Monday, 6 October 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கடகம்

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

 கடகம் ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்..?

கடுமையான உழைப்பும்,தன்னிகரில்லாத திறமையும்,ஜனவசியமும்,அதிக அன்பும் கொண்டவர் கடக ராசியினர்..முல்லைக்கு தேர் கொடுத்த பாரி...புறாவுக்காக தொடையை அரிந்து கொடுத்த மன்னன் எல்லாம் இந்த ராசியில்தான் பிறந்திருக்க வேண்டும் அந்தளவு இரக்க குணம் உடையவர் இவர்கள்..

நண்பனுக்கு ஒரு பிரச்சினை எனில் தன் குடும்பம்,தொழிலையும் மறந்து செய்ல்படுவர்....இதனால் பல சிக்கல்களிலும் மாட்டிக்கொள்வர் அப்போதும் கவலைப்படுவதில்லை...தானம் கொடுப்பதிலும் இவர்களை போன்ற வள்ளலை பார்க்க முடியாது. அதுவும் கடன் வாங்கியாவது கடன் கொடுப்பார்கள்...சந்திரன் இவர்கள் ராசியில் ஆட்சி பெறுவதால் எல்லா துறையிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் ...பேச்சு திறமையில் மற்றவரை மயக்குவர்.தன்மானம் மிக அதிகம்...மதியாதர் வாசல் மிதிக்க மாட்டார் ..மதித்தவரை கைவிட மாட்டார்....

புனர்பூசம் 4 ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்த உங்களுக்கு இதுவரை அர்த்தா ஷ்டம சனி நடந்தது..இதனால் பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல்,சொத்துக்கள் பிரச்சினை,மருத்துவ செலவு,நிறைய அலைச்சல்,குடும்பத்தில் நிம்மதி இன்மை என தவித்து வந்தீர்கள்...இனி அந்த பிரச்சினை இருக்காது அர்த்தா ஷ்டம சனி நவம்பர் மாதத்துடன் முடிகிறது...ராசிக்கு 5 ஆம் ராசியான விருச்சிகத்துக்கு மாறுகிறார்.....இது பல தடைகளை உடைக்கும்..பிரச்சினைகளை தீர்க்கும்..விரயதிசை,அஷ்டம திசை,அசுபர் திசை நடப்பவருக்கு மட்டும் சற்று பாதிப்புகள் இருக்கும்.

சனி 5ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 5.7.2015 வரை ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விசயங்களில் மட்டும் மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதன்பின் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிதான்...குரு சனி இருவரும் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவர்...

உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியான மனநிலை உண்டாகும்...தொழில்,வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்தித்தாலும் பாதிப்பு இருக்காது.. முன்பை விட அதிக லாபத்தை அடைவீர்கள்..கொடுக்கல் வாங்கலில் இன்னும் இருமடங்கு லாபம் உண்டு..

5ல் சனி இருப்பதால் பூர்வீகம் சம்பந்தமான சொத்துக்கள் பிரச்சினைகள் இருக்கிறது கவனமாக கையாளவும்...அல்லது தந்தை வழி உறவுகள் பகையாகலாம்...குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் குழந்தைகள் கல்வி,திருமணம்,தொழில் சம்பந்தமான பிரச்சினைகளால் மன உலைச்சல் உண்டாகும்...

மற்றபடி இந்த சனிப்பெயர்ச்சி அர்த்தாஷ்டம சனியை விட பாதிப்புகள் மிக முறைவாக உள்ளதால் நன்மையைதான் செய்யும்..

புனர்பூசம்; குருவின் நட்சத்திரம் என்பதால் 2015 ஜூலை மாதம் வரை கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை...பண நெருக்கடிகள் அதன் பின் தீரும் கடன் சுமை குறையும்.

பூசம்; கடுமையான அலைச்சல்கள் குறையும்...பகைகள் விலகும்...காரியங்கள் இனி நீங்கள் நினைத்தபடி நடந்தேறும்.

ஆயில்யம்;மற்றவர்கள் விசயத்தில் கவனம் செலுத்தாமல் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுங்கள் நண்பர்கள் பகைவர் ஆவர்...எனவெ அவர்கள் விசயத்தில் கண்மூடித்தமாக நம்பாமல் நன்கு கவனித்து செயல்படவும்.

 சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இக்காலங்களில் கவனம் தேவை....

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்சிலும் வைத்துக்கொள்ளலம்..பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார் இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் 9443499003 மெயில் ;sathishastro77@gmail.com


தெய்வீக மூலிகை சாம்பிராணி;


கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com


No comments: