Monday, 28 January 2013

வசிய மையும் -வசிய மந்திரமும்..உண்மைதானா?

வசிய மையும் -வசிய மந்திரமும்..

ராசிக்கல் மோதிரம் உங்கள் ஜாதகப்படி எது அணிந்தால் பெரிய வெர்றி அடையலாம்..என தெரிந்துகொள்ள உங்கள் பிறந்த தேதி ,பிறந்த நேரத்துடன் எனக்கு எழுதுங்கள் சொல்கிறேன் என பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்..அதற்கு நிறைய ஆதரவு இருந்தது...நிறைய மெயில் வந்தது...சிலர் மட்டும் என்னிடம் மோதிரம் வாங்க ஆர்வமாக இருந்தனர்..அவர்களுக்காக சிறப்பு பூஜை செய்து ஒரிஜினல் ஜாதிக்கல் ரத்தினத்தில் செய்து அனுப்பி வைத்தேன்..கடைகளில் ஜாதிக்கல்லை வாங்கும்போது ஒரு கேரட் 5,000 ரூபாய் வரை விற்க்கின்றனர்..அது ரொம்ப அதிகம்..ஒரிஜினல் கல் விலை மிக குறைந்ததுதான்..நான் ஜெய்ப்பூரில் இருந்து நேரடியாக வாங்கி  விற்பனை செய்கிறேன்..இலங்கையில் இருந்து புஷ்பராகம் வருகிறது..

...வசிய மை வசிய மந்திரமும் உண்மைதானா..என்ற சந்தேகம் உங்களைப்போலவே எனக்கும் பல நாள் இருந்து வந்தது அத்ர்வண வேதம் கற்ற பெரியோர்களிடமும்,மாந்த்ரீகம் அதிகம் புழங்கும் இடங்களுமான சேலம்,வேலூர் பகுதியை சார்ந்த ஆன்மீக பெரியோர்களிடமும் பேசும்போதுதான் பல ரகசியங்கள் அறிந்தேன்..அதில் ஒருவர் உங்களுக்கு குரு உச்சம்..அதனால நீங்களே சில முக்கியமான பூஜைகளை மூலிகைகளை தெரிஞ்சி வெச்சிக்குங்க என்றார் அதற்காக தினமும் இரண்டு மணி நேரம் கூட தொட்ர்ந்து பேசினோம்..எனக்காக நேரிலும் வந்து சில மூலிகைகளை அடையாளம் காட்டினார்...மோகன் மூலிகைகள் என சில இருக்கின்றன..அவற்றைக்கொண்டும் மோகினி வசிய மந்திரம் என்பதைக்கொண்டும் தான் பிரிந்திருக்கும் கணவன் மனைவியையும் காதலர்களையும் சேர்த்து வைக்கமுடியும்..மறக்க வைக்கவும் முடியும் என்றார்...

மந்திர உச்சாடனம் மிக முக்கியம்...சில மந்திரங்களை லட்சம் ,கோடி முறை எல்லாம் உச்சரித்துதான் சில மந்திரவாதிகள் தங்கள் சக்தியை அதிகப்படுத்தி இருக்கின்றனர்....பரம்பரை பரம்பரையாக சில மந்திரவாதிகள் சில மூலிகைகளையும் மந்திரங்களையும்,பூஜைகளையும் குடும்ப உறுப்பினர்களுடன் நிறுத்திக்கொண்டு விட்டனர் இதனால் பல ரகசிய மாந்த்ரீகங்கள் முறை மறைந்துவிட்டது..என்றார்...


Wednesday, 2 January 2013

2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..? ஜோதிடம்

2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..? ஜோதிடம்

குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பாதிப்பு என சொல்லப்பட்டதோ அந்த ராசியினருக்கெல்லாம் இப்போது நல்ல பலன் நடந்துகொண்டிருக்கிறது...உதாரணமாக துலாம் ராசியினருக்கு அஷ்டம குரு நடக்குது ஆனா குரு வக்ரமாக இருக்கும் இந்த நேரத்தில் அவங்களுக்கு பண வரவு,சுபகாரியம் எல்லாம் தடையில்லாமல் நடந்துகிட்டு இருக்கு...

இதையும் மீறி சிலருக்கு தடங்கல் இருந்தா அதுக்கு காரணம் ஜாதகத்துல நடக்குற கேது திசை,சனி திசை காரணமாக இருக்கலாம்.இதுபோல கடகம் ராசி,மீனம் ராசி,கன்னி ராசி,இவங்களுக்கெல்லாம் சனி சாதகமாக இல்லாவிட்டாலும் குரு சாதகமாக இருக்கார்...இருக்கும் பணத்தை நல்ல முறையில் வீடு கட்டவோ,சுப காரியங்கள் செய்யவோ படிப்பு செலவுக்கோ,தொழில் முதலீட்டுக்கோ செலவு செய்வது நல்லது...கடன் வாங்கலாம்..அதுவும் நல்லதுக்காக...யோசனை செஞ்சிக்கிட்டே இருந்தா பெரிய அடி விழும்...அடடா..அந்த பணத்தை வெச்சி இதை செஞ்சிருக்கலாமே அநியாயமா போச்சே என புலம்ப வேண்டி வரலாம்...

மேசம் ராசிக்கு கேதுதான் சங்கடம் கொடுக்கும் நிலையில் இருக்கிறார்..ராசியில் இருக்கும் கேது அதிக மன உளைச்சலை தருவது மட்டுமில்லாமல் காரிய தடைகளையும் தருவார்..இப்போ குரு வக்ரம் என்பதால் பிப்ரவரி மாதம் வரை குருவும் சாதகமாக இல்லை..இதனால் பண வரவு திருப்தியில்லை...பிப்ரவரி குரு வக்ரம் நிவர்த்தி ஆனபின், பிரச்சினை இல்லை...கேது ராசியில் இருப்பதால் அதிக கோபம்,பிடிவாதம் அதிகரிக்கும் வீட்டில் நண்பர்களிடத்தில் எவ்வளவு முடியுமோ அந்தளவு சாந்தமாக பழக முயற்சியுங்கள்

ரிசபம் ராசிக்காரர்களுக்கு இது அருமையான டைம்....குரு வக்ரம் ஆகியிருக்கும் இக்காலம் ப்ண வரவு அருமையாக இருக்கும் தொழில் பலவித வருமானம் தரும்படி இருக்கும்...சிலர் பெரிய விசயங்களை சுலபமாக முடித்து  சாதிப்பார்கள்..பெண்களுக்கு மகிழ்ச்சியன சம்பவங்கள் நடக்கும்...நீண்ட நாள் இழுபறியாக இழுத்த சுபகரியங்கள் தடையின்றி முடியும்....கடன் அடைபடும்...வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்..

மிதுனம் ராசியினருக்கும் இது நல்ல பலன் தரும் என்றாலும் குரு வக்ரம் என்பது 5.2.2013 வரைதான்...அதன் பின் 12 ஆம் வீட்டு குருதான்....குரு 12ல் இருக்கும் காலம் பண விரயம்,அலைச்சல்,இடமாற்றம் போன்றவை உண்டாகும்...

கடகம் ராசியினருக்கு 4ல் சனி..இது இட மாற்றம் உண்டாகுறது,உடல் பாதிப்பு உண்டாகுறது...(இப்பதான் சுகர்,பிரசர் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்குவாங்க...)வீடு கட்ட ஆரம்பிக்குறது,,வீட்டை வாஸ்து படி சரி செயறது,சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் செய்வது எல்லாம் நடக்கும்...குரு வக்ரமாக இருக்கும் இந்த காலம் உங்களுக்கு நன்மை தரும்..2013 மத்தியில் குருபெயர்ச்சி வந்தால் உங்களுக்கு நல்ல யோகம்..வரும் பிப்ரவரி மாதத்துக்கு பின் வரும் சங்கடங்களை வரக்கூடிய குருப்பெயர்ச்சி தீர்த்து வைக்கும்...வயதானவர்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தனும்...


சிம்மம் ராசிக்கு குரு வக்ரம் நன்மையை கொடுக்கும் ....பண வரவு,தொழில் எல்லாம் நார்மலா இருக்கும்...பெரிய அளவுல ஒண்ணும் எதிர்பார்க்க முடியாது...ஜூன் மாதத்துக்கு பின் பெரிய வருமானம் தொழிலில் அடுத்த கட்ட வளர்ச்சி எல்லாம் இருக்கிறது....

மகரம்,கும்பம் ராசியினருக்கு ராசிநாதன் சனி துலாத்தில் உச்சம் பெற்று இருப்பது அருமையான காலம்..வாழ்வில் முக்கியமான பல நல்ல திருப்பங்கள் வரக்கூடிய இரண்டு வருடங்களில் நிகழப்போகின்றன...தொழில் நிரந்தமாகுதல்,சொந்த வீடு கட்டுதல்,திருமணம்,சேமிப்பு,நகைகள் வாங்குதல் போன்ற கனவுகள் எல்லாம் நிறைவேறும் வருடமாக 2013 அமையும்...

தனுசு ராசியினருக்கு குரு இருப்பது 6ல்.அதாவது ருண ரோக ஸ்தானம்..அதாவது வீண் பிரச்சினைகள் ,காரிய தடைகள்,தொழில் மந்தம் போன்றவை இருக்கும்....இப்போ குரு வக்ரமா இருக்குறதால குருப்பெயர்ச்சி காலத்தில் இருந்த சிரமங்கள் இப்போது இருக்காதுன்னாலும் மாசிமாசம் வரை குரு வக்ரம் நிவர்த்தி ஆகும் வரை நல்லாவே இருக்கும்..அதன் பின் குருப்பெயர்ச்சிக்கு பின் தான் நல்ல வருமானம்,தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..வீண் செலவுகள் குறையும்.குரு வக்ரம் முடியும் வரை இன்னும் ஒரு மாதத்துக்கு பிரச்சினையில்லை..அப்புறம் குரு பெயர்ச்சி வரை அலைச்சல்,கடுமையன வேலை,திடிர் செலவுகள் அதிகரிக்கும்..இட மாற்றம் ,அவமானம்,திறமைக்கு மதிப்பில்லாத நிலை காணப்படும்...அப்புறம் குரு பெயர்ச்சி வந்துட்டா நீங்கதான் ராஜா...

விருச்சிகம் ராசிக்கு ஏழரை சனி வகர குரு எதுவும் சாதகமான நிலையில் இல்லை....எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும் காலம்..புது புது பிரச்சினைகளா வரும்....மருத்துவ செலவு இருக்கும்...நேத்து ஒரு அம்மா போன் பண்ணினாங்க...5 லட்சம் கடன் தெரிஞ்சவர் ஒருத்தருக்கு கொடுத்தேன் இதுவரைக்கும் ஒழுங்கா வட்டி கட்டிக்கிட்டிருந்தவன் இப்போ வட்டி தரவே இல்ல..முடிஞ்சா பணத்தை வாங்கிக்கோன்னு சவால் விடுறான் அவன் இப்படி பேசுற ஆளே கிடையாது..இப்போ அவனுக்கு என்னாச்சி..ன்னு புலம்பினாங்க..அவனுக்கு ஒண்ணும் ஆகலை..உங்களுக்குத்தான் ஏழரை சனி ஆரம்பிச்சிருச்சி..ஏமாற ஆரம்பிசீடீங்கன்னு சொன்னேன்..ஏமாற்றம் ஏழரை சனியில் சகஜம்...ஆஸ்பத்திரி செலவு சாதாரணம்..சின்ன சண்டையெல்லாம் பெருசாகும் ..நீங்க ஒண்ணு நினைச்சு பேசுவீங்க..அது வேறு மாதிரி புரிந்து கொள்ளப்படும்.....தொழில் மாற்றம்,இடமாற்றம் அவசியம்...குடும்பத்தில் சுபகாரியங்கள் அவசியம்..இல்லைன்னா கெட்ட செலவு வந்துடும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி நடந்தாலும்,  குரு வக்ரம் அடைவது,ஓரளவு மூச்சு விட வைக்கும்..ராசிநாதன் வக்ரம் ,தன்னம்பிக்கையை முற்றாக குலைப்பதும் நடக்கும்.மூன்றாம் இட குரு வக்ரமாகி இரண்டாம் வீட்டுக்கு வந்தால் நல்லதுதானே..

என்ன சார் நல்லது ?இன்னும் ஒரு மாசம்தானே ....அஷ்டம சனி வந்து சுத்தி வளைச்சிக்கிச்சு...மூச்சு முட்டுது என தவிக்கும் மீன ராசிக்காரர்களே......உங்களை காக்க உங்க ராசிநாதன் குரு இருக்கிறார்...பணம் க்டன் கேட்டா வந்துடுது சார் அந்த கடனை அடைக்க சம்பாதிக்கனும்...சம்பாதிக்க தொழில் நல்லா இருக்கனும்..இங்க தொழில் தான் முடங்கி கிடக்குதே அதுக்கு தெம்பு கொடுக்க என்ன வழி..? அதுக்கு என்ன செய்வது அஷ்டம சனி இப்படித்தான் செய்யும்....கோயிலுக்கு போங்கன்னு பரிகாரம் சொன்னாலும் நான் போகாத கோயில் இல்ல..செய்யாத பரிகாரம் இல்லன்னு சொல்வீங்க....கடுமையா உழைங்க..நிறைய முயற்சி செய்யுங்க..அப்பதான் அஷ்டம சனியை சமாளிக்க முடியும்!!