Friday, 6 March 2015

மீனம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..?pisces

மீனம் ராசி; 
 மீனம் குருவின் ராசி..இந்த ராசியில் தான் சுக்கிரன் உச்சம் ஆகிறார் அதனால் வசியத்துக்கும் சுகத்துக்கும் குறைவில்லாதவர்கள்...அதனாலேயே பிரச்சினைகளையும் சந்திக்கக்கூடியவர்கள்..நிறைய அன்பும்,அறிவும் உடையவர்கள்....இரண்டாம் வீட்டில் மேசமாக இருப்பதால் பணம் வந்தவுடனே செலவாகிறது...சுபர் அங்கு இருந்தால் கட்டுப்படும்.சுக்கிரன் உச்சம் பெறுவதால் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள்..உத்திரட்டாதி,ரேவதி போன்ற சுபகாரியம் செய்ய உத்தமமான நட்சத்திரங்கள் இவர்கள் ராசியில் இருப்பதால் மிகவும் ராசியானவர்கள்,முகவசியம்,கைராசி என புகழடைவார்கள்..

இந்த  ராசி  கால  புருஷனுக்கு  பன்னிரெண்டாவது  ராசி,  ஜல ராசி,  உபய ராசி,  பெண் ராசி,  மெளனமாக ராசி,  இயல்பான ராசி,  பண்பான ராசி,  சிந்திக்கும் ராசி,  மனமாற்றமுள்ள ராசி,  இரட்டை ராசி,  நீண்ட ராசி,  ஊர்வன ராசி,  குள்ளமான ராசி.

இந்த  ராசிக்காரர்கள்  சுமாரான  உயரமும்,  நல்ல  நிறமும்,  சற்று  பருமனான  தேகம் உடையவர்களாக  இருப்பார்கள்.  அழகான  தோற்றாம்  உடையவர்.  விசாலமான  கண்களை  உடையவர்கள்.  இவர்களுக்கு  கண்  பார்வைக்  கோளாறுகள்  மற்றும்  கட்டிகள்  போன்றவைகள்  வரலாம்.  சுக  போகங்களில்  அதிக  அளவில்  ஈடுபாடு  காரணமாக  நரம்பு  தளர்ச்சிகள்  சிலருக்கு  வரலாம்.

இவர்கள்  நம்பிக்கைக்கு  பாத்திரமாக  விளங்குவார்கள்,  எதையும்  திட்டமிட்டு  ஆற,  அமர  யோசித்துச்  செய்வார்கள்.  ஆகவே  தான்  எடுத்த  காரியத்தை  எளிதில்  கச்சிதமாக  முடிக்கும்  வாய்ப்பு  அமையும்.  தன்னடகத்திற்கு  சொந்தக்காரர்கள்.  

 மறதி என்பது  இவர்களிடம் எள்ளளவும்  இருக்காது.  பேச்சைக் காட்டிலும்  செயலுக்கு  முக்கியத்துவம்  அளிப்பார்கள்.  சிக்கனம்  இவர்களது  உடன்  பிற்ப்பாக  இருக்கும்.  பொது  பணத்தை  கையாளுவதில்  அதிகமான  கவனம்  செலுத்துவார்கள்.  நாணய  பாதிப்பு  ஏற்படாமல்  நடந்து  கொள்ளுவதில்  கெட்டிக்காரர்.  செலவு  செய்யும்  முன்  நியாமான  செலவா?  என  யோசித்து  செயல் படுவார்கள்.
பண வசதி  தேவைக்கேற்ற  விதத்தில்  தேவைக்கேற்ற  நேரத்தில்  வந்து  கொண்டேயிருக்கும்
.                   
பொது  பதவிகளுக்கு  இவர்  பெயர்  இடம்  பெறு.  பொதுவாக  சண்டைக்கு  போக  மாட்டார்  ஆனால்  வந்த  சண்டையை  விட  மாட்டார்.  உடல்  உழைப்பு  இல்லாத  தொழிலில்  ஈடுபடுவார்.  தீர்க்க   யாத்திரைகளிலும்  பயணங்களிலும்  அதிகம்  பிரியம்  உடையவர்.  குழந்தைகளை  அதிகம்    நேசிக்கும்  குணம்  உடையவர்.  மற்றாவர்களுக்கு  நல்ல  அறிவுரைகளை  சொல்லுவதில்  வல்லவர்.  பிறரை  தன் வசமாக்கிக்  கொள்வதில்  கெட்டிக்காரர்கள்.  விட்டுக்  கொடுப்பது  போல்  செயல் பட்டு  பிறகு  எதிரிகளை  தன்  வழிக்கே  கொண்டு  வருவார்.
சத்துவ  குணம்  உடையவர்  தத்துவ  ஞானம்,  சன்மார்க்க  சிந்தனை  உயர்ந்த  ஒழுக்கம்,  உண்மையானவர்.   மத நம்பிக்கை.  தெய்வ பக்தி  உடையவர்.  ஆன்மீக  ஆற்றல்  உடையவர்.  உள்ளுணர்வால்  அறியப்படுவர்.  சுத்தமாகவும்   தூய  ஆடைகளை  அணியக்  கூடுயவர்.  வாழ்க்கையை  விளையாட்டாக  எடுத்துக்  கொள்ளக்  கூடியவர். மிகவும்  தயாள  குணமுடையவர்.  பின்னால்  வரப் போவதை  முன்பாகவே  நிதானித்து  அறியக் கூடியவர்.  சில  சமயங்களில்  மூர்க்க  குணம்  உடையவர். 
தைரியசாலி,  செல்வம்  அதிகமாக  இருக்கும்.  பந்துக்களிடம்  பாசம்  உடையவர். தன்  குடும்ப  உறுப்பினர்களின்  சொற்களுக்கு  மதிப்பும்  மரியதையும் அளிப்பார்.  குடும்ப  பெருமையைக்  காப்பாற்றும்   தன்மை  உண்டு.  எல்லாக்  காரியங்களிலும்  தான்  முன்பாக  இருக்கு  வேண்டும்  என்று  விரைந்து  செல்பவர்.   இவருக்கு  உடன்  பிறப்புகள்  அதிகம்  இருப்பார்கள்.  உடன்   பிறப்புகளால்  இவருக்கு   நல்ல  முன்னேற்றம் கிடைக்கும்.  பெண்  சகோதிரிகள்  இவருக்கு  தக்க  சமயத்தில்  கை கொடுத்து  உதவுவார்கள்.

சகுனம்  பார்ப்பது  போன்ற  மூட  நம்பிக்கை  உடையவர்களாயும்  இருப்பார்கள்.  பழைய  கோட்பாடுகள்,  நம்பிக்கைகள்  எல்லாவற்றையும்   மிக  உறுதியாக  பற்றிக்  கொண்டு  இருப்பார்கள்.  வேறு  எதை  வேண்டுமானலும்    விட்டு  விடுவார்களே  தவிர  பழமைப்  பற்றை  மாத்திரம்   விட மாட்டார்.

இவர்களுக்கு   திருமண  வாழ்க்கைப்  பிறகு  செல்வ  நிலை  மேலோங்குவதோடு  செல்வாக்கும்  உயரும்.   மாமன்,  மைத்துனர்  வழி  ஒத்துழைப்பில்   மகத்தான  பலனைக்  காண்பர்.  இவருக்கு  தாயின்  ஆதரவு  அதிகம்  இருக்கும்.  குடும்பத்தில்  செல்லப்  பிள்ளையாக  வளருவர்.  அவர்  வளர,  வளர  தாயின்  உடல்  நலத்தில்  குறைபாடுகள்  வந்து  கொண்டே  இருக்கும்.  கவலையற்ற  வாழ்க்கை  தான்  லட்சியமாக  இருக்கும்.

சிறு  வயதில்  இருந்தே  நவீன  வசதி  களுடன்  கூடிய  அழகிய  வீடு  கட்ட   வேண்டுமென்று  ஆர்வம்  இருக்கும்.  மற்றவர்கள்  ஆச்சர்யப்படும்   விதமான   வாகன  வசதிகள்   வைத்துக்  கொள்ள  ஆசைப்படுவார்.  வீடு,  இடம்,  தோட்டம்  போன்றவைகளை  வாங்கி  அதன்  மூலம்  செல்வத்தை  சேமிப்பார்.  புகழ்,  செல்வாக்கு,  அந்தஸ்து,  கவுரவம்  அனைத்தும்  கடைசி வரை  இருக்கும்.  இவர்களுக்கு  அரசு  வழி  தொல்லைகள்  உருவாகும்.  அடுத்தவர்களுக்கா  வாங்கி  கொடுத்த  தொகைக்காக  பிரச்சினைகள்  உருவாகும்.

ஒரளவு  பிடிவாத  குணம்  உடையவர்கள்.  ஆனாலும்  மற்றவர்கள்  ஏதாவது  சொல்லி  விடுவார்களோ  என  நினைப்பார்கள்.   எதைப்பற்றியும்   அவராகவே  ஒரு முடிவைச்  செய்துக்  கொண்டு  அப்படித்தான்  நடக்கும்  என்ற்  நினைத்துக்  கொண்டு  செயல்படுவார்கள்.  எப்போழுதும்  தங்களுடைய  கல்வி  மற்றும்  திறமைகள்  பற்றி  ஒரு  அசாதரணமாக  தன்னம்பிகை  இருக்கும்.  ஆனால்  மிகவும்  உண்மையான  நண்பர்களாக  இருப்பாகள்.  வாசனை  திரவியங்கள்  மேல்  ஆசையுடையவர்.  போஜனப்  பிரியர்.

இவர்கள்  மிகப் பெரிய  அதிகாரியாகவும்,  ஆராய்ச்சியாளராகவும்,  போதிக்கக்   கூடியவராகவும்,   கல்வித்  துறை  மற்றும்  வழக்கறிஞர்  துறையைத்  தேர்ந்தெடுக்கக்  கூடியவர்களாகவும்   இருப்பார்கள்.  அரசு  வழி  அலுவலர்கள்,  நிதி  சேமிப்பு  நிலையங்கள்,  கணக்கு  பார்க்கும்  பணிகள்,  பேச்சாளர்கள்  போன்ற  துறைகளிலும்  தேர்ந்தெடுத்து  அதில்  ஈடுபட்டால்  வெற்றி   காணலாம்.

இவர்களுக்கு  இயற்கையிலேயே  குருவருளும்,  திருவருளும்  துணையாக  இருக்கும்.  இருப்பினும்  வியாழக்கிழமை  தோறும்  விநாயக  பெருமானையும்,  குரு  தெட்சிணாமூர்த்தியையும்  வழிபட  வேண்டும்.  குரு  கவசம்  படி  வழி பட்டால்  குறைகள்  நிவர்த்தியாகும்.             


4 comments:

Unknown said...

Fact na thank u...

குமார் said...

காதல் எப்படி இருக்கும்?

Unknown said...

மீன ராசி ஆண் கடகம் ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

Unknown said...

மீன ராசியில் பிறந்த ஆண்.கடகம் ராசி பெண்ணை திருமணம் செய்யலாமா?