Wednesday, 4 March 2015

விருச்சிகம் ராசியினர் எப்படி..? scorpio

விருச்சகம் ராசி;
இப்போது ஏழரை சனி நடப்பதால் கண்ணில் படும் கடவுளை எல்லாம் விழுந்து கும்பிட்டுக்கொண்டிருக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே..உங்க நல மனசுக்கு பெரிய கெடுதல் எதுவும் நடக்காது..அப்படி நடந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும்..ஏழரை சனி இத்தோடு போகட்டும் என சமாதனப்படுத்திக்கொள்ளுங்கள்.

விருச்சிக ராசியினர் குழந்தைகளாக இருந்தால் அவர்களை பெணி காக்க வேண்டும்..அன்பாக வளர்க்க வேண்டும் காரணம் ராசியின் சந்திரன் நீசம் ஆவதால் தாழ்வு மனப்பான்மை,பயம்,குழப்பம்,விரக்தி எளிதில் தாக்கும்..செவ்வாய் ஆட்சு உச்சம் பெற்று பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் வாழ்வில் நிறைய சாதிப்பார்கள்..தன்மானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் தன்னை ஒருவர் மதிக்கவில்லை எனில் அவர்களை தூக்கியெறிய தயங்க மாட்டார்கள்..அன்பாக நடந்துகொள்பவர்களிடம்..அதைவிட பல மடங்கு அன்பு காட்டுவார்கள்

இந்த  ராசி கால  புருஷனுக்கு  எட்டாவது  ராசி, ஸ்திர ராசி, பெண் ராசி, ஜல ராசி,  சீற்றமுள்ள  ராசி, மெளனமாக ராசி,  வீரமான ராசி,  விவேகமான  ராசி,  இறுக்காமான  ராசி,   பாசமான ராசி,  கடமையான ராசி,  ஆதிக்கமான ராசி,  வீணான  விரையமான ராசி,  சினம் கொண்ட ராசி,  உமைப்புத்தன்மையுள்ள  ராசி,  நீண்ட ராசி, உறுதியான ராசி,  எட்டுக்கால் ராசி,  பலகால் ராசி, ஊர்வன ராசி,  விஷமுள்ள ராசி, உயரமான ராசி,பால்  உறுப்பைக்  குறிக்கும்  ராசியாக  அமைகிறது.  இந்த  ராசியில்  பிறந்தவர்கள்  தாய்  தந்தையிடம்  மிகவும்  பிரியமாக  இருப்பார்கள்.  மனைவியிடமும்  பிரியமாக  இருப்பார்கள்.


இந்த  ராசிக்காரர்கள்  எடுத்த  காரியத்தைப்  பிடிவாதமாக  செய்து  முடித்து  வைப்பார்கள்.  இளமைத்  தோற்றம்  உடையவர்கள்.  கூரிய  விழி  படைத்தவர்கள்.  தயாளக்  குணம்  உடையவர்கள்  ஆனால்  மன உறுதி  இல்லதவர்கள்.  சுக  போகங்களை  அனுபவிப்பதில்  ஆசையுடையவர்கள்.  பேச்சு  திறமையுடையவர்கள்.  இந்த  ராசியில்  பிறந்த  பெண்கள்  கூட  ஆண்களின்  மனோ பாவமும், குணங்களும்  உடையவர்களாக  இருப்பார்கள்.

இந்த  ராசிக்காரர்கள்  பழைய  பழக்க  வழக்கங்களை  உறுதியாக  கடைப்பிடிப்பார்கள்.  ஆடல்  பாடல்களில்  விருப்பம்   இருக்கும்.  தன்  கொள்கைகளை  அசைக்க  முடியாத  நம்பிக்கை  உடையவர்கள்.  ஆனால் அடுத்தவர்கள்  கொள்கையை  தாக்கியோ  அல்லது  பரிகாசம்   செய்ய  மாட்டார்கள்.  தன்னுடைய  புத்திசாலிதனத்தின்  மேல்  நம்பிக்கை  உடையவர்.  மனதில்  தோன்றிய   கருத்துக்களை  தெள்ளத்  தெளிவாக யாராகா  இருந்தாலும்  பயமின்றி எடுத்து  சொல்வார்.  இவர்கள் குருவாக  நினைத்து  பலபேர்  ஆலோசனை  கேட்டு  நடப்பார்கள்.  தீர்க்கதரிசி,  வாக்கு பலிதம்,  கனவு பலிதம்  இவர்கள்  வாழ்க்கையில்  இணைந்து  இருக்கும்.  எதிர்காலத்தை  நிர்ணயிப்பதில்  கெட்டிக்காரர்.  இவரை  எளிதில்  யாரும்  ஏமாற்ற  முடியாது.  வி.ஐ.பி.  வரிசையில்  இடம்  பிடிப்பர்.

இந்த  ராசிக்காரர்கள்  பேச்சில்  பிறரைத்  தாக்குவது என்று  ஆரம்பித்து விட்டால் தேள் கொட்டியது போல்  மறக்க  முடியாத  அளவு வேதனை  தரக்கூடிய அளவுக்கு  பேசுவார்கள்.  சிடுசிடுப்புமிக்க  நிலையில்  சீறி  விழுவார்.  நேர்மையானவர்,  வெளியே  வர  கூச்சப்படுவார். கூட்டத்திலிருந்தும்  மக்களிடமிருந்தும்  விலகி  இருக்க  விரும்புவார்.  இரகசியம்  காப்பவர்.  வெளிபடையாக  பேச  மாட்டார்  அப்படி  பேசினாலும்  பிறர்  மனதை புண்படுத்துவர்.

சான்றோர்களிடம்  அதிக  மரியாதையும்,  சிறியவர்களை  அடக்கி  ஆளுதலும்  உடையவர்.  சந்தேகம்  உடலோடு  குடிகொண்டிருக்கும்.  தனக்குத்  தெரிந்த நல்ல  தகவல்களை மற்றவர்களுக்கு  எடுத்துரைத்து  பரிமாறிக்  கொள்வார்.  மாறுபட்ட  கருத்து  உடையவர்கள்  இவர்களிடம்  வந்தால்  மறுநிமிடத்திலேயே  மாறிவிடுவர்.  

 காலம்   நேரம்  பார்த்து  கச்சிதமாக  கரியங்களை முடிப்பதில்  இவர்கள் வல்லவர்கள்.  வாக்கு  சாதூரியம்  மிக்கவர்.  பூர்வ  புண்ணியத்தின்  பயனாக  குடும்பம்  மிக  வசதியான  குடும்பமாக  அமையும்.  பொருளாதார  வளர்ச்சியில்  உயர்ந்த  நிலையில்  இருப்பார்.  குடும்பத்தினர்  இவர்கள்  சொல்லுக்கு  கட்டுப்பட்டு  நடப்பர்.  சகோதரர்கள்  எத்தனை  பேர்  இருந்தாலும்  அதில்  இவர்  முதன்மையானவராக  இருப்பார்.  பூர்வீக  சொத்துகள்  இருக்கும்  அதை  விட்டு  விலகமாட்டார்,  விற்கவும் மாட்டார்.  புதிய  சொத்துக்கள்  வாங்குவார்.

இவர்கள்  கொடுத்த வாக்கை  காப்பற்றுவதில்  வல்லவர்.  முன்னேற்றம்  பெருமைப்படத்தக்கதாக  இருக்கும்.  முன்யோசனையோடு  செயல்படுவர்.  அதனால்  பணப்பற்றாக்  குறை  ஏற்படாது.  யாருடைய  பணமாவது இவர்களுடைய  கையில்  இருந்து  கொண்டே  இருக்கும்.  ஆரம்ப  வயதில்  அளவோடு  செலவிட்டாலும்,  நடுவயது  காலத்தில்  ஆடம்பரத்தை  விரும்புவர்.  வாழ்க்கை  துணை  அழகு  அறிவும்  நிறைந்தவராக  இருப்பார்.  வாழ்க்கை  துணையால்  வருமானம்  வந்து  சேரும்.

இவர்கள்  புத்தி  கூர்மை  உடையவர்களாக  இருப்பார்கள்.  எதையும்  பார்த்த  மாத்திரத்திலேயே   புரிந்து  கொள்வார்.
தொழில்  கல்வியில்  ஆர்வம்  இருக்கும்.  ஆராய்ச்சித்  துறையில்  அதிக  அக்கறை  காட்டுவார்.  எழுத்து துறையில்  சிறந்த   விமர்சிகர்ளாகவும்,  அரசியல், இராணுவம்  போலீஸ்  போன்றவற்றில்  துப்பறியும்  நிபுணர்களாகவும்,  பொறியியல்  துறை,  அச்சகத்துறை,  பத்திரிகைத் துறை,  வங்கி துறை,  மருத்துவத் துறை,  தொழில்  சாலை,  மற்றும்  தொழிலகம்,  அரசு துறை,  நிர்வாகத்துறைகளில்  சிறந்த வக்கீல்,  நீதிபதி,  அல்லது  ஸ்தாபனங்களில்  நிர்வாகியாகவும்  இருந்து  புகழ்  பெறுவர்.  ஆக்கவும்  அழிக்கவும்  திறமை  பெற்றவர்.
இவர்கள்  விநாயகர், முருகன், நந்தி, அனுமன், சரஸ்வதி, லட்சுமி,  சிவன், சக்தி, விஷ்ணு,  ஆகிய  அனைத்து  தெய்வ  வழிபாட்டில்  ஈடுபட்டால்  நினைத்த  காரியம்  நடக்கும்.

விருச்சிக ராசியினர் எல்லா கடவுளையும் பார்த்த மத்திரத்தில் கும்பிடுவர்..ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் முருகன் வழிபாடு நல்லது..சந்திரன் நீசமாவதால் திருப்பதி சென்று வருதலும் நலம் தரும்...

2 comments:

Reiiygan said...

எமது முன்னோரின் கணிப்புக்கள் எம்மை பிரமிக்க வைக்கிறது.

Reiiygan said...

எமது முன்னோரின் கணிப்புக்கள் எம்மை பிரமிக்க வைக்கிறது.