Monday, 6 July 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5 அல்லது 6ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்.

மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதம் முடிய உள்ள தனுசு ராசி நண்பர்களே..
மனிதாபிமானம்,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி அதிகம் நிரம்பியவர் நீங்கள்..பிறருக்கு உதவி செய்வது என்றால் நானாச்சு என நிற்பீர்கள்..பொது காரியம் என்றால் முன்னால் வந்து நிற்பீர்கள் நண்பர்களை அதிகம் விரும்புவீர்கள்..நட்புக்கு இலக்கணம் தனுசு ராசியினர்..

உங்கள் இளகிய மனதை புரிந்துகொள்ளாமல் ஏமாற்றுவர் பலர்.ஏமாந்தாலும் நாம் நல்லதுதான் செஞ்சோம் அந்த மன திருப்தி போதும் என வாழ்வீர்கள்...ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி நண்பர் களுக்கு கொடுத்துவிட்டு தான் வட்டி கட்டி கொண்டிருக்கும் பல தனுசு ராசியினரை அறிவேன்...ஓரளவுதான் பிறரை நம்பவேண்டும் என்றில்லாமல் எல்லோரையும் தன்னைப்போலவே நல்ல மனம் உடையவர்களாக எண்ண வேண்டாம்..உங்கள் ராசிக்கு ஏற்கனவே ஏழரை சனி நடப்பதால் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்..புதிதாக எதையும் செய்யும்முன் யோசித்து முடிவெடுக்கவும்.

கடந்த ஒரு வருடமாக எட்டாமிடத்து குருவால் பத்து பைசா வருமானமில்லை என்ற நிலைதான் பலருக்கும் நடந்தது..சிலருக்கு யோகமான திசை நடந்திருந்தால் எப்போதும் போல் நல்ல வருமானம் பார்த்திருக்கலாம்..அவர்களுக்கும் வேறு வகையில் சில அதிர்ச்சி வைத்தியங்களை குரு கொடுத்திருப்பார்..திடீர் உடல்நலக்குறைவு,தொழிலில் ஏமாற்றம் ,குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பிரச்சினைகளை குரு கடந்த ஒருவருடமாககொடுத்திருப்பார்நல்லாதானேபோய்க்கிட்டிருந்துச்சி..என்னாச்சு என குழம்பி தவித்திருப்பீர்கள்..

இப்போது திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானத்து வருகிறது..இது அருமையான குரு பலம் ஆகும்...குரு பாக்யத்துக்கு வந்தால் பொன் பொருள் சேர்க்கை உண்டாக்கும்..செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடந்து மகிழ்ச்சி பெருக்கை உண்டாக்கும் ...

தப்பி ஓடினவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள்..அது போல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கொள்ளும் குரு பெயர்ச்சியாக இது அமைந்திருக்கிறது....ஒன்பதாம் இடத்துக்கு வரும் குருவால் முன்னேற்றமான காலம் வந்து சேர்கிறது...தொழிலில் நல்ல முன்னேற்றம் ,பலவிதமான வருமானம் உண்டாகும்..எதிர்பாராத தன வரவு உண்டு..,கடன் பிரச்சினையால் தவிப்பவர்களுக்கு கடன்கள் அடைபடும்.,திருமணம் தடையாய் இருந்தவர்களுக்கு திருமணம் அமையும் ...

 தொழிலை அபிவிருத்தி செய்யும் காலம் கனிந்திருப்பதால் இதை சரியாய் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..ஏழரை சனி பற்றி கவலை வேண்டாம்..ஒன்பதில் குரு இருந்தால் தெய்வ அருள் நிறைய கிடைக்கும் என சொல்வார்கள் உங்கள் ராசி அதிபதியே குருவாக இருப்பதால் அவர் பலம் அடைந்து ராசிக்கு பாக்யத்தில் அமர்வதால் தந்தை வழியில் நிறைய ஆதாயங்களும் கிடைக்கும் சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து சொத்துக்கள் வந்து சேரும்..வீடு கட்டுவதில் இருந்த தடைகள் விலகி புதிய வீடு அமைந்து குடியேறுவீர்கள்..குழந்தை இல்லாதோர்க்கு குழந்தை பாக்யம் உண்டாகும்..சம்பள உய்ர்வு,பதவி உயர்வு கிடைக்காமல் தவித்து வந்தவர்களுக்கு இந்த வருட்ம் நிச்சயம் கிடைத்துவிடும்..

கணவன் மனைவியரிடையே ஒற்றுமை உண்டாகும்..முழு சுபகிரகமான குருபகவான் தனது சுபபார்வையான 5,7,9 ஆம் பார்வையால் ஜென்மராசி,தைரியஸ்தனம்,பூர்வபுண்ணிய ஸ்தானத்தை அதாவது 1,3,5ஆம் இடங்களைபார்வை செய்வதால் தன்னம்பிக்கை அதிகமாகும்...இளைய சகோதரால் ,மாமனாரால் ஆதாயம் உண்டாகும்..பகை விலகும்..மனைவியால் /கணவரால் பெருமை உண்டாகும்..குழந்தைகளுக்கான சுபகாரியங்களை செய்து முடிப்பீர்கள்..

சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள்,வருமானம் வந்து சேரும்..சிலருக்கு வெளியூர்,வெளிநாடு பயணம் சென்று வரும் பாக்யம் உண்டாகும்..விற்காத சொத்துக்கள் நிலம்,வீடு,மனை ஆகியவை கூடுதல் விலைக்கு விற்று நல்ல லாபம் சம்பாதித்து தரும்..

14.7.2015 முதல் 7.1.2016 வரை குரு வக்ரமாகிறார்..அப்போது உங்க ராசிக்கு குரு சுமாரான பலன்களைதான் கொடுப்பார்...கெட்ட காரியங்கள்,நெருங்கிய உறவினர்கள், வயதானவர்களின் இழப்பை உண்டாக்கும்...காரிய தடைகள்,முட்டுக்கட்டைகள் எந்த விசயத்திலும் அதிகம் காணப்படும்...பணம் எவ்வளவு வந்தாலும் தண்ணீராய் கரையும்...தொழில் சம்பந்தமாக நிறைய அலைச்சல் உண்டாக்கும்.....

பரிகாரம்;உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் திருச்செந்தூர் சென்று வரலாம்..

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!


No comments: