Monday, 6 July 2015

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம்


குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016விருச்சிகம்

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5 அல்லது 6ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்.

விசாகம் 4அனுஷம் கேட்டை நட்சத்திர பாதங்களுடைய விருச்சிகம் ராசி நண்பர்களே..குரு  உங்கள்  ராசிக்கு பத்தாம் இட்த்துக்கு பெயர்ச்சியாகிறார்..பத்தாம் இடம் கர்ம ஸ்தானம் என்றும் உபஜெயன ஸ்தானம் என்றும் சொல்லப்படும் இடமாகும்...

அன்பு, அமைதி,கடவுள் பக்தியில் அதிக ஈடுபாடு கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு மறையவில்லை என்றாலும், குரு பத்தில் சஞ்சரிக்கும்போது..பரமனே பிச்சை எடுத்தான் என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...தற்போதைய காலகட்ட்த்தில் தொழில் இழப்பு உண்டாகும்...பத்தில் குரு பதவியை பறிக்கும் என்பார்கள்.ஆனால் உங்கள் விருச்சிகம் ராசிக்கு குரு யோகாதிபதி..தனாதிபதி...அவர் கெடுக்க வாய்ப்பில்லை என்பதால் நீங்கள் தைரியமாக இருக்கலாம்..

ராசிக்கு ஜென்ம சனியும் நடப்பதால் இது சோதனையன காலம்தான் என்றாலும் திசாபுத்தி ஜாதகத்தில் மோசமாக இருந்தால் மட்டுமே இது ஓரளவு பொருந்தும்..மற்ற ராசியினருக்கு குரு பத்தில் வரும்போது பதவியை பறிக்கலாம்..தொழில் மாற்றம் உண்டாகலாம்..ஆனால் உங்கள் ராசிக்கு அப்படியே பலிக்காது..தொழிலில் சிறிய இடற்பாடுகள் வரலாம் அவ்வளவுதான்..
குரு உங்கள் ராசிக்கு 5,7,9 ஆம் பார்வைகளாக உங்களின் தனம் வீடு மனை,சுகம்,ருண,ரோக ,சத்ரு ஸ்தனத்தை பார்வை செய்வதால் இவையெல்லாம்பாதிக்கப்படாமல்இருக்கும்...உங்கள்,மனைவி,குழந்தைகள் வீடு,சொத்துக்கள் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை...வருமானம் திருப்திகரமாக இருக்கும்...தொழில் புதிதாக தொடங்குவதோ அபிவிருத்தி செய்வதோ இருந்தால் சொந்த ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் தீர ஆலோசனை செய்தபின் முடிவெடுக்கவும்...அதற்கு இது கோட்சார ரீதியாக உகந்த காலம் அல்ல...கடன் கொடுத்தாலும் திரும்பாது..என்பதையும் கவனத்தில் கொள்ளவும்..
14.7.2015 முதல் 7.1.2016 வரை உங்க ராசிக்கு குரு சுமாரான பலன்களைதான் கொடுப்பார்...கெட்ட காரியங்கள்,நெருங்கிய உறவினர்கள், வயதானவர்களின் இழப்பை உண்டாக்கும்...காரிய தடைகள்,முட்டுக்கட்டைகள் எந்த விசயத்திலும் அதிகம் காணப்படும்...பணம் எவ்வளவு வந்தாலும் தண்ணீராய் கரையும்...தொழில் சம்பந்தமாக நிறைய அலைச்சல் உண்டாக்கும் அதன் மூலம் வரும் பலன்களோ மிக குறைவாக இருக்கும்...சிலருக்கு இட மாறுதல்,ஊர் மாறுதல் உண்டாக்கும்..8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ர காலம் என்பதால் அது சமயம் உங்களுக்கு குருவின் அருள் உண்டாகும்...வரவு அதிகமாகும், வீண் செலவு குறையும்..நினைத்தவை தடையின்றி முடியும்..நிம்மதியான காலகட்டம் இது என்றே சொல்லலாம்..

பத்தில் குரு பாடாய் படுத்தும் என சொல்வதற்கான காரணம்...குரு பத்தில் கேந்திராதிபத்திய தோசம் பெற்றுவிடுகிறார் அதனால் அவர் இயங்குவதற்கே வாய்ப்பில்லை..இதனால் இக்காலகட்ட்த்தில் புதிய கடன் பிரச்சினைகளோ பழைய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் திணரும் நிலை உண்டாகலாம்..புதிய கடன் கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி அதன்மூலம் புதிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரலாம்..எனவே க்வனமுடன் நிதானமுடன் செயல்படுவது அவசியம்..

திருமணம் ஆகாதவர்களுக்கு களத்திரகாரகன் புத்தியோ,சுக்கிர புத்தியோ, பாக்யாதிபதி புத்தியோ நடந்தால் திருமணம் ஆகிவிடும்..குருபலம் இல்லை என்றாலும் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பம் அமைத்து கொடுத்துவிடுவார் குரு..அதனால் கவலை வேண்டாம்..

பரிகாரம்-வயதானவர்களுக்குமுதியோர் இல்லங்களில் இருப்போருக்கு உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உணவு,உடை,அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்..குரு உங்களை காப்பார்

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

No comments: