் நிறைந்தவர் ஆச்சே..

பத்திரிக்கையாளர்கள்,மருத்துவர்கள்,ஆசிரியர்கள்,வழக்கறிஞர்கள் நிரைய பேர் இந்த லக்னத்தை சார்ந்தவர்கள்..

புதன்,சுக்கிரன் நன்றாக இவர்கள் ஜாதகத்தில் அமைந்திருந்தால் வாழ்நாள் முழுக்க யோகம்தான்..

லக்னத்தை சுபர்கள் பார்த்தால் ஆயுள் காரர்கள் சிறப்பாக இருந்தால் 77 வயது வரை ஆயுள் பலம் உண்டு..

துலாம் லக்னம்
துலாம் என்றால் தராசு ஆயிற்றே! தராசு பிhக்கும் தொழில் ஏற்படும். தராசு போல் பேசுவார்கள். வியாபாரத்தில் சாமர்த்தியம் புத்திசாலித்தனம், செல்வம் சேர்ப்பதில் கவனம், எதிலும் முன்ஜாக்கிரதை இருக்கும். செல்வங்கள் சேரும். வாழ்க்கையில் சுகங்கள் அனுபவிக்கவும். வாய்ப்புண்டு. ஆயுள் நீண்டது என்றே கூறவேண்டும்.

துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சூரியன், செவ்வாய், குரு பாவிகள், சந்திரனும், புதனும், யோகக்காரர்கள். சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். சூரியன், குரு மாரகாதிபர்கள். அங்காரகன் தோஷம் உடையவன்.

துலாம் லக்னத்தார் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலவீனம் என்றே சொல்லலாம்..பெண்களாக இருப்பின் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திப்பர்..காரணம் இவர்கள் அழகானவர்கள்..அழகாக பேசுவார்கள்..பெரும் செலவுகள் தங்களை அலங்கரித்துக்கொள்வதற்காகவே இருக்கும்..சுற்றுலா,ஆடம்பரத்தில் அதிக விருப்பம் கொண்டவர்கள்...இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் கோபம் வந்தால் எதிரிகளை ப்ளாக் செய்துவிடுவார்கள் அவர்களுடன் பழகுவதை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள்..தராசு சின்னமே இவர்கள் ஒருவரை பார்த்தவுடன் எளிதில் எடைபோடக்கூடியவர்கள் என்பதால்தான்..நுணுக்கமான அறிவு நிறைந்தவர்கள்....உணவு சுவையாக அன்பாக பரிமாற வேண்டும் என்பதில் முக்கியத்துவம் காட்டுவார்கள்..ரசனை அதிகம் நிறைந்தவர்கள்..இப்படி இருந்தா நல்லாருக்கும் என அழகாக எடுத்து சொல்வார்கள்..

இவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகளாகவும்,சட்ட நுணுக்கம் தெரிந்த வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள்..நடிகர்களாகவும் கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்...

Thursday, 6 September 2012

மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்


மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்;ஜோதிடம்


மேஷ லக்னம்
மேஷ லகனத்தில் பிறந்தவர் கம்பீரமான தோற்றம் உடையவர்..செல்வங்களைச் சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தியபிறகும், பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வார்..முன்கோபம்,பிடிவாதமும் அதிகம் கணப்படும்..முகத்திலும்,தலையிலும் தழும்பு இருக்கலாம்..ஆணித்தரமான பேச்சு இருக்கும்..45 வயதுக்கு மேல் எதிர்பாராத பண வசதி உண்டாகும்..உடன்பிறந்தோரால் சகாயம் இல்லைகடுமையாக உழைக்ககூடியவர்கள்...சக்திக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு பிரச்சினைகளில் சிக்கி கொள்வார்...வாழ்க்கை துணை விசயத்தில் ஏமாற்றம் உண்டாகும்..அல்லது வாழ்க்கை துணை உடல்நலக்கோளாறுகளால் அவதிபடுவார்..பவள மோதிரம் அணியலாம்பிறரை அளவுக்கு மீறி நம்புவது கூடாது..பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவும் பிறர் சொல்வதையும் கேளுங்கள்..
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூர்ண ஆயுள் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள், குருவோடு சனி சம்பந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுத்து வருவார். சூரியனும் குருவும் யோக்காரர்கள். இருவரும் ஒன்று கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி, இம்மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.லக்னத்தில் சனி நின்று நீசம் அடைந்தால் போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்...

ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர். செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும், அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை அனுபவிப்பார். எப்போதும் கூடுமானவரையில் மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சந்திரன், சுக்ரன் பாவிகள், சனி ஒருவரே இவர்களக்கு ராஜயோகம் கொடுப்பார்.சனி திசை நல்ல யோகத்தை முன்னேற்றத்தை தரும்..நல்ல நினைவாற்றல் உடையவர்..சந்திரன் லக்னத்தில் அமைந்தால் மிக நல்லது...பிறரை பேசி மயக்குவதில் வல்லவர்..குடும்ப பொறுப்பை சுமக்கும் சூழல் சிறு வயதில் இருந்தே உண்டகிவிடும்..தாரளமாக செலவு செய்து அடிக்கடி பணச்சிக்கலை உண்டாக்கி கொள்வர்..சிற்றின்ப ஆசை அதிகமாகவே இருக்கும்..பெண்களாக இருந்தால் கண்ணழகும்,உடல் அழகும் பிறரை மயக்கும்படி அமைந்திருக்கும்..எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் திருமண வாழ்க்கை ஏதாவது மனக்கவலை ஏற்பட்டவணமோ அல்லது ஏமாற்றம் தரும்படியாகவோ அமைந்துவிடும்...
செவ்வாய், புதன் மாரகர்கள், இவர்களுடன் பலன் பொருந்திய கிரஹங்கள் சேர்ந்திருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.வெள்ளை நிறம் யோகம் தரும்..மரகத பச்சை நவரத்னம் அணியலாம்..மதுரை மீனாட்சியை வழிபடலாம்.,...

மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர் எப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பார். எல்லோரிடமும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவர். இவருக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய். சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி சேர்ந்தர்ல் யோககாரனாவான். சந்திரன் தோஷமுடையவன். எனினும் இவன் மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள். ஏதற்கும் இவர்களுடைய வலுவை அறிந்து எதையும் சொல்ல வேண்டும்.எப்போதும் ஏதேனும் ஒரு சிந்தனை..விரைவாக பணக்காரன் ஆக என்ன வழி என சிந்தித்துக் கொண்டிருப்பார்..

எதையும் ஆரய்ந்து கண்டுபிடிக்க முயல்வார் யாரையும் நம்ப மாட்டார்...நம்பினால் ஏமாற்றம் அடைந்தும் விடுவார்...நகைச்சுவையாக பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்..குடும்பத்திற்காக அயராது உழைப்பர்..தன்னை மரியாதை குறைவாக நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டார்...33 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் என செட்டில் ஆகிவிடுவார்..துனைவரோடு போராட்டம் இருக்கும்..

வெள்ளை ,பச்சை,க்ரே அதிர்ஷ்டம் தரும்..மரகத பச்சை நல்லது..திருப்பதி பெருமாளை வருடம் தோறும் சென்று வணங்கி வருதல் நல்லது..அம்மாவை பாதுகாத்து அவருடன் இணக்கமாக இருந்தால் பண வரவு எப்போதும் இருக்கும்...பங்கு சந்தையில் கவனம் தேவை..வெகு விரைவில் செல்வந்தராக இவர் எடுக்கும் முயற்சிகள் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணும்..அதிர்ஷ்ட எண் 5

Wednesday, 5 September 2012

ஆனந்த விகடனுக்கு நன்றி

ஆனந்த விகடன் வலையோசை பகுதியில் நமது நல்ல நேரம் ப்ளாக் இடம் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..ஆனந்த விகடனுக்கு பரிந்துரைத்த நம் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி...


வலையோசை பகுதி விகடனில் வரும்போதெல்லாம் ஜோதிடம் நாம் எழுதுவதால் இதில் இடம்பெறாது என நினைத்தேன்..இருப்பினும் விகடனில்  எனது ஜோதிட கட்டுரையான விஜயகாந்த் ஜாதக பலன்கள் இடம் பெற்றிருக்கிறது..இது வலையோசை பகுதியில் ஜோதிட கட்டுரை முதல்முறை....பதிவர்கள் பயனுள்ள கட்டுரையான அதிக ஹிட்ஸ் வாங்குவது எப்படி என்ற கட்டுரையும்,கருணாநிதியை கோபபட வைத்த பேஸ்புக் கமெண்ட்ஸ் என்ற கட்டுரையும் இடம்பெற்றிருக்கிறது!!சந்தோசமா இருக்கு!!

http://en.vikatan.com/article.php?aid=23306&sid=645&mid=32


Tuesday, 4 September 2012

நாக தோசம்,சர்ப்ப தோசம் தரும் ராகு கேது உங்க ஜாதகத்துல எப்படி.?ராசிபலன்


ராகு கேது இருவரும் சாயா கிரஹங்கள். இருவரைப் பற்றியும் பொதுவாகவே சொல்லவேண்டும் அதாவது:

ஒருவர் பிறக்கும்போது லக்னத்தில் ராகு கேது இவர்களில் யார் இருந்தாலும் ஜாதகர் புத்திரபாக்கியம் உண்டு. ஆயுள் விருத்தியில்லாதவர். செல்வந்தன். ஆனாலும், ஏதேனும் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டேயிருப்பார். அற்ப வித்தையுள்ளவர். நடுத்தரவயதிற்கு மேல் பாக்கியவான் என்று சொல்லக்கூடிய நிலையை அடைபவர். தயை கருணை என்பது இல்லாத கடின சித்தம் உள்ளவர். சோம்பல் என்பது உடன் பிறந்தது போல் உறவாகும். இரு விவாக ப்ராப்தியுள்ளவர்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் புகழ்மிக்கவர். திடீர் கோபத்திற்கு ஆளாவார். தைரியசாலி. அகால போஜனமுள்ளவர். லஷ்மியின் அருள்பெறும் பாக்கியமும் உண்டு என்று சொல்லவேண்டும்.
நான்காவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் தயவு தாஷண்யம் உள்ளவர். முன் சகோதரிகள் உள்ளவர். அற்ப புத்தியுள்ளவர். துன்மார்க்கர் என்று பெயர் எடுக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால் முன்னோர் வழி சாபம்..புத்திர தோசம் என சொல்லப்படுகிறது..பூர்வபுண்ணியம் பாதிக்கப்படுகிறது..காரிய தடைகள் அதிகம் உண்டாகிறது..5 ஆம் அதிபதியும்,சுக்கிரனும்,குருவும் கெட்டால் குழந்தை இல்லை...அல்லது தாமதமாக பிறக்கும்..

ஆறாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் ஸ்திர பாக்கியம் அதிகம் உள்ளவர். ஸ்திரீகள் மகிழும் வண்ணம் நடந்துகொள்பவர். சில ஸ்திரீகளின் பகைமையும் சம்பாதித்துக் கொள்ளவேண்டியதாகவும் ஏற்படும்.
ஏழாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் நீர் ரோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாக ஏற்படும். வித்துவான் இரண்டு மனைவியர் உண்டு.
எட்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் அதிகம் குறிப்பாக சொல்லவே;ணடியதில்லை. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை இவைகளைக் கொண்டு பலன் சொல்லலாம்.
ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்தால் தந்தை முரண்பாடானவர்..தந்தைக்கும்,ஜாதகருக்கும் ஆகாது..பங்காளி சண்டை இருக்கும்..குலதெய்வ வழிபாடு நின்று போகும்..பாக்யங்களை கெடுக்கிறது..நல்ல வீடு,மனைவி,குழந்தைகள் விசயத்தில் சில மன சஞ்சலங்களை உண்டாக்கும்..

பத்தாம் இடத்தில் ராகு இருந்தால் கேது இருந்தால் பணம் பறந்துவரும் என்பார்கள்..தொழில் ஸ்தானத்தில் ஒரு அசுபராவது இருப்பது தொழிலுக்கு பிரச்சினை இல்லை எனலாம்..

பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு லாபத்தையே கொடுப்பார்..நல்லது...பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..குறுக்கு வழியில் கூட சம்பாதித்து விடுவார்...

12 ஆம் இடத்தில் ராகு மறைவது கேது மறைவது நல்லதுதான்...12ல் கேது மறுபிறப்பு இல்லை என்பார்கள்..எல்லா கஷ்டத்தையும் கொடுத்துவிடுவாரா..என்றால் அப்படி இல்லை..பிறபகுதியில் ஆன்மீக யாத்திரை,கோயில் கட்டுதல் போன்ற புண்ணிய பலன்களை சேர்ப்பார்..

கிரக நாயகர்கள் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலனைக் கொடுப்பார்கள் என்பது பொதுவாக சொல்லக்கூடியதே தவிர இதை வைத்து பலனைக் கனிக்கக்கூடாது. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்ககை, தசைகள், புத்திகள் இவைகளின் பலன்களையும் கவனிக்கவேண்டும்.

உங்க ஜாதகத்துல சனி எங்க இருக்கு? ராசிபலன்


ஜோதிடம்;ஜாதகத்தில் சனியின் நிலை

லக்னத்தில் சனிபகவான் இருக்கப் பிறந்தவர் பல கலைகளையும் கற்றுணர்வார். ரூபவான், துர்ப்புத்தியுள்ளவர் என்றும் பெயர் எடுக்கக்கூடும். வாத சரீரமுள்ளவர். தீர்க்காயுள் உடையவர். ஞானமுள்ளவர். உற்சாகமாக காலங்கழிப்பவர்.
இரண்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் செல்வம் உடையவர். ஆயுள் விருத்தியில்லாதவர். இரண்டு விவாகங்கள் செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். ஏதாவது விசாரத்தால் பாதிக்கப்படுபவர்.
மூன்றாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர். தாசிகள் லோலர், கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்பவர். சேவகா விருத்தியு;ளளவர். தன் தான்ய விருத்தியுள்ளவர். ஆனால் சகோதர விருத்தியில்லாதவர். சுகவான் என்றும் கூறலாம்.
நான்காவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் சகோதர பாக்கியம் உள்ளவர். பெரியோர் சேர்க்கையுள்ளவர். சரீர புஷ்டியுள்ளவர். வாஹன பிராப்தியுள்ளவர். மித்ர பேதம் செய்வதில் பின் வாங்க மாட்டார்.
ஐந்தாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் தர்ம சிந்தனையுள்ளவர். விரோதிகளை எளிதி; ஜெயிப்பவர். புத்ர பாக்கியம் அதிகம் இல்லாதவர். பெரியோர்களுடைய விரோதத்தைச் சம்பாதிப்பவர்.
ஆறாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் புத்திமான், பரிசுத்தார். சத்ருக்களை எளிதில் வெல்பவர். செல்வங்கள் சேர்ப்பவர். அற்பமான வியாதிகள் உள்ளனர்.
ஏழாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் தேச சஞ்சாரம் செய்பவர். களத்ர ஹானியுள்ளவர். வேசிகள் சகவாசம் உள்ளவர். இரண்டு மனைவியர் பிராப்தியுள்ளவர். ஸ்திரீகளின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
எட்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் கண் சம்பந்தமான வியாதியுள்ளவர். கீழ் ஜாதிப் பெண்களின் இன்ப நுகர்ச்சியுள்ளவர். புத்திரர்கள் அதிகமில்லாதவர். தீர்க்காயுள் உண்டு. ஆனால் உத்தியோகத்தில் நிலைத்து இருக்காத நிலை உண்டாகும். தரித்திரத்தில் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஓன்பதாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் பெற்ற தாயாருக்குப் பீஐட மனைவி பாக்கியம் உள்ளவர். திருப்பணிகள் செய்வதில் ஆசையுள்ளவர்.

பத்தாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் குருபக்தியில் சிறந்தவர். கிராமாதிகாரம் வகிப்பவர். பிறந்த ஊரை விட்டு தூரதேசத்தில் உத்தியோகம் செய்பவர். புத்திமான் என்று பலரால் போற்றப்படுவார்.

பதினோராவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் அல்ப வித்தையுள்ளவரான போதிலும் ராஜபூஜித் என்று சொல்லலாம். புத்தி கூர்மையுள்ளவர். தானிய விருத்தியுள்ளவர். பூமிகளைச் சேர்த்து லாபம் அடைபவர், போக பாக்கியங்களை அனுபவிப்பவர்.

பன்னிரெண்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் எடுத்த காரியத்தை முடிக்கும் ஆர்வம் உள்ளவர். விஷப் பார்iவுயுள்ளவர். லோபியென்று பலர் தூற்றும் குணங்கள் உள்ளவர். மனைவி தோஷம் உள்ளவர்.

Sunday, 2 September 2012

தங்கம் வாங்க காலப்பிரகாசிகை சொல்லும் நல்ல நேரம்


தங்கம் வாங்குவதற்குகந்த காலம்

குரு வர்கோத்தமம் பெற்றிருக்க புதனும், சுக்ரனும் கேந்திரத்திலிருக்கும்படியான லக்னத்தில் தங்கத்தை வாங்கிச் சேர்த்தால் ஒன்று கோடி மடங்காக வளர்ச்சியுறும்.
இதுபோலவே சந்திரன் தன் உச்ச அம்சமான லக்னத்தில் இருக்க, அதற்கு ஏழாமிடத்தில் குருவும் இருக்க செல்வங்களைச் சேமித்தால் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், ஆபரணங்கள் முதலானவை ஒன்றுக்குப் பலமடங்காகப் பெருகும்.
தங்கம், தான்யங்கள், ரத்னம் இவைகளைச் சேமிக்கும் விஷயத்திலும், சம்பாதிக்கும் விஷயத்திலும் லக்னத்தில் குரு இருந்தால் மேன்மேலும் விருத்தியாகும்.
லக்னத்தில் குருவும், இரண்டாமிடத்தில் சுக்ரனும், பத்தாமிடத்தில் சந்திரனும், பதினொன்றாம் இடத்தில் புதனும் இருந்து, அப்படிப்பட்ட நேரத்தில் செல்வத்தினைச் சேமிப்பது நல்லது. குறைவற்றிருக்கும்.
வியாழக்கிழமை தினம், லக்னத்தில் குருவும், 11ல் சூர்யனும், 6ல் சனியும் இருந்தால் அதுசமயம் பணியாட்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். பொருள்களையும் சேமிக்கவேண்டும்.
லக்னத்தில் சுக்ரனும், 10ம் இடத்தில் குருவும், சந்திரனும் இருக்க, ஈயம், பித்தளை, வெண்கலம் ஆகியவற்றை வாங்கிச் சேமித்தால் ஒன்று கோடி (பல) மடங்காகும்.

பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்


பூண்டி மகான் தங்கம் செய்தார்

வடஆற்காடு மாவட்டத்தில் போளுர் தாலுகாவில் உள்ளது பூண்டி என்னும் சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் பூண்டிமகான் ஆவார். இவர் எப்போதும் ஆனந்த நிலையிலேயே காணப்படுவார். ஒருநாள் இம்மகான் அவ்வூரில் உள்ள செய்யாற்றின் கரையோரம் சமாதியில் ஆழ்ந்திருந்தபோது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
இதனைக்கண்ட கிராமமக்கள் ஒரு மூங்கில் கூடை மூலம் மகானைக் காப்பாற்ற முயன்றார்கள். வெள்ளம் மேலம் தீவிரமாகவே மூங்கில்கூடையுடன் மகானை வெள்ளம் இழுத்துச் செல்ல, மக்கள் மட்டும் தப்பினர். சிலநாள் கழித்து வெள்ளநீர் வடிந்தபோது ஓரிடத்தில் அந்த மூங்கில்கூடை தெரியவே கிராமமக்கள் சென்று பார்த்தபோது மகான் எப்போதும் போல சமாதிநிலையில் இருந்தார். அவருக்கு எந்த பாதிப்பும் இல் 
லை. உடலினை பல துண்டுகளாக பிரித்து மீண்டும் ஒன்றாக்கிக் கொள்ளக்கூடிய நவகண்டயோகம் எனும் அற்புத சித்தியும் படைத்தவர் பூண்டி மகான்.

ஒருமுறை மகானிடம் மதிப்பும், மரியாதையும் கொண்ட ஒரு பக்தர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லையெனக்கூறி தன்மகளின் திருமணம் நல்லபடி நடக்க ஆசி வழங்கும்படி கேட்க, மகானோ 'கவலைப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும். உனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள விவசாயிடம் பழைய தேய்ந்த கொலுவு ஒன்று வாங்கிவா' என்றார். கொலுவு என்பது ஏர் கலப்பையின் கீழே அமைக்கப்படும் இரும்பாலான நிலத்தைத் தோண்ட உதவும் கருவியாகும். 

இது தேயத்தேய சிறிதுசிறிதாக கீழே இறக்கி அமைப்பார்கள். அதிகம் தேய்மானமாகிவிட்டால் அதனை எடுத்துவிட்டு, வேறு புதிதாக அமைத்திடுவார்கள். பழையது எதற்கும் உதவாது. பழைய இரும்பென எடைக்குப்போட மட்டுமே பயன்படும். அத்தகைய கொலுவு ஒன்றை வாங்கிவரும்படி பூண்டிமகான் சொன்னார். அந்த பக்தரும் அதேபோல அவ்விவசாயியிடம் கொலுவு ஒன்றை கேட்டு வாங்கிவந்து மகானிடம் தந்தார். அந்த இரும்பு கொலுவை வாங்கிய மகான் அதனை சிலதடவைகள் தனது கையினால் தடவிட அந்த இரும்புகொலுவு தங்கமாக மாறியது. 'இதனை விற்று உனது மகளின் திருமணத்தை நல்லபடி நடத்து போ' எனக் கூறி மகான் அனுப்பிவைத்தார்.

பூண்டி மகான் அவர்கள் செய்த எத்தனையோ அற்புதங்களில் இதுவும் ஒன்றாகும். கையால் தொட்டு, தனது யோகசக்தியின் மூலம் இரும்பைத் தங்கமாக மாற்றுவது வள்ளலார் குறிப்பிட்டதுபோல யோகசித்தி வகையைச் சார்ந்ததாகும். நினைத்த நேரத்தில் ஒரு சாதாரண உலோகத்தை உயர்ந்த (தங்க) உலோகமாக மாற்றும் அற்புத சித்தியினை பூண்டிமகான் பெற்றிருந்தார்.

அவர் அந்த சித்தியினைத் தன்சுய நலத்துக்காகப் பயன்படுத்தாமல், பிறர் நலனுக்காக மட்டும் பயன்படுத்தி வந்தார். சூட்சும உடலில் இன்றும் வாழ்ந்துவரும் பூண்டி மகானை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் அவர் அருள் செய்வார். உங்களுக்கும் தங்கம் கிடைக்கும்.

Saturday, 1 September 2012

வடலூர் வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்


வள்ளல் பெருமானும் - இரசவாதமும்

சித்தர்கள் சொன்ன இரசவாதம் பொய்யில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. சித்தர்களின் காலத்திற்குப்பின் வாழ்ந்த பலயோகிகளும், ஞானிகளும் இதனை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் வடலூர் வள்ளல் பெருமான் அவர்களது வாழ்வில் நடந்த மூன்று உண்மைச் சம்பவங்களை இங்கே எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

முதல் நிகழ்வு

1868 ஆம் ஆண்டில் வள்ளலார் அவர்கள் இரசவாத முறையில் தங்கம், வெள்ளி செய்ததற்கு அவர் எழுதிய கடிதமே ஆதாரமாக உள்ளது.

03.05.1868 ஆம் ஆண்டு சென்னை ஏழுகிணற்றுக்கு அடுத்துள்ள வீராசாமிப்பிள்ளைத்தெரு, கதவு எண். 38ல் வாழ்ந்துவந்த இறுக்கம் ஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு வள்ளல் பெருமான எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இதுதான்.

'தற்காலம் வேண்டுவதை இதனடியில் எழுதுகின்றேன். அதாவது பொன்னுரைக்கின்ற உரைகல் ஒன்று, வெள்ளியுரைக்கின்ற உரைகல் ஒன்று, இவைகளையும் இவைகளுக்கு அடுத்த தராசு முதலிய கருவிகள் வைக்கின்ற பை ஒன்று, இம்மூன்றும் வாங்கி பங்கியில் அனுப்ப வேண்டும். சுமார் 5 பலம் 8 பலம் நிறுக்கத்தக்க தராசு நேரிட்டாலும் அதனுடன் அனுப்பவேண்டும்.

இதில் குறிப்பிட்ட பொருட்கள் வந்து சேர்ந்ததென்ற பொருள்படும்படியாக வள்ளலார் அவர்கள் மேற்கண்ட இறுக்கம் ஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு 26.05.1868ல் அடுத்தொரு கடிதமும் எழுதியுள்ளார்.

இந்தக்கடிதங்கள் மூலமாக வள்ளல் பெருமான் தங்கம் செய்துள்ளார் என்பதை (எழுத்து ஆதாரம்) அறியமுடிகிறது. தங்கம் செய்வதற்காக அல்லாமல் வேறு பணிக்காக இவற்றை வள்ளல்பெருமான் வாங்கியிருக்க சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. இதுபற்றிய விவரம் திருமுகம் - கடிதம் எண். 36, 37ல் உள்ளன. வடலூர், வள்ளலாரின் தெய்நிலையம் வெளியிட்ட திருஅருட்பா உரைநடைப்பகுதியில் இக்குறிப்புகள் உள்ளன.

இதுவல்லாமல் மேலும் இரண்டு ஆதாரங்கள் திருஅருட்பிரகாச வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்சோதி அகவலில் உள்ளது.

வள்ளல் பெருமான் கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி என சித்திகளை மூன்றுவகையாகப் பிரிக்கிறார். அந்த மூன்றுவகை சித்திகளையும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தனக்கு முழுமையாக அளித்ததாகவும் அகவலில் எழுதியுள்ளார்.

'மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி' – அகவல் 240

இரசவாத்தில் உலோகங்களைக் காய்ச்சி, மூலிகைகளை அவற்றுடன் கூட்டி செயலாகச் செய்து தங்கமாக மாற்றுவது கருமசித்தியில் அடங்கும். அத்தகைய கருமசித்தியில் அடங்கும். அத்தகைய கருமசித்தியில் அடங்கியுள்ள பலகோடிகலைகளையும் (அதில் இரசவாதக் கலையும் அடங்கும்) அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தனக்கு அருளியதாக அகவலில் குறிப்பிட்டுள்ளார்.

கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி - அகவல் 242

இத்தகைய கருமசித்திக்காக இரசவாத செயலுக்காக வள்ளல் பெருமான் சென்னையிலிருந்து கருவிகள் வாங்கியதை கடித ஆதாரப் பூர்வமாக ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம்.

இரசவாதத்தை செயலாய் செய்து முடிப்பது கருமசித்தியில் அடங்கும். அதேசமயம் நினைத்த விநாடியில் ஒரு உலோகத்தை அதைவிட உயர்ந்த உலோகமாக மாற்றுவது யோகசித்தியில் அடங்கும். அத்தகைய யோகசித்தியையும் தனக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளியதாக அகவலில் குறிப்பிட்டுள்ளார்.

'யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி' – அகவல் 244

இவ்வாறு நினைத்த விநாடியில் சாதாரண உலோகத்தைத் தங்கமாக்குவது, மணலைத் தங்கமாக்குவது போன்ற யோகசித்த செயல்களை வள்ளலார் செய்ததை பின்வரும் உண்மைச்சம்பவம் மூலமாக நாம் அறியலாம்.

நிகழ்வு – 2

வள்ளல் பெருமான் வடலூரில் தங்கியிருந்த சமயம் ஒருமுறை அந்த ஊரைச் சேர்;ந்த ஒரு செல்வந்தர் வள்ளர் பெருமானைத் தனிமையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அந்த நபர் செல்வந்தராக இல்லாமல் தனது செல்வம் அனைத்தையும் இழந்து பல ஊர்கள் சுற்றி அலைந்துவிட்டு மீண்டும் வடலூர் வந்திருந்தார். வள்ளல் பெருமானின் சக்தியை, சித்தாற்றலை உணர்ந்த அவர் வள்ளல் பெருமானை சந்திக்க வந்திருந்தார்.

அந்த நபர் தான் இரசவாதத்தில் தங்கம் செய்ய ஆசைகொண்டு தனது சொத்து முழுவதையும் இழந்துவிட்டதாகவும், பல ஊர்கள் சுற்றி பலபேரை சந்தித்தும் தங்கம் செய்வது சாத்தியப்படவில்லை எனவும், கைப்பொருள் முழுவதையும் இழந்து விட்டதாகவும் கூறிவிட்டு 

'இவ்வளவு சக்திபடைத்த நீங்கள் நிச்சயம் தங்கம் செய்யும் இரசவாத சித்தி பெற்றிருப்பீர்கள். எனவே தயவுசெய்து எனக்கு சொல்லித் தாருங்கள்' என்று கேட்க வள்ளலார் மறுத்துவிட்டார். அந்த நபரோ விடுவதாக இல்லை தொடர்ந்து நச்சரிக்கவே வள்ளல் பெருமான் நின்றிருந்த அந்த இடத்திலேயே குனிந்து மணலை ஒரு கைப்பிடி அள்ளி அந்த நபரின் கையினை விரிக்கச் சொல்லி மெல்ல கொட்டியிருக்கிறார்.
வள்ளல் பெருமான் தரையிலிருந்து அள்ளியபோது மணலாக இருந்தது அந்த நபரின் கையில் விழும்போது தங்கத்துகள்களாக விழுந்திருக்கின்றது. அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்த நபர் 'ஐயா நான் நினைத்தது உண்மைதான் உங்களுக்கு அந்த இரசவாத சித்தி இருக்கிறது. தயவுசெய்து எனக்குக் கற்றுத்தாருங்கள்' என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவருக்கு வள்ளல் பெருமான் சொன்ன தெளிவான பதில் ஒரு அற்புதமான வாக்கியமாகும் - அது

'இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும்' – என்பதுதான். இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும் என்று கூறிய வள்ளல் பெருமான், அந்த நபரைப் பார்;த்து 'போனது போகட்டும் இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாதீர்கள். இனிமேலாவது உழைத்து, ஏதேனும் தொழில் செய்து சம்பாதிக்கும் வழியினைப் பாருங்கள். இதுபோன்ற இரசவாத செயலில் ஈடுபட்டு எதையும் வீண் விரயம் செய்யாதீர்கள்' என்று உபதேசித்து அனுப்பியுள்ளார். அந்த நிகழ்ச்சி மூலம் வள்ளலார், மணலைத் தங்கமாக்கும் யோகசித்தி பெற்றிருந்தார் என்பது தெளிவாகிறது.

நிகழ்வு – 3

வடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மக்கள் வறுமையால் வாடியதைக் கண்டு வரந்திய வள்ளல் பெருமான் அம்மக்களுக்காக தருமசாலையை உருவாக்கினார். ஒரு சமயம் வள்ளல் பெருமானிடம் வந்த இரண்டு நபர்கள் தங்கள் குடும்பம் மிக ஏழ்மையில் உள்ளதாகவும் பிழைக்க ஏதேனும் வழிதாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது பரிவுகொண்ட வள்ளல்பெருமான் அவர்களுக்கு இரும்மை வெள்ளியாக்கும் முறையினை உபதேசம் செய்திருக்கிறார்.

சிலகாலம் கழித்து அந்த இருவரும் மீண்டும் வள்ளலாரிடம் வந்து ஐயா செலவு நிறைய உள்ளது இந்த வெள்ளியை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை. எனவே இரும்பைத் தங்மாக்கும் முறையினை எங்களுக்கு சொல்லித்தாருங்கள் என்றனர். அவர்களின் பேராசையைக் கண்ட வள்ளலார் 'அதுவும் போகும் போங்கள்' என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டாராம். அதன்பின் அந்த இருவராளும் இரும்பை வெள்ளியாக்க முடியவில்லையாம். அந்த சக்தியை அவர்கள் இழந்துவிட்டார்களாம்.

இந்த நிகழ்வு மூலம் ஒரு சாதாரண உலோகத்தை வேறு ஒரு உயர்வான உலோகமாக மாற்றும் ஆற்றலை வள்ளலார் பெற்றிருந்தார் என்பதும், அந்;த ஆற்றலை விநாடியில் ஒருவருக்குக் கொடுக்கவும், திரும்பப் பெறவும் வள்ளலாரால் முடிந்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது.

இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் நன்கு கவனித்து மனத்தில் பதிக்கவேண்டிய ஒன்று வள்ளல் பெருமான் கூறிய 'இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும்' என்ற வாக்கியம்தான். இது மனத்தில் பதிந்துவிட்டாhல், தேவையில்லாமல் எவரும் அலைந்து திரியவோ, பொருளை வீணே செலவு செய்யவோ மாட்டார்கள்.

உண்மையிலேயே இரசவாத சித்திபெற்றவர். அதனை மற்றவர்க்கு செய்து காட்டிய உயர்ந்தஞானி. எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளம் கொண்டவருமான வள்ளல் பெருமானின் இந்த வாக்கினை மதித்து நடக்க வேண்டியது இரசவாத சித்திக்காக முயல்பவர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். மீறி நடப்பது அவரவர் விதியாகும்.

                          வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – அகவல் 280

சிவன் சொத்து குலநாசம் - எப்படி அபூர்வ சக்தி ரசமணி செய்முறை

சிவன் சொத்து குலநாசம் - எப்படி


சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதாவது சிவன் சொத்தினை அபகரித்து அனுபவிப்பவர்களது குலம் நாசமாகும் என்பது இதன் பொருளாகும். இது உலகில் பொதுவாழ்வில் சிவன்;கோவில் சொத்தினை அபகரித்து அனுபவிப்பார்களது குலத்தினை நாசம் செய்யும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இது சரிதான் என்றாலும், இந்தப் பழமொழியில் உள்ள மறைவான பொருள் வேறு ஒன்றும் உள்ளது.
சிவனார் வீரியம், சிவனார் விந்து என்ற பெயர்கள் பாதரசத்திற்கு உண்டு. அத்தகைய பாதரசத்தினை சிவனது சொத்தினை பயன்படுத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதே மறைபொருளாகும். அவர்களது குலம் எப்படி நாசமாகும் என்பதை இந்தப் கட்டுரையை முழுமையாகப் படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.

