Saturday, 25 January 2014

மீனம் ராசி,விருச்சிக ராசி ஏழரை சனியும் அஷ்டம சனியும்

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி இன்னும் 10 மாதங்கள் வரை தொடர்கிறது...விருச்சிக ராசிக்கு ஏழரை சனி ஆரம்பித்து நடந்துக்கொண்டிருக்கிறது...விருச்சிக ராசியினர் சந்திரன் நீசம் பெற்றவர்கள் அதனால் இக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்...மீனம் ராசியினருக்கு பனம் கொடுக்கல் வாங்கலில்தான் அதிக கவனம் செலுத்த வெண்டும் ..அஷ்டம சனியில் அவர்கள் புகழுக்கும் செல்வாக்குக்கும்தான் பங்கம் வரும் எனவே கவனமாக இருக்கனும்...திசா புத்தி மோசமாக இருந்தால் அதாவது 6ஆம் அதிபதி எட்டாம் அதிபதி திசையொ புத்தியோ நடந்தால் பன இழப்பு,தொழில் நஷ்டம்,அறுவை சிகிச்சை போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.கடன் தொல்லை அதிகமாக காணப்படும்.

என்னிடம் ஜாதகம் மெயில் மூலம் அனுப்பி ஒருவர் பலன் கேட்டார் ...ஜாதகம் அனுப்பி ...சார் உங்க கட்டணத்தையும் அனுப்பிட்டேன் எனக்கு ஒரு கேள்விதான் ..என் கடன் பிரச்சினை எப்போ தீரும் ஒண்ணும் சமாளிக்க முடியல...டார்ச்சராக இருக்கு என வருந்தி இருந்தார்...ஜாதகத்தை பார்த்தால் மேச லக்னம்...ராகு திசையில் புதன் புத்தி நடந்தது இரண்டாம் அதிபதி 12 ஆம் இடத்தில் இருந்தார் அதுவும் நீசம்...பனம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்காது..இவருக்கு எவ்ளோ பணம் வந்தாலும் போதாதே என்றுதான் தோன்றியது காலப்புருஷ லக்னத்துக்கு தனாதிபதியான சுக்கிரனும் பகை வீட்டில் இருந்தார்..புதன் புத்தி இன்னும் 6 மாசம் இருந்தது..ராசியோ விருச்சிகம்...என்ன பதில் சொல்வது அடுத்து வருவதும் கேது புத்தி..இக்கட்டான நிலைதான்...குருப்பெயர்ச்சி மட்டுமே இப்போதைக்கு கைகொடுக்கும் என்றுதான் சொல்ல முடியும் குரு ராசிக்கு 9ல் வருவதால் கொஞ்சம் பிரச்சினைகள் தீரும் எனலாம்...ஆனா திசாபுத்தி மோசமாகத்தான் இருக்கு...கடன் இருக்கும்..ஆனா வருமானம் அதிகரிக்கும் முற்ரிலும் கடன் அடையா விட்டாலும் நெருக்கடியை தீர்த்துக்கொள்வார் என்றுதான் சொல்லி இருந்தேன்..

ஜாதகத்தில் ராசி நல்ல பலன் கொடுத்தாலும் திசாபுத்தியும் கைகொடுத்தால் முழுப்பலன் அனுபவிக்க முடியும்.அதை ஜாதகம் பார்த்தால்தான் கண்டறியமுடியும்...சிக்கலான நேரத்தில் ஜாதகம் பார்த்துதான் எதையும் முடிவெடுக்க முடியும்...10 ஆம் இடம் கெட்டு தனதிபதியும் கெட்ட ஒருவர் சொந்த தொழில் செய்கிறேன் என பத்து லட்சம் ரூபாய் ஏமாந்த கதை சோகமானது அவரும் போன வாரம் ஜாதகம் பார்க்க வந்தவர்தான்..சார் உங்க ஜாதகத்தில் சொந்த தொழில் செய்ய முடியாத அமைப்புதான் இருக்கு திசாபுத்தி சரி இல்லாத காரணத்தால் பணத்தை இழந்துட்டீங்க என்றேன்..பூர்வீக சொத்து மூலம் பனம் வந்தது சார்...ஒரு ஜோசியர் பேச்சை கேட்டு தொழில் ஆரம்பிச்சேன் இப்படி ஆகிடுச்சு என்றார்..10 ஆம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்கனும் என்பார்கள் ...தனாதிபதி 6,8,12ல் கெடாமல் இருந்தால் தொழில் செய்ய முடியும் இல்லைன்னா என்ன செஞ்சாலும் விருத்தி ஆகாது..இப்படி இருப்பவர்கள் கமிசன் ஏஜன்சி தொழில் செய்யலாம் முதலீடு போடாமல் ஓனராக கல்லாவில் உட்காராமல் சரக்கு நிறைய வாங்கி போட்டுக்கொண்டு எப்ப விற்கும் என காத்திருந்தால் எப்போதும் விற்காது.

எனவே மீனம் ராசியினர் விருச்சிக ராசியினர் இக்காலங்களில் தங்கள் ஜாதகத்தில் திசாபுத்தி எப்படி இருக்குன்னு ஜாதகத்தை பார்த்துவிட்டு முக்கிய முடிவுகளை எடுங்கள்..!!

தை அமாவாசை அன்னதானம்;

தை அமாவாசை அன்று ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழ்ங்குகிறோம்.. அதில் எங்கள் பங்கும் இருக்கட்டும் என பங்களிப்பாக சில நண்பர்கள் பனம் அனுப்பினர் அவர்களுக்கு எனது நன்றி..அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தை அமாவாசை அன்று முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அர்ச்சனை செய்து அவர்களது குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்யப்படும்..தொடர்பு கொள்ள ;sathishastro77@gmail.com

No comments: