ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை,தை அமாவாசை அன்று நண்பர்கள் பங்களிப்புடன் அன்னதானம் செய்து வருகிறோம்..ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகள்,உடல் ஊனமுற்றோர் இல்லங்களில் இதை செயல்படுத்துகிறோம்...
நண்பர்கள் உதவி அதிகம் கிடைத்தால் ஆடைகள்,உணவு தானியங்களும் வாங்கி ,உதவிகள் அதிகம் கிடைக்காத இல்லங்களுக்கு உதவி வருகிறோம்...அந்த வகையில் இந்த வருடம் ஆடி அமாவாசை அன்று நண்பர்கள் உதவியுடன் ,ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் நல்ல நேரம் இணையதளம் வாசகர்கள் சார்பில் ,உடல் ஊனமுற்றோர் ஆதரவற்றோர் இல்லங்களில் ஆடி அமாவாசை சிறப்பு அன்னதானம் மற்றும் பொருள் உதவி செய்யப்பட்டது...
நமது நல்ல நேரத்தில் இதை முன்கூட்டியே பதிவாக இடவில்லை அதற்காக நண்பர்கள் யாரும் கோபிக்க வேண்டாம்..ஃபேஸ்புக்கில் மட்டும் எழுதியிருந்தேன்...இன்னும் ஒரு மாதத்தில் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை வருகிறது..அதில் விருப்பம் இருப்பம் இருப்பவர்கள் இணைந்துகொள்ளலாம் நன்றி.
No comments:
Post a comment