Thursday, 19 February 2015

நீங்க மிதுனம் ராசியா..?gemini

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்..அவர் பெரும்பாலும் மிதுன ராசியில் பிறப்பதுண்டு...ஆயுதம் இல்லாத நிராயத பானியாக இருந்தால் தன் சாமர்த்தியத்தால் ஜெயிப்பவர் மிதுன ராசிக்காரர்...ராசியின் சின்னம்..இரட்டைக்குழந்தைகள் படம் இருக்கும்...பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது இந்த ராசியினருக்குத்தான்...இவர்கள் ஏதேனும் ஒரு கலைத்துறையில் இருப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு ஒரு திறமை இவர்களிடம் இருக்கும்.கண் பார்வையில் அடுத்தவர் மனதில் இருப்பதை படிப்பதில் மன்னன்..காரணம் ராசி அதிபதி புதன்..நல்ல நினைவாற்றலையும் நல்ல கிண்டல்,கேலி செய்வதிலும் வல்லவர்..பணம் சம்பாதிப்பதில்,பணத்தை கறப்பதில் குறியாக இருப்பார் இதனால் வெற்றிகரமான தொழில் அதிபர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்!!

இந்தராசி கால புருஷனுக்கு மூன்றாவது ராசி. இந்தராசி உபயராசி,காற்றுராசி,ஆண்ராசி,சாத்வீகமானராசி,விவேகமானராசி,ஆதிக்கமானராசி,வெறுமையான ராசி,சத்தியமானராசி, வறண்டராசி,சீற்றமுள்ளராசி,சினம்கொண்டராசி,மனித தன்மைராசி,மனமாற்றமுள்ள ராசி,குரலோசை ராசி,குருட்டுத்தனமானராசி, இரட்டைராசி,குறுகியராசி,பறப்பனராசி.
இராசியின் சின்னம் ஆணும் பெண்ணும் ஆணின் கையில்வீணை வைத்துக் கொண்டும்பெண் நடனமாடுவது போலும் இருப்பதாக்க் குறிப்பிடுவர்


இந்தராசிக்காரார் உயரமாகவும்,நீண்டமூக்கும்,நீண்ட புஜங்களையும் கைவிரல்கள்அமைந்திருக்கும்.சுருட்டைமுடி,உருண்டமுகம்,உதடுகள்ஒரளவுக்குகறுத்திருக்கும்,மெல்லியசரீரம்,கறுப்புநிறகண்களும்,பார்வையில் சுறுசுறுப்புத் தெரியும்.மற்றவர்களையும் சுறுசுறுப்பாக இருக்கத் தூண்டுவார்.நிமிர்ந்த நோக்கு இயல்பாக  உடையவர்.பித்தசரீரமுடையவர்.

வீட்டை அழகாக வைத்திருப்பார்,சுத்தமாகஇருப்பார்,கைவேலைப்பாடு திறமை, நுண்கலைத்திறமை உள்ளவர்.இசையில் ஈடுபாடு இருக்கும்.மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்,அவர்களின் எண்ணம் என்ன என்பதை அறிவதில் வல்லவர்கள்,ஒருவரை எடைப்போடுவதில் வல்லவர்.அடுத்தவரை பற்றி அறிந்ததை விமர்சனம் செய்வதிலும் வல்லவர்களாகத் திகழ்வார்.

பிறரை அடக்கி ஆளுவதில் வல்லமை பெற்றவர்கள்.தீர்க்கமான சிந்தனை உடையவர். வைராக்கிய நோன்புடையவர்.மெளனமாக இருந்து காரியத்தைச் சாதித்துக்கொள்ளக்கூடியவர்.கோபம் வரும் போது தன் உள்ளத்தில் தோன்றியதை உடனே வெளிப்படுத்துவார்கள்.

படிப்பில் ஆர்வம், படித்ததை கிரகித்துக்கொள்ளும் சக்தி உண்டு,கல்வியாளர் கணிதம்,விஞ்ஞானம்,சட்டம்போன்ற கல்வித்துறைகளில் எல்லாவற்றிலும் ஈடுபட்டு பிரகாசிக்கக்கூடியவர்.

நல்ல பேச்சாளி,திறமையாக வாதாடக்கூடியவர். நகைச்சுவை ரசனை உடையவர்.மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார். நகை சுவையாகவும்,நயமாகவும்,யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவார்,வாக்குத்திறமை உடையவர்.

இருப்பொருள்படப்பேசுவார்.பிறர் ரசிக்கும் விதத்தில்பேசுவதால் இவர்களை சுற்றி ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்.அரை குறையாக கேட்ட செய்திகளைக் கூட கண்,காது, மூக்கு வைத்து பெரிது படுத்தி பேசுவதில் சாமர்த்தியசாலி,உச்சரிப்பு சுத்தமாக இருக்கும்.கல்வி மான் மதியூகி கூர்மதியாளார். 

அயலர் இடத்தில் இருக்க விரும்பமாட்டார்.சூதாட்டங்களில் திறமையுள்ளவர். இதன் மூலம் சம்பாதிப்பார்.ஓட்டாண்டியாகவும் செய்வார்.நட்பு விரும்பி . தைரியமில்லாதவர்.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிறரை ஏமாற்றுவர்களாகவும்,வஞ்சகராகவும்,மாறிவிடவும் கூடும். ஆனால் அவரை திருத்துவது என்பது சுலபமான காரியமே.இப்படிதான் வாழவேண்டும் என்ற நியதியில்லாமல் எப்படியும்வாழலாம் எதையும் செய்யலாம் எந்த வழியையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதை குறிக்கோளாக கொண்டிருப்பார்.

இவர் நடிப்பு,நடனம்போன்ற கலைத்துறைகளில்மிகவும் கெட்டிக்காராகளாக விளங்குவார். மற்றவர்களைப் போல பேசி நடித்துக்காட்டுவதிலே அபார திறமைசாலி.குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் இவர்கலுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது..காரணம் ஆரம்பத்தில் ஜோராக மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் இவர் காலப்போக்கில் மனம் மாறிவிடுவதுதான்...இவர் அடிக்கடி மனம் மாறுபவர் என்பதால்,மனைவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு அடிக்கடி உண்டாகும்.எனக்கும் உனக்கும் ஒத்தே வராது என புலம்புவார்..

ஆடம்பரமாக வாழவேண்டும் எல்லாசுகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்றஎண்ணம் இயற்கைலேயே மேலோங்கிருக்கும்.வாகன யோகம் முதல் வசதியான கட்டிடத்தில் வாழ்க்கை நடத்துவது வரையில் இவர்களது கனவு விரிந்திருக்கும்.இந்த கனவுகள் வெகு சீக்கரத்தில் நனவாகி இன்பத்தை அனுபவிக்கலாம்.

இயற்கையிலேயே எதையும் ஆராய்ந்து அறியும் நோக்கம் உண்டு.புத்திக்கூர்மை மிக்கவர்களாக் இருப்பார்கள். தோற்றத்திற்கு ஏமாளியைப் போல இருந்தாலும் இவர்களை யாரும் ஏமாற்றமுடியாது. இவர்கள் விஷ்ணு வழிபாட்டையும்,அனுமன் வழிப்பாட்டையும்,மேற் கொண்டால் துயரங்கள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்;5,6
அதிர்ஷ்ட நிறம்;பச்சை
பகை ராசிகள்;விருச்சிகம்,மகரம்

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லாச் சொல்லுறீங்க...
அருமை.

Unknown said...

Thanks sir