Monday, 30 September 2013

மேசம் ராசிக்கு இப்போ போதாத காலமா..? ராசிபலன்

மேசம் ராசி பொறுத்தவரை கேது உங்க ராசியின் தலையில் உட்கார்ந்து இருக்கார்..இதுதான் சிக்கலான விசயம்..போதாததுக்கு கண்டக சனியும் நடக்குது...கோபம்,டென்சன் எல்லாம் இப்பதான் அதிகம் வரும் அதே போல விரக்தியும் சலிப்பும்,அதிகம் உண்டாக்கும் முன்பு போல வேகம் இருக்காது..காரணம் ராசியில் இருக்கும் கேதுதான்...7ல் சனி இருந்தா துணையுடன் மனத்தாங்கல் இருந்துக்கிட்டே இருக்கும்..வாக்குவாதம் ஓயாது..என்ன செய்றது பங்குனி வரை நிலைமை அப்படித்தான்..கூட்டாளி கண்டிப்பா நாமம் போடுவான் எச்சரிக்கை அவசியம்..வாகனங்களில் செல்கையில் கவனமா இருங்க..மருத்துவ செலவுக்கு குறைவே இல்லாத காலம்..பெண்களிடம் எச்சரிக்கையா இருங்க...அறிமுகம் இல்லாத ஒரு புதிய ஆண் /பெண் நட்பு கிடைக்கப்போகுது அதன்மூலம் சிக்கலும் வரப்போகுது..ராசிக்கு அதிபதி செவ்வாய் வலு இல்லாம கடகத்தில் நீசமா செல்லாக்காசா இருக்கார் உங்க செல்வாக்குக்கு பங்கமான காலம்..வீண் வீராப்பு,சவால் விட்டால் தலையில் முக்காடுதான்..பணம் தண்ணீராய் செலவழியும்..முருகனை வழிபடவும்

Friday, 27 September 2013

ஃபேஸ்புக்கில் பரவும் ஜோதிடம்;நரேந்திர மோடி பற்றியா.. நாஸ்டர்டாம்ஸ்..சொன்னார்..?

 
ஃபேஸ்புக்கில் வேகமாக பரவி வரும் ஒரு தகவல் இது..உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்  நோ கமெண்ட்ஸ்;
புகழ் பெற்ற எதிர்காலத்தை கணிக்கும் ஞானி ,நாஸ்டர் டாமஸ் அன்றே சொல்லியுள்ளார் "மூன்று கடல் சூழ்ந்த ஒரு நிலப்பரப்பிலிருந்து (இந்தியா)ஒரு தலைவன் வருவான், (மோடி..?)அவன் அந்த நாட்டை மிகச் சிறப்பான முறையில் ஆண்டு, அதை உலகமே வியக்கும் வகையில் உயர்த்துவான்" என்று. அந்த வாக்கு மெய்யாகும் காலம் வந்துவிட்டது போலிருக்கிறது!!! இந்தியாவை உலகின் அண்ணனாக்குவார் மோடி!!

Monday, 23 September 2013

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்னதானம் 4.10.2013 மீனம்,துலாம்,விருச்சிக ராசி பரிகாரம்

மகாளயபட்ச அமாவாசை அன்னதானம் தர்ப்பணம் 2013

அன்பான நல்ல நேரம் வாசகர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் தொடர்ந்து நான் எழுதும் ஜோதிட கட்டுரைகளை படித்து ஊக்கம் அளித்துவரும் உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்...சென்ற வருடம் முதல் புரட்டாசி மாதத்தில் வரும் புனிதமான மகாளயபட்ச அமாவாசை நாளில் அன்னதானம் செய்யும் பணை நீங்கள் அறிந்ததுதான்...போன வருடம் பல நண்பர்கள் என்னால் நேரில் வர இயலாது அதனால் என் சார்பில் நீங்கள் அன்னதானம்,முதியோர் இல்லம்,மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அந்நாளில் உதவி செய்து விடுங்கள் என சிறு தொகைகளை அனுப்பி வைத்தனர் நானும் அவர்கள் சார்பில் அன்னதானம்,மற்றும் இல்லங்களுக்கு இலவசப்பொருட்களை அமாவசை தினத்தில் வழங்கினேன் பதிவாகவும் அதை எழுதி இருந்தேன்..இந்த வருடமும் சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் அதே போல செய்ய முடிவெடுத்து இருக்கிறேன்..

புரட்டாசியில் வரும் அமாவாசை மிக சிறப்பு வாய்ந்தது..4.10.2013 aஅன்று இந்த வருட மகாளயபட்ச அமாவாசை அந்த நாளில் நாம் செய்யும் அன்னதானம் மற்றும் இயலாதவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் நம்முடைய 64 தலைமுறையை சார்ந்த முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என மறைந்த அகஸ்தியர் விஜயம் திருவண்ணாமலை ஆசிரம வெங்கட்ராமன் அய்யா சொல்லி இருக்கிறார்கள்...நம்முடைய பிறவி துன்பம் தீரும்..ஆயுள் வளரும் நம் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்..நம்முடைய கடுமையான துன்பங்கள் பித்ருக்கள் ஆசியால் நமக்கு விலகும்...நாம் அன்று செய்யும் இந்த புனித காரியங்கள் நம்முடைய முன்னோர்களின் ஆன்மாவை எழுச்சியுற செய்யும்..அதுமட்டுமில்லாமல் புனிட்ய்ஹ்ஜ ஆன்மாக்களையும் நம் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும்...நம்மை ஆசிர்வதிக்கும்..

நீங்களும் என்னுடன் வந்து அன்னதானம் மற்றும் உதவிகள் செய்யலாம் அல்லது வர முடியாதவர்கள் என்னுடைய கணக்கிற்கு தொகை அனுப்பி வைத்தால் அதற்க்குண்டான தான தர்மங்களை உங்கள் சார்பில் செய்து வைக்கிறேன்....

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் அன்னதானம் 100 ல் இருந்து 500 பேர் வரைக்கும் செய்ய முடியும் என நினைக்கிறேன்...அதன் பின் பவானியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இருக்கு..அங்கு 200 குழந்தைகள் இருக்கின்றனர் அவர்களுக்கு அரிசி மூட்டை வழங்கவும் உணவு தானியம் வழங்கவும் யோசித்துள்ளேன்...ஈரோடு முதியோர் இல்லம் ஒன்றுக்கு ஆடைகள் வழங்க யோசித்து இருக்கிறேன்...நீங்கள் அனுப்பும் தொகையை பொறுத்து பெரிதாகவோ சிறிய அளவிலோ செய்து விடலாம் என முடிவு செய்திருக்கிறேன்...அமாவாசையில் அன்ப்த உதவிகள் செய்தபின் அதன் படங்கள் மற்றும் விரிவான பதிவு எழுதுகிறேன்...ஜோதிடம்,ராசிபலன்,அடிப்படையில் மோசமன கிரக பாதிப்பில் இருப்பவர்களுக்கும் இது சிறந்த பரிகாரமாக இருக்கும்..சனி திசை,கேது திசை நடப்பவர்களும் மீன ராசி காரர்களும் விருச்சிக ராசிக்காரர்களும் துலாம் ராசியினரும் இதை செய்வது இப்போதைய மோசமான காலகட்டத்தில் ஒரு தோச நிவர்த்தியாக இருக்கும்..அன்னதானம் முடிந்ததும் ,பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உங்கள் குடும்பத்தார் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பூஜை பிரசாதம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கு மெயில் செய்து பெயர் ராசி ,நட்சத்திரம் உங்கள் முகவரியையும் குறிப்பிடவும் நன்றி.

உங்கள் சந்தேகங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை அனுப்ப; sathishastro77@gmail.com

என்னை தொடர்பு கொள்ள, கைபேசி எண் ;9443499003

அன்னதான நன்கொடை அனுப்பும் வங்கி கணக்கு எண்;

s.kannan- icici bank-gobichettipalayam- 002501502004

Tuesday, 10 September 2013

திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி ஹோமம்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7ஆம் அதிபதி 6,8 ல் மறைந்தால் களத்திர தோசம் லக்னம்..7,8 ஆம் இடங்களில் சனி இருந்தால் திருமண தடை,சுக்கிரன் கேதுவுடன் இருந்தால் திருமண தாமதம் உண்டாகும்...பெண் ஜாதகத்தில் செவ்வாயும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும் கெட்டிருப்பின் களத்திர தோசம்தான்..காரணம் இவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக இல்லை என்பதால் ஜாதகங்கள் தட்டி போகும்...சரியான திசா புத்தி கோட்சாரப்படி குரு செவ்வாய்,சுக்கிரனை பார்க்கும்போதுதான் திருமணம் கூடி வரும்..அதுவும் நல்ல இடமாக அமையுமா என்பது சந்தேகம்தான்.

.

இப்படி ஜாதக அமைப்பு உடையவர்கள்,நல்ல ராசியான ஐயர் மூலம் அதாவது வாக்கு பலம் ,குரு பலம்,சுக்கிர பலம் உடைய பிராமணர் மூலம் மட்டுமே இந்த பூஜை பரிகாரங்களை தோசம் விலகும்..நான் அப்படித்தான் என் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்து வருகிறேன் உடனே தோசம் நிவர்த்தியாகி சில நாட்களில் நல்ல சம்பந்தம் கிடைத்து திருமணம் நடந்து,பலர் நன்றாக வாழ்கிறார்கள்...

சுயம்வரா பார்வதி ஹோமம் இந்த பூஜை திருமண தடை,தாமதத்துக்கு அருமையான தோச நிவர்த்தி பரிகாரம்..பெரிய பூஜை..இரண்டு மணி நேரம் நடக்கும் பரிகாரம்..இதில் நவகிரஹ தோஷ நிவர்த்தி, மாங்கல்ய தோஷ நிவர்த்தி, களஸ்த்ர தோஷ நிவர்த்தி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, ருது தோஷ நிவர்த்தி, நாகதோஷ நிவர்த்தி, முன்னோர்கள் தோஷ நிவர்த்திக்கு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகிறது. யாக குண்டத்துக்கு திருமணம் ஆகாத ஆண்கள் வாழை மரத்துக்கு மாலை அணிவித்து, களஸ்த்ர தோஷ நிவர்த்தியும், பெண்கள் அரச மரத்துக்கு மாலை அணிவித்து மாங்கல்ய தோஷ நிவர்த்தியும் செய்தும் பூஜை நடத்தப்படுகிறது..காவிரி,பவானி,அமிர்தா நதிகள் ஒன்று கூடும் கூடுதுறையான புண்ணியமிக்க, பவித்ரமான சங்கமேஸ்வரர் கோயில் பவானியில் இந்த பரிகாரம் செய்து வைக்கிறோம்...

இந்த பூஜை பரிகாரம் நானே முன்னின்று நடத்தி கொடுக்கிறேன்..சந்தேகங்களுக்கு எனக்கு மெயில் செய்யலாம்...sathishastro77@gmail.com  cell;9443499003

Monday, 9 September 2013

கணபதியின் கதை

தடைகளை விலக்கி துவக்கும் எல்லா செயல்களிலும் வெற்றியினை அளிப்பவர் கணபதி. எவ்வளவு பெரிய தெய்வமாக இருந்தாலும் முதல் பூஜை வினாயகருக்குத்தான்.நல் அறிவையும் புகட்டுபவர். ஞான கடவுள் என்பதால் மாணவர்களாலும் மாணவிகளாலும் செல்லப்பிள்ளையாராகவும் வணங்கப்படுபவர்.

கணபதி வழிபாடு இந்திய துணை கண்டத்தில் மட்டும் என்று இல்லாமல், நேபாள், இலங்கை, திபெத், தாய்நாலாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சைனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது. மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3,000 இந்து கடவுள் சிலைகளில் கணபதி சிலையும் அதிகமாக உள்ளன. மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் "வீரகோசா"உருவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழ்கத்தில் பிள்ளையார்பட்டி வினாயகருக்குத்தான் பிரம்மாண்டமான பெரிய தனிக்கோயில் இருக்கிறது..மற்றவை எல்லாம் சிறியவை..ஆற்றோரம்,குளத்தோரம்,அரச மரத்தின் அடியில் இருப்பவைதான்..ஆனா வினாயகர் இல்லாத தெருவே இல்லை எனலாம்..சித்தூர் காணிப்பாக்கம் வினாயகர்,புதுவை மணக்குள் வினாயகரும் பெரிய கோயில்கள்..அதே போல கோவை ஈச்சனாரி வினாயகரும் சக்தி வாய்ந்தவராக அதிக மக்கள் சென்று வருகிறார்கள்..கணபதி கேது அம்சம்...ராகு கேது தோசத்தும் சரி ஏழரை சனி பாதிப்புக்கும் சரி வினாயகரை வழிபடலாம்..ஏழைகளின் கடவுள் வினாயகர்..அவர் அபிஷேகம் கேட்பதில்லை...பட்டு பீதாமபரம் கேட்பதில்லை..அருகம்புல் இருந்தால் போதும்.உலகின் முதல் தாவரம் புல் தானே..?அவ்வையார் இயற்றிய வினாயகர் அகவல் படிச்சிருக்கீங்களா..? படிக்க படிக்க அவ்வளவு இனிமையானது ரொம்ப சக்தி வாய்ந்தது...கந்த சஷ்டி கவசம் எப்படி முருகனுக்கு பிரபலமோ அதுபோல வினாயகருக்கு பிரபலம் வினாயகர் அகவல்..ஒருமுறை படிச்சு பாருங்க..தினமும் அதை படிக்கனும்னு ஒரு ஆசை உண்டாகும்..அவ்வளவு இனிய தமிழ் மந்திரம்..மோதகம் வடநாட்டுல வினாயகருக்கு படைக்கும் இனிப்பு...தமிழ்நாட்ல கொழுக்கட்டை தான் பிரபலம்..கொழுக்கட்டையும்,சுண்டலையும் வினாயகருக்கு படைச்சி..நம் செல்லப்பிள்ளையார்,செல்வ வினாயகர்,தொந்தி கணபதிஒயை வணக்குவோஈம்..அவர் அருள் பெறுவோம்....அனைவருக்கும் இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!