Friday, 27 December 2013

குரு பூஜையும் அன்னதானமும்,சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி 2014

பவானி கூடுதுறையில் தட்சிணாமூர்த்திக்கு. மஞ்சள் துண்டு வேஷ்டி .....மாலைகள் முல்லை அலங்காரம் செய்து அர்ச்சனை, பூஜை நண்பர்கள் அனைவருக்குமாக செய்து வைக்கப்பட்டது.....சில நண்பர்கள் வேண்டுகோள் படி அவர்களது குடும்பத்தார் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது லிஸ்ட் பெருசு .......பொறுமையாக பூஜை செய்துவைத்த ஹரிஹரன் குருக்களுக்கு நன்றி !!!அடுத்த குரு பூஜை புத்தாண்டு அன்று கொடுமுடி பிரம்மாவுக்கு .......6ஆம் தேதி அன்னதானம்!!

பவானி கூடுதுறை தட்சிணாமூர்த்தி அழகிய முக அமைப்பு கருணை ததும்பும் புன்னகை நிறைந்தவர்... வியாழக்கிழமையில் அவருக்கு பிடித்த மஞ்சள் வஸ்திரமும் முல்லை மலர்களாலும் மஞ்சள் பூக்களாலும் அலங்காரித்து தீபம் ஏற்றி குரு ஓரையில் வணங்குவது அவர் கருணையை பெற உதவும்...இதனால் குருவால் ஏற்பட இருக்கும் தீங்கு குறையும் என்பதால் அன்னதானம் குரு பூஜைக்கு நன்கொடை அனுப்பிய சில நண்பர்களின் குடும்பத்தாருக்கு சிறப்பு வழிபாடு செய்தேன்...புத்தாண்டு இதே நண்பர்களுக்காக கொடுமுடியில் இருக்கும் பிரம்மாவுக்கு அவருக்கு பிரியமான வெண்பட்டு வஸ்திரம்,வெள்ளை தாமரை யுடன் பிரம்மசங்கல்ப பூஜை செய்யவிருக்கிறேன்....


குருர் பிரஹ்மா! குருர் விஷ்ணு! குருர் - தேவோ மஹேச்வர:

காது கேளாத வாய் பேச முடியாத குழந்திகள் பள்ளி ஈரோடு மாவட்டத்தில் ஒரே பள்ளியாக ஆர்.என்.புதூரில் மட்டும் இயங்கி வருகிறது 150 குழந்தைகள் வரை படிக்கின்றனர்..இவர்களுக்கு அன்னதானம் செய்வது குரு தோசம் போக்கும்..காரணம் குரு ஜாதகத்தில் பாதிப்பதால்தான் இவர்களுக்கு இக்குறை உண்டாகிறது எனவே குருவால் தோசம் ஏற்படாமல் இருக்க சனியின் அனுக்கிரகம் உண்டாக இவர்களை சந்தொசப்படுத்தவோ அல்லது மன நிறைவு உண்டாக்கும்படியோ சுவையான உணவை தருவது நல்லது..மேலும் அக்குழந்தைகள் அரசு தரும் உணவைதான் அன்றாடம் உண்கின்றனர்...நாம் வீட்டு சாப்பாடை மாதம் ஒருமுறையேனும் வழங்கலாம்..என்பதும் ஒரு காரணம்..இங்கு பிறந்த்நாள் ,நினைவுநாள் உறவுகளில் யாருக்கேனும் வந்தால் உடன் இங்கு வந்து தேதி பதிவு செய்து அந்நாளில் உனவு அன்னதானம் செய்வது வழக்கம்..நானும் நன் நண்பர்கலுக்காக அன்று அன்னதானத்தை  ஜோதிட பரிகாரமாக செய்து விடலம் என்றுதான் முடிவு செய்தேன் இப்போ குழந்தைகள் விடுமுறையில் இருப்பதாலும் வாக்கிய பஞ்சாங்கப்படி 2 ஆம் தேதிதான் குரு வக்கிரம் ஆவதாலும் 6.1.2014 அன்று அன்னதானம் செய்யலாம் என முடிவு செய்தேன் இதற்காக நாங்களும் பங்களிக்கிறேன் என சிறு  தொகைகளை அன்புடன் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி...தானத்தில் சிறந்தது அன்னதானம்..என்பார்கள்..பசியை போக்குவதே பெரும் பரிகாரம்...

அன்னதானம் பொறுத்தவரை நான் ஹோட்டலில் வாங்கி தருவதில்லை என முடிவு செய்துவிட்டேன்..தரமான அரிசி மற்றும் காய்கறிகளை வாங்கி சமையல் ஆள் வைத்து வீட்டில் தரமாக தயாரித்து பள்ளிக்குழந்தைகளுக்கு தர முடிவு செய்துள்ளேன்...சனி கிரகத்தை பொறுத்தவரை மந்தன்,உடல் அங்ககீனன் என சொல்லப்பட்டுள்ளது உடல் ஊனமூற்றோர் என்றலெ சனியின் ஆதிக்கம் கொண்டவர்களாக எடுத்துக்கொள்ளலாம்..எனவே உடல் குறை என்பதும் சனியின் பாதிப்பு பெற்றவர்கள்தான்..எனவே சனியின் தோசம் குறையவும்..இது பரிகாரமாக எடுத்துக்கொள்ளப்படும்...

புத்தாண்டு அன்று தலை எழுத்தை மாற்றும் பிரம்மாவை வணங்குவதும் பூஜிப்பதும் மிக நல்லது 2014ல் தான் சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி என முக்கியமன மூன்று பெயர்ச்சிகளுமே வருகின்றன...எனவெ 2014 பலவித மாறுதல்களை நாட்டிலும் வீட்டிலும் ஏற்படுத்த போகிறது...எனவெ 2014 முதல் நாளை ஆலயத்தில் வழிபட்டு துவங்குவது உத்தமம்..அதற்கென்று ஜாமத்தில் 12 மணிக்கு ஆலயம் சென்று வழிபடுவது தவறு...கோயில் என்றாலே பிரம்ம முகூர்த்தத்தில் விடியற்காலையில் வழிபடுவதுதான் அதுவும் சூரிய ஒளி புறப்படும்போது வழிபடுவதும் உச்சிக்காலத்தில் மாலை பொழுதில் வழிபடுவதுதான் சரியானது..இப்போ எல்லாம் ஆங்கிலப்புத்தாண்டை இரவு 12 மணிக்கு கோயிலில் சென்று வரவேற்கிறார்கள்..கோயில் ஊழியர்களும் கோயிலை திறந்து வைத்து காத்திருக்கிரார்கள் அவர்களுக்கு தட்ச்சிணை முக்கியம்...ஆனா நாம வழிபடுவது கடவுளைதான்..அவரை வழிபடும் நேரம் என ஒன்று இருக்கிறது..அதில் வணங்குவதுதான் நல்லது...

2 comments:

Unknown said...

முன்னரும் பதிவில் சொல்லியிருந்தீர்கள்.பிறக்கப் போகும் வருடம் நன்மைகள் தர,சூரியோதயத்தின் பின் பிரம்மாவை வணங்குவோம்.///தானத்தில் சிறந்த தானம்,அன்னதானம் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்.
உண்மைதான்... சுவாமி வழிபாட்டுக்கான நேரம் ஒன்று இருக்கிறது என்பதே புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் தெரிவதில்லை...