Thursday, 6 September 2012

மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்


மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்;ஜோதிடம்


மேஷ லக்னம்
மேஷ லகனத்தில் பிறந்தவர் கம்பீரமான தோற்றம் உடையவர்..செல்வங்களைச் சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தியபிறகும், பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வார்..முன்கோபம்,பிடிவாதமும் அதிகம் கணப்படும்..முகத்திலும்,தலையிலும் தழும்பு இருக்கலாம்..ஆணித்தரமான பேச்சு இருக்கும்..45 வயதுக்கு மேல் எதிர்பாராத பண வசதி உண்டாகும்..உடன்பிறந்தோரால் சகாயம் இல்லைகடுமையாக உழைக்ககூடியவர்கள்...சக்திக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு பிரச்சினைகளில் சிக்கி கொள்வார்...வாழ்க்கை துணை விசயத்தில் ஏமாற்றம் உண்டாகும்..அல்லது வாழ்க்கை துணை உடல்நலக்கோளாறுகளால் அவதிபடுவார்..பவள மோதிரம் அணியலாம்பிறரை அளவுக்கு மீறி நம்புவது கூடாது..பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவும் பிறர் சொல்வதையும் கேளுங்கள்..
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூர்ண ஆயுள் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள், குருவோடு சனி சம்பந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுத்து வருவார். சூரியனும் குருவும் யோக்காரர்கள். இருவரும் ஒன்று கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி, இம்மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.லக்னத்தில் சனி நின்று நீசம் அடைந்தால் போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்...

ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர். செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும், அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை அனுபவிப்பார். எப்போதும் கூடுமானவரையில் மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சந்திரன், சுக்ரன் பாவிகள், சனி ஒருவரே இவர்களக்கு ராஜயோகம் கொடுப்பார்.சனி திசை நல்ல யோகத்தை முன்னேற்றத்தை தரும்..நல்ல நினைவாற்றல் உடையவர்..சந்திரன் லக்னத்தில் அமைந்தால் மிக நல்லது...பிறரை பேசி மயக்குவதில் வல்லவர்..குடும்ப பொறுப்பை சுமக்கும் சூழல் சிறு வயதில் இருந்தே உண்டகிவிடும்..தாரளமாக செலவு செய்து அடிக்கடி பணச்சிக்கலை உண்டாக்கி கொள்வர்..சிற்றின்ப ஆசை அதிகமாகவே இருக்கும்..பெண்களாக இருந்தால் கண்ணழகும்,உடல் அழகும் பிறரை மயக்கும்படி அமைந்திருக்கும்..எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் திருமண வாழ்க்கை ஏதாவது மனக்கவலை ஏற்பட்டவணமோ அல்லது ஏமாற்றம் தரும்படியாகவோ அமைந்துவிடும்...
செவ்வாய், புதன் மாரகர்கள், இவர்களுடன் பலன் பொருந்திய கிரஹங்கள் சேர்ந்திருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.வெள்ளை நிறம் யோகம் தரும்..மரகத பச்சை நவரத்னம் அணியலாம்..மதுரை மீனாட்சியை வழிபடலாம்.,...

மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர் எப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பார். எல்லோரிடமும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவர். இவருக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய். சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி சேர்ந்தர்ல் யோககாரனாவான். சந்திரன் தோஷமுடையவன். எனினும் இவன் மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள். ஏதற்கும் இவர்களுடைய வலுவை அறிந்து எதையும் சொல்ல வேண்டும்.எப்போதும் ஏதேனும் ஒரு சிந்தனை..விரைவாக பணக்காரன் ஆக என்ன வழி என சிந்தித்துக் கொண்டிருப்பார்..

எதையும் ஆரய்ந்து கண்டுபிடிக்க முயல்வார் யாரையும் நம்ப மாட்டார்...நம்பினால் ஏமாற்றம் அடைந்தும் விடுவார்...நகைச்சுவையாக பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்..குடும்பத்திற்காக அயராது உழைப்பர்..தன்னை மரியாதை குறைவாக நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டார்...33 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் என செட்டில் ஆகிவிடுவார்..துனைவரோடு போராட்டம் இருக்கும்..

வெள்ளை ,பச்சை,க்ரே அதிர்ஷ்டம் தரும்..மரகத பச்சை நல்லது..திருப்பதி பெருமாளை வருடம் தோறும் சென்று வணங்கி வருதல் நல்லது..அம்மாவை பாதுகாத்து அவருடன் இணக்கமாக இருந்தால் பண வரவு எப்போதும் இருக்கும்...பங்கு சந்தையில் கவனம் தேவை..வெகு விரைவில் செல்வந்தராக இவர் எடுக்கும் முயற்சிகள் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணும்..அதிர்ஷ்ட எண் 5

2 comments:

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Unknown said...

நல்ல தகவல் . நன்றி