Friday, 30 November 2012

1-1-2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி? 2013 டிரைலர்

2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி?

வருசப்பிறப்பு வந்தாலெ கோயிலுக்கு போவோம்..இந்த வருசம் நான் நினைச்சது எல்லாம் நல்லபடியா நடக்கணும் இந்த வருசம் நான் வீடு வாங்கும் கனவு பலிக்கனும்..கலயாணம் நடக்கணும்..வேலை கிடைக்கனும்..தொழில் நல்ல அமோக லாபம் கொடுக்கணும் என்றெல்லாம் வேண்டிக்கொள்வோம்...இது வருசா வருசம் நடப்பதுதான்...பொதுவா சித்திரை தமிழ்ப்புத்தாண்டு பிறப்பைதான் தமிழர்கள் கொண்டாடுவர்..இப்போ மீடியாக்கள் வளர்ச்சியால் ஆங்கில புத்தாண்டையும் அமோகமாக கொண்டாட தொடங்கி விட்டோம்..பிறக்கப்போகும் புது வருடம் 2013 ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என எல்லா கிரக பெயர்ச்சியையும் வைத்து சுருக்கமான பதிவு ஒண்ணு எழுதப்போறேன் அதுக்கான முன்னோட்டம் தான் இந்த பதிவு..

1-1-2013 மொத்தமா கூட்டினா எட்டு வருதே என அலற வேண்டாம்...2013 மட்டும் கூட்டினா 6 வருது பாருங்க..மகாலட்சுமி...!! இருந்தாலும் காலண்டர்ல கடைசி இரண்டு நம்பர் மட்டும்தானே போடுவாங்க..அதை பார்க்கும்போதெல்லாம் கிலியை உண்டாக்குதே ...அது என்ன நம்பர்..? 13....சரி..ஓகே நாமளே இப்படி பயப்பட்டா அமெரிக்காகாரன் எப்படி பயப்படுவான்..? 12 வது மாடிக்கு அப்புறம் 14 ஆம் நம்பர் மாடிதான் அங்கெல்லாம்..அவன் என்ன பண்ணுவான்...நம்ம ஊர்ல 13 கண்டெல்லாம் பயப்பட மாட்டோம்...அதுவும் இல்லாம 13 ராகு ...காளியின் எண்...பெண் தெய்வம்..நம்ம ஊர்ல நடப்பது பெண் முதல்வர்...அவங்க தலைமையில நல்லது நடந்தா சரிதானே..என்ன நான் சொல்றது..? ஓகே...

கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரத்துல பிறக்குது புத்தாண்டு...செவ்வாய் உச்சம்..சூரியன்,புதன் நான்காம் இடத்துல..இந்தியாவோட ராச்க்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..இந்தியாவோட பலம் உலக நாடுகளுக்கு புரிய போற ஆண்டு 2013...இந்தியாவின் பேச்சுக்கும்,செயலுக்கும் பெரும் மரியாதையை பெற்று தரப்போகும் ஆண்டு இது...சரி எல்லா ராசிக்காரர்களுக்கும் எழுதுகிறேன்...

Wednesday, 28 November 2012

வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்

வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்

வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவில் கலந்து கொடுக்கும் வசிய மருந்து என இருக்கிறது...கொல்லிமலை மூலிகைகள் ,அரசு ஆலமர ஒட்டுண்ணி தாவரங்கள் மூலமாக வசிய மை அக்காலத்தில் தயாரிப்பார்கள்..இது பெரும்பாலும் பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பதற்கும்,காதலை சேர்த்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது..ஆனால் பெரும்பாலும் கள்ளக் காதலுக்குத்தான் அதிக முக்கியத்துவம்..அழகான பக்கத்து வீட்டு பெண்ணை மயக்கணும் எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை என வரும் காமுகர்கள் தான் இந்த வசிய மருந்து வைத்தியர்களின் குறியாக இருந்திருக்கிறது...ஆனால் வசிய மை பொய்யில்லை..சில வைத்தியர்கள் போலியாக தயாரிக்கப்பட்ட வசிய மை,வசிய மருந்தை பணத்திற்காக விற்று விடுவார்கள்..

வசிய மை,வசிய மருந்து தயாரிப்பது பற்றி சித்தர்கள் பல நூல்களில் தெளிவாக எழுதி இருக்கின்றனர்..அவர்கள் சொன்ன மூலிகைகள்,சேர்க்கப்படும் பொருட்கள் தான் மறைபொருளாக இருக்கின்றன...

ஜோசியர்கள் பலரும் இதை அராய்ந்து இருக்கின்ரனர்..நிறைய பேர் இதை கொடுத்துக்கொண்டும் இருக்கின்றனர்..நானும் இதை பத்தி தெரிஞ்சிக்க நிறைய நூல்களையும் படித்தேன்..நிறைய பேரை சந்திச்சும் இருக்கேன்...தர்மபுரி பக்கம் ஒரு கிராமத்தில் ஒரு பெரியவர் இந்த மை கொடுப்பதாக சொல்லி வந்தனர்..ஒரு நண்பர் மூலமாக வாங்கி பார்த்ததில் அதில் சேர்த்தப்பட்ட சரக்கு மலிவானதாக இருந்தது..சேலம் பக்கமுள்ள கிராமங்களில் வசிய மருந்து சுலபமாக கிடைக்கும் என்றார்கள் அதிலும் நிறைய போலி...வசிய மை என்பது மயக்ககூடிய அல்லது அதிக வாசனை திரவியம் கலந்த திரவமாகவே இருக்கிறது..இது சரியல்ல..

பொதுவாக நெற்றியில் சன்ப்தனம்,குங்குமம் வைத்தாலே அது வசீகரமாக இருக்கும்...சந்தனம் என்பொஅது குரு...குங்குமம் என்பது செவ்வாய்...இது நம் மேல் ஒரு மரியாதையையும்,ஒரு நம்பிக்கையையும் நம்மை பார்ப்பவர்களிடத்தில் உண்டாக்கும்..இதனால்தான்...கோயில் பூசாரிகள்,அர்ச்சகர்கள்,ஆன்மீகவாதிகள்,சாமியார்கள்,ஜோசியர்கள் இதை நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்கின்றனர்...பெண்கள் நெற்றியில் குங்குமம் சிவப்பு நிறத்தில் இட்டுக்கொள்ளும்போது அவள் முகத்தை மட்டும் பார்த்து பேசும் கவன ஈர்ப்பை ஆன்களுக்கு உண்டாக்குகிறது..மரியாதையை,நல்லெண்ணத்தையும் உண்டாக்கும்...சிவப்பு எதிர்மறை எண்ணத்தை எதிராளிக்கு உண்டாக்காது..அதாவது கெட்ட எண்ணத்தை பார்ப்பவர்களிடத்தில் அவ்வளவு சீக்கிரம் உண்டாக்காது...இப்பல்லாம் துளியூண்டு ஸ்டிக்கர் பொட்டு வெச்சிக்கிறாங்க..அதெல்லாம் கணக்குல வராது..

நாயுறுவி வேரை வெள்ளிக்கிழமையில் பிடுங்கி பல் விளக்கினா பெண்கள் வசியம் ஆவாங்க என கவனகர் கனகசுப்புரத்தினம் ஒரு நூலில் எழுதியிருக்கார்...நாயுறுவி வேரை அரைச்சும்,அரச மரத்தில் கிளைகளில் ஒட்டுண்ணியாக சில தாவரங்கள் முளைத்திருக்கும் அவற்றை குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பறித்து,அரைத்து ,இன்னும் சில மூலிகைகளையும் கலந்துதான் வசிய மை,வசிய மருந்து தயாரிக்கப்படுகிறது...ஆலமரம் போல அரசமரம் போல இன்னும் சில மரங்களில் ஒட்டுண்ணிகள் முளைத்திருக்கும்..அவற்றை பிடுங்கி அரைத்துஉருண்டையாக உருட்டி காய வைத்து பிரிந்து இருக்கும் கணவன் ,மனைவிக்கு ரசம் இல்லாத உணவில் கலந்து கொடுத்தால் கனவன் அல்லது மனைவி மீது ஏக்கம் உண்டாகி ஒன்று சேர்வார்கள்....இதை சத்தியமங்கலம் காடுகளில் இந்த மூலிகைகளை பறித்து மருந்து தயாரித்து வந்த பர்கூர் மாதன் என்பவர் மூலம் அறிந்தேன்..அவர் மூலம் சிலருக்கும் கொடுத்தேன்..ஓரளவு பலனும் இருந்தது...அடிக்கடி அவரை பார்க்க முடிவதில்லை...

கேரளாவில் சிலர் கொடுக்கின்றனர்..ஆனால் நிறைய போலிகள் இருப்பதால் கவனமாக தான் கண்டறிய வேண்டும் ஒரு பணக்காரர் சில வைத்தியர்களை வீட்டிற்கே வரவழைத்து மாதம் ஒருமுறை வசிய மருந்து தயாரிக்க சொல்லி வாங்கிக்கொள்வாராம்..அவ்ளோ மருந்தை என்ன செய்றார்ன்னுதான் தெரியல..கடகம் ராசிக்காரங்கதான் இந்த தொழில்ல அதிகம் இருக்காங்க..அதுக்கப்புறம் தனுசு,மீனம்...இன்னும் மலையாள மாந்திரீகம் பத்தியும் நிறைய இருக்கு.அது பத்தி எழுதுறேன்!!

Tuesday, 27 November 2012

காஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்

பெரியவர் மராத்தி மாநிலத்தில் பயணம் ஏதோ ஓர் ஊரில் (பூனா என்று சொன்ன ஞாபகம்) முகாம். அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர்(இப்போதைக்கு அவர் வம்பர் ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர் யாரிடம் நல்ல பெயர் இல்லாதவர்).

பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி 'நான் பெரியவனா இல்ல...அவர் 
பெரியவரான்னு பார்த்துவிடுகிறேன் இன்று என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும் இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்' என்றெல்லாம் கொக்கரித்து இருக்கிறார்.

அவர் குடும்பத்தார் மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

அன்று பெரியவர் பூஜை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த வம்பரும் சென்று 'கடைசியில் கடைசியாய்' இருந்து கொண்டு கையில் மையை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தார் செய்தார் செய்தார்.

அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார்.

பூசை முடிந்ததுஇ திருநீர் பிரசாத விநியோகம் இனிதே நடந்தது.

ஸ்வாமிகள் கை சொடுக்கி அழைத்தார் இவரை. இவருக்கோ ஒரே ஆச்சிரியம். எப்படி இந்த ஆயிரம் ஆயிரம் சனத்தில் நம்மை குறி வைத்து அழைக்கிறார். குறி வைத்து தான் விட்டாரே...

யாரை வசியப்படுத்துவேன் என்றாரோஇ அவரிடமே வசியப்பட்டு யாரை பொம்மை ஆக்குவேன் என்றாரோ அவரிடமே பொம்மையென சென்றார் அமர்ந்தார்.

ஐயன் அவரை உற்று பார்த்தார். பின் மெல்ல பகர்ந்தார்.

'பின்னாடி திரும்பி பார்'.

பார்த்தார் வம்பர். நடுநடுங்கினார்.

பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும் ஐயனாய் தெரிந்தது அவருக்கு. ஆம் அத்துணை அத்துணை மகாபெரியவர் உருவங்கள்..

மேலே கீழே இடது வலது என்றெல்லாம் பார்க்க சொன்னார். எங்கெங்கு காணினும் ஐயனடா...

கதறி காலில் விழுந்தார். மன்னிக்க கோரினார். பாவமன்னிப்பு கேட்டார்.

சொன்னார் பெரியவர் 'சித்து பெரிய விஷயமே இல்லே ஒர்த்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே'.

'அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவம் போக்குகிறேன்'.

'இல்லே இன்னும் நிறைய இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதுனாலே அத்தனை பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணி வை ஏழை கொழந்தேளுக்கு. அவாள படிக்க வை அம்பாளை ப்ரார்த்திச்சிண்டே இரு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் பண்ணு நீயும் க்ஷேமமா இருப்பே'.

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகின்ற தீர்த்த பெருக்கு.தான் மஹா பெரியவர்.

Monday, 26 November 2012

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;மீனம்

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ;மீனம்

ராகுபகவான் துதி;

’’பணியென உருவம் ஆகிப்
பட்சமாய் அமுதம் உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் 
தகும்படி யோகம் போகம்
துணிவுடன் அளித்து நாளும் 
துவங்கிட இன்பம் நல்கும்
மணமுறுகும் ராகு பொற்றாள்
மலரடி சென்னி வைப்போம்’’

மீனம் ராசி பலன்கள்;

குருவின் ராசியில் பிறந்த தன்மானத்தை உயிராய் நினைக்கும் நண்பர்களே...இப்போ உங்க தன்மானத்துக்கும்,கெள்ரவத்துக்கும்,தொழிலுக்கும் சோதனையான காலம் ..அஷ்டம சனி தினசரி பெரிய பெரிய செலவுகளை கொடுக்குது..அதுக்கு ஏற்ற வருமானத்தையும் வர விடாம தடை செய்யுது..சில பேர் அகலக்கால் வெச்சிட்டு விழி பிதுங்கி நிற்கறீங்க..சில பேர்க்கு குழந்தைகளால் சங்கடம்,நிம்மதியின்மை...பணம் காசு போனா சம்பாதிச்சுக்கலாம்..உடல்நிலை..? படுத்தி எடுக்குதே..மாத்தி மாத்தி மருத்துவசெலவுன்னு சிலர் புலம்புவாங்க..எதிரிகள்,போட்டியாளர்களால் தொழில் முடக்கல்,வழக்குகளால் அலைச்சல்,வேலை கிடைக்காமல் சிரமம்,வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரியால் அலைச்சல்,அதிக வேலை பளு,படிப்பில் பலவீனம்,கணவன் மனைவி பிரிந்து துன்பபடுதல்,கல்யாண முயற்சிகள் தடங்கல் என இவை எல்லாம் அஷ்டம சனியால் வரும் துன்பங்கள்.....இப்போ அனுபவிச்சிக்கிட்டு இருக்கீங்க..திசை நல்லாருந்தா ஓரளவு சமாளிக்கலாம்..ஆனால் அஷ்ட சனி எந்த நேரம் எப்படி காலை வாரிவிடும்னு தெரியாது...அஷ்டம சனி முடியும் கடைசி நாளிலும் சிலரை குப்புற தள்ளி இருக்கிறது...

சரி குருவாவது சாதகமா இருக்கான்னு பார்த்தா ராசிநாதனும் பாதகம 3ல் மறைந்து என்னால் உதவ முடியாதுன்னு கையை விரிச்சுடுறார்..விளைவு பண் முடக்கம்..கடன் தொல்லை...பண விசயத்தில் ஏமாற்றம்...ரொம்ப நம்பினேன்...இப்படி பன்ணுவான்னு கனவுல கூட நினைக்கலை என்ற டயலாக் வரும் நேரம் இது.

ராகு கேது பெயர்ச்சியும் சாதகமா இல்லைங்க..எரியற நெருப்புல எண்ணைய ஊத்துறா மாதிரி அதையும் சொல்லணுமா.சொல்லிடுறேன்..உங்கள் ராசிக்கு எட்டில் ராகு வருகிறார்...இது சாதகமான இடம் இல்லை..பாதகமான இடம்...

பாரப்பா பன்னிரெண்டு எட்டு ஏழில் 
பலமுல்ள படவரவு அதிலே தொன்ற
வீரப்பாவேல்விழியால் கலகம் மெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்லு...

என்ற பழம் ஜோதிட பாடல் சொல்கிறது...மருத்துவ செலவையும்,உண்டாக்கும்..ஆண்களாக இருந்தால் பெண்களால் பிரச்சினையும்,பெண்களாக இருந்தால் ஆண்களால் அவமானமும் உண்டாகும் ....இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்...நிதானமாக செயல்படுங்கள்..

Saturday, 24 November 2012

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மகரம்,கும்பம்

ஜோசியம்;ராகு கேது ராசிபலன் ;மகரம்,கும்பம்  tamil astrology

மகரம்;

உங்கள் ராசிக்கு பூர்வ புன்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் குரு இருப்பது நல்ல யோகமான காலம்..சனி ராசிக்கு 10 இல் இருப்பது தொழிலுக்கு வலிமை தரும் காலம்தான்...

ராகு வரும் 23.12.2012 முதல் ராசிக்கு 10ஆம் இடத்தில் ராகுவும்,ராசிக்கு 4ஆம் இடத்தில் கேதுவும் மாறுவது கூடுதல் பலத்தை தருகிறது..பத்திலே பாம்பிருக்க பணம் பறந்து வரும் என்பார்கள்...

ஆனால் 10 இல் ராகு கொஞ்சம் அலைச்சல்,காரிய தடையையும் தொழிலும் இழுபறியும் உண்டாக்கும் என்பது நிதர்சனம்..கொஞ்சம் இழுபறிக்கு பின்னர் தான் காரியம் கைகூடும்..4ல் கேது உடல்நிலையில் கவனம் தேவை மற்றபடி குரு பலம் இருப்பது பிரச்சினைகளை தீர்க்க பெரும்பாலும் உதவியாக இருக்கிறது!!

கும்பம்;

உங்க ராசிக்கு 4ல் குரு,9ல் சனி உலா வந்து கொண்டிருக்கிறது..இது சுமாரான பலந்தான்...இருந்தாலும் அஷ்டம சனி அளவுக்கு கொடுமையில்லாத காலகட்டம்..

வரும் 23.12.2012 முதல் ராகு பெயர்ச்சியில் ராகு 9ஆம் இடமும் கேது மூன்றாமிடத்துக்கும் மாறுகிறார்கள்..சனி 9ல் இருக்கு..ராகுவும் சேர்கிறார்..தந்தை வழியில் செலவுகள்,விரயங்கள்,பாதிப்புகள் இருக்கும்..சொத்து,வீடு சம்பந்தமான பிரச்சினையும்,பிள்ளைகளால் சங்கடம்,விரயம் இருக்கும்..

10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருந்து ராகு விலகி விட்டதால் இனி தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகி வரவேண்டிய பணம் வந்து சேரும் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த கசப்பு நிலை,அதிக வேலைப்பளு இதெல்லாம் நீங்கும்

Friday, 23 November 2012

அழகான மனைவி அன்பான துணைவி -திருமண பொருத்தம்

அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே....அமைஞ்சா பேரின்பம்தாம்..அப்படி அமைய மாட்டேங்குதே...என புலம்புபவர்கள் பலர்....ஒரு பெண் ஜாதகத்தை பார்த்தால் அதில் அமைந்திருக்கும் கிரக நிலைகளை வைத்து அவள் அழகான பெண்ணா ,அன்பான பெண்ணா என்பதை கண்டறியும் முறைகள் பற்றி கீரனூர் நடராசர் எழுதிய சாதகலங்காரம் சொல்கிறது! 

இதே போல பெண்ணின் ஜாதகத்தை பார்க்கும்போது அவளுக்கு வரப்போகும் கணவனை பற்றியும் சொல்ல முடியும்..அவன் நடத்தை,குணம் ,தொழில் பற்றியும் அறியலாம்...

கன்னிகேள் சன்மத்திற் பிறைசுங்கனிருக்கில்
கழற்பெருமையுடன் சுகியாய்க் காசினியில்வாழ்வாள்

என 861 வது சாதகலங்காரம் பாடல் சொல்கிறது

அதாவது லக்னத்தில் சந்திரனும்,சுக்கிரனும் இருந்தால் பெருமையாக பலர் போற்றும்படி சுகமான வாழ்க்கை இவளுக்கும் இவளை கல்யாணம் செய்து கொள்பவனுக்கும் அமையுமாம்..சந்திரனும்,புதனும் லக்னத்தில் இருந்தால் பல கலைகள் தெரிந்தவளாக நன்கு படித்தவளாக இருப்பாள்...புதனும்,சுக்கிரனும் இருந்தால் பட்ட மேற்படிப்பு முடித்தவளாக இருப்பாள்..மிக இனிமையாக பேச்சு இருக்கும்...லக்னத்துக்கு 3ஆம் இடத்தில் சுப கிரகம் ஏதேனும் இருந்தால் செல்வாக்கும்,செல்வமும் உடையவளாக இருப்பாள்...

இரட்டை ராசியில் குரு,செவ்வாய்,புதன் இவர்கள் இருந்தால் நல்ல குடும்பத்தில்,நல்ல குலத்தில் பிறந்தவளாக இருப்பாள்..நல்ல குணமும் இருக்கும்...


 வளர்பிறை சந்திரனை குரு பார்க்க, பிறந்த பெண் அழகும்,குணமும் உடையவர்...

1,7,5,9 ஆம் இடங்கள் கெடாமல் இருந்தால் அழகும்,குணமும்,அன்பும் நிறைந்தவள்..அதே போல கணவனும் இருப்பான்...செக்கிரன்,சூரியன் சேராமல் இருக்கணும்..சேர்ந்தா ..? கணவனுக்கு அடி உதைதான்...செவ்வாய்,சூரியன் 8ஆம் இடத்தில் சேரக்கூடாது...சேர்ந்தா..? அன்புன்னா என்ன..? இனிமைன்னா என்ன..? என்பது கணவனுக்கு மறந்துடும்...!!

பொதுவாகவே பெண் ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரன் பலமாக அமைந்து,லக்னாதிபதியும்,7ஆம் அதிபதியும்,4,5,7,9,11 போன்ற ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்துவிட்டாலே போதும்.. அவள் கணவனுக்கு மிக யோகமாக அமைந்துவிடும்..நல்ல ருசியாக சமையல் செய்து கணவனை மயக்குவாள்..இனிமையாக அழகாக,அறிவாக பேசி வியக்க வைப்பாள்..தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கணவனுக்கு துணையாக இருப்பாள்..தாம்பத்ய சுகத்திலும் குறைவிருக்காது..மிக அழகான தோற்றமும் இருக்கும்..கணவனும் அழகானவனாக இருப்பான்..திருமணத்துக்கு பின் நல்ல வசதியும்,முன்னேற்றமும் உண்டாகும்..ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் 2012-2013 ;தனுசு

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012;தனுசு

வில்லுக்கு அர்ச்சுணன் என பெயர் பெற்ற அர்ச்சுனன் பிறந்தது உங்க ராசியில்தான்...நீங்கள் வசிக்கும் வலப்பக்கம் ஆறு,குளம் இருந்தால் பிரபல யோகம் உண்டு...வெச்ச குறி தப்பாத ராசிக்காரரே...ஊருக்கு உழைச்சு தேஞ்சி போறது நீங்கதான்..பணம் இல்ல..ஆனா ஊருக்குள்ள நல்ல பேரு இருக்கு..என சொன்னா அதை வெச்சு பிரியாணியா சாப்பிட முடியும் என கேட்கும் மனைவி...அதனல நண்பர்களே உலகம்..என இருப்பீர்கள்..டீ சாப்பிட போனா கூட கடக ராசிக்காரங்களும்,தனுசு ராசிக்காரங்களும் துணை இல்லாம போக மாட்டாங்க.

உங்க ராசிக்கு குரு 6ல் இருந்து முடக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார் வருமானமும்,தொழிலிலும் திணறிக்கொண்டிருக்கிறது..பணம் இல்லைன்னா உங்க முகத்துல சிரிப்பையே பார்க்க முடியது..பணம் இருந்துட்டா உங்களை பிடிக்கவே முடியாது..

உங்க ராசிக்கு ராகு 11 ஆம் இடத்திலும்,கேது 5 ஆம் இடத்துக்கும் வரும் 23.12.2012 முதல் மாறப்போறாங்க..இதுவரை 12ல் இருந்த ராகு சுப விரயம்,அசுப விரயம் என மாறி மாறி செலவுகளை கொடுத்து வந்தார் அதுக்கு தகுந்தது போல வருமானத்தையும் கொடுத்து வந்தார்...இனி லாபத்துக்கு மாறும் ராகு வருமானத்தை அள்ளி கொடுப்பார் சில சலுகைகளையும் அனுபவிக்க உதவுவார் என நம்பலாம்..11ல் ராகு வரும்போது ராகு சார்ந்த பொருட்கள் மூலம் ஆதாயம் தருவார்..மின்சாரத்தால் இயங்கக்கூடிய கருவிகள் உற்பத்தி செய்யக்கூடியவர்களுக்கும்,விற்பனை செய்பவர்களுக்கும்,அங்கு பணி புரிபவர்களுக்கும் நல்ல வருமானம் பல மடங்கு முன்னேற்றம் உண்டாகும்..நிறைய ஆர்டர் கிடைக்கும்...

5ல் கேது இருப்பதால் பிள்ளைகள் பற்றிய சிக்கல்கள்,கவலைகள்,செலவுகள் உண்டாகும்..பூர்வீக சொத்து,தந்தை வழி உறவுகள் மூலம் புதிய சிக்கல்கள் உண்டாகும்..குலதெய்வம் கோயில் பற்றிய பிரச்சினைகள் உண்டாகலாம்..

ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும்..அதன் மூலம் பணம் விரயம் ஆகும்


Thursday, 22 November 2012

ராகுகேது பெயர்ச்சி ராசிபலன் ;துலாம்;விருச்சிகம் 23.12.2012

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசிபலன்;துலாம்,விருச்சிகம்

திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் வரும் 23.12.2012 அன்று மாலை 6.21 க்கு ரகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் ராகு விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு கேது ரிசபத்தில் இருந்து மேசம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்...இதன் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் எழுதி வருகிறேன் அதன் அடிப்படையில் இன்று துலாம் ,விருச்சிகம்..

துலாம்;

உங்கள் ஜென்ம ராசிக்கு ராகு வருகிறார்...ஜென்ம சனி நடக்கும் காலத்தில் ஜென்ம ராகுவும் உடன் இணைந்து கொள்கிறார்...

ராசிக்கு 5க்குடையவன் தானே சனி..அவர் நல்லதுதான் செய்வார் என வைத்துக்கொண்டாலும் ராகுவுடன் இணையும் போது கெடுதலையும் செய்கிறார்..வீண் அலைச்சல்,அவமானம்,நஷ்டம் போன்றவை காணப்படுகின்றன..அதிகபடியான மன உளைச்சல்,செய்யலாமா வேண்டாமா என தடுமாற்றம் எதிலும் முடிவு எடுக்க முடியாத தன்மை இருக்கும்..

ஜென்ம ராகு திடீர் யோக பலன்களையும் ஏற்படுத்துவார் என பழம் பாடல்கள் சொல்கின்றன...அந்த நம்பிக்கையில் ஆறுதல் படலாம்..குரு பெயர்ச்சி வரை காத்திருக்கலாம்..குரு இக்கட்டான சூழலில் இருந்து காப்பார்..கேது 8ல் இருந்து 7ஆம் இடத்துக்கு மாருகிறார் இதுவும் சுமாரான பலந்தான்..நண்பர்களிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்..கணவன் மனைவியரிடையே புது பிரச்சினைகள் உருவாகலாம்..எச்சரிக்கையுடன் எதையும் தீர ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது..

விருச்சிகம்;

 இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்து படாத பாடு படுத்தி வந்த ராகு அதிலிருந்து விலகி விடுவது சந்தோசமான தகவல்தான்...7 ஆம் இடத்தில் இருந்து கேதுவும் விலகிவிடுவதால் குரு உங்கள் ராசியை பார்த்து அதன் மூலம் தெளிவான மன நிலையும்,குடும்பத்தில் மகிழ்ச்சியான திருப்பங்களும் உண்டாகும்..நீண்ட நாட்களாக மனதை அலைக்கழித்த துயரங்கள் விலகும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்...பண வரவு திர்டுப்தி தரும்..நண்பர்கள் உதவி கிடைக்கும்..

12ல் ராகு இருந்தாலும் விரய செலவுகள் குறைந்த பாடில்லை..செலவுகள் அதிகம் காணப்படும் அதை சுப செலவுகளாக மாற்றிக்கொண்டால் நல்லது


ஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்

ஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்

ஏழரை சனி,அஷ்டம சனிக்கு ஒரு நல்ல பரிகாரம் என்றால் அது சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து சபரிமலை செல்வதாகும்...இதனால் சனி பாதிப்புகள் நீங்குகிறது!!! 

அப்போ பெண்களுக்கு..? பாத யாத்திரையாக தனது இஷ்ட தெய்வத்தை வணங்கினால் கடுமையான நெருக்கடிகள் விலகும்..!! பழனி பாத யாத்திரை,திருப்பதி பாத யாத்திரை முயற்சி செய்யலாம்..முடியாதவர்கள் மலை மேல் உள்ள கோயிலுக்கு உதாரணமாக திருப்பதி மலை ஏறி பெருமாளை வழிபடலாம்..திருவண்ணாமலை சென்று கிரிவலம் வரலாம்..


48 நாட்கள் விரதம் இருப்பதால் நம் உடல் முழுமையாக சுத்தம் அடைகிறது...மனம் தெளிவாகிறது...உடலில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி உணவு முறை ஒழுங்காகிறது..கடுமையான வழிபாடுகள் பலவற்றை பார்த்தால் அவை நம் உடலுக்கு வலிமையை உண்டாக்குவதாகவும்,மனதுக்கு அதிக வைராக்கியத்தை உண்டாக்குவதாகவுமே இருக்கின்றன..சோதனைகளை தாங்கும் மனப்பகுவத்தை இவை கொடுத்துவிடுகின்றன..

ஏழரை சனி,அஷ்டம சனி யில் என்ன நடக்கிறது அதிக வீண் அலைச்சலும்,துன்பங்களும்,உடல் பாதிப்பும் உண்டாகிறது அதை இவ்வாறு ப்வழிபாடாக செய்தால் பரிகாரமாக சோதனைகள் நம்மை கடந்து செல்வதை காணலாம்...இதற்காகத்தானோ என்னவோ நம் முன்னோர்கள் ஐயப்பன் வழிபாடு,பழனி முருகனுக்கு பாத யாத்திரை போன்றவற்றை வைத்துள்ளனர்...

வீட்டிலியே முடங்கி கொண்டு பிரச்சினையை எண்ணி எண்ணி அழுதுகொண்டு இருப்பவர்களுக்கு மன ஆறுதல் தருவதும் மட்டுமில்லாமல் நம்பிக்கையையும் இந்த வழிபாடுகள் தருகின்றன...

கறுப்பு வேஷ்டி,நீல வேஷ்டி,துண்டு என ஐயப்பன் வழிபாட்டில் எல்லாம் சனிக்குண்டான நிறத்தில் அமைந்திருப்பதையும் காணலாம்.....இது கார்த்திகை மாதம் ஐயப்பன் வழிபாட்டு மாதம் என்பதால் இதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்..

இன்னொரு முக்கியமான பரிகாரம் என்னவெனில்,கறுப்பு நிற காராம் பசுவை கொம்புகளும் கறுத்து இருக்கும்..அதனை தானமாக கொடுத்தால் சனிக்குண்டான தோசம் விலகும் என்பது காலம் காலமாக இருக்கும் நம்பிக்கை ..முடிந்தவர்கள் இதையும் முயற்சிக்கலாம்...

சனிக்கிழமை அவசியம் நல்லெண்ணை தேய்த்து குளியுங்கள்...பெண்கள் வெள்ளிக்கிழமை இவ்வாறு குளிக்கலாம்...ஏழரை சனியில் நம் உடலில் ஒரு மந்த நிலை உருவாகிறது ஜீரண உறுப்புகள் மந்தமடைகின்றன்...இவற்றை உணவு பழக்கங்களை முறைபடுத்தி சரி செய்ய வேண்டும்..இஷ்டம் போல சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்..இவை நம் செயல்களையும் திசை திருப்பும்..எண்ணங்களையும் குழப்பமாக்கும்..கோபம்,பிடிவாதத்தை அதிக படுத்தும்...

சனிபகவான் ஆலயத்திற்கு சென்று ஒவ்வொரு சனிக்கிழமையில் நீல சங்குப்பூ போட்டு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடவும்...முடியாவிட்டால் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வரவும்!!

ஊனமுற்றோருக்கு,ஆதரவற்றோர்க்கு,முதியோர்க்கு உதவினால் ஏழரை சனிக்கு முக்கிய பரிகாரம் ஆகும்...இதை செய்ய விரும்புவர்களுக்கு உதவ காத்திருக்கிறேன்..சில மிக ஏழ்மையான காப்பகங்கள் இருக்கின்றன..அவற்றிற்கு உதவலாம்..அவை பற்றி அறிய விரும்புபவர்கள்;.எனது செல்;9443499003 அழைக்கலாம்...!!


திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்

ஜோதிடம்;திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்;TAMIL ASTROLOGY;merrige match

ஆண் ,பெண் ஜாதகம் எதுவாக இருந்தாலும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து திருமணத்தை முடிவு செய்யாமல் இருவருக்கும் செவ்வாய் தோசம் இருக்கா,நாக தோசம் இருக்கா,இருவரது லக்னமும் ஒன்றுக்கொன்று மறையாமல் இருக்கா என பார்த்து முடிவு செய்வது அவசியம்...இது F.I.R மாதிரி.

அதன் பிறகு இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன்,செவ்வாய்,சந்திரன் எப்படி இருக்கு..மறைந்தோ,வக்ரம் பெற்றோ,நீசம் அடைந்தோ இருக்கா,7ஆம் அதிபதி,குடும்பாதிபதி எப்படி இருக்கார் என்பதையும் கவனிக்கனும் இதுதான் முக்கியம்...


சனி சந்திரன் சேர்க்கை,சனி செவ்வாய் சேர்க்கை,செவ்வாய் கேது சேர்க்கை,சுக்கிரன் சூரியன் சேர்க்கை,செவ்வாய் சூரியன் சேர்க்கை,7ல் சூரியன் இருப்பது,7ல் சனி இருப்பது,8ஆம் இடத்தில்  சனியோ,சூரியனோ,இருப்பது எல்லாம் பெண்ணுக்கும்,ஆணுக்கும்  திருமண வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும்...

ஏழாம் இடத்தில் தனித்த குரு இருந்தால்,தனித்த சுக்கிரன் இருந்தால் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் திருமண வாழ்வை கசப்பாக்கி விடுகிறார்..

ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தால் துணை வேறு ஒருவருடன் சென்று விடுகிறார்..காரணம் தாம்பத்யம் கசந்துவிடும் அல்லது வெறுத்து விடும்...

7 ஆம் இடத்தில் பகை கிரகங்கள் இருந்தாலோ ,7ஆம் அதிபதி பகை கிரகங்களுடன் கூடி இருந்தாலோ சனி மட்டும் இருந்தாலோ திருமணத்தை தாமதம் ஆக்கி விரக்தி அடைய செய்கிறார்...

7 ஆம் பாவத்திற்கு சனியுடன் ராகு சம்பந்தம் உண்டானால் துணைக்கு கள்ள தொடர்பு உண்டாகிறது...

சுக்கிரன் சந்திரன் சேர்ந்தாலோ,சுக்கிரன்,ராகு சேர்ந்தாலோ மனைவி அல்லது கணவனுக்கு அதிக காம உணர்வுகள் மேலோங்கி எவ்வளவு தாம்பத்யம் சுகம் வைத்துக்கொண்டாலும் போதாமல் வெளியே சுகம் தேட வைத்துவிடலாம்..சுபர் பார்வை இருந்தால் மட்டுபடும்..

செவ்வாயுடன் ராகு அல்லது கேது இணைந்தால் ,அவர்கள் 7ஆம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் துணையை இழந்து வாழ்க்கையை கசப்பாக்கிவிடும்...

சனியும் செவ்வாயும் சேர்ந்து 7 அல்லது 8ல் இருந்தால் கள்ள தொடர்பு,காதல் பிரச்சினையில் சிக்கி அவதிபட நேரும்...

WWW.ASTROSUPER.COM


நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரரும்,காஞ்சி மகானும்


சென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங் கலில்தான் முகாமிடுவார் காஞ்சி மகாபெரியவா. அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள்… அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மகாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண் டிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மகான் நெக்குருகியவராய், ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார்.
அவ்வளவுதான்… குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். அடுத்து காஞ்சி மகான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மெள்ளக் கண்மூடியபடி இருந்த மகாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். ”இது அர்த்த நாரீஸ்வர சொரூபம். சின்னதா கோயில் கட்டி, அபிஷேகம் பண்ணி, புஷ்பத்தால அர்ச்சனை பண்ணுங்கோ! இந்த ஊர் இன்னும் செழிக்கப் போறது” என்று கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார்.

பெரியவாளின் திருவுளப்படி, குளத்துக்கு அருகில் சின்னதாகக் குடிசை அமைத்து, சிவலிங்க பூஜை செய்யப்பட்டது. பிறகு கோயில் வளர வளர… ஊரும் வளர்ந்தது. பழவந்தாங்கலின் ஒரு பகுதி, இன்னொரு ஊராயிற்று. அந்த ஊர் நங்கைநல்லூர் எனப்பட்டு, தற்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது.
சென்னை, பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். காஞ்சி மகாபெரியவாள் சுட்டிக்காட்டிய இடத்தில் அற்புதமாக அமைந் திருக்கிறது ஆலயம். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பெரியவா அருளியதால் உருவான இந்தக் கோயில், இன்றைக்கு ஸ்ரீநடராஜர் சந்நிதி, பட்டீஸ்வரத்தைப் போலவே அமைந்துள்ள ஸ்ரீதுர்கை, அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்துக்கு இணையாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரி திருவிக்கிரகம் எனச் சிறப்புற அமைந்துள்ளது.
பிரதோஷம், சிவராத்திரியில் நவக்கிரக ஹோமம், புஷ்ப ஊஞ்சல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, வசந்த நவராத்திரி விழா, சிறப்பு ஹோமங்கள், விஜயதசமியில் சண்டி ஹோமம் என ஆலயத்தில் கொண்டாட்டங்களுக்கும் வைபவங்களுக்கும் குறைவில்லை! இன்னொரு சிறப்பு… மகாபெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன. நங்கநல்லூருக்கு வந்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை  வணங்குங்கள்; குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்!

நன்றி;ரமணி விஸ்வநாத் ராமலிங்கம்

Wednesday, 21 November 2012

நிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வழி


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது!


ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும் 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்துஇ சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல் தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை!

ஒருநாள்... காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோதுஇ பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!

காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.

ஒருமுறை (14.6.1932)இ ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மகான். அப்போதுஇ கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில் நீராடிய சுவாமிகள் அந்தணர்களுக்குத் தானம் அளித்து தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.
பெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. 'ஈச்சங்குடியில் உள்ள அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில் எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்' என விரும்பினார் பெரியவாள்.

காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம். காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி பெங்களூருவில் இருந்து அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
அவரிடம் பெரியவா 'ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது பண்ணு!' எனச் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டார் அவர்.

அந்தக் கோயில் குறித்தும்இ ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும் ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும் அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.
என்ன நினைத்தாரோ... சட்டென்று அன்பரிடம்'ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?' என்றவர் ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும் அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி 'இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்' என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி 'இது என் பாக்கியம்! என் பாக்கியம்!' என்று சொல்லி ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.

'எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம்இ தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!' என ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.

பிறகென்ன... அந்த வீடுஇ விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில்இ வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில் குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம் 8.1.94. அதாவது தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம் அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?!

பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல் 'ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்' என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.

வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர் அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். 'இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!' என சொல்லாமல் சொல்லி ஆசி வழங்கினார்.

ஈச்சங்குடி வேத பாடசாலை அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால் வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில் அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால் நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி வீடு- மனையுடன் குறையின்றி வாழ்வர் என்பது ஐதீகம்!

அருகில் உள்ள வேத பாடசாலைக்குச் சென்றுஇ அங்கேயுள்ள பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால் ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!

மஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்


மஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்

ஸ்ரீ சைலத்தை நோக்கி மகாபெரியவா பரிவாரத்தோடு யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது. கர்னூல் லே வரவேற்பு ஏற்றுக்கொண்டு பிரசங்கமும் பண்ணியாச்சு. மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது ஒரு சின்ன கிராமம். திடீரென்று மழை. 'சுவாமி சிவிகையில் ஏறிக்கணும்'. ' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா ? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லிவிட்டார்..மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது. 


ஒரு பழைய சிவன் கோயில் தென்பட்டது. அதில் தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. காட்டு தீ போல, மஹா பெரியவா சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம் மாற்றிகொண்ட செய்தி பரவ ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தார் பெரியவா. 

ஏழு,எட்டு மைல் தூரத்தில் ஒரு கிராமம். அதன் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டிகொண்டார்கள். பெரியவாளுக்கு என்னதோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. விறு விறுவென்று கொட்டகை போடப்பட்டது. 

மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இதுபோல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. மணி பத்தரை ஆயிற்று...

 பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'சுவாமி ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டார். 

பதினொன்னரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே'??? த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா. 

ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பரிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு. '' யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம்வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'

' ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜா இசைஇ பிரவசனம் பிரசங்கம் எல்லாம். ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும் வயத்திலே புளி கரைச்சுது. நாளைக்கு என்ன பண்றது??? . 

மறுநாள் காலை. வில்வம் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார் ' 'அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே வில்வம் கிடைக்குமா பாரேன்!!' சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே இன்னிக்கும் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வகூடையை பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார். 

'ஆமாம்!இ பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டுவச்ச வில்வகூடை தான் இது.' ' யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிரான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு போட ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன்இ தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான். 

ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைஞ்சான். 

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.

'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன? 

'புரந்தர கேசவலு''ங்கய்யா.

'தமிழ் பேசறியே எப்படி??'

'அய்யா எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு.ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.

''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே ;உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??'

'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாருஇ '' ஏலேஇ புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு மரம் அது தான் வில்வம் மரம். சிவன் சாமிக்கு அது போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை'' அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் எண்டு பேசிக்கிட்டாங்க. சாமி மடதுக்காரங்க கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க'' 

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே ''புரந்தரகேசவலு உனக்கு என்ன தேவை ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து செய்ய சொல்றேன்'' என்றார். 

'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதை கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார். 

'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதைகேக்கணும்''. மஹா பெரியவா புலகாங்கிதமானாள். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார். 

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன்நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

' சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தராஇ நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமிஇ எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.'' புரந்தராஇ உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார். 

பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. பெரியவா கரையேறினா. 

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' . 

ஸ்ரீ கார்யதிடம் பெரியவா சொன்னது இது தான்:

''புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்'.

கேரள பெண்ணுக்கு கண்பார்வை கொடுத்த மகா பெரியவர்


கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.


அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும் அவளின் பார்வை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி 'கவலைப்படாதீங்க கண்பார்வை கிடைச்சுடும். ஆனால் நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி கும்பகோணம் திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்'னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி வைத்தீஸ் வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில் குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும்இ ஆரத்தி எடுத்துக்கொண்டவள்இ தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர் 'அம்மா... இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு' என்று சொல்லி யிருக்கிறார். இவளும்இ 'பரவாயில்லை... எடுத்துக்கோங்க' என்றாளாம். உடனே அந்தக் குருக்கள் 'நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?' என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக் குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறார்கள். 'காஞ்சிபுரத்தில் இருக்காரே சங்கர மடத்தில்... அவரை தரிசனம் செய்யுங்கோ' என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.

இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்றுவிட்டு அப்படியே காஞ்சிபுரத்துக்கு வந்தாளாம். அன்று சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத் தையும் கண்கலங்கச் சொன்னாள்.

உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா 'என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டயே கேளுங்க!' என்றார். அத்துடன் அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.

அதே நேரம் அந்தப் பெண் 'குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!' என்றாளாம் சத்தமாக... பரவசம் பொங்க!

ஆமாம்... காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. 'நம்பினார் கெடுவதில்லை... இது நான்கு மறைத் தீர்ப்பு' என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!
காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும்இ வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.

ஆனால் இதுகுறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோதுஇ அவர் என்ன சொன்னார் தெரியுமா?

'என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன்இ உன்னோட நம்பிக்கைஇ நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை... எல்லாம்தான் காரணம்!' என்றார்'' எனக் கண்கள் பனிக்க விவரித்த பாலு இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.

''பக்தர் ஒருவர் வெளிநாடு போயிட்டு வந்திருந்தார். அவருக்குப் பெரியவா கிட்ட அசாத்திய பக்தி. பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் வந்திருந்தார். தரிசனம் எல்லாம் ஆச்சு. ஆனால்இ அவருக்குப் பெரியவா தீர்த்தம் கொடுக்கலை (கடல் கடந்து போயிட்டு வந்தா தீர்த்தம் கொடுக்க இயலாது).

பக்தருக்கு மிகுந்த வருத்தம். கிட்டத்தட்ட ஒருவாரமா சாப்பிடவும் பிடிக்காமல் மனம் வாடிக் கிடந்தார். மேலும் ஒரு நல்ல காரியம் சிராத்தம் போன்றவற்றிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த பக்தரின் நிலைஇ அன்பர்கள் சிலரது மூலம் பெரியவாளுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர் ஒரு ஸனாதன மடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து விலகி எதுவும் செய்ய முடியாதே!

அதே நேரம் அந்த பக்தரை அப்படியே விட்டுவிடவும் முடியாது. மகா பெரியவா ஒரு வழி செய்தார். மணக்கால் நாராயண சாஸ்திரிகளை அழைத்தார். அவரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து 'இதை உடைத்து எடுத்துக் கொண்டு வா; இளநீர் கீழே சிந்தாமல் கவனமாக உடைக்க வேண்டும்' என்றார். அவரும் அப்படியே தேங்காயை உடைத்து எடுத்து வந்தார். அதைத் தொட்டு ஆசி வழங்கிய பெரியவா அந்த பக்தரைக் கூப்பிட்டுஇ 'இதோ தீர்த்தம். இந்த இளநீரை வாங்கிக்கோ!' என்றார். பக்தருக்கு அளவில்லா மகிழ்ச்சி; பெரியவா தீர்த்தம் கொடுத்துட்டார்னு பரம சந்தோஷம். ஒரு வாரம் காத்திருந்தது வீண்போகவில்லை என்று அவருக்குத் திருப்தி.

மகா பெரியவாளுக்கோஇ தானும் சம்பிரதாயத்தை மீறி (நேரடியாக) தீர்த்தம் கொடுக்காமல் தேங்காயை உடைத்து அதன் இளநீரைத் தந்து பக்தரை மகிழ்வித்த நிம்மதி.

ஆமாம்... மகா பெரியவா எதைச் செய்தாலும் அதில் மற்றவர்கள் நலனே உள்ளடங்கி இருக்கும்.

குடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..? ஜோசியரா..?

ஜோசியம் பார்த்து திருமண பொருத்தம் பார்த்துதான் கல்யாணம் பண்ணி வெச்சோம்...இப்படி கல்யாணம் முடிஞ்சு அடுத்த மாசமே டைவர்ஸ் கேட்டு இரண்டு பேரும் கோர்ட்ல நிற்கிறாங்களே என பொண்ணு வீட்டுக்காரங்க புலம்புவது வழக்கம்...


கிரகங்கள் செய்யும் சதியில் ஜோசியரும் மாட்டிக்கொள்வார்..அவர்தானே பொருத்தம் பார்த்தார்..ஆமாம் ஆனா ஜோசியர்கிட்ட ஜாதகம் கொடுத்ததும்,எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சுங்க..பொண்ணுக்கும்,மாப்பிள்ளைக்கும் அதை விட புடிச்சு போச்சி..உங்கக்கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்ட்ட்டு போலாம்னுதான் வந்தோம் என நெருக்கடி கொடுத்தா அந்த அப்பாவி ஜோசியரும் என்ன செய்வார்..? ஓரளவுக்கு பொருத்தம் வந்தா சரி.அதான் நட்சத்திர பொருத்தம் இருக்கே..செவ்வாய் தோசமும் பொருந்துது..நாகதோசமும் பொருந்துது என்றுதான் சப்பைக்கட்டு கட்டுவார்...

பொண்ணும் பையனும் பெரிய வேலையில இருக்காங்க..இரண்டு பக்கமும் கோடிக்கணக்குல சொத்து இருக்கு...நட்சத்திர பொருத்தமும் 7 பொருத்தம் இருக்கு..அதைவிட என்ன வேணும்..? இன்னும் இருக்குங்க...பையன் ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கிரகம் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கு..பொண்ணு ஜாதகத்துலியும் 7 ஆம் அதிபதி என்ன ஆனார்ன்னு பார்க்கணும்..பொண்ணு ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கேதுவுடன் சேர்ந்தாலோ,6,8,12 ல் மறைந்தாலோ,6,8,12க்குடையவன் 7ல் இருந்தாலோ பிரிவு நிச்சயம்...இவனுக்கும் எனக்கும் ஒத்தே வராதுன்னு பொண்ணு சொல்லிடும்..இவ மூஞ்சியில இனி முழிக்கவே மாட்டேன்னு பையன் சொல்லிடுவான்..அதையும் மீறி சேர்ந்து இருந்தா சிவாஜி படத்துல ரஜினி ஜாதகத்தை பார்த்துட்டு ஜோசியர் சொல்வாரே அதான் பலன்...பொருள் அழிவு..உயிருக்கு கண்டம்,தீரா வியாதி...

அதான் 7 பொருத்தம் இருக்கே அதையும் மீறியா வரும்..? வரும்..அது நட்சத்திர பொருத்தம் மட்டும் தான் அதையும் மீறி உங்கள் ஜாதக பலன் இருக்கு..நட்சத்திரத்தை விட ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் வலிமை பெரிது.

தொடரும்------------------

Tuesday, 20 November 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி

ராகு கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி 23.12.2012 மாலை 6 மணி முதல் நிகழ இருக்கிறது இதுவரை விருச்சிகத்தில் உலா வந்த ராகு துலாத்திலும்,ரிசபத்தில் இருந்து வந்த கேது மேசத்திலும் மாற இருக்கிறார்கள்...அதன் பலன்களை எழுதி வருகிறேன்..அந்த வரிசையில் சிம்மம்,கன்னி ராசி பலன்கள்;

சிம்மம் ராசி பலன்;

மூன்றதனில் கருநாகம் கூடி நிற்க
மூண்டெழுவான் முன்னேறிப் பகை தீர்ப்பான்
சான்றிதனை அறிவாய்நீ செகத்தில் என்றும்
ஜெயம் போகம் கீர்த்திதனைப் பெற்று வாழ்வான்’’

என புலிப்பாணி சித்தர் சொல்கிறார்...முயற்சி செய்து தோற்று போனவர்களுக்கு முயற்சி செய்யாமலே வெற்றிகள் தேடி வரும் காலம் இது.இதுவரை இருந்து வந்த எதிர்ப்பு,பகை,வழக்கு,கடன்,பணி செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் தொல்லை,கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினை அனைத்தும் விலகும் காலம் இது..ராகுவை போல கொடுப்பார் இல்லை என்பார்கள்..ராகு பலம் மிக்கவர்...துணிச்சல் என்றால் முரட்டு துணிச்சல் ராகுவால் மட்டுமே முடியும்..அதுவும் வீரிய ஸ்தானத்தில் இருந்தால் கேட்கவா வேணும்...ஆதாயம் நிறைய உண்டு...சனியும் விலகி விட்டதால் தைரியமாக செயல்படுங்கள்..நல்லதே நடக்கும்...

கன்னி;

கரும்பாம்பு ரெண்டில் நிற்க
கடும்பேச்சு குடும்ப பேதம்
வரும் செல்வம் தடங்கும் அன்றும்
வழிமாறி செல்வன் தானே....’’

பாடலை படித்தவுடன் பயம் கொள்ள வேண்டாம்...ராகு இரண்டில் இருந்தால் பணம் வரவில் தடங்கல் ஆகும் அல்லது ஏதேனும் வழியில் பணம் பெரிய அளவில் விரயம் ஆகும் என்பதுதான் பொருள்...கெட்ட செலவு வரும் முன் நாமாகவே நல்ல செலவை செய்து விட்டால் நல்லதுதானே..குரு பலமும் இருப்பதால் வீட்டில் சுப காரியத்தை நடத்துங்கள்..நிலம் வாங்குங்கள்..வீடு கட்ட துவங்குங்கள்.தொழிலில் முதலீடு செய்ய துவங்குங்கள்..

ஏற்கனவே கடன் பிரச்சினையில் இருக்கேன்..இதுல இது வேறயா என்றால்...வேறு வழியே இல்லை..பட்ட காலில் தான் படும்...ஏழரை சனி முடியும் வரை சமாளிக்கத்தான் வேண்டும்...கவனமாக செயல்படுங்கள்..துர்க்கையை செவ்வாய் தோறும் வணங்கி வாருங்கள்!!!


திருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்

திருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்


திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவரது ஜாதகத்தையும் ஜோசியரிடம் காண்பித்து சிலர் பொருத்தம் பார்ப்பார்கள்...ராசிக்கட்டமும் பொருந்தனும்..இருவருக்கும் நல்ல திசையும் நடக்கணும் என நினைப்பவர்கள் இவர்கள்..

சிலர் பெண் நட்சத்திரமும்,பையன் நட்சத்திரமும் மட்டும் சொல்லி பொருந்துமா சார் என்பார்கள்...இவர்கள் நட்சத்திர பொருத்தம் இருந்தால் போதும் ராசிக்கட்டத்தையெல்லாம் பார்த்தா அதுல கோளாறு...இதுல கோளாறு என சொல்லிடுவார்..அப்புறம் நல்ல இடம் தட்டி போயிடும் என அவசரத்தில் இருப்பார்கள்...ஓகேன்னு சொன்னா போதும்..ஜோசியத்தை சும்மா ஃபார்மலிட்டிக்கு ஊறுகாய் போல தொட்டுக்கொள்பவர்கள் இவர்கள்..இது மட்டும் எதுக்கு..? அதையும் இவர்கள் விட்டுடலாம்..படிப்புக்கு படிப்பு,வேலைக்கு வேலை ,சொத்து சொத்து என பொருத்தம் பார்த்தாலே போதுமே..இவர்களை போன்ற ஆட்களுக்கு..?

கோடிக்கணக்குல பணம் இருக்கு பையனுக்கு...என கிளி போல பொண்ணை அவனுக்கு கட்டி கொடுத்தார்கள்..பணம் இருக்கு..ஆனா ஆம்பளைக்கு முக்கியமானது அவன்கிட்ட இல்ல..அந்த பொண்ணுக்கு மகாராணி மாதிரி எல்லா சுகமும் கிடைச்சது..ஆனா பருவ பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய சுகம் கிடைக்கல..விளைவு...அவங்க வீட்டு கார் டிரைவர் தான் அதை கொடுத்தான்....என்ன செய்றது..நிறைய வீடுகளில் இன்று அதுதான் நிலைமை..

உண்மையான காதல் 90 சதவீதம் தோற்று விடுகிறது..ஆனால் கள்ளக்காதல் 90 சதவீதம் ஜெயித்து விடுகிறது என பேஸ்புக்கில் டிமிட்ரி எனும் நண்பர் எழுதியிருந்தார்....பெரும்பாலான கள்ளக்காதல்களுக்கு முக்கிய காரணம் உடல்,மன பொருத்தம் இல்லாத தம்பதிகளை சேர்த்து வைப்பதுதான்...!!

யோனி பொருத்தம் என்பது இருவரது தாம்பத்ய சுகம் பற்றி உடலுறவு நிலை பற்றி சொல்லக்கூடிய ஜோதிடத்தில் முக்கிய பொருத்தம் ஆகும்...ராசி பொருத்தம்,கண பொருத்தம் எல்லாம் இருவருக்கும் மன ரீதியாக உணர்வு ரீதியாக ஒத்து போவார்களா என நம் முன்னோர் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும் ஆய்வு செய்து எழுதியது ஆகும்..

இருப்பினும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று ஒவ்வொரு ஊரிலும் ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்...எனவே பிறந்த ஜாதகத்தில் லக்னத்தையும்,சுக்கிரனையும்,செவ்வாயையும்,7ஆம் இடத்தையும் ஆய்வு செய்து இருவர் ஜாதகத்தில் நாலாம் இடம் எனும் சுக ஸ்தானம்,ஒழுக்க ஸ்தானம் எப்படி...? இருவரின் தாய்,தந்தையர் நிலை அறிந்து திருமணம் செய்வது நல்லது..

ஆணுக்கு 3 ஆம் இடம்..வீரியம்..அவன் உடலுறவு கொள்ள தகுதியானவன் தானா கண்டு பிடிக்கும் இடமாக இந்த ஸ்தானத்தை ஜோதிடம் சொல்கிறது.எட்டாமிடம் ஆண் உறுப்பு பற்றி சொல்வது எட்டு கெட்டால் கொட்டை போச்சு..என கிராமத்தில் சொல்வார்கள்....இந்த ஸ்தானங்கள் ஆண் ஜாதகத்தில் நன்றாக இருக்கா என பார்த்துதான் பெண்ணை கட்டிக்கொடுக்கணும்..

பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் இடத்தை கொண்டு ஒழுக்க நிலையை கண்டறியலாம்...தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்கள்...தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள்..அது போல பெண் ஜாதகத்தில் நான்காம் இடம் அப்பெண்ணின் ஒழுக்கத்தையும் சொல்கிறது அவளது அம்மாவை பற்றியும் சொல்கிறது...அது போல செவ்வாய் நீசம்,வக்ரம் இல்லாமல் ராகு,கேதுவுடன் சேராமல் இருக்கணும்..சேர்ந்திருந்தா..? கணவன் டம்மிதான்..

திருமண பொருத்தம் பார்க்கும்போது எத்தனையோ உண்மைகள் வெளிப்படும்..அதையெல்லாம் தெரிவிக்காமல் சில ஜோதிடர்கள் ,இது ஒரு ஓட்டை வாய்..இது ஒரு உளறுவாய் இரண்டும் சேரட்டும்..என்றோ...இது ஒரு ஊர் சுத்தி ,இது ஒரு ஊரை முழுங்கி இரண்டும் சேரட்டும் நமக்கு என்ன..என மனதுக்குள் நினைத்தபடி சேர்த்து வைப்பார்கள்...அருமையான பொருத்தம் என்றும் சொல்லி விடுவர்..

ஒரு ஜோசியரிடம் பேசியபோது..அவர் சொல்றார்..அந்த பொண்ணுக்கு கல்யாணத்து முன்னாடியே கசமுசா ஆகிடுச்சி ஜாதகத்தை பார்த்தா தெரியுது...அவன் ஜாதகத்தை பார்த்தா தெருவுல இரண்டு சின்ன வீடு இருக்கும் போலிருக்கு..இந்த இரண்டும் சேர்ந்தா இதுக்கு தெரியாம அது போகும் அதுக்கு தெரியாம இது போகும்..உன்னை நான் கண்டுக்க மாட்டேன்...என்னை நீ கண்டுக்காதே னு தான் பொழப்பு ஓடும் நல்லா தெரியுது ...அதனால அருமையான பொருத்தம்னு சொல்லி அனுப்பிட்டேன் என்றார்..

ஜோதிடர்கள் காட்டும் அலட்சியம் சில அழகான,தெய்வாம்சம் பொருந்திய வர்களையும், சாக்கடை போன்றவர்களுடன் கலக்க செய்து விடுகிறது!!ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மிதுனம்,கடகம்


மிதுனம் ராசி பலன்;

பாரப்பா இன்னொன்று பகரக் கேளு
பஞ்சமத்தில் கருநாகம் அமைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம் 
தீர்ப்பதற்கு வகைவிவரம் சொல்வேன் மைந்தா
கூரப்பா கோதையுமே அரசு சுத்தி 
குற்றமில்லான கன்னியர்க்கு நன்னீராட்டி
வீரப்பா விலகுமடா நாகதோசம் 
விதியுள்ள ஜென்மனவன் பிறப்பான் பாரே’’

என புலிப்பாணி சித்தர் பாடுகிறார்....

ராகு 5ஆம் இடத்தில் அமரும்போது புத்திர தோசம்,நாகதோசம் என்கிறார்..இது பிறந்த ஜாதகத்தில் ராகு லக்னத்தில் அமர்ந்த பலனாக எடுத்துக்கொள்ளலாம்...பொதுவாக ராசியாகிலும்,லக்னமாக இருந்தாலும் 5ல் ராகு வருகிறார் என்றால் பூர்வபுண்ணிய தோசம்,நாகதோசம் எனலாம்..இதன் பலன் என்ன..? 5ஆம் இடம் அறிவு ஸ்தானம்,முன்னோர் ஸ்தானம்,வெற்றி ஸ்தானம்,லட்சுமி ஸ்தானம் ,தாய்க்கு தன ஸ்தானம்,தகப்பனுக்கு அஷ்டம ஸ்தானம் எனப்படும்...இந்த இடத்தில் ராகு நிழல் கிரகம் அமரும்போது இவை எல்லாம் பாதிக்கப்படும்...குழந்தைகளால் மன நிம்மதி கெடலாம்..சீக்கிரம் நடக்க வேண்டிய காரியம் வீண் அலைச்சல் ஏற்படுத்தி முடியலாம்..பூர்வீக சொத்து இருப்பின் அதன் மூலம் புது பிரச்சினைகள் வரலாம்...வழக்குகள் ஏற்படலாம்...

நாகதோசமாக உண்டாவதால் நாகர் வழிபாடு, காளி வழிபாடு, துர்க்கா பரமேஸ்வரியை ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம்.


கடகம் ராசிபலன்;


பேசுமந்த கேந்திரத்தில் ராகு நிற்க 
பிரபலனாம் ராஜாக்கள் சேவையுள்ளோன்
வீசுகின்ற தனம் படைத்து சீமானாகி 
விதரனையாய் வாழ்ந்திடுவான் இன்னம் கேளு.


என்று 4ஆம் இடத்து ராகு பற்றி புலிப்பாணி சித்தர் புகழ்ந்து தள்ளுகிறார்..ஆனால் இதற்கு திசா புத்தி பலமும் ஏதாவது சுபகிரகத்தின் பார்வையும் அவசியம்...இல்லையேல் வெறும் 4 ஆமிட ராகு உடல்நலன்குறைவையும்,சொத்து சம்பந்தமான வில்லங்கங்களையும் உண்டாக்குவார்..நிம்மதி குறைவும் ,பண விரயமும்,தாயால் மன நிம்மதி கெடுவதும்,வண்டி வாகனங்கள் முதல் குடியிருக்கும் வீடு வரை எதையாவது கழட்டி மாற்றுதல்,பழுது பார்த்தல் என செலவு ஆகிக்கொண்டே இருக்கும்....4ல் ஏற்கனவே சனி இருக்கார்...ராகுவும் சேர்ந்து இருக்கார்..நடந்து போனா க்கூட தடுக்கி விழும் நேரம்..கவனமா இருங்க..வெளியூர் பயணம்,இரவில் பயணம் கவனம் அதிகம் தேவை...திருப்பதி போக முடியாட்டி முருகனை செவ்வாய் தோறும் தரிசனம் செஞ்சிட்டு வாங்க..

Friday, 16 November 2012

பழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் அற்புதம்

இன்று மூலம் நட்சத்திரம் என்பதால் குருவை,ஞானியை பத்தி எழுதனும்னு இந்த சிறப்பு பதிவு;


சுமார் 10 வருடங்களுக்கு முன்பு,பழனி இடும்பன் மலை அருகில் இருக்கும் கணக்கன்பட்டி  கிராமத்தில் மூட்டை சாமியார் இருந்தார்..நானும் என் நண்பரும் பைக்கில் சென்றோம்...ஏதோ பஞ்சாயத்து நடப்பது போல சின்ன கூட்டம்...ஒரு ஓரத்தில் அழுக்கு மூட்டை சாமியார் கயித்து கட்டிலில் அமர்ந்து இருந்தார்...கட்டிலா,தரையிலா என நினைவில்லை...அம்பாசிடர் காரில் வந்த நீதிபதி ஒருவர் பழத்தட்டுகளுடன் அவர் அருகில் போக ,சாமியார் கோபமாகி அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தார்...நானும் நண்பரும் அதிர்ச்சியானோம்..இதென்னடா வம்பா போச்சுன்னு.விசாரிச்சா அவர் ஆசிர்வாதமே இதானாம்...!

கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தோம்...எங்களை போலவே அவரை பார்க்க வந்தவர்களும் என்ன செய்றதுன்னு முழிச்சுக்கிட்டு இருந்தாங்க...கால்ல விழுந்து விபூதி வாங்கிட்டு போலாம்னு வந்தவங்கதான்..கிட்ட போனாலே அசிங்க அசிங்கமா வார்த்தை வருதே..அது கலெக்ட்டரா இருந்தாலும் அதான்..

அவர் நடக்க ஆரம்பித்தார்.அவர் பின்னால் போனோம்..நாங்கள் மொத்தம் 10 பேர் இருந்தோம்...இடும்பன் மலைக்கு வந்தவர் மலை ஏற ஆரம்பித்துவிட்டார்..பின்னால் நாங்களும் ஏறினோம்..ஒரு பெரிய உருண்டை கல் 10 டன் எடை இருக்கும்...சும்மாதானே இருக்கீங்க..இந்த கல்லை நகத்துங்க..என சொல்லிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல உட்கார்ந்துவிட்டார்..எனக்கும் நண்பருக்கும் சிரிப்பு வேற..அது குட்டி மலை மாதிரி இருந்துச்சி..அதை தள்ளுன்னா...நாங்க 10 பேர் நடக்குறதா இது...

எல்லோரும் கல்லை தள்ளுவது போல செய்தோம்..பெண்களும் 4 பேர் இருந்தனர்...யாராலும் சிறு அசைவை கூட கொடுக்க முடியாது என தெரியும்...அதுல ஒருத்தர் ஒரு மூங்கில் முட்டு கொடுத்து தூக்கினா தள்ளிடலாம்ங்க..சாமி சொன்னா அதுல அர்த்தம் இருக்கும்..வாங்க தள்ளலாம்னார்..எங்களுக்கு சிரிக்கிறதா...கோபபடுறதான்னு தெரியலா..ஒரு இத்துப்போன மூங்கிலை ஒருத்தர் எடுத்து வந்து முட்டுக்கொடுத்து தள்ளினார்...

இது ஆகறதில்ல..என நானும் என் நண்பரும்...மலையை விட்டு கொஞ்சம் இறங்கி ,அவர் திட்டாத அளவுக்கு பாதுகாப்பா நின்னு,சில சமயம் அடிக்கவும் செய்வாராம்..அவரை பார்த்து தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டு ,விழுந்து கும்பிட்டு பார்த்தோம்..எங்களை பார்த்தார்..லேசாக சிரிப்பது போல இருந்தது..இதுவே போதும் என கிளம்பிவிட்டோம்!!

இவர் அற்புதங்கள் பல செய்தவர் என பழனி மக்கள் நிறைய சொல்கிறார்கள்...பழனி முருகன் தரிசனம் சிலருக்கு இவர் மூலம் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள்...எல்லா அஷ்டமா சித்துகளும் அறிந்தவர் என சொல்கிறார்கள்...எப்படியோ ஒரு சித்தரை தரிசித்தோம் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தோம்...

சற்குருவே போற்றி!!!

Thursday, 15 November 2012

நாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..?-மகா பெரியவர் காட்டும் ஆதாரம்


மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாக லோகம்தான்

இதயம் பேசுகிறது" மணியன் ஒருமுறை மெக்ஸிகோ செல்ல ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கும்போது, பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். எப்போதுமே வெளிநாட்டுப் பயணம் போகும்முன் பெரியவாளை தர்சனம் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

"மெக்ஸிகோ போறதுக்கான வேலை இருக்கு... பெரியவா அனுக்ரகம் பண்ணனும்" வினயமாக மணியன் நமஸ்கரித்தார்.

"க்ஷேமமா போயிட்டு வா! இந்த.....பூகோள உருண்டையை எடுத்து பாத்திருக்கியோ? இல்லேன்னா எடுத்துப் பாரு! இந்தியாவுக்கு நேர் கீழ நீ போகப்போற நாடு இருக்கும்!" மணியனுக்கோ ஒரே வியப்பு! இதுவரை அவர் அப்படி ஒரு கண்ணோட்டத்தில் க்ளோபைப் பார்த்ததில்லை.

"நம்ம புராண இதிஹாசங்கள், ராஜா கதைகள்ள எல்லாம் பாதாளலோகம்...ன்னு சொல்றோமே! அப்டி வெச்சுக்கோ! பாதாள லோகத்லதான் நாகலோகம் இருக்கு. நாகர் வழிபாடு உண்டு, நரபலி உண்டு...நம்மளையெல்லĬ 6;ம் விட ரொம்ப பழமையான நாகரீக ஆட்சி முறை, இதுமாதிரி எல்லாமே உண்டு..." மணியன் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டார்!

"...நமக்கு உலோகங்களைப் பத்தின நாகரீகம் தெரியறதுக்கு முன்னாலேயே அவாளுக்கு தெரிஞ்சிருக்கு! சுமார் ரெண்டாயிரம் வர்ஷத்துக்கு முன்னாலேயே ரொம்ப நாகரீகத்தோட இருந்திருக்கா...."

ஆசிர்வதித்து அனுப்பினார். மெக்ஸிகோ நாட்டின் தேசீயச் சின்னமே பாம்பை அடக்கும் கருடன்தான்! அங்கே இன்றும் நாகங்களை வழிபடுவார்கள். பிரமிட் கோபுரங்களில் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவங்களும், கண் உள்ள இடத்தில் கிளிஞ்சல்களை வைத்து தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். மழையை உண்டாக்கும் தேவனுக்கும் இங்கே உருவங்கள் உண்டு. ஹிந்துக்களைப் போல், இவர்களும் இயற்கையை வழிபடுகிறார்கள். 9000 வர்ஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் வில் அம்பு, மண், உலோக பாத்திரங்களை உபயோகித்து இருக்கிறார்கள். 3000 வர்ஷங்களுக்கு முன்பே "காலண்டரி" என்ற அட்டவணையை உபயோகித்து இருக்கிறார்கள். மெக்ஸிகோவின் ஆதிகுடிமக்கள் [ரெட் இண்டியன்ஸ்] சூரியனை அடிப்படையாக வைத்து 20 நாளுக்கு ஒன்றாக 18 மாசங்களை உருவாக்கினார்கள். ஹிந்துக்களைப் போலவே சூரியன், பூமி, ஜலம், வாயு,அக்னியை வழிபடுகிறார்கள். இதற்கான பண்டிகைகளும் மாசாமாசம் உண்டு. கலைகளுக்காக ஒரு பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். 20 லக்ஷம் மக்கள் 1000 வர்ஷங்களுக்கு முன்னால் நிர்மாணித்த "மாயன் " புதைவுகளில் எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள்தான்!


மாயன் நாகரீகத்தில் உள்ள கலை, கலாச்சாரம் எல்லாமே மத அடிப்படையில் உண்டானதுதான். பிறப்புக்கு முன்னும் பின்னும் ஆத்மாவின் நிலை என்று ஒன்று உண்டு என்று அவர்களும் நம்பினார்கள். உலகில் வாழும்போது உண்டாகும் வெற்றி, தோல்வி, வாழ்கை முறை எல்லாமே க்ரஹங்களின் நிலையைப் பொருத்தது என்று நம்பினார்கள்.

மணியனின் மெக்ஸிகோ பயணக் கட்டுரையைப் படித்த ஒரு அன்பர் "மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாகலோகம்தான்..ன்னு பெரியவா சொன்னாளே! அது அப்டியே இருக்கு போல இருக்கே!" என்றார்.

"ஆமா...அது ரொம்ப நெஜம். அதோட,நம்மளோட சனாதன தர்மம் உலக அளவில் எல்லா இடத்திலும் இருந்தது.ன்னு கூட பெரியவாள்ளாம் சொல்லுவா. அது நெஜம்தான்னு புரிஞ்சுண்டேன்" என்றார் மணியன்.
 

Saturday, 10 November 2012

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மேசம்

வரும் 23.12.2012 முதல் ஒன்றரை வருசத்துக்கு,ராகு உங்க ராசிக்கு 7ல் பெயர்ச்சியாகி வருகிறார்..இதுவரை 6ல் இருந்தார்..அமைதியா போய்க்கிட்டு இருந்துச்சு..இப்போ 7ஆம் இடம் அதுவும் அங்க ஏற்கனவே சனி வேறு இருக்கார்..இரண்டு பேரும் சேர்ந்து 7ல் இருக்காங்க.7ஆம் இடம் கூட்டுறவு,நல்லிணக்கம்,காதல்,மணவாழ்க்கை,தொழில் பார்ட்னர்,நட்பு,என்பதை குறிப்பது..இவற்றில் எல்லாம் குளறுபடி,குழப்பம்,பிரச்சினை வரலாம்

பாரப்பா பன்னிரண்டு எட்டு ஏழில்
பலமுள்ள படவரவு அதிலே தோன்ற
வீரப்பா வேல்விழியால் கலகம் மெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்லு

என புலிப்பாணி முனிவர் பாடியிருக்கிறார்

பெண்ணால் கலகம்,மனைவியால் குதர்க்கம்,மணவாழ்க்கையில் குழப்பம்,கணவனுக்கு நோய்,உடல் பாதிப்பு என்பதே இதன் கருத்தாகும்..


-----------------------------------

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;ரிசபம்திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 அன்று மாலை விருச்சிகம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார்..

ரிசபம் ராசிக்கு இது 6 வது ருண ரோக ஸ்தானம் ஆகும்..ராகு இங்கு மறைந்துவிடுவது உங்களுக்கு

யோகமான காலம் எனலாம்..அதாவது 6ல் ராகு 12ல் கேது...இருக்கிறார்கள் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அல்லவா.அதன் படி இது நல்ல பலன்களையே கொடுக்கும்..கடன் தொல்லைகள்,உடல் பாதிப்புகள்,மனக்குழப்பங்கள் நீங்கும்..குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்..பணம் தாராளமாக வந்து சேரும் எதிரிகள் பிரச்சினை இருக்காது...

கருராகு ஆறில் நிற்க
கடுகியே பகைநோய் ஏகும்
வருவிடர் நில்லாதோடும்
வன்மையாய் வெற்றி சேரும்

பகை ருணரோக ஸ்தானமான 6ல் 12ல் ராகு கேது வருவதால் விரோதம்,விவகரம்,வழக்கு,போட்டி,எதிர்ப்பு ஆகியவற்றை முடக்கியும் முறியடித்தும் வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு முடியும் என புலிப்பாணி முனிவர் ஜோதிடம் சொல்கிறது!!Friday, 9 November 2012

ஆவி ஜோசியர் சொன்னது பலித்தது

ஆவி ஜோசியர் சொன்னது பலித்தது

இந்த வாரம் குமுதத்தில் எங்கள் (சித்தோடு)ஊரில் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆவி ஜோசியர் சாமிநாதன் பற்றி செய்தி வந்திருக்கிறது...1984ல் ஒருவருக்கு ஆவி மூலம் ஜோதிடம் கேட்டு பலன் சொல்லி இருக்கிறார்..இன்னும் 12 வருடம் கழித்து நீ சினிமா துறைக்கு செல்வாய்...அதன் பின் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் நீ கொல்லப்படுவாய் என சொல்லி இருக்கிறார்..ஜோதிடம் கேட்டவருக்கு ஆல்ப்ஸ் மலை எங்கிருக்கிறது என்பது கூட அப்போது தெரியாதாம்..சரியாக 15 வருடம் கழித்து அவர் சினிமாவில் கனவே கலையாதே என்னும் சினிமா மூலம் நுழைந்திருக்கிறார்..அவர் பெயர் தேவி பாரதி எழுத்தாளர்...அதே போல போனமாதம் சுவிட்சர்லாந்தும் சென்றிருக்கிறார்...அங்குள்ள ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் தான் தங்கி இருந்திருக்கிறார்..நல்லவேளை கொல்லப்படவில்லை..பேட்டி கொடுத்திருக்கிறார்;-)

------------------

சில பேர் பூர்வீக சொத்து,தந்தை,முப்பாட்டன் சொத்து வெச்சி பொழச்சுக்கிறாங்க...இதுதான் பாக்கிய ஸ்தானம் நல்லாருக்கணும் என்பது..(உதாரணம் கலைஞர் குடும்பம் ;-))சில பேர் சுயமா சம்பாதிச்சு பொழச்சுக்குவாங்க...உதாரணம் கலைஞர் தான் ;) இதுக்கு லக்னாதிபதி,தனாதிபதி நல்லாருக்கணும்..தன்னம்பிக்கையால் ஜெயிப்பவர்கள் இவர்கள்..இவர்கள் தான் தன்னம்பிக்கை ஓவராகி போய் சாமியாவது பூதமாவது என்பார்கள்...சில பேர் மனைவி வந்த யோகத்
தால் முன்னேறுவார்கள் 7ஆம் இடம்,சுக்கிரன் நல்லாருக்கணும்..எல்லாம் என் பொண்டாட்டி ராசி என்பார்கள்...சில பேர் குழந்தையால் முன்னேறுவார்கள் என் பொண்ணு பொறந்தா என் கஷ்டமெல்லாம் தீர்ந்துடுச்சி என்பார்கள்...சில பேர்க்கு இரண்டவது குழந்தை பிறந்த பின் முன்னேற்றம் உண்டாகும்...இரண்டாவது பொண்ணுக்கு பின்னாடி தான் இவ்வளவு சொத்து சம்பாதிச்சேன் என்பார்கள்...சிலருக்கு இது எதுவுமே கிடைக்காது...அவர்கள்தான் கடைசி வரை துன்பத்தில் வாடுகிறார்கள்..விதி,மதி,பதி கெட்டவர்கள்!!---------------------------

ஒவ்வொரு கிரகத்தின் கதிர் வீச்சும் ,ஈர்ப்பு சக்தியும்,பூமியில் கூடுதல் குறைதல் பொறுத்து அச்சமயத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல்,மூளை,செல்களில் பதிவாகி குணாதிசயமாக மாறுகின்றன...சுக்கிரன் ,குரு,செவ்வாய் கிரகங்கள் நாம் பிறக்கும்போது பூமியில் எவ்வளவு கதிர்வீச்சின் அளவு இருந்ததோ அதை பொறுத்து நம் ஜாதக கட்டத்தில் கிரக பலம் குறிக்கப்படுகிறது...அதை பொறுத்து நம் வாழ்வில் அந்த கிரகங்களின் காரகத்துவம் கூடும் குறையும்..சந்திரன் தாயின் நிலை குறிக்கும்...சூரியன் தந்தை நிலை குறிக்கும் செவ்வாய் சகோதரன் நிலை புதன் தாய்மாமன் குறிக்கும்..இவர்களுடன் உங்கள் பாசம்,ஒற்றுமை எப்படி இருக்கும்..நாம் பிறந்த பின் இவர்கள் நிலை எப்படி இருக்கும் என அறிய முடியும்..

--------------------செவ்வாய் கிரகத்தின் நிலை பொறுத்து ஒரு பெண்ணின் கணவன் நிலை அறிய முடியும்..சுக்கிரன் அமைப்பை பொறுத்து மனைவி நிலை அறிய முடியும்...நம்மால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்...பணம் தங்குமா அழியுமா...சொத்துக்கள் சேர்க்கை உண்டா இல்லையா என்பதை லக்னத்துக்கு இரண்டாம் அதிபதியையும்,சுக்கிரனையும் பார்த்து பலன் சொல்லலாம்...