Thursday, 5 March 2015

மகரம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..? capricorn

மகரம் ராசி;

தொழிலுக்கு அதிபதியான சனியின் ராசிக்காரர்கள்.கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரர்கள்..இவர்களின் பலவீனம், விரக்தி,சோம்பலுக்கும்,புதிதாக எதையும் முயற்சிக்காமல் விட்டுவிடக்கூடியவர்களாகவும் இருப்பவர்கள்..தாழ்வு மனப்பான்மையை,விரக்தியை கைவிட்டு இவர்கள் முயற்சித்தால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்...

சர ராசி என்பதால் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள்..அலைந்து திரிந்து காரியம் சாதிப்பவர்கள்...வண்டி வாகனங்களை அதிகம் பயன்படுத்துவர்.சனி ராசி என்பதால் அதிக சோதனைகளை சந்தித்து பக்குவப்பட்ட மனிதர்களாக அனுபவஸ்தர்களாக இருப்பர்...கடுமையாக உழைத்து குறைவான வருமானம் பெற்று சலிப்படைவர்..அதே சமயம் பெரிய பெரிய சாதனைகளை செய்து வரலாற்றில் இடம் பிடித்த மகரம் ராசியினரும் நிறைய உண்டு..உதாரணம் ரஜினிகாந்த்...நிறைய தொழில் அதிபர்களும் இந்த ராசியில் பிறந்தவர்களே..துணிந்து இறங்கினால் மலையையும் புரட்டக்கூடியவர் மகரம் ராசியினர்.


இந்த  ராசி  கால புருஷனுக்கு  பத்தாவது  ராசி,  பெண் ராசி,  நில ராசி,  சர ராசி,  பாதிபலனளிக்கும் ராசி,  சாந்தமான ராசி,  இறுக்கமான ராசி,  பண்பான ராசி,  உண்மையான ராசி,  வேகமான ராசி,  நாற்கால் ராசி,  குருட்டுத்தனமான ராசி,  உழைப்புத்தன்மையுள்ள  ராசி,  குறுகிய ராசி, நடப்பன  ராசி,  குள்ளமான ராசி.

நடுத்தரமான  நல்ல உயரம்,  சாய்ந்த  தோள்,  மெலிந்த கை  கால்கள்,  முட்டிகள்,  சதைப்பற்றற  கை  மெலிந்த  வசிகரமான  பார்வை  கொண்ட  முகம்,  குறைவான  கருத்த  மயிர்- கெட்ட  பற்கள்,  குனிந்த  கூன்  போன்ற  சுபாவம்,  பிரசித்தமான  மூக்கும்  உடையவர்கள்.  உஷ்ணம்  சம்பந்தமான  நோய்கள்,  வயிறு  மற்றும்  கால்களில்  வலித்தொல்லைகள்  வரலாம்.

சுய நலம்  இருக்கும்,  பிடிவாதம்,  பொறாமை,  இரக்கமான,  இரகசியமான வாயாடியான  விடாமுயற்சியுள்ள,  ஆடம்பரமான,  மனையாளுக்கின்பமான,  கவலையற்ற  சந்தோஷ  கரமான  குணங்கள்  உடையவர்கள்.  ஆரோக்கியக்  குறை,  ஏதாவது  இருந்து  கொண்டே  இருக்கும்.

எப்போதும்  ஆடம்பரமான  பேசும்  ஆர்பாட்ட  வீரராக  விளங்கிடுவர்.  எப்போதும்  சந்தேக  நோக்கு உடையாவர்களாகவும்,  கஞ்சன்,  எல்லாம்  கணக்காகவே  இருப்பார்.  தெளிவான  சிந்தனையும்  உடையவர்.  பகல்  பொழுதில்  பிறந்தவர்கள்  வலிமை  உடையவர்கள்.

கூர்மதி  மற்றும் மாறும்  மனநிலை,  சிறந்த அமைப்பாளர்,  எச்சிரிக்கை,  பதட்டம்  ஆசை  பிடிவாதம்  பாதுகாத்தல் காரியத்தை  துவக்கி விட்டால்  முடிக்காமல்  விட  மாட்டார் விட  முயற்சியுடையவர்,  காரியவாதி  என்று  சொல்லாம்.  வீட்டுக்குள்  புலி வெளியே  எலி  மற்றவர்களுடைய  குறைபாடுகளை  தமக்கு  சாதகமாகப்  பயன் படுத்திக் கொள்வதில்  வல்லவர்கள்.  பிடிவாத  குணத்திற்கு  சொந்தக்காரர். 

  பிறரை  உற்சாகப் படுத்துவதோடு,  தாமும்  உற்சாகமாக   இருப்பார்.  பிறர்  ஏதேனும்  ஒன்றைப்  பற்றி  சொல்லும்  போதோ  எனக்கு  இந்த  தகவல்  எப்போதோ  தெரியும்  என்று  பெருமையாகச் சொல்லுவர்.
திரிலோக  சஞ்சாரி.  அலைந்து  கொண்டே இருப்பார்,  காரியம்  சாதிக்கும்  வலிமை யுடையவர்.  எந்த  நிலையிலும்  தாழ்வடையாத  புத்தியும்  சமர்த்தியமும்  உடையவர்.  இவர்கள்  எந்த  சூழ்நிலைக்கும்  தங்களை  சரிப்படுத்திக்  கொள்ளவார்கள்.  வாழ்க்கையில்  முன்னேற  வேண்டும்  என்ற தீவிர  இலட்சியம்  உடையவர்கள்.  அதனால்  வசதி  குறைந்த  நேரத்தில்  கூட  இவர்களுக்கு  தரித்திர  புத்தி  ஏற்படாது. பல முறை போராடி  பிறகு  தான்  வெற்றியை  அடைய  முடியும்.

காரியத்திலேயே  கண்ணாக  இருப்பார்.  சதா  சர்வ  காலமும்  ஏதேனும் ஒரு  வேலையில்  ஈடுபடுவது  இவர்களது  இயற்கை  குணமாகும்.  விடா  முயற்சியும்,  ஒயாத உழைப்பும்  தான் விரைவான  முன்னேற்றத்திற்கு  வழி வகுக்கிறது.  மற்றவர்கள்  கவனம்  தம்மீது  படுபடியாக  இவர்களது  நடை,  உடை,  பாவனைகள்  இருக்கும்.  இவர்கள்  தனது  சுய  தேவைகளை  குறைத்துக்  கொண்டு  மற்றவர்களின்  தேவைகளைப்  பூர்த்தி  செய்வார்கள்.

இவர்களது  முன்னேர்கள்  முறையாக  வாழ்ந்து, செல்வ  செழிப்பு மேலோங்கி  வாழ்ந்திருப்பார்கள்.  இவர்  பிறந்த  போது  செழிப்பு  நிலை  மாறி  பராமரிப்புத்த்ன்மை  குறைந்திருக்கலாம்.  இவர்களது  சாமர்த்தியத்தினாலோ  அல்லது  தந்தை  வழி உறவினர்களின்  ஒற்றுமை  மூலமாகவோ  பாதி  நிலையாவது  அடைந்திருப்பார்கள்.  இவர்களுக்கு  தந்தையின்  அன்பு  குறைவாக  இருக்கும்.  ஆனால்  தாயின்  அன்பு  அதிகமாக  இருக்கும். சிந்தையில்  அமைதி  இருந்தால்  போதுமென்று நினைப்பார்கள்.

பூர்வீக சொத்துக்களில்  உள்ள பிரச்சனைகளை  இளமை காலத்தில்  தீர்த்துக்  கொண்டு,  பழைய  வீட்டையும்  புதுப்பிப்பார்கள்.  புதிய  வீடும்  கட்டி  கட்டி  குடியேறுவார்கள்.  இவர்கள்  கொடுத்த  வாக்கை காப்பாற்றுவதில்  சிரமங்கள்  ஏற்படும்.  ஆகவே  வாக்கு  கொடுக்கும்  முன்  யோசித்துச்  செயல்பட  வேண்டும்.  இவர்கள்  குடும்பத்திலும்  அருகில்  இருப்பவர்களையும்  அனுசரித்துச்  சென்றால்  குழப்பங்களில்  இருந்து விடுபடலாம்.  இவர்கள்  சமய  சந்தர்ப்பத்திற்கு  ஏற்றவாறு  மாற்றிக்  கொள்வர்.  பண  உதவி  பலரிடமும்  இருந்து  கிடைக்கும்.  ஆகவே  அதிலேயே  அக்கறையாக  இருந்தால்  கடனாளியாகி  வட்டி  கட்டும்   நிலை  ஏற்படும்.  ஆகவே  திட்டமிட்டு  செல்வு  செய்வது  கால சிறந்தது.

வியாபார  விஷயங்களில்  நிதானமாகவும்,  கண்ணியமாகவும்  நடந்து  கொள்வார்கள்.  மன உறுதியும்,  எதையும்  தாங்கிக்  கொள்ளும்  சக்தியும்  அற்புதமானவை.  துன்பம்  நேர்ந்த விடத்து  தளராமல்  அசைக்க  முடியாத  உறுதியோடு  நிற்பவர்கள்.  எவ்வளவு  எதிர்ப்புகள்  வந்தாலும்  தம்முடைய  குறிக்கோளை மாற்றிக்  கொள்ள  மாட்டார்கள்.  சொன்னதையே  திருப்பி  திருப்பி  சொல்லி  வற்றுத்துவர்.  பிடிவாத  குணத்தை  மட்டும்  விலக்கிக்  கொண்டால் ,  கடிவாளமில்லாத  குதிரையைப்  போல  மகிழ்ச்சியாக  வாழலாம்.

இவர்களுக்கு  சகோதரர்களால் பிரச்சனைகளும்,  விரையங்களும்  ஏற்படலாம்.  இவர்களுக்கு  தொழில்  படிப்பு  வாய்ப்பு  ஏற்படும்.  ஒரளவு  படித்தவுடன்  உத்தியோக  வாய்பைப்  பெற்று  அதில் இருந்தப்படியே  அஞ்சல்  வழி   கல்விகளை  கற்கும் வாய்ப்பு  அமையும்.  தொழில் முன்னேற்றம்  இருக்கும்.  இவர்கள்  இரும்பு,  இயந்திரம், மண், பூ, கலைத்துறை,  எழுத்துறை,  விவசாயம்,  உணவுப்பொருள்  ஆகிய  துறைகளில்  ஈடுபட்டால்  வெற்றி பெறலாம்.

இவர்கள்  விநாயகப்  பெருமானையும்,  சனீஸ்வரனையும்  விடாது  வழிபட்டு  வர  வேண்டும்.  கண்ணபிரான் பட்த்தை  இல்லத்தில்  வைத்து வழிபட்டால்  இனிய  வாழ்க்கை  அமையும். 

No comments: