Friday, 12 June 2015

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்

மன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்..

திருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை  காலை 6.23 க்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..

மேசம் ராசி அசுவினி,பரணி,கிருத்திகை முதல் பாதம் வரை பலன்கள்;

அன்பான மேசம் ராசி நண்பர்களே....கடந்த ஒரு வருடமாக மேசம் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு இருந்தார்..இப்போது ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு மாறியிருக்கிறார் ..4ல் குரு இருந்தபோது,அஷ்டம சனியும் உடன் இருந்ததால் மன உளைச்சல்,சொத்து சம்பந்தமான வில்லங்கம்,கடன் வாங்கி வீடு கட்டுதல்,பழுது பார்த்தல்,மருத்துவ செலவுகள்,வாகனம் வாங்குதல் போன்றவை செய்திருப்பீர்கள் ..ஒருசிலர் விபத்தையும் சந்தித்திருப்பார்கள்...செய்யாத தவறுக்கு கெட்ட பெயரும் உண்டாகியிருக்கும்..தொழில் மந்த நிலை வருமான குறைவு இருந்திருக்கும் ...பெருசா எதுவும் செய்யலைங்க..பெருசா எதுவும் கிடைக்கலைங்க..என்பதுதான் பல மேச ராசியினரின் பதிலாக இருக்கும்...

இந்த சூழலில் ராசிக்கு ஐந்தாம் இடம் என்பது குருபலம் ஆகும் இது பனபலம்,செல்வாக்கு பலத்தையும் ,எதிலும் வெற்றி எனும் தடையில்லாத வெற்றியை சொல்கிறது எனவே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பானதாகும்..நல்லவை பல நடக்கும்.

உங்களுக்கு அதிர்ஷ்ட,யோகமான வீடாகிய சிம்மத்துக்கு குரு வருவது பல பெரிய மனிதர்களின் ஆதரவை கிடைக்க செய்யும்..அதன் மூலம் பல ஆதாயங்களும் கிடைக்கும்...ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வரும் குரு அங்கிருந்து உங்க ராசிக்கு பாக்யஸ்தானம்,லாபஸ்தானம்,ஜென்மராசி ஆகிய முக்கிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் இவையெல்லாம் பலம் அடையும்...14.7.2016 முதல் 7.1.2018 முடிய நீங்கள் நினைத்தவை தடையின்றி நிறைவேறும் லாபம் இருமடங்காகும்..வரவேண்டிய பனம் வந்து சேரும்..தொழில் மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும்....

உடல்நலனில் இதுவரை இருந்து வந்த தொந்தரவுகள்,பிரச்சினைகள் தீரும்..நல்ல மருத்துவர் கிடைப்பார்...பாதியில் நிற்கும் வீட்டு வேலைகள் நடக்கும்..திருமண முயற்சிகள் இனி தாமதம் இல்லாமல் நடந்தேறும்..கடன் பிரச்சினைகள் குறையும்..பதவி உயர்வு கிடைக்கும்...வேலைவாய்ப்பு சரியான முறையில் அமையாமல் சிரமப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்கு அமையும்.வீட்டில் புதிய ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்..வாகனங்கள் வாங்கலாம்..ஆனால் அஷ்டம சனி நடப்பதால் கவனம் தேவை.

குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..பெண்கள் நினைத்தபடி வேலைவாய்ப்பு பெறுவர் சிலருக்கு அரசு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.தங்கம் சேரும்..பணப்புழக்கம் அதிகரிக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை பலமடையும்.மேற்க்கல்வியில் இருந்த தடைகள் விலகும்...

வசதி வாய்ப்பு,அந்தஸ்து கூடுதல் ஆவதால் வாடகை வீட்டில் குடி இருந்தவர்கள் சொந்த வீட்டுக்கு செல்லும் வாய்ப்பும்,பழைய பிரச்சினைகள் தீரும் காலமாகவும் இது இருக்கும்.

8.1.2016 முதல் 8.5.2016 வரை காலகட்டம் குரு வக்கிர காலம் என்பதால் இந்த காலம் அவ்வளவு நல்ல பலன் தராது அஷ்டம சனி பலன் கூடுதலாகிவிடும்..எனவே கவனம் தேவை....மீண்டும் 9.5.2016 முதல் 10.8.2016 வரை காலகட்டம் குரு நல்ல பலன்களை கொடுக்க துவங்கிவிடுவார்...லாபஸ்தானம்,ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பிரச்சினைகள் குறைந்து வேலை பளு குறைந்து வியாபாரம் நல்லபடியாகவே நடக்கும்...நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் காலம் இது..

சிறப்பு பரிகாரம்;நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உங்கள் குலதெய்வம் கோயில் சென்று 16 விதமான அபிசேகம் செய்து பொங்கல் வைத்து வழிபடவும்...செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு வரவும்..
----------

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

No comments: