Thursday, 20 August 2015

தேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி

தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில்வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன ஆகும்?...அப்படியானால் லட்சக்கணக்கான தேங்காயை உடைத்துவியாபாரிகள் எப்படி பயன் படுத்துவார்கள்?

தேங்காய் எண்ணைதயாரிப்புக்கு அடி நாதமாக விளங்கும் இந்த கொப்பரையை பதப்படுத்த இயற்கையான முறையில் தயார் செய்ய இயற்கையாக காய வைத்தாலே போதும்.நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்ல தரமான கொப்பரை இருந்தால் தானே சுத்தமானதேங்காய் எண்ணை கிடைக்கும்?

ஆனால் பணம் செய்ய எதையும் செய்யலாம்?எப்படியும் செய்யலாம்?என்ற சிந்தனை அரசியல்வாதிகளிடம் இருந்து வியாபாரிகளுக்கும் பரவியதால் கொப்பரையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கந்தகத்தைத் தடவி இருப்புவைக்கிறார்கள்.

 தேங்காய் விலை ஏறும்காலத்தில் இவர்களுக்குவிலை அதிகமாக கிடைக்க
இந்த முறை பயன் படுகிறது.

சபரி மலை ஐயப்பன்கோவிலில் வெடி வழிபாடு நடக்கும்.கோடிக்கணக்கான தேங்காய்உடைத்து வழிபாடும் நடக்கும்.

கீழே கொண்டு போய்சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்ககாலதாமதம் ஆகும்.

அதனால் வெடி வழிபாடுசெய்யும் இடத்திலேயேகந்தகம்(SULPHUR) பூசப்படுகிறது.

 கந்தகத்தால் பாதுகாக்கப்பட்டகொப்பரைகள் பலமாதங்களானாலும் ஒன்றும்
ஆகாது.

ஒரு பொருளில் புழுவந்தாலோ,வண்டு வந்தாலோ,பூசனம்பூத்தாலோ உயிர்த்தன்மைஇருக்கும்.புழு,பூச்சி சாப்பிட்டதுபோக மீதி கிடைப்பதை நாம்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுதான்நியதி...ஆனால் நமக்கு இரண்டுவருடம் ஆனாலும்ஹார்லிக்ஸ் மாதிரிகெடாமல் இருக்கணும்.அப்புறம் கெமிக்கலை கலந்தால்தான்கெடாது.
கெமிக்கலில் முக்கினால்என்னவாகும்!?கொப்பரையில் உள்ள அமில
கந்தகம் உடம்புக்குள்போனால் என்னவாகும்? 
  
கேன்சர் வரும்....வயிறு கோளாறு வரும்....ரத்த ஓட்டம் அதிகரித்துரத்தக்கொதிப்பு வரும்....சுரப்பிகள்சீர்கெட்டுநீரிழிவு நோய் வரும்.... உடல் பருமன்மாறுபடும்...

கிட்ணி பழுதடையும்......இருதய துடிப்புஎண்ணிக்கை மாறுபடும்....புத்தி வேறுபடும்....சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்....சரி...இதோடு போனால்
பரவாயில்லை.தேங்காய் விலை உயர்வு...எள் விலை உயர்வு...கடலை விலை உயர்வு... சூரியகாந்திவிதைஉற்பத்தி குறைவு...இதனால் எண்ணெய் விலைகள்
கடும் விலை உயரவேண்டும்.

ஆனால் அப்படி உயராமல் விலைகுறைவாகதான்உள்ளது.

ஒரு சிறிய பார்வை....

ஒரு லிட்டர் எண்ணெய்தயாரிக்க சுமார் மூன்றுகிலோ விதை தேவைப்படும்.
நிலக்கடலை கிலோரூ70*3kg=Rs210எள் கிலோ ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதைரூ55*3kg=Rs 165 மேலே சொன்ன விலை ஒருகிலோவுக்கு என்றாலும்ஆட்கள் சம்பளம்,கரண்டு பில்
,கழிவு,லாபம் கணக்கிட்டால்விலை எங்கே போகும்!?

இப்படி விலை பிரச்சனையால் எல்லாஇடத்திலும் ஒரு தந்திரத்தனம்உருவாகிறது.

அதனால் மனித இனத்திற்கேகேள்விக்குறி ஆகிறது?!

எப்படி?!...

இனிதான் உங்களுக்குஅதிர்ச்சி...???!!!

வளைகுடா நாடுகளில்பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல்கழிவு Liquid Paraffin ( திரவ நிலை மெழுகு )லிட்டர்ரூபாய் 11 க்கு பெறப்படுகிறது.
அதை இங்கு கூலிங்பிராசஸ் செய்து லிட்டர்ரூபாய் 30க்கு எண்ணெய்தயாரிப்பு
கம்பெனிகளுக்கு விற்பனைசெய்கிறார்கள்.

இதை இறக்குமதி செய்வது"பாமாயில்" என்கிற பெயரில்இங்கு வருகிறது.

பால்ம் என்ற மரத்தில் இருந்துஎடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிக
நல்லஎண்ணெய் தான்.பனை மரம்,பேரீச்ச மரம்
போன்று பால்ம் ஒரு சிறந்தமரம்.

ஆனால் உலகம் முழுவதும் பாமாயில்எண்ணெய் சப்ளை செய்ய இயலுமா?

பால்ம் மரங்கள் உள்ளதா?!சூரிய காந்தி எண்ணெய்வியாபாரம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விற்பனை ஆகிறது.

அதற்கு ஏற்ப சூரியகாந்திசாகுபடி தோட்டங்கள்உள்ளதா?..

..இல்லையே!

சரி விடுங்கள்...250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில் 50 mlசன்பிளவர் ஆயில் தான் கிடைக்கும்.

125 கோடி மக்களுக்கு சன்பிளவர் ஆயில் தயாரிக்கஎங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?!

அதுபோலதான் பாமாயிலும்...சரி.நன்றாக போய் கொண்டு இருந்த நேரத்தில் நாம் நல்லெண்ணை,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் பயன் படுத்தி
வந்தோம்.இதயத்தை பாதுகாக்கசூரியகாந்தி எண்ணெய் என்று நமக்குபொய் சொல்லி,விளம்பரம் செய்து நம்மை ஏமாற்றியதை நாம்அறிந்தோமா!?

உண்மையில் கொழுப்புசத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.

ஒரு மிருகத்தில் இருந்துஎடுக்கப்படும் நெய்யேநமக்கு நன்மை தந்தால் ஒரு
இயற்கையான தாவரத்தில்இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு
செரிமானம்ஆகாதா!?

சிந்தனை செய்யுங்கள் மக்களே!!!

பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு, குழந்தைபாக்கியம் இன்மை,ஆண்மைகோளாறு,சிறுவயதிலேயே வயதுக்கு வருதல்,கேன்சர்,சிறு வயதில் சர்க்கரை நோய் போன்றஅனைத்து வராத நோய் வந்தபிரச்சனைக்கும் காரணம் பாழாய் போன சன் பிளவர் ஆயில் வந்த பிறகுதானே!!!!.

அந்த எண்ணெயை தொட்டுப்பாருங்கள்.
அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்...

எள்,நிலக்கடலை,தேங்காய்,சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கந்தகமும்,பெட்ரோலிய கழிவுகளும்,அதே எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும்கலந்தால் நம் உடல் என்னவாகும்!?

மனிதச் செயலா இது?!

எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி...

கொலை பாதக செயல்... நூடில்ஸ் மோசடியை விடஇது கோடிக் கணக்கானமடங்கு விஷக் கொலைச்செயல்!?

இது உயிர் உடலா?!கெமிக்கல்பேரலா?!

அரசின் தீர்வுதான் என்ன?

No comments: