Sunday, 27 November 2016

சனி தோசம் நீங்க 20 எளிய பரிகாரங்கள் !!!

சனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள் !!!

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2. சனிக்கிழமை தோறும் பகவா னுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.

3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

11. கோமாதா பூஜை செய்யலாம்.

12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்த து.

14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

16. உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

17. வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

18. பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.

19. தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

20. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

Friday, 11 November 2016

தியானம்,யோகா செய்த பலனை தரும் தமிழ் மந்திரம்

யோகா ,தியானம் செய்வதால் ஒவ்வொரு உடல் உறுப்புகளும் புத்துணர்வு பெறுகின்றன..அது போன்ற அனுபவத்தை மந்திரங்களை படிப்பதாலும் ,சொல்வதாலும் பெற முடியும்...

தினசரி காலை ,மாலை கந்த சஷ்டி கவசம் படித்தால் தியானம்,யோகம் செய்த பலன்கள் கிடைக்கும்..பொறுமையாக அதனை உணர்ந்து படிக்க வேண்டும்.கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க எனும் வரிகளை படிக்கும்போது உங்கள் கண்கள் பாதுகாப்பு அடைந்ததை போல உணர வேண்டும்...
ஒவ்வொரு அங்கத்தினையும் முருகனின் வேல் காப்பது போல அமைந்த கந்த சஷ்டி கவசத்தை படிக்கும்போது ,மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒரு சில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இதனால் மூளையின் தனிச்சிறப்பு கவனத்திற்கு அதாவது சிறப்பு பாதுகாப்பு நம் மூளையின் உத்தரவால் அந்த அங்கம் பெறுகிறது.இதனால் முழு ஆரோக்கியத்துடன் வாழ முடியும்

if you read SKANDHA SASTI KAVACHAM daily in the morning and evening,you will get the benefit of meditation,for this you should read slowly with steady mind.
While reading Kathirvel erandum kann inai kaaka, you should feel like your eyes are safeguarded. While reading this,You should also feel that every part of your body is safeguarded.
When reading this,our soul is watching everypart of our body and our brain is keenly watching this for few seconds,because of this,our body's internal parts are getting special care as per our mind's order,because of this,we can live with complete health.

முருகனையே குருவாய் வந்து அருள சொல்லி கேட்கும் அருமையான குரு மந்திரம்.தினசரி இதை படிக்க குரு அருள் மட்டுமல்ல முருகனருளும் கிடைக்கும்...தமிழ் மந்திரம் நோய்களை போக்கும் வறுமையை ஒழிக்கும்...

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


குழந்தைகளை இந்த மந்திரம் தினசரி படிக்க சொன்னால் நாக்குக்கும் ,மனதுக்கும், நினைவாற்றலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்.


Friday, 14 October 2016

உங்க ராசிப்படி நீங்க எப்படி ? 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை


உங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை;

சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம்


வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென்று போய்க்கொண்டே இருக்கும் ராசிகள் சர ராசிகள் எனப்படும்..அந்தளவு வேகம் நிறைந்தவர்கள் ..ஒரே பாட்டில் பணக்காரன் ஆக வேண்டும் என்பது போல பம்பரமாக சுழலக்கூடியவர்கள்...

இவர்களுக்கு குடும்பம் என்பது அடிக்கடி மறந்து போய்விடும்..வீட்டை விட வெளியில் இருக்கத்தான் அதிகம் பிரியப்படுவார்கள்...போனில்தான் பெரும்பாலும் இவர்களை பிடிக்க முடியும்.பெரும்பாலும் என்னைப்போல வேகம் இல்லை...எனக்கு ஆப்போசிட்டான குணம் இருக்குறதை கட்டி வெச்சிட்டாங்க என புலம்புவது வாடிக்கை. 

மேசம் ராசியினருக்கு ரொம்ப நாகரீகம்,அழகான,ஆடம்பர செலவு செய்யும் வாழ்க்கை துணை அமையும்..ஊட்டி போலாமா கொடைக்கானல் போகலாமா..கார் எப்போ வாங்கலாம் என்ற ரீதியில்தான் பேச்சு இருக்கும்..செலவு கொஞ்சம் கூட செய்வார்கள்..ஆனாலும் மத்தவங்க கிட்ட பெருமையா சொல்லிக்குற மாதிரி துணைதான் அமையும்..எப்பவாவது ஜாலின்னா பரவாயில்லை..எப்பவுமே ஆட்டம் பாட்டம்ன்னா எப்படி..?ன்னு எதிர்பார்ட்டி புலம்பும்.

துலாம் ராசியினருக்கு அதிகாரமா பேசக்கூடிய,கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கை துணை அமையும்.எல்லோரும் என் பேச்சை கேளுங்க..நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்..விட்டுக்கொடுத்து போனாதான் கெட்டு போகாம வாழலாம்..

கடகம் ராசியினருக்கு குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் திருப்தி அளிப்பதில்லை காரணம் 7ஆம் வீடாக சனி வீடு வருவதால் பல சிக்கல்கள் வருகிறது.பல கடக ராசியினர் ஏமாந்து விட்டேன் என புலம்புவதுதான் அதிகம்..எட்டுக்குடையவனும் அவர்தான் என்பதால் ,நஷ்டம் ஆவதும் ,போராடுவதுமாக இருக்கு.திருமன விசயத்தில் நிதானமாக முடிவெடுத்தால் நல்லது நடக்கும்..சனி பாதிக்காமல் இருந்தால் அமைதியான வாழ்க்கையாக இருக்கும்.

மகரம் ராசியினருக்கு ஊருக்குள்ள நல்ல செல்வாக்கு இருக்கும் வாழ்க்கை துணை அமையும்.அழகான அன்பான துணைதான் பெரும்பாலோனோர்க்கு அமைந்து இருக்கிறது.மனைவி வந்த நேரம்தான் நான் நல்லாருக்கேன் என சொல்லும் மகர ராசியினர் அதிகம்...சந்திரன் கெட்டால் மட்டுமே சிக்கலாகி விடுகிறது.

ஸ்திர ராசிகள் ;எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர்கள்..நிலையான எண்ணமும் செயலும் கொண்டவர்கள் இந்த ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ...இவர்களுக்கு வாழ்க்கை துணை எப்படி அமையும்...இது லக்னத்துக்கும் பொருந்தும்.ராசிக்கும் பொருந்தும்...பொதுவான கருத்துக்கள்தான்...ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறலாம்...ஆனால் அடிப்படை மாறாது.முடிந்தவரை இருப்பதை சொல்கிறேன்.

ரிசபம்-இவங்களும் ஸ்திர ராசி...வாழ்க்கை துணையும் ச்திரம் என்பதால் இருவருமே பிடிவாத கரர்கள்தான் சண்டை வந்தால் விடியும் வரை தீராது.ரிசபம் பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம்.வாழ்க்கை துணை அடிக்கடி மருத்துவ செலவை வைக்கும்.எதுவும் இல்லை எனில் புலம்ப ஆரம்பிச்சுருவாங்க..குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்டவர்கள் தான் இருவருமே என்பதால் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவு குடும்பம் நடக்கும்..ஆனால் இருவருக்குள்ள் அடிக்கடி பனிப்போர் நடக்கும்..
.
சிம்மம்;சிங்கத்து கிட்ட மாட்டிக்கிட்ட புள்ளி மானா தவிக்கிறேன்னு வாழ்க்கை துணை புலம்பல் தினசரி எதிரொலித்தாலும் தன் வால்யூமை குறிச்சுக்கவே மாட்டார்.அடிக்கடி சிங்க அவதாரம் எடுப்பதால் குடும்பம் அடிக்கடி டேஞ்சர் ஜோனுக்கு போய்தான் திரும்பும்.தொழில் மீது நல்ல பக்தி உடையவர்.வாழ்க்கை துணை அடிமை போல இருக்கனும் என்பார்..ஆனால் நல்ல மனுசன்..கோபம் இருக்குற இடத்துல குணமும் இருக்கும்...சிம்ம ராசிக்காரங்க பலாப்பழம் மாதிரி மேலதான் முள்ளு இருக்கும் உள்ளே முழுக்க இனிப்புதான் என்பதால் வாழ்க்கை துணை இவரை சரியா புரிஞ்சு வெச்சிருப்பாங்க..இருப்பினும் இவர்கள் அடிக்கடி மட்டம் தட்டுவதை ரசிக்க மாட்டாங்க..கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.ஆன்மீகம்,கடவுள் பக்தி கொண்டவர்களாக வாழ்க்கை துனை அமையும்.

விருச்சிகம்;இவங்களுக்கு வாழ்க்கை துணை நன்ராக அமையும்..ஆனா இவங்களே அடிக்கடி அதை துன்புறுத்தி பார்ப்பாங்க...நல்ல அழகு,இனிமை,சம்பாதிக்கும் திறன் இருக்கும் துணை அமைந்தாலும் அவங்க சொந்தக்காரங்க கிட்ட அவங்க காட்டும் ஈடுப்பாடு நமக்கு பிடிக்கிறதில்லை.மாமியார் பிரச்சினை அடிக்கடி தலை காட்டும்.அமைதியான வாழ்க்கை துணை அமையும்..அன்பும்,பாசமும் அதிகம்.நாகரீகமா நடந்துக்குவாங்க...அவங்க மாமனார் மாமியாரை மதிப்பாங்க ஆனா இவருக்குதான் அவங்க ஆளுகளை பிடிக்காது எல்லாம் சுயநலம் என்பார்கள்

கும்பம்;ரொம்ப கரெக்டா நடந்துக்குற வாழ்க்கை துணை அமையும்..கொஞ்சம் ஆணவமா பேசுவாங்க...ஆனா நல்லவங்கதான் ...நேர்மை,நியாயம் விரும்பும் வாழ்க்கை துணையாக இருக்கும்.குடும்ப வாழ்வில் அடிக்கடி ஈகோ பிரச்சினை தலைகாட்டும் இருவருமே சரிக்கு சரி பலமானவர்கள் என்பதால் யாரேனும் விட்டுகொடுத்தால் குடும்பம் கெட்டு போகாது.மாமனார்,மாமியார் பிரச்சினை இருக்கும்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.சமூகத்தில் நல்ல மதிப்பு கொண்டவர்கள் வாழ்க்கை துணையாய் அமையும்.கோபத்தை குறைச்சுக்குங்க உடம்புக்கும்,வீட்டுக்கும் நல்லது என வாழ்க்கை துணையிடம் அடிக்கடி சொல்ல வேண்டி வரும்.
உங்க ராசிப்படி நீங்க எப்படி ..4 மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்

உபய ராசிகள் என்பது மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகும்..இவை நான்கும் ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ராசிகளாகும்..நான்கு மூலைகளிலும் போய் சந்தில் மாட்டிக்கொள்கின்றன...அது போலவே இந்த ராசியினரும் எப்போதும் அடைபட்டு இருக்கும் குணமுடையவர்.

ஒரு பிரச்சினை என்றால் மனசு கஷ்டமாகி படுத்துக்கொள்வர்.அதிகம் செயல்படாத ராசி.வீடு தான் இவர்களுக்கு உலகம்.அலுவலகம் விட்டால் வீடு.குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பர்.நான் வாழ்வதே குழந்தைகளுக்காக என்பர்.அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்து விடுவர்.யார் என்ன சொன்னாலும் நம்புவர்.ஏமாந்தும் விடுவர்....வரவு செலவுக்கு இவங்க ஒத்து வர மாட்டாங்க..கடன் இவங்க யாருக்காவது கொடுத்தா திரும்பி வராது....பிஞ்சு மூஞ்சி என்பது இவர்களுக்குதான்.ஆனா சவுண்ட் பலமா இருக்கும்.

இன்னொரு உபய ராசியினரை கல்யாணம் செய்துகிட்டா பிரச்சினை இல்லை..ஆனா சர ராச்யினரை கல்யாணம் செய்துகிட்டா அவங்க என்ன சொல்றாங்களோ அதைதான் கேட்கனும்.மனைவி சொல்லே மந்திரம் என வாழ்வது இவர்கள்தான்.மாமனார் மாமியார்க்கு கட்டுப்பட்ட மாப்பிள்ளை...கல்யாணம் வரைக்கும் அம்மா,அக்கா,அண்ணன் தான் தெய்வம்..கல்யாணத்துக்கு அப்புறம் மனைவி,மாமனார் ,மாமியார்தான் தெய்வம் என வாழ்வது இந்த ராசியினர்தான்..பாசக்காரங்க...மென்மையானவங்க..
கடும் சொல் தாங்காதவர்கள்...கடுமையா உழைக்கவும் முடியாது...

மிகப்பெரும் அறிவாளிகள்..அறிவால்தான் சம்பாதிப்பர்.உடல் அழைப்பு ஆகாது.அது இவங்களுக்கு தெரியாது.....நிறைய சம்பாதிக்கும் வித்தை இவர்களுக்குதான் தெரியும்...பங்கு வர்த்தகம்,வங்கி பணி,ஆன்மீகம் சார்ந்தவை,பைனான்ஸ்,வியாபாரம் போன்றவற்றில் இவர்களே இருக்கின்ரனர்.உட்கார்ந்து சம்பாதிக்கும் எல்லா துறைகளிலும் இவர்களை பார்க்கலாம் ..

மிதுனம் ராசியினர் மனைவி /கணவன் சொல் மட்டும் கேட்டு நடந்து கொண்டால் எந்த ஆபத்தும் இல்லை.குடும்பம் நல்லாருக்கும்...மாமியாரால் ஆதாயம் உண்டு.
 
கன்னி ராசியினர் மனைவி ஆன்மீகம் கடவுள் பக்தி கொண்டவர். நல்லவர்.மாமனார்தான் அடிக்கடி வம்பிழுப்பார்.
 
தனுசு ராசியினர் மனைவி/கணவர் அறிவாளி.அவர்கள் சொல்படி செயல்படுவது உத்தம பலன் தரும்.
மீனம் ராசியினர் கணவன் /மனைவி கலகலப்பானவர் செல்வாக்கானவர்.உங்கள் கடும் சொல்தான் அடிக்கடி அவரை கடுப்பாக்கும்.மாமனாரால் ஆதாயம் உண்டு.#ஜோதிடம் #astrology

-ஆர்.கே.சதீஷ்குமார்,ஜோதிடர்,ஈரோடு 9443499003

Tuesday, 11 October 2016

உங்க ராசிப்படி நீங்க எப்படி..? ராசிபலன்

ஸ்திர ராசிகள் ;ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள் ....அதில் இருந்து மாறவும் மாட்டார்கள்..தப்பா இருந்தாலும் சரியா இருந்தாலும் அதில் பிடிவாதமாக இருப்பார்கள்...ரெண்டு ஸ்திர ராசிக்காரங்க சண்டையோ வாக்குவாதமோ செய்ய ஆரம்பித்தாலும் விடிய விடிய தொடரும்..எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள் தான் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள் ...நிலையான வெற்றியை பெறுவார்கள் ....வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓய மாட்டார்கள் ...வாழ்வில் ஏதேனும் ஒரு சாதனையை செய்வார்கள்

உபய ராசிகள் ;;மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி விடும் புத்திசாலிகள் ..மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் கில்லி...ஆனா இவங்களுக்கு இவங்களே வெச்சிக்குவாங்க கொள்ளி...எதிலும் இரட்டை நிலைதான்..மரம் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி என்பார்களே அது இவர்களுக்கு பொருந்தும்.மனசு மாறிக்கிட்டே இருக்கும்.ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.அறிவாளிகள் ,யாரையும் பார்த்தவுடன் கணிக்க கூடியவர்கள்..ஆன்மீகத்தில் ,பண விசயத்தில் சிறந்தவர்கள் ...இவர்கள் துணை இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்..

சர ராசிகள் ;மேசம்,கடகம்,துலாம்,மகரம் ...உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு போல சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள் ..பாயிண்ட் பாயிண்ட் வரட்டும் என காத்திருந்து நெத்திய்டியாக தாக்குவதுதான் இவர்கள் பாணி.எதிலும் வேகம்,விவேகம் .எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள்...ஊர் நாட்டாமை இவர்கள்தான் என்பதால் எல்லா பிரச்சினைக்கும் இவர்கள் நான் சொல்றேன் தீர்ப்பு என முன்னாடி ஏதாவது ஆதாயம், கிடைக்குமான்னு பார்ப்பாங்க...எப்பவும் பெரிய ஆட்களுடன் பழகத்தான் விரும்புவார்கள்..தன்னை பெரிய ஆட்களாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்..மிகப்பெரும் உலக சாதனையாளர்கள் ,மகான்கள்,உலக தலைவர்கள்  இந்த ராசிகளில் பிறந்திருக்கின்றனர்
 
#ஜோதிடம் #astrology #rasipalan

Thursday, 22 September 2016

மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை அன்னதானம் 30.9.2016

மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை அன்னதானம் 2016

நணபர்களே வணக்கம் ,

முன்னோர்களுக்குரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை. இந்தநாளில் முன்னோர்களை நினைத்து புனித நீர் நிலையில் தர்ப்பணங்கள் செய்தால் பிதுர்தோஷம் நிவர்த்தியாவதுடன், முன்னோரின் ஆசியும் கிட்டுமென்று தர்மநூல்கள் கூறுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் மிகவும் சிறப்பானவை. இதில் மகாளயபட்ச அமாவாசையென்று சொல்லப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கு கூடுதல் சிறப்புண்டு.
அது என்னவென்றால், அமாவாசை திதியில் மட்டுமின்றி, அதற்கு முன்னுள் தேய்பிறை நாட்கள் அனைத்திலுமே முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த பூர்வபட்ச நாட்களில் நம் மூதாதையர் பூமியை மிக நெருங்கி வருவதாக ஐதீகம்..

அன்றைய நாளில் நம் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்..நம் துன்பங்கள் தீரும்..இத்தயக புண்ணிய நாளில் தான தர்மம் செய்வதும் அன்னதானம் செய்வதும் அளவில்லாத நன்மைகளை வாரிவழங்கும் பல மடங்கு புண்ணியத்தை தரும்...

அன்றைய நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் ,உடல் ஊனமுற்றோர்களுக்கும் அன்னதானம்,ஆடை தானம் 5 வது ஆண்டாக இந்த ஆண்டும் செய்ய இருக்கிறோம்..நண்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம் உங்களால் முடிந்தளவு அவர்களுக்கு உதவி செய்யலாம்...நமது பழைய பதிவுகளை பாருங்கள்..போன வருட புரட்டாசி அமாவாசை அன்னதானம் படங்கள்,செய்திகள் கிடைக்கும்..

கலந்து கொள்ள விரும்புவோர் மெயில் அனுப்ப sathishastro77@gmail.com

நன்கொடை அனுப்ப;

 
k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971

 


Friday, 9 September 2016

ஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க

ஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க;

பூசம் நட்சத்திரம் நாளில் ஆலமரத்த்தின் இரண்டு மலராத மொட்டுக்களை பறித்து பசும்பாலில் அரைத்து ,கர்ப்பிணி பெண்ணுக்கு சாப்பிடகொடுக்கவும்...இது பும்சவனம் எனப்படும்...இது நான்காம் மாதத்தில் செய்யப்படும் சடங்கு.இதை பெரும்பாலும் நாம் செய்வதில்லை..ஏழாம் மாத்த்தில் வளைகாப்பு செய்வதோடு சரி.ஆனால் அக்காலத்தில் இதை கடைபிடித்து இருக்கிறார்கள்..இத்துடன் இரண்டு உளுந்து ,கொஞ்சம் எள்ளு சேர்த்து இடித்து தயிருடன் கலந்தும் கொடுப்பர்..

 கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நான்காம் மாதத்தில் அவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை கணவன் வாங்கி கொடுக்க வேண்டும்..இந்த காலத்தில் கர்ப்பிணி விருப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்கப்பட்டு அங்கம் குறைவாகிவிடும்..

ஆண் ஜாதகத்தில் 5ஆம் இடமும் பெண் ஜாதகத்தில் 9ஆம் இடமும் குழந்தை பிறப்பை சொல்கின்றன..குரு,சுக்கிரன் கெடாமல் இருந்து 5ஆம் அதிபதியும் கெடாமல் இருந்தால் குழந்தை பாக்யம் உண்டு.5ஆம் அதிபதி ஆண் ராசியில் இருக்கிறாரா பெண் ராசியில் இருக்கிறாரா..அவர் நின்ற அதிபதி அதன் சாரம் நவாம்சத்தில் அவர் நிலை அறிந்தும் பலம் அறிந்தும் அறிய வேண்டும்...பார்த்த கிரக பார்வைக்கும் கணக்கு இருக்கிறது சனி பார்த்தால் எத்தனை பிறந்தாலும் பெண் என்றும் சொல்வர்.

ஜாதகத்தையும் கணித்து ,குறைகளை போக்கி கொள்வது நல்லது..முன்னோர் வழி சாபம் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

Monday, 22 August 2016

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தரும் கிரக அமைப்புகள்

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வாழ உதவும் கிரகங்கள் சந்திரன் ,சுக்கிரன் தான் உதவுகிறது..காதல்,அன்பு,உல்லாசம் இவற்றுக்கெல்லாம் இவர்களே அதிபதியாக இருக்கிறார்கள்.சந்திரன் 6,8,12ல் மறையாமல் இருந்தால் பணம் இருக்கோ இல்லையோ நிம்மதி இருக்கும்..பாவ கிரகங்கள் சனி,செவ்வாய்,ராகு,கேது கூடாமல் பார்க்காமல் இருக்கனும்.
சந்திரன்,சுக்கிரன் கெடாமல் இருந்தாலே அழகான மனைவி,கைநிறைய பணம்,ஆடம்பர வாழ்க்கை,அறிவான குழந்தைகள் அமைந்து விடும்.இவங்க கடுமையான உழைப்பாளிகள் அல்ல.பணம் சம்பாதிக்க சிரம்படுவோர் அல்ல.அப்பா சம்பாதிச்சு வெச்சிருப்பார்.மனைவி பக்கம் நிறைய சொத்தோடு வந்திருப்பாங்க...தாத்தா சொத்தே பல தலைமுறை காணும் எனும் ரகம் இவர்கள்...
ரிசபம்,துலாம் ராசியினருக்கு ராசிநாதனும்,சந்திரனும் லக்னத்துக்கு மறையாமல் இருந்தால் இப்படி வாழ்வார்கள். இல்லை எனில் நல்லா சாப்பிட்டு ஆடம்பர செலவை கடன் வாங்கி செய்துவிட்டு சந்தோசமா இருப்பாங்க.


புதன் அறிவை குறித்தால் மூளையை குருபகவான் குறிக்கிறார்....குரு கெடக்கூடாது புதனும் கெடக்கூடாது...குரு பலமாக இருப்பவர்களுக்கு மூளை உழைப்பு அதிகம்...மூளை எனில் நுணுக்கமான சிந்தனையில் விளையும் திறமையை குறிக்கும்..குரு திசை நடப்போருக்கு ,குரு பலவீனமாக இருந்தால் ,மூலை சார்ந்த பாதிப்புகள்,சிறுநீரக பாதிப்பு,இருதய கோளாறு அறுவை சிகிச்சை சந்தித்துதான் ஆக வேண்டி இருக்கிறது..புதன் என்பது சாமர்த்தியமான அறிவை குறிக்கும்....கில்லாடி எனப்படுவோர் புதன் ஆதிக்கம் உடையோர்தான்.புதன் ராசியினரான மிதுனம்,கன்னி ராசியினரையும் சொல்லலாம்

ஒவ்வொரு கடவுளும் ஒரு சின்னத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்..சின்னம் அதிர்ஷ்டம் தரும்..பெரிய நிறுவனங்களின் சின்னம் லோகோ வை பார்க்கும்போதெல்லாம் அதை பற்றி நிறைய யோசிப்பேன்...ஆடி கார் சின்னம் வளையம் வளையமாக நான்கு சக்கரங்களை நினைவுபடுத்தும்..அவர்களின் தொழிலுக்கும் சின்னத்துக்கும் பொருந்தி போகிரது ஜாகுவார் சின்னம் சிறுத்தை..அவர்களது வாகனம் சிறுத்தை வேகத்தை நினைவுபடுத்தும்படி வடிவமைத்து இருக்கின்றனர்.
தேர்சக்கரம்,சக்கராயுதம்,தேர் ஓட்டி என பகவான் கிருஷ்ணரை சுற்றி சுற்றி இவை ஏன் வருகிறது என பார்த்தால் அவர் நட்சத்திரம் ரோகிணி..அதன் அமைப்பு சக்கரம் போன்றது...தேர் போன்றது.
சிவன் கையில் இருக்கும் மான் சின்னத்துக்கும் திருவாதிரைக்கும் சம்பந்தம் உண்டு.சிங்கத்தின் மீது இருக்கும் காளி ,முருகனிடம் இருக்கும் வேல்,வினாயகரின் காலடியில் மூஞ்சூரு எலி என எல்லாமே லோகோ போன்றவை..அவர்கள் வாகனம் ஒவ்வொன்றிலும் ஒரு கணக்கு இரு
முழுமையான வளர்ச்சியை அடையாதவை எல்லாம் புதன் அம்சமே.அரவாணிகள் முழு வளர்ச்சி இல்லாதவர்கள்.அவர்களை கிண்டல் செய்தால் தோசம் உண்டாகும் அர்த்தநாரி அம்சமான அவர்களை தொழில் செய்யும் இடத்துக்கு அழைத்து விருந்து செய்தால் தொழில் முடக்கம் தீரும்.மக்கள் வசியம் உண்டாகும்...
ஒரு அரவாணி என்னிடம் பத்து ரூபா கொடுப்பா என்றார் முடியாது என்றேன்.ஹீரோ மாதிரி இருந்துட்டு ஜீரோ மாதிரி இல்லைன்னு சொல்றியே என்றார்.அந்த வார்த்தை விளையாட்டை ரசித்தேன்.பத்து ரூபா கம்மி.இன்னும் தரேன்.முதல்ல சாப்பிடுங்கன்னு ஓட்டலில் சாப்பிட வெச்சி என் அலுவலகம் அழைத்து 100 ரூபாய் கொடுத்தேன்.ரூபாயை மடித்து என்னை மூணு முறை திருஷ்டி சுற்றிய அழகே தனி.சந்தோசமாக வாழ்த்திட்டு போனார்.
இதுபோல சூட்சும பரிகாரங்கள் தான் நம்மை உயர்த்தும்.


Wednesday, 3 August 2016

ஆடி அமாவாசை அன்னதானம் 2016

ஆடி அமாவாசை அன்னதானம் 2016

நேற்று முப்பெரும் திருவிழாவாக அமைந்து விட்டது....ஆடி 18க்கு நிறைய பெண்கள் ஆற்று மணலில் கன்னிமார் பொம்மைகள் செய்து காதோலை கருகமணி வைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்...அம்பிகை கருவுற்றிருப்பதாக ஐதீகம் என்பதால் ஆடி 18 ஐ,காவிரிப்பெண்ணுக்கு பூஜித்து வழிபட்டனர் இன்னும் பல பெண்கள் ..புதுத்தாலி கட்டிக்கொண்ட புதுத்தம்பதிகள் இன்னொரு பக்கம் என ஆடி 18 காவிரி,தாமிரபரணி ,பவானி நதிக்கரைகளில் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது..

குருப்பெயர்ச்சி என்பதால் காலை முதல் யாகங்களும்,வழிபாடுகளும் என சிவ ஆலயங்கள் அமர்க்களப்பட்டன...நான் நமது நண்பர்கள் அவர்கள் குடும்பத்தார் உட்பட அனைவரும் நலம் வாழ சிறப்பு அர்ச்சனை வழிபாட்டுக்கு இரண்டு கோயில்களில் பெரிய பெயர் லிஸ்ட் கொடுத்து ,மலர் மாலைகள் கொடுத்து பூஜைக்கு ஏற்பாடு செய்தேன்.பாவம் ஐயர்கள் கூட்டத்தில் யாரை கவனிப்பது என திணறிக்கொண்டிருந்தனர்.

ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பனம் புஜை பவானி ,கொடுமுடி ,திருச்சி அம்மா மண்டபத்தில் மக்கள் வரிசை கட்டி அமர்ந்திருந்தனர்...பிராமணர்கள் முறைப்படி மந்திரம் சொல்லி திதி கொடுக்க முடியாத அளவு திதி நெரிசல் அதிகம் இருந்தது....

ஒவ்வொரு முக்கிய கோயில்கலிலும் லட்சக்கணக்கான மக்கள் என தமிழகம் முழுக்க எல்லா கோயில்களிலும் மக்கள் வெள்ளம்தான்..நிம்மதியாக தரிசனம் செய்வது அரிது என்றாலும் ,நல்ல நாளில் கோயிலுக்கு போகாமல் இருந்து நமக்கு பழக்கமில்லையே ...கோயிலில் கால் வைத்து விட்டு வந்தால் போதும் என்ற மனநிலைதான் நேற்று எல்லோருக்கும் இருந்திருக்கும்...
காவிரி போன்ற புனித நதிகளில் நீராடினாலே பெரும் புண்ணியம் என்பதால் நேற்று அதிகாலையில் காவிரியில் குளித்து சூரியனை சிவமாக பாவித்து வந்தாலே மிக சிறப்பு.

அன்னதானம் செய்வதாக நாம் சொன்னதும் வழக்கமாக அன்னதானம் செய்ய நன்கொடை அளித்து உதவும் நண்பர்கள் ,இந்த முறையும் நன்கொடை அனுப்பி நன்றாக செய்யுங்கள் என ஊக்கமளித்தனர்.புதிய நண்பர்களும் இணைந்து கொண்டனர்.

ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் இரண்டு ,ஊனமுற்ற குழந்தைகள் ,கண் பார்வையற்றோர் க்கு ஆடி அமாவாசை அன்று அன்னதானம் செய்யப்பட்டது..

நன்கொடை வழங்கிய நண்பர்கள் அவர்களது குடும்பத்தினர் பெயரில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபவான் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை வழிபாடு பிரார்த்தனை செய்யப்பட்டது...அடுத்த அன்னதானம்,ஆடைதானம் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்று நடைபெறும்.

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Saturday, 30 July 2016

சனியால் உண்டாகும் ராஜயோகம்

சனி ராசிக்கு 3,6,11 ல் சஞ்சரிக்கும் யோகம் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது..பிறக்கும்போது ஜாதகத்தில் 3,6,11ல் இருந்தாலும் ராஜயோகமான அமைப்பு என எடுத்துக்கொள்ளலாம்...சனி லக்னத்துக்கு எட்டில் இருந்தால் ஆயுள் பலம் கூடும்..நல்ல ராஜயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..

சனி பார்க்கும் இடம் அதிக சோதனைகளை உண்டாக்கும்...5ஆம் இடத்தை சனி பார்த்தால் எவ்வளவு வசதியானவராக இருப்பினும் நிம்மதி இருக்காது.லக்னத்தில் இருக்கும்போது நிறைய போராட்டங்களை வாழ்வில் உண்டாக்குகிறார் 
 
லக்னத்துக்கு 7ஆம் வீட்டை பார்க்கும்போது குடும்ப வாழ்வில் சோதனை ,விரும்பிய பெண் கிடைக்காமை,இல்வாழ்வில் நிம்மதி குறைவு ,10ஆம் இடத்தை சனி பார்க்கும்போது தொழிலில் போராட்டம்,அடிக்கடி இடமாறுதல்,பணப்பற்றாக்குறை ,தொழில் மந்தம் உண்டாக்குகிறார்
 
சனி 7ஆம் வீட்டில் இருக்கும்போது காலம் கடந்த திருமணம் ,கலப்பு திருமணம் போன்றவை நடக்கிரது.சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்யும் நிலையும் உண்டாகும்.
 
இந்த அமைப்பெல்லாம் சனி திசா புத்தி நடக்கும்போது அதிக சக்தியுடன் பலன் தருகிறது..10ல் சனி வேகமான வளர்ச்சியும் வேகமான வீழ்ச்சியும் உண்டாக்கும்.
 
9ஆம் இடத்தில் சனி இருந்தால் 5ல் சனி இருந்தால் பூர்வீக சொத்தை அனுபவிக்கும்பாக்யம் இருக்காது 5ல் சனி குழந்தைகளால் உண்டாகும் நிம்மதி குறைவை சொல்கிறது.
 
சனி 4ல் இருந்தால் தனிமையை அதிகம் விரும்புவர்.உடல் நலக்குறைபாடு அடிக்கடி உண்டாகும் சொத்து ,வீடு வாங்குவதில் தடை உண்டாகிறது.
 
2ல் சனி பண வரவு செலவு இடற்பாடு உண்டாக்குகிறது....பேச்சில் உறவு,நன்பர்களை பகையாக்கி விடுகிறது ..கண் ,பல் கோளாறுகளை உண்டாக்கும்.
 
11ல் சனி மூத்த சகோதர பகை ,சேமிப்புக்கு தடை உண்டாக்கும் 12ல் சனி நிம்மதியற்ற உறக்கம்...குடும்பத்தில் கலகத்தை குறிக்கிறது.
 
திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதால் தோசம் குறையும் சனிக்கிழமையில் விரதம் இருந்து நவகிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் நிம்மதி பெறலாம் 

Tuesday, 26 July 2016

குரு பெயர்ச்சி 2016-2017 -குருவால் அதிக பணவரவு எந்த ராசியினருக்கு கிடைக்கும்.?

குரு பெயர்ச்சி வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி அமைகிறது அன்று ஆடி 18 ..ஆடி அமாவாசையும் ஆன நாளில் குரு கன்னி ராசிக்கு மாறுகிறார்...

குரு செல்வாக்கு கொடுக்கும் கிரகம்.சொல்வாக்கு தவறாத கிரகம்.குரு கிரகத்தின் சக்தி அதிகம் பூமியில் வெளிப்பட்ட நாளில் பிறந்தவர்கள் குருபலம் நிறைந்தவர்கள் ..அவர்கள் எப்போதும் செல்வாக்குடன் வாழ்கிறார்கள்...குரு பார்க்க கோடி நன்மை.

குரு பகவான் ஆட்சி பெற்றோ உச்சம் பெற்றோ லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் அமையப்பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது.இந்த யோகத்தால் நல்ல உடல் அமைப்பு ,மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத நிலை ,ஒழுக்கமான வாழ்வு போன்ற ஏற்றமான பலன்கள் நடைபெறும்.இப்படி ஹம்ச யோகம் பெற்றவர்களில் ஒருவர் நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆவார்.அவருக்கு லக்னத்துக்கு 7ல் குரு இருக்கிறார்..இதனால் அரசியலில் உய்ர்ந்த பதவி வகிக்கும் யோகம் பலமுறை உண்டானது.

குருவும் கேதுவும் இணைந்து காணப்பட்டாலும் கேதுவை குரு பார்வை செய்தாலும் அம்சத்திலும் இது போன்ற குரு கேது சேர்க்கை இருப்பின் கோடீஸ்வர யோகம் உண்டாகிறது.இதனால் வாழ்வில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகி செல்வம் பலவிதத்திலும் வந்து சேரும்.இந்த யோகத்தால் சிவனருள் பெற்ற செல்வராக ஆன்மீக அன்பர்களால் இவர்கள் புகழப்படுவர்.ஆன்மீகத்திலும் இவர்கள் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாதகத்தில் இந்த கோடீஸ்வர யோகம் அமைப்பு இருக்கிறது.கோடிக்கணக்கான மக்களின் ஆதரவும்,திருப்பதி பெருமாளின் ஆசியும் இவர் பெற்றிருக்கிறார்..

குரு ஜாதகத்தில் எந்த ராசியில் இருப்பது மிக சிறப்பு என ஜோதிடம் சொல்கிறது..? 

லக்னத்தில் குரு இருப்பதுதான் மிக சிறப்பானதாக சொல்கிறது குரு லக்னத்தில் இருந்தால் 5,7,9 ஆம் இடங்களை பார்வை செய்வார் இதனால் புண்ணிய செயல்கள் அதிகம் செய்வர்...நல்ல மனைவி நல்ல புத்திரன் அமையும்...சொத்துக்கள் சேர்க்கை உண்டாக்கும்.லக்னத்தில் குரு இருப்பது எந்த லக்னத்துக்கும் கேந்திராதிபத்திய தோசம் இல்லை.

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு அமையப்பெற்றால் தீர்க்க ஆயுள்,நல்ல செல்வம்,செல்வாக்கு ,சிறப்பான புத்திர பாக்யம்,அரசு வழியில் அனுகூலம்,தெய்வீக ஆன்மீக துறையில் நாட்டம் உண்டாகும்.

குருவால் உண்டாகும் யோகங்களில் முக்கியமானது கெஜகேசரி யோகம்.சந்திரனுக்கு கேந்திர ஸ்தானமாகிய 4,7,10ல் குரு அமையப்பெற்றால் கெஜகேசரி யோகம் உண்டாகிறது..கஜம் எனில் யானை கேசரி எனில் சிங்கம்.பல யானைகளுக்கு மத்தியில் சிங்கம் போல இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் வலிமை உள்ளவர்களாக திகழ்வார்கள்..இதனால் ஜாதகத்தில் உள்ள மற்ற தோசங்கள் விலகி வழிவிடுமாம்.

2016-2017 குரு பெயர்ச்சியால் அதிக பண வரவு யாருக்கு கிடைக்கும் எனில் ,
குரு பார்வை யார் ராசிக்கெல்லாம் தன ஸ்தானம்,பாக்யஸ்தானத்தை பார்க்கிறது என பார்ப்போம்...

குரு கன்னியில் இருந்து 5ஆம் பார்வையாக மகரம் ராசியை பார்க்கிறது.அது தனுசு ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்.

ஏழாம் பார்வையாக மீனம் ராசியை பார்க்கிறது அது கும்ப ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்...

ஒன்பதாம் பார்வையாக ரிசபம் ராசியை பார்க்கிறது அது மேசம் ராசியினருக்கு தன ஸ்தானமாகும்.

ஆக,குரு பார்வை பெறும் தனுசு ,கும்பம்,மேசம் ராசியினருக்கு நல்ல தன வரவு இருக்கும்.

லாபஸ்தானத்தை குரு பார்வை செய்யும் ராசியினர் யார் என பார்ப்போம்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபத்தை குரு பார்க்கிறார்
ரிசபம் ராசியினரின் லாபத்தை குரு பார்வை செய்கிறார்..

கடகம் ராசியினரின் லாபஸ்தானத்தை குரு பார்வை செய்கிறார்...

ஆகவே மேற்க்கண்ட ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்....

குரு பலம் பெறும் ராசியினர் யார்..?
சிம்மம்,ரிசபம்,மீனம்,மகரம் ,விருச்சிகம் இவர்கள் ராசியினருக்கு 2,5,7,9,11 ல் குரு வந்திருப்பதால் இவர்களுக்கும் பணம் சரளமாக வந்து சேரும்.

மத்த ராசிக்காரங்க எல்லாம் சோர்ந்து போயிட வேண்டாம்...திசா புத்தி நல்லாருந்தா ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தா நல்லதே நடக்கும்..உங்கள் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானது. உங்கள் ஜாதகத்தை பார்த்து திசாபுத்தி என்ன நடக்கிறது என பார்த்து அதற்கேற்றார்போல நடந்துகொண்டால் இன்னும் சிறப்பு.உங்கள் ஜாதக பலனை அறிய மெயில் செய்யவும். ஜோதிடர் நல்ல நேரம் சதீஷ்குமார் கணித்த சிறப்பு ஜாதக பலன் மெயில் மூலம் அனுப்பப்படும்..உங்கள் ஜாதகம் அனுப்பி 5 கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ 500.

தொடர்புக்கு sathishastro77@gmail.com

k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971

Friday, 15 July 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்


விருச்சிகம் ;விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு 11ஆம் இடம் லாபஸ்தானத்துக்கு வருகிறார்..இதுவரை குரு 10ல் இருந்து தொழிலை ஆட்டம் காண வைத்தார் ..ஜென்ம சனியும் உடன் சேர்ந்து படுத்தியது.இப்போது ஆற்றில் அடித்து செல்வோருக்கு பிடிக்க ஒரு மரக்கிளை போல குருபலம் வந்து அமைந்திருக்கிறது ..லாபத்தில் வரும் குரு ,உங்கள் பிரச்சினைகளை பெருமளவில் குறைப்பார்...மருத்துவ செலவுகள் குறையும் நோய் தீரும்.நன்பர்களால் ,மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்,

புகழ்,செல்வாக்கு அதிகரிக்கும் உறவுகள்,நண்பர்கள் பகை விலகும்.சந்தோசமான செய்தி தேடி வரும்.நீண்ட நாள் ஆசைகள் நிரைவேறும்.ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்சினை கட்டுக்குள் வரும்.இளைய சகோதர வகையில் நல்ல செய்தி கிடைக்கும்.மாமனார் வழி ஆதாயம் கிடைக்கும்.வீட்டை புதுப்பிப்பீர்கள் சிலர் இடம்,வீடு வாங்குவார்கள்.ராசிக்கு 5ஆம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைகளால் உண்டான கவலைகள் நீங்கும் சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்..ராசிக்கு 7ஆம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும் கூட்டு தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.

திருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வரவும்.

தனுசு;மூலம்,பூராடம்,உத்திராடம் சார்ந்த உங்களுக்கு ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு வருகிறார் ராசிக்கு 10ல் குரு வந்தால் தொழில் சார்ந்த மன உளைச்சல்கள் அதிகரிக்கும் காலம் ...சிலர் இடமாறுதல்கள் அடைவர். சிலர் வேறு பணிக்கு செல்ல முயற்சிப்பர்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்..வேலைப்பளு அதிகரிக்கும் காலம் என்பதால் ,ஏழரை சனிருப்பதால் கூடுதல் அலைச்சலும் இருக்கும்..

குரு ராசிக்கு தனஸ்தானத்தை பார்ப்பதால் வருமானத்துக்கு பங்கம் வராது...பணம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும் அதே அளவில் செலவுகளும் இருக்கும்...ராசிக்கு நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு,வாகனம் சார்ந்த செலவுகள் உண்டாகும் சிலர் புதுப்பிப்பார்கள். சிலர் வாங்குவார்கள் அதன் மூலம் எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை தந்தாலும் தாயார் வழி ஆதரவு இருப்பதால் சமாளிக்கலாம்..உடல்நிலையில் பாதிப்பு இருந்தாலும் 4ல் குரு பார்வை இருப்பதால் சுகம் உண்டாகும்..உறவினர்களுடன் விருந்து ,சுப நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள்..

கடன் நெருக்கடி இருப்போருக்கு குரு ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன் நெருக்கடி குறையும்...கடன் சுமை குறையும்..புதிதாக கடன் வாங்க வேண்டாம்...ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள் .நிறைவேற்ற இயலாது.கூட்டாளிகளால் லாபம் உண்டு தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்..

குலதெய்வம் கோயிலில் 16 விதமான அபிசேகம் செய்து வழிபட்டு வரவும்..


மகரம்;உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்துக்கு குரு வருகிறார்....இதுவரை ராசிக்கு எட்டில் அமர்ந்து பல எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வந்த குரு ராசிக்கு பாக்யத்தில் அமர்ந்து இன்பம் தரப்போகிறார் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பார்கள் ..காரணம் ,பலரும் ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும் ஒன்பதுல குரு இருப்பவர் மட்டும் தப்பி விடுவர் என்பதுதான் அந்தளவு சிறப்பு பெற்றது. ஒன்பதாம் இடத்து குரு.பல பிரச்சினைகள் ,நெருக்கடிகளில் இருந்து விடுபடப்போகிறீர்கள்...

ராசிக்கு குருபலம் வந்துவிட்டதால் பண பலமும் வந்து விடும்..செல்வாக்கு,புகழ் கூடும்...பகையாகிப்போன உறவுகள்,நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும். நோய் தீரும், கடன் சுமை குறையும். தொழிலில் சுறுசுறுப்பு உண்டாகும்....பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்..

குரு ராசியை பார்ப்பதால் மன இறுக்கம் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குரு ராசிக்கு 3ஆம் வீட்டை பார்ப்பதால் தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கும்..இளைய சகோதரரால் ஆதரவு கிடைக்கும்..வீடு,நிலம் வாங்குவீர்கள்..

ராசிக்கு 5ஆம் இடத்தை பார்ப்பதால் முன்னோர் வழி சொத்து பிரச்சினை தீரும் குலதெய்வ ஆசி உண்டாகும்...தடைகள் எல்லாம் நீங்கி எதிலும் வெற்றி பெறுவீர்கள்...திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்லபடியாக முடியும்..

ராசிக்கு 8ல் ராகு இருப்பதால் விஷப்பூச்சிகளால் கண்டம் உண்டாகாமல் இருக்க,புற்றுக்கண் கோயில் வழிபாடு அமாவாசை தோறும் செய்து வருவது நல்ல பலனை அளிக்கும்..

கும்பம் ;அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு மறைகிறார்.ராசிக்கு குரு மறைவது நல்ல பலன் தர வாய்ப்பில்லை...சில குழப்பங்களை தந்து விட்டே செல்வார்.அஷ்டமத்தில் குரு வர அவதிகள் நிரைய வந்து சேரும் என்ற முது மொழிக்கு ஏற்ப,காரிய தடைகள் நிறைய உண்டாகும்., புதிதாக எதையும் முயற்சிக்க வேண்டாம்..முதலீடுகள் ஆகாது...

நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது தொழில் காரணமாக குடும்பத்தை அடிக்கடி பிரிய நேரும்..பண நெருக்கடி அதிகரிக்கும் காலமாக இருக்கிறது தண்ட செலவுகள் அடிக்கடி வந்து பயமுறுத்தும்..வாகனங்களில் செல்கையில் அதிக எச்சரிக்கை ,மித வேகம் தேவை.

.ராசிக்கு 12ஆம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும்...விரய செலவுகள் கட்டுப்படும்..ராசிக்கு 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ,வீடு சார்ந்த சுப செலவுகள் உண்டாகும்..ராசிக்கு 2ஆம் விட்டை பார்ப்பதால் பண வரவு நன்ராக இருக்கும்...செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும்.. பயம்,கவலை,தாழ்வு மனப்பான்மை வேண்டாம்...வியாழன் தோறும் விரதம் இருந்து அருகில் உள்ள கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..

மீனம் ;பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஏழாம் ராசிக்கு குரு வருகிறார் இது குரு பலம் .இதுவரை பண சிக்கல்,தொழில் சிக்கல் என அவதிப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிரது.திருமணம் தடையாகி கொண்டிருந்தவர்களுக்கு அருமையான குரு பலம் பிறக்கிறது..தொழில் அபிவிருத்தி ஆகும்..புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும் பல வழிகளிலும் லாபம் வந்து சேரும் கடன்கள் முற்றிலும் அடையும்.கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் தங்கம் சேரும்.கல்வியில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர்.பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும்.சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவர்,

ராசிக்கு 11 ஆம் இடம் லாபத்தை குரு பார்ப்பதால் பங்கு வர்த்தகம்,நகைதொழில்,கல்வி துறை,வங்கி துறையில் இருப்போருக்கு நல்ல லாபம், முன்னேற்றம் உண்டு.சேமிப்பு அதிகரிக்கும்.மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்.தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்.பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.

ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .ஆரோக்கியம் உண்டாகும்..ராசியை குரு பார்ப்பதால் உற்சாகம் கூடும்.வேகம்,விவேகத்துடன் செயல்படுவீர்கள்...அஷ்டம சனியும் முடிஞ்சு ,குருபலமும் இருப்பதால் இனி தடையேதும் இல்லை...

மேசம் முதல் துலாம் வரை குருபெயர்ச்சி ராசிபலன் 

திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து வந்தால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் புதிய பாக்யம் கிடைக்கும்.


உங்கள் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானது. உங்கள் ஜாதகத்தை பார்த்து திசாபுத்தி என்ன நடக்கிறது என பார்த்து அதற்கேற்றார்போல நடந்துகொண்டால் இன்னும் சிறப்பு.உங்கள் ஜாதக பலனை அறிய மெயில் செய்யவும். ஜோதிடர் நல்ல நேரம் சதீஷ்குமார் கணித்த சிறப்பு ஜாதக பலன் மெயில் மூலம் அனுப்பப்படும்..உங்கள் ஜாதகம் அனுப்பி 5 கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ 500.

தொடர்புக்கு sathishastro77@gmail.com


Thursday, 14 July 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்

குரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்..

கன்னி ராசிக்கு மாறும் குரு உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் இருக்கிறார் அதனால் உங்கள் ராசிப்படி உங்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பார்ப்போம்...

அதிக ஆதாயம் அடையும் ராசியினர் -ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம் இவர்கள் ராசிக்கு குரு 2,5,7,9,11 என முழு சுப பார்வை செலுத்துவதால் இந்த ராசியினருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்...

மேசம் ;அசுவினி,பரணி,கிருத்திக நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு ஆறாம் இடம் ருண ,ரோக ,சத்ரு ஸ்தானத்தில் மாறுகிறார் ..இது நோய்,கடன் குறிக்கும் இடம்.ராசிக்கு 6ல் குரு செல்வது மறைவு ஸ்தானமாகும்..குரு என்பது செல்வாக்கை மதிப்பு ,மரியாதையை குறிக்கும்..

செல்வாக்கு மறைந்தாலும்,10 ஆம் இடம் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..தொழிலில் இதுவரை இருந்த சிக்கல்கள் குறையும்..ராசிக்கு இரண்டாமிடமாகிய தன ஸ்தானத்தை பார்வையிடுவதால் வருமானம் குறையாது..அதே சமயம் செலவுகள் அதிகமாகவே காணப்படும்.மருத்துவ செலவுகள் அதிகம் காணப்படும்.

வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை..பிறர் விசயங்களில் தலையிடுவதால் வீண் பகை உண்டாகும் காலம் இது..சிறு குழந்தைகள் மேச ராசியாக இருப்பின் கீழே விழுதல் ,அடிபடுதல் உண்டாக்கும்.திக பிடிவாதம் செய்வார்கள் ...படிப்பில் நாட்டம் குறைக்கும்.பெற்றோர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்..செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடவும்...புதிய முய்ற்சிகளை ,முதலீடுகளை தவிர்க்கவும்,கடன் வாங்குதலை முடிந்தளவு தவிர்க்கவும்.

ரிசபம் ;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.சேமிப்பு உயரும்,தங்கம் சேரும்.கடன் அடைபடும்.

கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.திருமண தடைகள் விலகும்.ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும்..வசீகரம் உண்டாகும்...5ஆம் பார்வையால் பாக்யத்தை பார்ப்பதால் குலதெய்வம் அருள் உண்டாகும்..குலதெய்வ கோயிலில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.தந்தையால் லாபம் கிடைக்கும்..நீண்ட நாள் அசைகள் நிறைவேறும்.லாபத்தை குரு பார்க்கும்போது நஷ்டம் உண்டாக வாய்ப்பே இல்லை.

திருப்பதி போய் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என திருப்பதி பெருமாளே உங்களை ஏதேனும் ரூபத்தில் திருப்பதி தரிசனம் காண வைப்பார்.

மிதுனம்;மிருகசிரீடம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களை சார்ந்த மிதுனம் ராசி நண்பர்களே...

இதுவரை உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தில் மறைந்து இருந்த குரு பகவான் இப்போது சுகஸ்தானத்திற்கு வந்திருக்கிறார்..சுகத்திற்காக செலவு வைக்கப்போகிறார்....மருத்துவ செலவு வைப்பாரா அல்லது வாகனம்,நிலம்,சொத்து வாங்க வைத்து சுப செலவாக வைப்பாரா என்பது திசாபுத்தி அடைப்படையில் மாறும் என்றாலும்...உங்க ராசிக்கும் கன்னி ராசிக்கும் ஒரே அதிபதி புதன் தான் என்பதால் நல்ல செலவையே வைப்பார்...

வாகனம் வாங்க யோசித்து கொண்டிருந்தவர்கள் வாகனம் வாங்குவார்கள் வீடு கட்டலாமா வேண்டாமா என குழம்பி கொண்டிருந்தவர்கள் தெளிவான முடிவுக்கு வந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு உண்டாகும் அதன் மூலம் அலைச்சல்,மன உளைச்சலை தவிர்க்க முடியாது இளைஞர்கள் வேறு ஊர்,நகரம்,மாநிலம் தொழிலுக்காக இடம் விட்டு இடம் மாறுவார்கள்

10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தொழிலில் நிரைய நல்ல மாறுதல்கள் உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும்.மதுரை மீனாட்சி வழிபாடு சிறப்பு.

கடகம் ;புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்களை சார்ந்த உங்களுக்கு இதுவரை இரண்டில் குரு பகவான் குரு பலமாக இருந்து வந்தார் .இப்போது ராசிக்கு மூன்றாவது வீட்டில் மறைகிறார்..இது நல்ல பலன் கொடுக்கும் ஸ்தானம் அல்ல.குரு மறைவது செல்வாக்கை குறைக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது..அதிக விரய செலவுகள் உண்டாக்கும்.பண முடக்கம் உண்டாகும் காலம் என்பதால் வருமானத்தை சிக்கனமாக செலவழிப்பது நல்லது.

பேச்சில் நிதானம் அவசியம்.தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நீங்கள் சில அசமயம் அதிகாரமாக பேசுவது உங்களை சுற்றி இருப்பவரை விலக செய்யும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.கடன் கொடுத்தாலும் சிக்கல் கடன் வாங்கினாலும் சிக்கல்.தொழிலில் முக்கிய முடிவு எடுக்கும்போது நன்கு யோசித்து செயல்படவும். மருத்துவ செலவு உண்டாகும் காலம் என்பதால் வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.தாய்க்கு மருத்துவ செலவு உண்டு..இட மாறுதல் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழியில் வர வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.தந்தையால் வருமானம் .

ராசிக்கு லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் விரய செலவுகள் இருந்தாலும் வருமானத்துக்கு தடையில்லை.ஏதேனும் ஒரு வழியில் வருமானம் வந்து சேரும்.திருச்செந்தூர் ஒரு முறை சென்று முருகனை வழிபட்டு வரவும்.

சிம்மம் ;மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரங்களை கொண்ட சிம்ம ராசியினருக்கு இதுவரை ஜென்மத்தில் குரு இருந்து படாத பாடு படுத்தினார் குரு ஜென்மத்தில் இருந்தபோது ராமர் வனவாசம் சென்றார்.அது மட்டும்தான் போகலை என புலம்பி வந்த உங்களுக்கு இனிய செய்தியாக குருபலம் கனிந்திருக்கிறது.

ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு வந்தால் பணம் பெருகும்.லாபம் குவியும்..வருமானம் பல மடங்காகும்..நல்லதெல்லாம் நடக்கும் கெட்டதெல்லாம் ஒழியும்...ஆசைப்பட்டது தானாக நடக்கும்.மதிப்பும்,மரியாதையும்,செல்வாக்கும் உயரும்.திருமண முயற்சிகள் கைகூடும்..தங்கம் சேரும்,.கடன்கள் அடையும்..பிரிந்தவர் ஒன்று சேர்வர். பதவி உயர்வு கிடைக்கும்.வீடு கட்டலாம்..வழக்கு சாதகமாக முடியும்.குழந்தை பாக்யம் உண்டாகும்.

ராசிக்கு 6ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன்கள் குறையும்.ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் தண்ட செலவுகள் வராது வட்டி கட்டும் நிலை இனி இருக்காது.அதிர்ஷ்டம் உண்டாகி, எதிர்பாராத வசூலாகாத பணம் வசூல் ஆகும்..பழனி முருகனை தரிசனம் செய்து வரவும்..

கன்னி ;உத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் குரு வருகிறார் ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே என அதிர்ச்சியாக வேண்டாம்..ஏழரை சனி முடிந்து விட்டது இந்த ஜென்ம குரு அதை விட பெருசா பாதிக்காது...ராசிக்கு ஜென்மத்தில் வந்து உட்காரும்போது தலையில் பாரம் இருப்பது போல அதிக சுமை உங்களை அழுத்தும்.பண நெருக்கடி,தொழில் நெருக்கடி,குடும்ப நெருக்கடி மூன்றும அதிக மன உளைச்சலை கொடுக்கும் காலம் என்பதால் ஜென்ம குரு பற்றி கெடுதலாக சொல்லப்பட்டிருக்கிறது...

ராசியில் குரு அமர்ந்தால் ராஜயோகம் என ஜோதிட விதி சொல்கிறது செல்வாக்கு உயர்ந்து அதன் மூலம் வரும் நெருக்கடி யாகவும் இருக்கலாம்...பெரிய பதவி கொடுத்து அதிக வேலைப்பளு கொடுப்பது போல இருக்கும்.வருமானமும் உண்டு. அதிக செலவினமும் உண்டு.குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும்..கோபம்,பிடிவாதம் விசயத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பகையை விலக்கலாம்..வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.புதிய முதலீடு செய்கையில் ஜாதகத்தை ஒரு முறை முழுமையாக ஜோதிடரிடம் ஆய்வு செய்த பின் முடிவு எடுக்கவும்..

ராசிக்கு 5,7,9ஆம் இடங்களை குரு பார்வை செய்வது நன்மையை வாரி வழங்கும் கடும் நெருக்கடிகள் ஏற்படாது அப்படி ஏற்படினும் பிப்ரவர் 2017 முதல் நான்கு மாதங்களுக்கு வக்ர குரு உங்கள் சோதனைகளை நிவர்த்தி செய்து வெற்றி தரும்..வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று வழிபட்டு வரவும்.

துலாம் ;சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரங்களை கொண்ட துலாம் ராசியினருக்கு இதுவரை லாபத்தில் இருந்து வந்த குரு ராசிக்கு 12ல் மறைகிறார்....துலாம் ராசிக்கு குரு கெட்டவர் அவர் மறைந்தால் நல்ல பலனையே கொடுப்பார் என சில நூல்கள் சொல்கின்றன...இருப்பினும் செல்வாக்கு,சொல்வாக்கு,பெரிய மனிதர்கள் ஆதரவு பெற்ற குரு மறைவது சுமாரான பலனையே கொடுக்க செய்யும் அதிக விரய செலவுகளை கொடுப்பார்.பாத சனி சில மருத்துவ செலவுகளை கொடுக்கும் வேளையில் அதற்கு குருவும் துணை புரிவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..முதலீடுகளை தவிர்க்க வேண்டும்..கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்க்க வேண்டும்.

வாகனத்தில் செல்கையில் எச்சரிக்கை தேவை உறவுகளிடம் கருத்து வேறுபாடு உண்டாக்கும்.. அதிக மனக்குழப்பம் காணப்படும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டை பார்ப்பதால் சொத்து பிரச்சினை தீரும்..தாய் வழி ஆதரவு உறவுகள் ஆதரவு கிடைக்கும்.

ராசிக்கு 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன்கள் அடைபடும்.வெளிநாடு முயற்சிகள் கைகூடும்..

ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.அது 2017 பிப்ரவரிக்கு மேல் அதிர்ஷ்டமான கலமாக இருக்கும்.

நாமக்கல் ஆஞ்சநேயரை சனிக்கிழமை நாளில் சென்று வழிபட்டு வரவும்.

விருச்சிகம்,தனுசு,மகரம் ,கும்பம்,மீனம் ராசியினருக்கான பலன்கள் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

உங்கள் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானது. உங்கள் ஜாதகத்தை பார்த்து திசாபுத்தி என்ன நடக்கிறது என பார்த்து அதற்கேற்றார்போல நடந்துகொண்டால் இன்னும் சிறப்பு.உங்கள் ஜாதக பலனை அறிய மெயில் செய்யவும். ஜோதிடர் நல்ல நேரம் சதீஷ்குமார் கணித்த சிறப்பு ஜாதக பலன் மெயில் மூலம் அனுப்பப்படும்..உங்கள் ஜாதகம் அனுப்பி 5 கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ 500.

தொடர்புக்கு sathishastro77@gmail.com2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017

குரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று  காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது...முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது..அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில் அமைவதால் கூடுதல் நன்மை..குருப்பெயர்ச்சி 2016-2017  எல்லோரும் நன்மைகள் வாரி வழங்கிட பிரார்த்திக்கிறேன்..
குரு முழுமையான சுப கிரகம்...குரு மஞ்சள் நிற ஒளியை அதிகம் பூமியில் செலுத்துகிறது....மனிதனுக்கு நுணுக்கமான சிந்தனை ஆற்றலை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது குரு கிரகத்தில் இருந்து வரும் மஞ்சல் நிறக்கதிர்களும்,சூரியனில் இருந்து வெளிப்படும் சில கதிர்வீச்சுகளும் இனைந்துதான் பூமியில் உயிர்களின் பிறப்பு நிகழ்கிறது..அது வளர்வதற்கான சக்தியை சந்திரனும்,சூரியனும் தருகிறார்கள்...மனித மூளையின் நுட்பமான அறிவாற்றல் செயல்பட குரு முக்கிய காரணம்..குரு வானில் நல்ல நிலையில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் ஆன்மீகவாதிகளாகவும்,மகான்களாகவும்,அதிமேதாவிகளாகவும் ,புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள்..

குருவின் அதிக கதிர்வீச்சு பெறுவது மஞ்சள்...அதை நாம் புனிதமான கிழங்காக பார்க்கிறோம்..பெண்களுக்கு குருவின் சக்தி கிடைக்க வேண்டும் நல்ல தெளிந்த அறிவை பெற வெண்டும் என மஞ்சளை அதிகம் உபயோகிக்கிறோம்...குரு அருள் கிடைக்கும்,இஷ்டதெய்வ அருளாசி கிடைக்க மஞ்சள் நிறத்தை அதிகம் உபயோகிக்றோம்..

குரு ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் நல்ல மேன்மையான குழந்தைகள் கிடைப்பர்...குழந்தைகள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவர் முரட்டுத்தனம் இல்லாமல் இரக்க குணத்துடன் இருப்பர்.எல்லோருக்கும் உபகாரமாக இருப்பர்.

குரு வின் மனிதர்களுக்கு தரும் முக்கியமான குணம் அன்பு,அமைதி,இரக்கக்குணம்,மனிதாபிமானம்,நல் சிந்தனை ,நுணுக்கமான பார்வை ,நல்ல குழந்தைகள்,சமூகத்தில் அந்தஸ்து ஆகியவை ஆகும்...நம்ம ராசிக்கு குரு வானில் எங்கு இருக்கிறாரோ அப்போதெல்லாம் நமக்கு மேற்க்கண்ட பலன்கள் கிடைக்கும் என்றும் நம்பலாம்..பிறப்பு ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலும் கோட்சாரத்தில் குரு ராசிக்கு நல்ல நிலையில் வரும்போது நிச்சயம் நல்ல பலனை தருவார் அதனால்தான் எல்லோரும் ஆர்வமாக குருப்பெயர்ச்சி பலன்களை எதிர்பார்க்கின்றனர்,.

குரு பகவான் கன்னி ராசிக்கு புதன் வீட்டிற்கு செல்வதால் கல்வி ,வியாபாரம்,கலைத்துறையில் இருப்போருக்கு இது பொன்னான காலம் என்றே சொல்ல வேண்டும்....கல்வித்துறையில் நிறைய நல்ல மாற்றங்கள் உண்டாகும்..கலைத்துறையில்  உலகம் வியக்கும் வண்ணம் புதிய கலைஞர்கள் தோன்றுவார்கள்...பாடத்திட்டங்களில் எல்லோரும் எதிர்பார்க்கும் மாறுதல்கள் அரசால் மேற்கொள்ளப்படும்..ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி செல்வை ஏற்பதும்,அவர்களுக்கு கல்விக்கு உதவி செய்வதும் மாபெரும் புண்ணியமாக பலன்கள் தரும்.

கன்னி ராசிக்கு மாறும் குரு வால் அதிகம் ஆதாயம் அடையும் ராசியினர் யார்..? 

குருபலம் பெறும் ராசியினர் யார்..?


ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம்


 ரிசபம் ராசியினருக்கு ராசிக்கு ஐந்தாம் ராசிக்கு குரு வருகிறார்...இது குருபலமாகும்...-எங்கும் எதிலும் வெற்றி,நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்..

சிம்மம் ராசியினருக்கு தன குடும்ப ஸ்தானத்தில் குரு வருகிறார்...கடன் பிரச்சினைகள் தீர்க்கும் வருமானம் அதிகரிக்கும்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபஸ்தானத்தில் குரு வருகிறார் லாபம் அதிகரிக்கும் வருமானம் உயரும்,.கடன்கள் அடைபடும்...தொழில் சிக்கல் தீரும்.

மகரம் ராசியினருக்கு பாக்யஸ்தானத்தில் குரு வருகிறார் இதுவரை அமையாத பாக்யம் ஒன்று அமையும்...கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று கிடைக்கும்...தெய்வ அருள் உண்டாகும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிந்த பின்னர் வரும் நல்ல காலம்.7ல் வரும் குரு பகவான் தொழில் சிக்கல்களை நீக்கி உயர்வை கொடுப்பார்..

மேற்க்கண்ட ராசியினர் தொழில் தொடங்க தடையில்லை..ஜாதகத்தில் திசாபுத்தி எப்படி இருக்கிரது என பார்த்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது..திருமணம் ஆகாத மெற்க்கண்ட ராசியினருக்கு திருமண முயற்சிகள் கைகூடி வரும்..பதிவு பெரிதாக போய்க்கொண்டிருப்பதால் இன்னொரு பதிவில் இன்னும் விளக்கமாக எழுதுகிறேன் இது குருப்பெயர்ச்சிக்கான முன்னுரை என எடுத்துக்கொள்ளுங்கள்.

இதன் தொடர்ச்சி கீழே உள்ள லிங்கில் உள்ளது..

மேசம் முதல் துலாம் ராசி வரை விரிவான பலன்கள்

மற்ற ராசியினர் அனைவருக்கும் விரிவான பலன்கள் விரைவில் எழுதுகிறேன்...அதனால் நமக்கு அதிக கெடுபலன் என எந்த ராசியினரும் நினைக்க வேண்டாம்...தனித்தனி ராசிபலன்கள் விரைவில் வெளியாகும்..குரு அதிலும் சில நன்மைகளை குருபலம் இல்லாதவருக்கு கொடுப்பார் அதன் சூட்சுமங்களை விளக்கி எழுதுகிறேன்...

ஆடி அமாவாசை ஆகஸ்ட் 2ஆம் நாள் வருகிறது..அன்றே குருப்பெயர்ச்சி அன்றைய நாள் வழக்கம்போல ஆதரவற்ற குழந்தைகள்,முதியோர்களுக்கு அன்னதானம் ,மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குகிறோம்..வழக்கம் போல இந்தாண்டும் உங்கள் ஆதரவை வழங்கிட நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...மெயில் அனுப்புங்கள் அல்லது என் செல்லில் தொடர்பு கொள்ளுங்கள்.நன்றி..

கண் திருஷ்டியை விரட்டக்கூடிய,செல்வவளம் தரும் மூலிகை சாம்பிராணி புதிதாக தயாரிக்கப்பட்டு நண்பர்களுக்கு அனுப்பி வருகிறேன்..தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்...


Wednesday, 13 July 2016

ஆடி மாசம் என்ன விசேஷம்..? இதுவரை அறியப்படாத தகவல்கள்

 வரும் சனிக்கிழமை ஆடி மாசம் பிறக்குது...ஆடி 1 தலையாடி என சொல்வாங்க...ஆடி மாசம் சூரியன் கடகம் ராசியில் நிற்கும்...அது சந்திரனின் ராசி...தாயும் தந்தையும் ஒண்ணா இருப்பது போல...ஆனாலும் சந்திரன் நீர் கிரகம்,மென்மையான கிரகம் ஆச்சே..சூரியனின் வெப்பம் தாங்குமா...தண்ணீருக்குள் நெருப்பை போட்டால் கொதிக்குமே...


ஆடி மாசத்தில் தொற்று நோய்கள் நிறைய உருவாகும்...சின்ன பூச்சிகள் ,எறும்புகள் தொல்லை அதிகம் காணப்படும்..பூமிக்குள் இருக்க முடியாமலோ என்னவோ.நுண் கிருமிகள் காற்றில் அதிகம் பரவும்.அதனால் அம்மன் அவதாரம் எடுக்க வேண்டிய காலமாகிறது....

அம்மனுக்கு வேப்பிலை சாற்றி ,மஞ்சளால் குளிப்பாட்டி பூஜை செய்கிறோம்..இவையெல்லாம் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகள் என அறியவும்., அம்மனை வழிபட உகந்த மாதம் ஆடி மாதம்.

 ஒரே நாளில் 3 விசே‌ஷங்கள்:

ஆகஸ்டு 2–ந்தேதி
ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி
இந்த வருடம் ஆகஸ்டு 2–ந்தேதி அன்று ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி போன்ற முக்கிய 3 விசேஷங்களும் சேர்ந்து வருகிறது.

ஓவ்வொரு மாதமும் அமாவாசை வருவது இயல்பு. இதேசமயம் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையை சிறப்பாக போற்றுகிறார்கள்.
இந்த நாளில் சிவலாயங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சதுரகிரிமலை, ராமேசுவரம், அழகர் கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் குவிவார்கள். மேலும் மறைந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்பணம் செய்யக் கூடிய நாளாகவும் ஆடி அமாவாசை திகழ்கிறது.

ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசே‌ஷத்திலும் விசே‌ஷமாகும். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிக்கு ஏற்ப இந்த நன்நாளில் கிராமங்களில் பெரும்பாலோனோர் தங்களது வீடுகள் முன்பு உள்ள காலி இடங்களில் விதைபோட்டு (பயிர்குழிஅமைத்து) வீட்டு தோட்டம் போடுவார்கள். மேலும் விவசாயத்திற்கு உகந்த நாளாகவும் போற்றப்படுகிறது.

இதே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த கள்ளழகருக்கு தீர்த்த உற்சவம் நடைபெறுவதும் தனி சிறப்பு. இதோடு சாமியாடிகள் மற்றும் பக்தர்கள் அழகர்கோவிலில் நூபுரகங்கையில் தீர்த்தமாடி வீடுகளுக்கு புனித தீர்த்தம் எடுத்து செல்வார்கள்.

 --------------------------------------------
 
 நம் உடல் செல்கள் சிதையாமல் பாதுகாப்புடன் இருக்க ,ஆடி மாதத்தில் சீதோஸ்ண நிலை மாறுவதால் ,நெஞ்சுசளி ,காய்ச்சல் போன்ற அவதிகளில் இருந்து தப்பிக்க ஒரு வழி...

காபி,டீ குடிப்பதற்கு பதிலாக இதை பயன்படுத்தவும்...

கொத்தமல்லி யை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.காய்ந்த இஞ்சியை சுக்கு தோலை நீக்கி விட்டு தட்டி பொடியாக்கிக்கொள்ளவும்...பனை வெல்லம் வாங்கி வைத்துக்கொள்ளவும்..மூண்றையும் தன்னீரில் போட்டு கொதிக்க வைத்து அதை காலை மாலை அருந்தவும்..வாசனைக்காக ஏலக்காய் சேர்க்கலாம்...இவற்றை பொடியாக்கி வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்..

காபி,டீ குடிக்கும்போது நல்லாருக்கும்.ஆனால் விரைவில் நரம்புகள் தளர்ந்து விடும்....செல்கள் சிதையும் .செல்கள் சிதைந்தால் முதுமை தோற்றம் விரைவில் வந்து விடும்..

பால் சேர்க்காமல் குடிப்பது நல்லது...வர சுக்குமல்லி காபி இதுதான்...

-நல்ல நேரம் சதீஷ்குமார்

Saturday, 11 June 2016

தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்

காலையில் நீங்கள் குளித்துவிட்டு, வழிபாடு செய்யும்போது இஷ்ட தெய்வம் எல்லாவற்றையும் நினைத்து வழிபடுவீங்க...அந்த சமயம் இவர்களையும் நினைச்சுக்கோங்க..இவர்களின் ஆன்மா ஆற்றல், கடல் அளவு பரந்து விரிந்தது ...இவர்களை நினைப்பதன்மூலம் அவர்கள் உங்களுக்கு உடனடியாக உதவுவார்கள்...இவர்கள் தெய்வங்களா என ஆச்சர்யப்பட வேண்டாம் .இவர்களும் தெய்வம்தான்...காக்கும் கடவுள்தான்..இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டாலும்,ஆன்மீகத்துக்கு செய்த தொண்டாலும் பல்லாயிரம் வாட்ஸ் சக்தி கொண்டவர்கள்.
ஓம் மகான் திருவள்ளுவர்,மகான் அவ்வையார்,மகான் அகத்தியர்,மகான் சதாசிவ பிரம்மேந்திராள்,மகான் அருணகிரிநாதர்,மகான் திருமூலர்,மகான் அருட்பிரகாச வள்ளலார்,மகான் கருவூரார்,மகான் சுப்ரமணியர்,மகான் ஸ்ரீராமானுஜர்,மகான் ஸ்ரீராகவேந்திரர்,மகான் சீரடி சாய்பாபா ஓம் போற்றி போற்றி..!!

 தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்;

மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் ..ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்...மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,கடக லக்னத்துக்கு பழனி முருகன்,


சிம்ம லக்னத்துக்கு கழுகு படம் வைக்கலாம் ...கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம் வைக்கலாம்..துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் ...அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம் வைக்கலாம் ..விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம் வைக்கலாம் ..அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம் ..

தனுசு லக்னத்தார் ....குருவாயூரப்பன் படம் வைக்கலாம்..பாலாம்பிகா படம் வைக்கலாம் ..கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம் ..

மகரம் லக்னத்தார்,நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம் ..கும்பம் லக்னத்தார் ,ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம் வைக்கலாம்...மீனம் லக்னத்தார் ,திருப்பதி தங்ககோபுரம் படம் வைக்கலாம் ஆனந்த நிலையம் படம்...

.10 ஆம் இடத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிரதோ அதர்குறிய சின்னத்தை பயன்படுத்தினால் வியாபார வசியம் ,தொழில் வசியம் உண்டாகும்.

----------------------------------------------


மூலிகை சாம்பிராணி இப்போது ஸ்டாக் இல்லை..நேற்று ஒரு நண்பர் 10 பாக்கெட்களை மொத்தமாக வாங்கிக்கொண்டார்...ரெகுலராக வாங்கும் நண்பர்கள் அதிகரிக்கின்றனர்.வாங்கியவர்கள் மீண்டும் வாங்கினால்தான் என் பொருள் தரமாக இருக்கிறது என்று அர்த்தம்.எனவே இன்னும் சிறப்பாக அதை தயாரிக்க சில மூலிகைகள் வந்து சேர காத்திருக்கிறேன்...

சாம்பிராணி புகை வெள்ளி தோறும் நம் வீடுகளில் மணக்க வேண்டும்..அதுவே நம் தரித்திரத்தை போக்கும்.கண் திருஷ்டிகளை போக்கும்..கிருமிகளை அழிக்கும்.கண் திருஷ்டியை போக்கும்..நம்மை நோய் அண்டாமல் பாதுகாக்கும்.அதில் இன்னும் சில அரிய மூலிகைகளை கலந்து எரித்தால் நம் வீடு சுபிட்சமாகும். இன்னும் ஒரு வாரத்தில் இன்னும் தரமாக தயாரித்து விடுவோம்.தேவைப்படுவோர் செல் நம்பர் 9443499003 அழைக்கலாம். மேலும் மேலே இருக்கும் மூலிகை சாம்பிராணி விளம்பரத்தை க்ளிக் செய்தாலும் எப்படி பெறுவது எனும் வழிமுறை சொல்லப்பட்டிருக்கிறது..!!

Sunday, 15 May 2016

சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில் Kidney Stone (Nephrolithiasis) இயற்கை வைத்தியம்

சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில் Kidney Stone (Nephrolithiasis) இயற்கை வைத்தியம்
சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நாட்டு வைத்தியம்!
Solution at a cost of Rs 10 for Kidney stone (Nephrolithiasis)


சிறுநீரகக்கல்லை குணமாக்குவது குறித்து ஒரு நண்பர் இணையத்தில் எழுதியிருந்த தகவல் அப்படியே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்டசிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி ரூ.10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.


நான்கு வருடங்களுக்கு முன், எனக்கு இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.மருத்துவச் செலவாக ரூ.30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.


சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். 
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதளத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிறுநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.வனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்

.வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):


நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ.10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், 

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிட,நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருபதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்


. தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதளத்தில் அலைந்தபோது படித்ததில் சில :


துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.


தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.


இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.


வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.


டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.


டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்