Saturday, 28 March 2015

ஜாதகத்தில் சனி தரும் பலன்கள்

சனி ;
விதியின்    விதையைக்  குறிப்பவர்   சனி  ஆகும்.   ஈஸ்வரன்   பட்டம்  பெற்றவர்  ஆவார்.   கர்மத்தை   அனுபவிக்க    செய்பவர்  சனி,   சனி  கர்ம    காரகன்.  கர்ம   வினைக்கு  ஏற்ப   வாழ்க்கை  அமைகிறது.   ஒவ்வொரு   மனிதனும்   தன்  கர்ம    வினையை    அனுபவிக்க    பிறவி   எடுக்கிறார்.  இதிலிருந்து  யாரும்     தப்ப   முடியாது.    இதில்   விதி   விலக்கு   என்பது    கிடையாது.     பொதுவாக    சனியை    துன்பம்    அளிப்பவர்  என   கூறப்படுகிறது......   

ஆனால்   உண்மையில்   துன்பம்  அளிக்காதவர்  ஆவார்.சனி   சிறந்த  நீதிமான்.     ஒருவரின்  முன்வினை      பயனைத் துல்லியமாக   அனுபவிக்கச்  செய்வார்.  பாகு  பாடின்றி   தம்  வாழ்க்கையில்  வழி   நடத்துவார்.   அவரவர்    கரும   வினைக்கு   ஏற்ப   கஷ்டத்தையும்,   நன்மைகளையும்    கொடுக்கிறார்.   சனி   ஒரு    உண்மையாக   உழைப்பவர்.    24  மணி     நேரமும்    ஓய்வு     இன்றி    உழைப்பவர்.கடுமையான உழைப்பாளி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் ஜாதகத்தில் சனி பலமாக இருப்பார்..
சனி  ஒரு   குழந்தைப்  போல்  அல்லது   கிளியை  போல் என்று   சொல்லாம்.   அதாவது   சொன்னதைத்   திருப்பிச்   சொல்லும்  கிளியைப்   போல்   செய்த    கர்மாவை      திருப்பிச்   செய்பவர்.   முப்பிறவியில்   செய்த     கர்மாவை    இப்பிறவியில்   கொடுக்கும்    கர்மாகாரன்   ஆவார்.  ஒருவருடைய     ஆயுளை   நிர்ணயிருக்கும்   அற்புதமான      சக்தியுடையவர்,   பொருள்     எப்படி   விரயமாகிறது  என்பதைக்   குறிப்பிடுவதும்    இவர்தான்.12ல் கேது மறுபிறவி இல்லையென்றாலும் எல்ல கர்மவையும் இப்போதே கொடுத்து திக்குமுக்காட செய்பவர்.

வான்   மண்டலத்தில்     மிக   தொலைவில்   இருப்பவர்.   அதனால் சனி இருள் கிரகம் ஆகிறார்..சனி இரண்டரை வருடம் ஒரு ராசியை கடக்க ஆவதால் மந்தன் ,முடவன் எனப்படுகிறார்..சனியின்   தந்தையான    சூரியனின்    வீடான   சிம்மத்திற்கு 7 வது   ராசி   கும்ப   ராசி.    சூரியனின்    மனைவியான   சாயா    தேவியுன்    வீடு.   இந்த  ராசியில்தான்       சனி   பிறந்தார்.   [கும்ப   ராசியின்  சின்னம்    குடமாகும்.   குடத்தின்    உள்ளே   நிழல்    [சாயா  தேவி]     உள்ளார்.     பகல்    பொழுது   சூரிய   ஒளி     குடத்தில்   விழுவதால்  சாயா  தேவி   வலு  பெற்றதால்    சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த    ராசியில்    பலம்   அதிகம்   அதாவது     மூல   திரிகோண   இராசியாகும்.  திசை மேற்கு என்பதால் மேற்கு திசை பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சுக்கிரனின்   வீடான    துலாமில்    உச்சம்   பெறுகிறார்.   சுக்கிரன்   செல்வத்திற்கு    உரியவர்,   சனி   உழைப்பாளி,   பொதுவாக   எல்லோரும்   செல்வத்தை  அடைய    [வேலை   செய்கிறார்கள்]   உழைக்கிறார்கள்.
சனி  கிழவனுக்கு   உடைய   தோற்றம்,    சோம்பேறி,  உலக   ஞானம்     முழுமையாக   இருக்கும்,    இயலாமையால்    கவனித்துக்  கொண்டிருப்பதால்  ஞானம்   பெறுகிறார்.   கிழவனுக்கு   தாம்பத்ய  தகுதியில்லை,  அலிகிரகம், வேகமாக   செயல்  பட  முடியாது,  வயதானவர்கள்   மெதுவாகவும்,    மிக   தாமதமாக  செல்வார்கள்.   நிதனாமாக   செயல்பட்டதால்   காரியம்    நன்றாகவும்,   கண்டிப்பாகவும்  செய்து   முடிப்பார்,  

 கறுப்பாக    இருக்கும்    அனைத்துப்    பொருள்களுக்கும்   காரகன்    சனி ஆவார்.காகம்,  எருமை,   எலி,   எள்.குப்பையில்   கிடந்த    ஒருவரைச்   சனி   கோபுரத்தில்   ஏற்றி     விட்டுப்   போய்விடுவார்,  அதன்   பிறகு    அந்தக்   குடும்பம்   தலைமுறையாக    செல்வத்தையும்   சுகத்தையும்   அனுபவித்துக்   கொண்டு   இருக்கும்,  அதே   போல்   கோபுர   உச்சியிலிருந்து    ஒருவரை   தூக்கி   சாக்கடையில்   வீசி   விட்டுப்    போனாலும்  போய் விடுவார்,  அதன்  பிறகு     அந்த  மனிதர்   எப்பொழுதும்   எழுந்து    மேலே   வருவார்  என்பது   யாராலும்    அறிய   முடியாத   விஷயம்.

சனி  பகவானுக்குரிய    தேவதை    சாட்சாத்   எமதர்ம       ராஜனே. எமனுக்கு  எமனாகிய    சிவபெருமானை    சரணடைவதாலும்    சனி   பகவானால்   ஏற்படும்   தோஷங்களீலிருந்து   நிவர்த்தி   அடையலாம்  என்பதாலேயே   சிவன்   கோவில்களில்    தவறாமல்    சனி  பகவானோடு      நவக்கிரகங்களையும்    பிரதிஷ்டை   செய்து    வைக்கிறார்கள்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

அறியத் தந்தமைக்கு நன்றி.