Wednesday, 12 February 2014

குரு திசை யாருக்கு நல்லது செய்யும்..? யாருக்கு கெட்டது செய்யும்..?

குரு பகவான் முழுமையான சுபர் குரு பார்க்க கோடி நன்மை என்றெல்லாம் ஜோதிட பழமொழி இருக்கிறது ஆனால் பலருக்கு குருவே கெடுதல்கள் நிறைய செய்திருக்கிறார் சிலருக்கு நல்லதும் செய்யாமலும் கெட்டதும் செய்யாமல் நட்டாற்றில் விட்டிருக்கிறார் குரு நல்லவரா கெட்டவரா என்றால் குரு உங்க லக்னத்தை பொறுத்தும் அவர் அமர்ந்த நட்சத்திர சாரத்தை பொறுத்தும் நல்லவராகவோ கெட்டவராகவோ மாறுகிறார்

லக்னத்துக்கு சுபராக யோகம் தருபவராக இருந்தால் லக்னத்துக்கு மறையக்கூடாது தனுசு லக்னத்துக்கு குரு 1,4 க்குடையவர்....சுகாதிபதியாக இருக்கும் குருவின் திசை வரும்போது பணம் நிறைய வரும்...வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்...அந்த பனம் எப்படி சேமிக்க முடியுமா விரயமாகுமா கெட்ட வழியில் போகுமா என பார்க்க வேண்டும்...தனுசு லக்னம் ,குரு திசை நடக்கும் ஒருவர் ஜதகம் பார்க்க வந்திருந்தார் ..அவருக்கு குரு லக்னத்துக்கு குரு 3ல் இருந்தார் ...அது வீரிய ஸ்தானம்..காசு பணம் சொத்து நிறைய இருக்குங்க..குச்சி வீடுதான் கட்ட முடியும்.. மச்சு வீடு கட்ட முடியாதுங்க...என்றேன்.. ஆமா சார் கோடிகளில் பணம் இருக்கு ஆனா ஓட்டு வீட்டில்தான் குடியிருக்கிறேன்..என்றார்...4ஆம் அதிபதி கெட்டிருக்கு முறையான சுகம் இல்லை..அதாவது மனைவியால் சுகமில்லை..மற்றவளால் தான் சுகம்...சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் சுகத்துக்காக பெண்களுக்குதான் போகும் என்றேன்...ஆமா சார் அந்த விசயத்துல ரொம்ப வீக்கா இருக்கேன் என பரிதாபமாக சொன்னார்...

குரு திசை நல்ல செல்வாக்கு கொடுக்கும்..ஆன்மீகத்தில் உயர்வை கொடுக்கும்..பல பெரிய புண்ணிய காரியங்களையும் செய்வார்கள் ஊர் மெச்சும் வண்ணம் கும்பாபிசேகமும் செய்வார்கள்.. ஆனால் ரகசியமாக சில கீழ்த்தரமான் விசயங்களையும் செய்வார்கள்..அடுத்தவர் மனைவியை பெண்டாளவும் செய்வார்கள்...

குரு மறையாமல் இருந்தால் ஊருக்குள் சொந்தத்துக்குள் நல்ல செல்வாக்கு உண்டு..குரு கெட்டவன் கூறு கெட்டவன் ஆகிவிடுவார்..குருதான் மூளை...குரு சரியில்லை என்றால் கிணற்று தவளை போல வாழ்வார்கள்..குரு திசையில் மந்திரி ஆனவர்களும் உண்டு...அரசு வேலை கிடைத்தவர்களும் உண்டு..ஆனால் அவர்களுக்கு குரு நன்றாக இருந்து கடக லக்னம்,சிம்ம லக்னம்,விருச்சிக லக்னம்,தனுசு,மீனம்,மேச லக்னமாக இருக்கனும்..மத்தவங்களுக்கு ..? குரு நல்ல யோகம் தரும் கிரக சரத்தில் இருந்து திசை நடத்தனும்..

உங்களுக்கு மிதுன  லக்னம் குரு 2ல் இருக்கார் ...குரு திசை வந்துருச்சி உங்கலை கொல்லாம விடாது பாருங்க குரு திசை ஆரம்பிச்சதும் விபத்தில் சிக்கி உயிர்க்கண்டம் உண்டாகிடும் என ஒரு ஜோசியர் நன்றாக ஒரு நண்பரை பயமுறுத்தி விட்டார்...பூஜை செய்யனும்...அம்மன் கோபத்துல இருக்கு அதை சாந்தபடுத்த பூஜை செய்யனும்...அம்மன் மூலமா அந்த தோசத்தை நான் தீர்த்து தரேன் அம்பதாயிரம் கொடுங்கன்னு கேட்க நண்பர் என்னிடம் ஓடி வந்தார்...சார் குரு பாக்யாதிபதி சாரத்துல இருக்கு..அதனால் நல்லா சம்பாதிக்க போறீங்க..வீடு கட்டப்போறீங்க என்றேன்...அவருக்கு சந்தோசம்...ஜோசியம் சொல்லவேண்டியதுதான்....ஆனா துஷ்ட வாக்கு உடையவர்களிடம் பார்க்காதீர்கள் அவங்க சொல்வதெல்லாம் கெடுதல்தான்...வாக்கு பலம் நல்லாருந்தா கெட்டதா ஜாதகத்தில் இருந்தாலும் நல்ல வார்த்தை சொல்லி ஆறுதல் படுத்தினாலும் பலிக்கும் ..

முன்பு ஒருமுறை சங்ககிரியில் இருந்து ஒரு தம்பதி ஜாதகம் பார்க்க வந்திருந்தாங்க..முதல் குழந்தை பெண்...கணவர் ஜாதகத்தில் 5ல் ராகு பெண் ஜாதகத்தில் 9ல் கேது...அடுத்தும் பெண் தான் பிறக்கும் என ஜோசியர் சொல்லிட்டார்...என கண்கலங்கினார்கள்..அவர்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என ஆசை..5ஆம் இடத்தை சனி பார்த்தால் எத்தனை குழந்தை பிறந்தாலும் பெண்தான்..ஆனால் இவர்களுக்கு அப்படி அமைப்பு இல்லை முதல் குழந்தை ஜாதகத்திலும் சகோதரக்கிரகம் வலுத்து, 3ஆம் ராசியில் ஆண் கிரகம் இருந்தது..அவர் ஜாதகத்திலும் 5ஆம் அதிபதி ஆண் ராசியில் இருந்தது...எனவே அடுத்து ஆண் குழந்தைதான் பிறக்கும். உறுதியா நம்புங்க..அந்த குழந்தைக்கு நான் தான் பெயர் வைப்பேன் என சொன்னேன். போன வாரம் நேரில் வந்து தேங்காய் பழத்தில் 2001 வைத்து நீங்க சொன்னபடி ஆண் குழந்தை பிறந்தது. சார் நீங்கதான் பெயர் வைக்கனும்னு சொன்னாங்க..சத்யன் என பெயர் வைத்தேன்...

நல் வாக்கு முக்கியம் கெட்டது சொல்லி சிரமப்படுத்த கூடாது.குரு குழந்தை பாக்யத்துக்கு முக்கிய காரகம் வகிக்கும் கிரகம்..குரு தான் உயிர் உற்பத்திக்கு அடிப்படை..இன்னும் குரு பத்தி பார்ப்போம்..


2 comments:

'பரிவை' சே.குமார் said...

குரு பற்றி அறியத் தந்தீர்கள்.

cc said...

Sir,
my dob is 19/09/1980 time 22:43 srivilliputtur
due to rahu dasa facing lot of issues.now i am only having job. But sombody says 2020 guru dasa is going to start due to that i may not be able to earn as guru against makara rasi.
is it true becaz so for i hav only job as i scared to do marriage after hearing this. i lost my father at 7th year and mother at 30. Pl provide me some solution to com out this. Kala sarpa dosa is also there