Sunday, 18 August 2013

நரேந்திர மோடியின் சீற்றம் நடுங்கும் காங்கிரஸ்

காங்கிரசை எதிர்க்க பவர் ஃபுல்லான பிரதமர் வேட்பாளர் இல்லாமலும், உள்கட்சி பகையாலும் பா.ஜ போனமுறை தோல்வி அடைந்தது ஆனால் இந்த முறை அப்படி இல்லை...மோடி பலம் வாய்ந்தவராக எல்லா வகையிலும் தகுதியானவராக மக்கள் ஆதரவு பெற்றவராக களம் காண்கிறார் இப்பவே காங்கிரசுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வருகிறது இன்னும் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் இப்போது இருப்பது போல பல மடங்கு மோடி ஆதரவு அலை பெருக ஆரம்பிக்கும்...அதை முறியடிக்க காங்கிரஸ் பக்கம் வசீகரமான ஆட்களோ மக்கள் ஆதரவு பெற்றவர்களோ இல்லை..மாறாக எதிர்ப்பு அலை சூறாவளியாக வீசும்.
ராஜராஜ சோழன் விருச்சிக ராசிக்காரர்களைதான் எப்போதும் எதிரிகளிடம் தூது அனுப்புவாராம்...காரணம் எதிரிக்கு தகுந்தாற்போல வளைந்து கொடுத்து காரியத்தை சாதித்து விடுவார்கள்..எதிரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை படிப்பதில் கில்லாடியாகவும் இருப்பார்கள்..மோடி விருச்சிக ராசி..தேர்தல் பிரச்சார குழு தலைவர் அதாவது கட்சிக்கும் மக்களுக்குமான தூதுவர்...அவர் மக்கள் மனதை ஏற்கனவே படித்தவர்..சொல்லவா வேண்டும்..மோடி மஸ்தான் தன் வேலையை திறம்பட செய்வார் ...2018ல் நம் இந்தியா வல்லரசு ஆக வேண்டும்..ஊழல் ஆட்சி,கோழை கட்சி,அந்நியர்களின் சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும்...அவ்வளவுதான்...!!


எல்லையில் சீனா 30 கி.மீ வரை உள்ளெ புகுந்து ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..பாகிஸ்தான் காரன் அடிக்கடி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துகிறான்... டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவு பாதாளத்துக்கு போய்விட்டது எதையும் இந்த காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை..பிரதமர் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்..அரசு செயல்படுகிறதா என்பதே சந்தேகம்...பயப்படாதீங்க ஒண்ணும் ஆகாது என்றே நிதி மந்திரி சொல்லிக்கொண்டிருக்கிறார் கழுத்தளவு நீரில் மூழ்கிகொண்டிருக்கிறோம் இன்னும் இதையே சொன்னால் எப்படி..? 

இப்போ தங்கம் விலை 24,000 ரூபாய் நோக்கி போகிறது..பெட்ரோல் டீசல் விலை வாரவாரம் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் இஷ்டத்துக்கு இனி ஏறும்..விலைவாசியும் அதனுடன் சேரும்...இதை எப்படி தடுக்கப்போறாங்க...தடுப்பாங்களா என்பதே சந்தேகம்..நேற்று கூட நிலக்கரி ஊழல் சம்பந்தமான ஃபைகள் எல்லாம் காணாம போச்சு என்கிறார்கள் அதுவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்றால் நம் நாட்டு பாதுகாப்பின் லட்சணம் புரிகிறதா..?ஊழல் இல்லா துறையே இல்லை என்று ஆகிவிட்டது..யாரையும் இவங்க கட்டுப்படுத்துறது இல்ல..அடக்குவது இல்லை..இவங்க கவலை எல்லாம் மீடியாவுக்கு தெரியக்கூடாது எதிர்கட்சிகளுக்கு தெரிய கூடாது என்பதுதான்.

எதிலும் உறுதியான நிலையான முடிவு எடுக்காத கோழை கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். ஆட்சிக்கு வந்து,ஒன்பது வருசம் ஆச்சு ...என்னதான்யா கிழிச்சீங்க என மோடி கேட்கும் கேள்விக்கு அங்கு பதில் சொல்லத்தான் யாரும் இல்லை..!!

2 comments:

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்...
மோடியால் காங்கிரஸ் ஆட்டம் கண்டுவிட்டது.

Unknown said...

சும்மா இதுவெல்லாம் வாய்ச் சவடால் தான்.எந்தக் கட்சியில் தான் உட் பூசல் இல்லை?அடுத்த மத்திய அரசும்,சாம்பார் கூட்டணி தான்!அது,காங்கிரசாகவோ,பா.ஜ.க ஆகவோ இருக்கும்.பொருளாதார வீழ்ச்சியும்,ரூபா மதிப்பிரக்கமும்,வேலையில்லாத் திண்டாட்டமும்,உலகம் பூரா விஸ்தரித்தே இருக்கிறது+இருக்கும்+தொடரும்!!!