Wednesday, 7 August 2013

ஸ்ரீரங்கம் கோபுரமும் இலங்கையும்,தஞ்சாவூர் கோயில் மர்மங்களும்ஸ்ரீரெங்கம் கோபுரம் 223 அடிகள் கொண்டது..இது எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் ஜீயர் சுவாமிகளின் வற்புறுத்தலால் கட்டப்பட்டது அதுவரை மொட்டை கோபுரமாக இருந்தது...ஸ்ரீரெங்கம் சுற்றிலும் காவிரியால் சூழப்பட்ட ஒரு தீவு நகரம்..அவ்வளவு பெரிய கோபுரம் கட்டணும் என்றால் அஸ்திவாரம் எவ்வ்ளவு பலமாக இருக்க வெண்டும்..? அதை கணித்துதான் அக்காலத்திலேயே 150 அடி ஆழத்தில் தோண்ட தோண்ட சேறாக வரும் அந்த நிலப்பகுதியில் கனமான அஸ்திவாரம் அமைத்து இருக்கிறார்கள்...சரி எதற்கு அவ்வளவு பிரம்மாண்டமான கோபுரம் அஸ்திவாரம் அமைத்து அதனை விட்டு விட்டார்கள்..? ஸ்ரீரெங்கப்பெருமாள் இலங்கையை பார்த்த வண்ணம் படுத்திருக்கிறார்...அக்கோபுரத்தை கட்டினால் வாஸ்துபடி இலங்கையை பாதிக்கும் அங்கு அழிவு உண்டாகும் என ஒரு பாடலே இருக்கிறது இலங்கை மன்னன் வீழ்வான் என்று முடியும் அந்த பாடலை அப்போது தினமலரும் வெளியிட்டது...கோபுரம் கட்டியதும் எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு உதவி செய்ததும் எம்.ஜி.ஆர்...இது போல்; தஞ்சாவூர் கோயிலிலும் அரசியல்வாதிகள் நுழைந்தால் சாபம் பெறுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது அது இன்றுவரை தொடர்கிறது...கோயில் கட்டி 1000 மாவது ஆண்டு நிறையும் முன்னரே எம்.ஜி.ஆர் சத்ய விழாவை அப்போது இந்திரா காந்தியை அழைத்து கொண்டாடினார் அதன் பின் நோய் வாய்ப்பட்டு எம்.ஜி.ஆர் அமெரிக்கா போனார் இந்திராவோ சுட்டுக்கொல்லப்பட்டார்..அக்கோயிலை கட்டிய ராஜராஜனின் கடைசி காலமே மர்மமாகத்தான் இருக்கிறது!!

இது சம்பந்தமாக,ஜூனியர் விகடனில் அன்று (23.01.1985ல்) வந்திருந்த செய்தி:

    திருவையாறு திருவையாறு தியாகப் பிரம்ம ஆராதனை உற்சவத்தைத் துவக்கி வைத்த மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர்.வி.என்.காட்கில் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வருவதாக ஏற்பாடாகியிருந்தது.

    பூரண கும்பம், பரிவட்டம் போன்ற மரியாதைகளுடன் பெரிய கோவில் நிர்வாகிகள் ஆவலுடனும், பரபரப்புடனும் காத்திருந்தனர்.

    காத்திருந்ததுதான் மிச்சம். மத்திய அமைச்சரின் கார் ஆலயத்தின் பக்கமே வராமல் பறந்து விட்டது.

    “சரிதான்...! அரசியல்வாதிகளுக்கும் இந்த ஆலயத்திற்கும் சரிப்பட்டு வரவில்லை என்ற ரகசியத்தை யாரோ மத்திய அமைச்சரிடம் சொல்லியிருக்க வேண்டும். அதனால் பயந்துபோய் அமைச்சர் ஆலயத்திற்குள் நுழையவில்லை போலிருக்கிறது!” என்று இந்தச் சம்பவத்தைப் பற்றித் தஞ்சை மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

    தங்கள் ஊரில் உள்ள பெரிய கோவிலைப் பற்றி எவ்வளவு பெருமைப் படுகிறார்களோ, அந்த அளவிற்கு அந்தக் கோயிலுக்கு ஏதோ மர்ம சக்தி இருப்பதையும் தஞ்சை நகர மக்களிடையே சமீபத்தில் ஒரு நம்பிக்கை வேகமாகப் பரவியிருக்கிறது. தஞ்சை நகர புகழ் மிக்க சந்து முனைகளிலும், கடைத் தெருக்களிலும் இந்த மர்ம சக்தி பற்றி பேச்சு அடிபடாத நாளே கிடையாது.

    ”நடந்த சம்பவங்களை வரிசையாகச் சேர்த்து வைத்துப் பார்த்தால் நகர மக்கள் சொல்வதில் உண்மை இருப்பது தெரிகிறது. இந்தச் செய்தியை இதுவரை நாங்கள் வெளியிடாததற்குக் காரணம் ஏதோ ஒருவகை தயக்கம்தான்” என்ற ஒரு உள்ளூர் நிருபர், பிறகு மெதுவாக, “பயம்கூட” என்றார். பெரிய கோயில் மர்ம சக்தியைப் பற்றி தஞ்சை நகரெங்கும் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் இவைதான்தஞ்சை பெரிய கோவிலில் ராஜ ராஜ சோழன் சிலை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் மோதினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதையொட்டி பெரிய பிரச்சினை எழும்பியது. சிலையை உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தபோது, “நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் கோயில் அது. புதிய சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் வழி இல்லை” என்று காரணம் கூறியது.

    அதே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்குப் புதிய மண்டபம் கட்டப் பட்டிருந்தது. இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே வராஹி அம்மன் அங்கே இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. வராஹி அம்மனுக்கும் புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்குக் குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள்.

    “புதிதாக ராஜ ராஜன் சிலை கோயில் உள்ளே வைக்கக் கூடாது என்றால் வராஹி அம்மனுக்கு மட்டும் புதிதாக மண்டபம் கட்டலாமா? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?” என்று கலைஞர் தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் வராஹி அம்மனின் புதிய மண்டபத்தை இடிக்கும்படி மத்திய அரசு சொல்லிவிட்டது.

    இந்தப் பிரச்சினை கிளம்பிய சிறிது காலத்திற்குள் கலைஞர் அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. “அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது” என்றார் பிரபல உள்ளூர் நிருபர் ஒருவர்..

கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர். அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசிச் சென்றார்.

கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.

தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது 2 comments:

'பரிவை' சே.குமார் said...

அதுசரி...
இம்புட்டு இருக்கா?

indrayavanam.blogspot.com said...

புதிய தகவலுக்கு நன்றி