பாதரசத்தினை மருந்துக்கோ, இரசவாதத்திற்கோ பயன்படுத்தும் முன்பு அதன் தோஷங்களை நீக்குவதும், சட்டை எனப்படும் வேறு உலோகக் கலப்புக்களை நீக்குவதும் அவசியமாகும். பாதரசத்தில் எட்டுவகையான தோஷங்கள் உண்டு. அதேபோல் ஏழுவகையான சட்டைகள் உண்டு. இவற்றை முறைப்படி நீக்கிய பின்னரே இரசத்தினைப் பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் பலவித தீமைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எட்டுவகையான தோஷங்கள், அவற்றினால் உண்டாகும் நோய்களையும் முதலில் காண்போம்.

எட்டுவிதமான தோஷங்கள்

1. உண்பீனம் - தாங்க இயலாத வயிற்றுநோயினைத் தரக்கூடிய தோஷமாகும் இது.

2. கௌடில்யம் - தலைசம்பந்தமான நோய்கள், தலைக்குத்தல், ஒற்றைத்தலைவலி, மண்டையிடி போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.

3. அனவர்த்தம் - மூளை சம்பந்தமான நோய்கள், பைத்தியம், மயக்கம், வாய்ப்பிதற்றல் போன்றவற்றை இந்த தோஷம் உருவாக்கும்.

4. சண்டத்வம் - சன்னியினால் உண்டாகக்கூடிய உடற்கோளாறுகளை இந்த தோஷம் உண்டாக்கும்.

5. பங்குத்வம் - பெருநோய் என்றழைக்கப்படும் குஷ்டம் மற்றும் தீராத தாகம் போன்ற நோய்களை இந்த தோஷம் ஏற்படுத்தும்.

6. சங்கரம் - பயம் படபடப்பு இவைகளை உண்டாக்கி மனபாதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் உடலிலுள்ள ஏழுவித தாதுக்களையும் பலமிழக்கச் செய்தல், வீரியத்தின் தன்மையை வீணாக்குதல் போன்றவற்றை இந்த தோஷம் செய்துவிடும். ஏழுவித தாதுக்குறைபாடும், வீரியத்தின் குறைபாடும் அவரது வாரிசு – வம்ச வளர்ச்சியை பாதிக்கும். அல்லது வாரிசு இல்லாத மலட்டுத்தன்மையை உருவாக்கிவிடும். இதைத்தான் பெரியோர் மறைமுகமாக சிவன் சொத்து குலநாசம் (வாரிசு நாசம்) என்று கூறினார்கள்.

7. சமலத்வம் - பலவித சுரங்கள், கிறுகிறுப்பு போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.

8. சவிவிஷத்வம் - உடல் நடுக்கம், உடல் இளைத்தல், இரைப்பு நோய் போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும்.

ஏழுவிதமான சட்டைகள்

1. நாகம் - நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும்.

2. வங்கம் - வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும்.

3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும்.

4. மலம் - மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோது அறிவாற்றல் பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும்.

5. விடம் - விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடும்.

6. கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும்.

7. சபலம் - சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும்.

இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். அதுமட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். முறைப்படி சுத்தி செய்யாத இரசத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் முன்கண்ட பாதிப்புகள் சிறதுசிறிதாக உடலில், மனத்தில் ஏற்பட்டு மெல்லமெல்ல வளர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும். எனவே இரசத்தைக்கொண்டு இரசவாதம் செய்ய நினைப்பவர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாகப் பயின்று இரசவாதத்தில் ஈடுபடவேண்டும்.

எட்டுவகையான தோஷங்களும், ஏழுவகையான சட்டைகளும் சரியானபடி நீக்கப்படாவிட்டால் என்னென்ன விதமான நோய்களை உண்டாக்குமென பார்த்தீர்கள். அவற்றில் ஒருசில நோய்களுக்கு ஒருவர் ஆட்பட்டாலே அவர் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக ஆகிவிடும். அதனால்தான் சிவன்சொத்து குலநாசம் என்று சொல்லப்பட்டது. இதனை முழுமையாக அறியாமல் சிலர் இரசமணி பயிற்சி, இரசவாத பயிற்சி என நடத்தி தான் பெற்ற அறைகுறை அறிவை அதில் மேலும் அறைகுறையாகச் சொல்லித்தந்து 

'குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழு மாறே' – என்ற சித்தர் வாக்குப்படி வீணாகிக் கொண்டுள்ளனர். (மற்றவர்களையும் வீணாக்கிக் கொண்டுள்ளனர்).

தன்னிடம் பயிற்சிக்கு வருபவர்கள் மூலமாக தாங்கள் பயிற்சி எடுத்துக் (கற்றுக்) கொள்கிறார்கள். இரசவாதத்தில் ஈடுபட நினைப்பவர்கள் அதன் அவசியத்தை முதலில் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். அத்துடன் மேற்கண்ட நொய் சம்பந்தமான எச்சரிக்கை வழிமுறைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக ஒழுக்கமான, உண்மையான குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். வெறும் வாய் வார்த்தைகளை நம்பாமல் செயல்பாட்டில் உண்மை, ஒழுக்கம் உள்ளதா என கவனித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பெரியோர் சொன்ன சிவன் சொத்து குலநாசம் என்ற வாக்குப் பலித்துவிடும்.