Thursday, 25 June 2015

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கடகம்

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கடகம்

வாக்கிய பஞ்சாங்கப்படி 5.7.2015 ஞாயிறு இரவு 11 மணிக்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 அன்று செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு குருபகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார் கோயில்களில் வழிபாடு 5ஆம் தேதியன்றே நடைபெறும்...

புனர்பூசம் 4அம் பாதம்,பூசம் 4பதங்கள்,ஆயில்யம் 4பாதங்கள் கொண்ட கடகம் ராசி நண்பர்களே...உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்துக்கு குரு வருகிறார்...குருபலம் பெறுகிறார்...கடந்த இரண்டாண்டுகலாகவே பல பிரச்சினைகளில் சிக்கி தவித்த உங்களுக்கு அடிச்சதடா லக்கி பிரைஸ் என துள்ளி குதிக்குமளவு சந்தோசமான பல அனுபவங்களை குருபகவான் தரப்போகிறார்...

குரு தன ஸ்தானத்துக்கு வரும்போது வருமானம் பல வழிகளிலும் வந்து சேரப்போகிறது..கடன்கள் தானாக அடையும் எனவே கடன் பிரச்சினையில் தவிப்போர் கவலைப்பட வேண்டாம்...அதே சமயம் உங்கள் இயல்பான குணமான அகலகால் வைத்தலை தள்ளிப்போட்டு விட்டு கடுமையாக உழைத்து இந்த குரு பலனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்துக்கு நிறைய சேமிக்க முடியும்..ஜாதகப்படி நல்ல யோகமான திசாபுத்தி நடப்பவர்களுக்கு குருபகவான் அள்ளித்தரப்[போகிறார்...கடினமான திசாபுத்தி நடப்பவருக்கு கிள்ளிதான் கொடுப்பார் அதே சமயம் கஷ்டங்களை குறித்துவிடுவார்..

14.7.2015 முதல் 7.1.2015 வரையான காலகட்டம் நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும் உங்கள் நியாயமான நீண்டகால விருப்பங்கள் நிறைவேறும்.இப்போது குரு உங்கள் ராசிக்கு குடும்ப ,தன ,வாக்கு ஸ்தானத்துக்கு வந்திருக்கும் குருபகவான் அங்கிருந்து ராசிக்கு ஆறாமிடத்தையும்,எட்டாமிடத்தையும் ,பத்தாமிடத்தையும் பார்வையிடுவது மிக விசேஷம்..திருமணம் தடங்கலாக இருப்பவருக்கு திருமணம் நடத்தி வக்கிறார் பிரிந்திருந்தோரை ஒன்று சேர்க்கிறார்...கடனில் தவித்தோரை காப்பாற்றுகிறார் உடல்நலன் சரியில்லாதவருக்கு நல்ல சிகிச்சை நடக்கிறது..தொழில் முடக்கத்தால் தவிப்போருக்கு நல்ல வழி பிறக்கிறது..பெண்களுக்கு நகைகள்,சொத்து சேர்க்கைகள் உண்டாகிறது..குழந்தை இல்லாதோர்க்கு குழந்தை பாக்யம் உண்டாகும்..வீடு கட்டி பாதியில் நிற்போருக்கு தடையின்றி பணி முடிந்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள்...வீட்டில் ஒரு விசேஷம் நடக்கும்..இதுபோல அருமையான யோகமான காலம் இதுவென்றே சொல்ல வேண்டும்..

 வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு வய்ப்பு கதவை தடும்..அரசியலில் இருப்போருக்கும் மக்கள் தொண்டில் இருப்போருக்கும் புதிய பதவி ஒன்று கிடைக்கும்..புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்..கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்..விரோதமா இருந்த சொந்தங்கள்,நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்..

புலிப்பாணி முனிவர் இரண்டாமிட குருவை பற்ரி சொல்லும்போது,பொன்,பொருள்,சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் காலம் இதுவென்கிறார்...அரசு ஆதாயம் கிடைக்கும்,,,செல்வாக்கு உயரும் என்கிறார்.


எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்;8.1.2016 முதல் 8.5.2016 வரையான காலகட்டம் குரு வக்ரத்தில் இருப்பதால் ஜென்ம குருவின் பாதிப்புகள் இருக்கும்.இக்கலகட்டம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

பரிகாரம்-திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வரவும்..சித்தர்கள் ஜீவ சமாதி அருகில் இருந்தால் அங்கு சென்று பெளர்ணமியில் வழிபட்டு வரலாம்..

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

No comments: