Monday, 16 February 2015

நீங்க கடகம் ராசியா..?cancer

நீங்க கடகம் ராசியா..? ‪#‎cancerhoroscope‬ ‪#‎astrology‬

 புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

கடகம் ராசிக்கு சின்னம் நண்டு..நண்டு நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது..அதைப்போலவே இவர்கள் எங்கு போனாலும் பிழைத்துக்கொள்வார்கள்.நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.அதைப்போலவே இவர்கள் கொஞ்சம் சந்தோசமாக இருந்தால் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்க சென்று விடுவர்.பலருடன் கூடி இருப்பதையே விரும்புவர்.எப்போதும் இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கனும்.வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பெற்றிருப்பர்...அதே போல அன்பு செலுத்துவதிலும்,கருணை காட்டுவதிலும் .பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவர்களாகவும் இருப்பர்.

ஒரு கஷ்டம் நீங்கதான் காப்பாத்தனும் என சொன்னா,கடன் வாங்கியாவது உதவி செய்வர்..இதனால் பலர் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொண்டதுண்டு..கடன் வாங்குனவன் ஓடிட்டான் நான் கட்டிட்டு இருக்கேன் என்பார்..மக்கள் தொண்டே உயிர் மூச்சு...மனுசனா பொறந்தா பத்து பேருக்கு நல்லது செய்யனும் என்ற எண்ணம் கொண்டவர்...ராசிகளில் மிக அதிக மனபலமும் ,வைராக்கியமும்,வசியம் கொண்டவர்களும்,இவர்கள்தான்.. மகான்களும்,பெரிய பெரிய அரசியல் தலைவர்களும் பிறந்த ராசி கடகம் தான்...கடக ராசிக்காரங்க உங்க நண்பரா இருந்தா நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்...அவ்வளவு நம்பிக்கையானவர்கள்..
 கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். 
 கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலராசி என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு

இந்த ராசி கால புருஷனுக்கு நான்காவது ராசி.பெண்ராசி,சரராசி,ஜலராசி, மெளனமான ராசி,விவேகமான ராசி,பண்பான ராசி,ஆதிக்கமானராசி,வேகமான ராசி,உழைப்புத்தனமான ராசி,குறுகியராசி,ஆறுகால் ராசி,பலகால்ராசி,ஊர்வனராசி ,உயரமானராசி.

இந்த ராசி மார்பைக் குறிக்கும் ராசியாகும்.இந்த ராசிக்கரார் அதிக உயரமாக இருக்கமாட்டார்.சாரசரி உயரமும்,உருண்டை முகமும்,சற்று அமுக்கினாற் போன்ற மூக்கும் இரட்டைத்தாடையும் உடையவராக இருப்பார்.கனமான கழுத்தும், பரந்த மார்பும்,சிவந்த நிறமுடையவர்.வளைந்து நடக்கும் இயல்பும்,வேமாக நடப்பார். நடையிலும் சஞ்சராத்திலும் விருப்பம் உடையவர். சிறிய நோய்க்கும் பெரியதாக கவலைப்படுவார்கள். சுவாசத் தொல்லைகளும்,மார்பு சம்ப்ந்தப்பட்ட நோய்களும்,வாயு தொல்லைகளும் ஜீரண தொல்லைகளும் திடீர் திடீரென இவர்களைத் தாக்கும்.

மிகவும் பலசாலி,தைரியசாலி,அறிவாளி,புத்திக்கூர்மையானவர்.கலைகளில் ஆர்வம்.நீர் இருக்கும் பகுதியில் வாழ ஆசைப்படுவார்.[நதிக்கரையோரம்,கடல் கரையோரமாக] நண்பர்கள் அதிகமாக இருக்கும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்து இருக்கும்.குடும்ப பாசம் உடையவர்.குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர்.

இரவில் பலம் உள்ளவர்.சந்திரனைப்போல் சிறிது காலம் மங்கி மறைவதும், சிறிது காலம் பேரு புகழும் பெற்று வாழ்வது இவர்களுடைய இயற்கையாகும்.வெற்றியும் சுபிட்சமும் பெற்று இருப்பார். நன்றியுள்ளவர். உயர்பதவி வகிப்பவார்.அதிக சிந்தனை படைத்தவர்,குடும்பவாழ்வில் அக்கறை தீர்க்கமானப் பார்வையுடையவர்,திடீர் என உணர்ச்சி அடைவர்,மன்னிக்கும் குணம் உடையவர்.பதட்டமானவர்,சந்தேகப்பிராணி,தாய்மை உணர்வு உடையவர்,தாய்மைப் பாசத்திற்கு அடிமையானவர்.

நாணயமுடையவர், நன்றாக பேசக்கூடியவர்,நீதி நேர்மையை விரும்புவர். வியாபாரம் அல்லதுபொருட்களின் உற்பத்தியில் அதிகமான ஈடுபாடு உடையவர்.கவிஞர்,கலைஞர் எழுத்தாளர்களாக வாழ ஆசைப்படுவார்,அரசியல் வாதியாகவும் புகழ் அடையமுடியும். இவர்களுக்கு பல வீடுகள் இருக்கும்.

இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர்.மாற்று இனத்தவரின் கூட்டு முயற்சியால் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தி போற்றும் விதம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.சுறுசுறுப்பு மிகுந்தவர்ந்களாகஇருப்பார். ஒருகாரியத்தை செய் என சொன்னவுடனேயே செய்துகாட்டுவர்.முடி என்று சொன்னவுடனேயே முடித்துக்காட்டுவர்.விடாமுயற்சியும் கொள்கையை விட்டுக்கொடுக்காதகுணம்தான் இவர்கள் வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.

உயர்ந்த லட்சியங்களைக்கொண்ட இவர்கள் எல்லோரிடமும்  சகஜமாகப்பழகுவர்.தோளில் கைப்போட்டு தோழமையைக்காட்டும் இயல்பு இவர்களைப்போல யாருக்கும் இருக்காது. அவசரக்காரர்களப்போல  தோற்றமளித்தாலும்,காரியத்திலேயே கண்ணாயிருப்பர்.எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இவர்கள் நகைச்சுவையோடுபேசும் ஆற்றலால் நாநிலம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.

பெரியகுடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பார்.குடும்ப தலைவராக இவர்கள் பொறுப்பேற்கும் பொழுது எண்ணற்ற இடையூறுகளும் எதிர்ப்புகளும் வந்துசேரலாம்.முன்கோபம்மிக்கவர்களாக இருப்பதால் அதை பேச்சில் பிரதிபலிக்கும்பொழுதுக் குடும்ப உறுப்பினர்களில் ஒருசிலர் இவர்களைவிட்டு விலக நேரிடலாம்.

அரசியலால் அனுகூலமும்,ஆதாயமும் பெற்றகுடும்பம் என்றே சொல்லலாம்.குடும்பத்தில் ஏற்றமும் இருக்கும்தீடிரென இறக்கமும் இருக்கும்.இன்பமும் இருக்கும்,தீடீரென துன்பமும் வந்து சேரும்.செலவு செய்வதில் தாராளம் காட்டுவர்.பணத்தை எந்த விதத்திலும் சம்பாதிக்கூடிய திறமை இவர்களுக்கு உண்டு.ஆடம்பரச்செலவு செய்வதில் சளைக்க மாட்டார்கள். நெருங்கிப் பழகுபவர்களிட்த்தில் பணத்தினாலேயே வீண் விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள இயலும்.
   
இவர்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர்.
 கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.
 அதிர்ஷ்டக்குறிப்புகள்;
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி,திருச்செந்தூர் முருகன்

19 comments:

'பரிவை' சே.குமார் said...

சரியாகச் சொல்லியிருக்கீங்க...

ilavalahan said...

Vakku siththi umakku poodevi arulal amaindhulladhu

ranjith ramanathan said...

உண்மைதான்....

Unknown said...

100% correct

Unknown said...

சரியாக சொல்லிட்டீங்க

Unknown said...

சரியாக சொல்லிட்டீங்க

Unknown said...

மிகச்சிறந்த கணிப்பு, கடக ராசி காரர்கள் பங்கு சந்தையில் ஈடுபடலாமா?

Karthieng said...

70% only சரியானவை நான் கடகம்

Unknown said...

எனக்கு கடக ராசி ஆயில்யம் 25 வயது.நான் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.எனக்கு வேலை கிடைக்குமா?

Unknown said...

எனக்கு கடக ராசி ஆயில்யம் 25 வயது.நான் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.வேலை கிடைக்குமா ஐயா?

Unknown said...

சரிதானுங்க.

VR said...

100% correct

Anonymous said...

ரொம்பசரி

Unknown said...

Correct ah sonneenga thank you

Unknown said...

Correct ah sonneenga thank you

Unknown said...

தங்களின் தகவல்கள் அனைத்தும் சரிதான். எனது மனைவியின் ராசி கும்பம் இதனால் எங்களின் வாழ்க்கையில் பாதிப்பு உண்டாகுமா? எனக்கு அரசு வேலை கிடைக்குமா?

Unknown said...

சரியான விளக்கம்

Unknown said...

சரியான விளக்கம்

Unknown said...

24.8.2018.1 52. Am rasi