Tuesday, 12 January 2016

2016 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( துலாம் முதல் மீனம் வரை)

ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலை 6 மணிக்கு சூரிய ய்தயத்தின்போதுதான் பிறக்கும் தமிழர்கள் சூரிய உத்யத்தை கொண்டே நாட்களை கணக்கிட்டனர்.இதுதான் சரியான முறை என உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளலாம்...இப்போதெல்லாம் தமிழர்களும் தமிழர் மரபை மீறி ஆங்கிலப்புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர் ஆகம விதிக்கு முரண்பாடாக இருப்பினும் மக்கள் விருப்பத்தை தடுக்க இயலாதே..புத்தாண்டு பிறக்கும் வேளை காலநிலையை கொண்டு பலன்கள் கணிக்கப்பட்டு எழுதியிருக்கிறேன்.

மேசம் முதல் கன்னி வரையிலான ராசிபலன் படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

துலாம் ;

உங்கள் ராசிக்கு லாபத்தில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறக்கிறது உங்களுக்கு நிறைய லாபத்தையும் சந்தோசத்தையும் அள்ளித்தரும் ஆண்டாக இந்த வருடம் பிறந்திருக்கிறது.பல வழிகளிலும் பணம் வந்து சேரும் உர்சாகம் அதிகரிக்கும் நினைத்தவை தடங்கலின்றி நடைபெறும்.ராசிக்கு 11ல் குருச்சந்திர யோகமும் சேர்ந்திருப்பதால் இறையருள் துணை நிற்கும், செல்வாக்கு அதிகரிக்கும்.மூத்த சகோதரனால் கடந்த வருடம் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் ,சுபகாரியம் நடைபெறும்.கடன்கள் அடைபடும்...குருபலம் இருப்பதால் சுபகாரியம் நடந்தாக வேண்டி இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தை,மாசியில் நல்லது நடக்கும்...

பாத சனி நடந்துகொண்டிருந்தாலும் அதன் மூலம் அலைச்சல் உண்டானாலும் இன்னும் 13 மாதங்களில் சனி விலகி விடும் அதன் பின் எந்த பாதிப்பும் சனியால் இருக்காது.தொழிலில் இடமாறுதல்,தொல்லைகள் மேல் அதிகாரிகளால் சங்கடம்,சொந்த தொழிலில் மந்தம் என போன வருடம் தடுமாற்றம் இருந்தது இந்த வருடம் மகிழ்ச்சியாக எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும்.ராகு கேது பெயர்ச்சியும் உங்க ராசிக்கு யோகமாகவே இருக்கு.அதனால் வெற்றிகள் உங்களை வந்து சேரும்..ஜூலை மாதத்துக்கு மேல் குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமில்லை எனவே வரவு செலவில் எச்சரிக்கை தேவை...கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பனமுடக்கம் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால் செலவுகளில் இப்போதே சிக்கனம் தேவை.ஏழரை சனி இன்னும் முடியாததால் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயில் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..

விருச்சிகம்;
அன்புக்கும் ,பாசத்துக்கும் அடையாளமாக திகழும் விருச்சிக ராசி நண்பர்களே..ஏழரை சனியை கண்டு தினம் பயந்து துரும்பா இளைச்சிருப்பீங்க...சனி ஜென்மத்தில் இருக்கும் காலத்தில் சவாலான நேரத்தில்தான் புத்தாண்டு பிறந்திருக்கு இந்த வருடம் நிறைய சவால்கள் சோதனைகள் இருப்பினும் இந்த வருடம் தாண்டிட்டா கடலை தாண்டின மாதிரிதான்..10ல் சந்திரன் இருக்கும்போது கர்மத்தில் புத்தாண்டு பிறந்ததால் நெருங்கிய உறவினர், வயதானவர்களை இழக்க நேரலாம்... தொழிலில் பல சிக்கல்கள் ஏற்கனவே தோன்றி விட்டன..அது சம்பந்தமான குழப்பம்,கவலை இருக்கும்.வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ,வாக்குவாதங்களை குறைத்துக்கொள்ளுங்கள் அதிகப்படியான வீண் கற்பனைகள் மன உளைச்சலைதான் கொடுக்கும் குழந்தைகள் நலனை கவனத்தில் கொள்ளவும்..எப்போதும் குழந்தை,வாழ்க்கை துணை,பனம் சம்பந்தமான சிந்தனையிலியே இருப்பீர்கள்..

சந்திரன் பத்தில் இருந்து வரும் ஜூலை மாதம் லாபத்துக்கு வருவார் அதுமுதல் உங்கள் துன்பங்கள் எல்லாம் விலகும். நன்மைகள் பிறக்கும் கஷ்டங்கள் விலகும். கடன் சுமை குறையும் .தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும் .அதிர்ஷ்டங்கள் உண்டாகும். திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் நடக்க குருபலம் வருகிறது. அதன்மூலம் பனபலம் வருகிறது..கவலை வேண்டாம்..சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து நவகிரகங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு நலம் காணுங்கள்


 தனுசு;

பிறருக்கு உதவுவதில் அதிக விருப்பம் உடையவர்.அன்பு,அமைதி,மனிதாபிமானம், இரக்க சுபாவம் கடவுள் பக்தி கொண்ட நீங்கள் நண்பர்களுக்கு உதவுவதிலும் ஆன்மீகம்,கோயில் திருப்பணிகள் செய்வதிலும் ஆர்வம் உடையவர்..அதே சமயம் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என உல்லாசமாக இருப்பதிலும் உங்களை மிஞ்ச ஆள் இல்லை..குருவின் ராசிக்காரர்கள் என்பதால் வாக்குசுத்தம்,மன சுத்தம்,உடையவர் தன்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

உங்க ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் ராசிக்கு லாபத்தில் இருக்கும்போது புத்தாண்டு பிறந்துள்ளதால் ஜனவரியில் புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர்கள் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள் ...இடம்,நிலம்,சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக முடியும் கடன்கள் அடைபடும் வருமானம் பெருகும்

எவ்வ்ளவு வருமானம் வந்தாலும் கூடவே மருத்துவ செலவும் வந்துவிடுகிறதே என நீங்கள் புலம்ப காரணம் 10 ல் இருக்கும் குருதான்.தொழில் ஸ்தானத்தில் இவர் அமர்ந்து தொழில் செய்யும் இடத்தில் அலைச்சல்களையும் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகளையும் உண்டாக்குகிறார்...சனி ராசிக்கு 12ல் இருப்பதால் பனம் வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை..சேமிப்புக்கு வழியே இல்லை எனும் நிலைதான் ..இருக்கட்டும் ஜூலை மாதம் குரு உங்கள் சோதனைகளை விலக்குவார் ..குருபெயர்ச்சிக்கு பின் நிம்மதியும் சந்தோசமும் உண்டாகும்.

திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..

மகரம்;

கடுமையான உழைப்பும் தளராத மனமும் கொண்டிருக்கும் மகரம் ராசியினருக்கு சனியின் பாதிப்பு இல்லாத புத்தாண்டு பிறந்திருக்கிறது...ராசிக்கு எட்டில் சந்திரன் நின்று பிறந்திருப்பதால் சுப செலவுகள் அதிகமாகும்...குருபலம் இல்லாத காலம் என்பதால் பணவருமானம் பற்றக்குறை மருத்துவ செலவுகள் அதிகமாக காணப்படுகிறது அதிக அலைச்சல் காரிய த்டை சோர்வு காணப்படும்..குடும்பத்தில் வீண் வாக்குவதம் செய்ய வேண்டாம்..

கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை உடன் பிறந்தோரால் தொல்லைகள் சங்கடங்கள் உண்டாகும் அனுசரித்து ,வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் நல்லது மூத்த சகோதர வழியில் கவலைகள் உண்டாகும்.தொழில்மந்த நிலை ,கடன் பிரச்சினைகள் ஜூலை மாதத்துக்கு பின் சீரடையும்.குருபலம் இல்லாவிட்டாலும் அதிசார குரு கைகொடுப்பதால் சுபகாரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்...வருமானம் அதிகரிக்கும் மார்ச் மாதம் வரை சிக்கல் இன்றி வருமானம் உண்டாக்கும்.அதிக பயணம்,அதிக அலைச்சல் காணப்படுவதால் இரவு நேர பயணம் தவிர்க்கவும்..பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை சனி செவ்வாய் சேர்க்கை இருப்பதால் தாயாருக்கு மருத்துவ செலவு,சொத்து சம்பந்தமான குழப்பம் உண்டாகி விலகும்...சிறுகாயங்கள்,அடுத்தவர் பிரச்சினையால் தலையிட்டதால் வரும் பிரச்சினைகளை தவிர்க்க முருகனை செவ்வாய் தோறும் வழிபட்டு வரவும்.

கும்பம்; 

கும்பம் ராசிக்காரர்கள் துணையிருந்தால் கும்பாபிசேகமே முடித்துவிடலாம்...நாட்டுப்பற்று,ஊர்ப்பற்று,குலதெய்வ பற்று அதிகம் உடையவர்கள்,மக்களுக்கு தொண்டு செய்து புகழ் பெற்றவர்கள் ,பெரும் கோயில்களுக்கு உழவாரப்பணி செய்து ஈசன் அருள் பெற்ற பலர் இந்த ராசியில் பிறந்தவர்களே...கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரர்கள் ..பிறருக்கு உதவுவதில் அலாதி இன்பம் காணுபவர்கள்....தாய்ப்பாசம் அதிகம் கொண்டவர்கள்...

ராசிக்கு 10ல் இந்த வருடம் முழுக்க சனி இருக்கிறார்..தொழில்காரகன் ,லக்னாதிபதி சனி 10ல் இருப்பது தந்தையால் அனுகூலம்,தொழிலில் அபிவிருத்தி,உண்டாக்கும்..நெருங்கிய உறவுகள் சிலரை இழக்கும் நிலையும் உண்டாக்கலாம்...முதியவர்களாக இருப்பதால் எதிர்பார்த்த கர்ம செலவாகத்தான் இருக்கும்...குரு ராசிக்கு மறைவதால் அலைச்சல் அதிக செலவு ,காணப்படும் மருத்துவ செலவுகள் துரத்தினாலும் சுப செலவுகளை இழுத்துப்போட்டு செய்தால் கெட்ட செலவுகள் அண்டாது..உறவுகளின் உண்மை முகம் தெரிந்து கொள்ளுதல் இந்த காலத்தில் வாழ்க்கை பாடமாக அமையும்...பண நெருக்கடி இருக்க காரணம் அஷ்டமத்தில் குரு மறைவதால்தான்...வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.

தொட்ட காரியம் தடங்கலாக இருக்கிறதே என கவலை வேண்டாம் குரு வருட மத்தியில் உங்களுக்கு சாதகமாக வரப்போவதால் இக்காலத்தில் பொறுமையாக செயல்படவும் நல்லதே நடக்கும்...7ல் ராகு வந்திருப்பதால் வாழ்க்கை துணையுடன் சின்ன வாக்குவாதம் செய்தாலும் அது பெரிதாகிவிடக்கூடும் எனவே அனுசரித்து பொறுமையுடன் நடந்துகொள்ளுதல் நல்லது...

திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..

மீனம்;

கழுவுற மீன்ல நழுவுற மீனா பல மோசமான சூழல்களில் இருந்து இயற்கையாகவே தப்பிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு...குருவின் ராசி என்பதால் பலருக்கு வழிகாட்டியாக ,ஏணியாக இருந்து அவர்கள் முன்னேற்றத்தில் பங்கு பெறுவீர்கள்..பலர் நம்மால பிழைச்சாங்க நாம இன்னும் இப்படியே இருக்கோமே என்ற கவலையும் அவ்வப்போது வந்து போகும்...உபய லக்னம் என்பதால் ,இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் பன நெருக்கடி அடிக்கடி வந்து போகும்...சேமிப்பு கொஞ்சம் உண்டானால் உடனே பெரிய செலவு வந்து பயமுறுத்தும்...பேச்சில் நிதனம் எப்போதும் தேவை ராசிக்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் அதிகாரமான பேச்சு,சில சமயம் பிறரை வெறுக்க வைக்கும் பகையை உண்டாக்கும்....சகோதரர்களால் ஆதாயம் உண்டு...அறிவாற்றலில் சிறந்தவர்கள் நீங்கள் உங்களுக்கு பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் என்பதால் உங்கள் பேச்சு பிறரை மயக்கும்...அரசியலில் ஈடுபாடு உடையவர் அதன்மூலம் விரயமும் அதிகம்..பங்கு சந்தை ,பைனான்ஸ் துறையில் இருப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் அதிகம்..கவனமுடன் செயல்பட்டால் நல்லது ...ராசிக்கு 6ல் குரு மறைந்திருப்பதால் கடன் நெருக்கடி ,அலைச்சல் உண்டாக்கும் காலமாக இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன...கொடுத்த பனம் திரும்பி வருதல் கடினம்..யாருக்கேனும் ஜாமீன் சிபாரிசு செய்தல் சிக்கிக்கொள்ள நேரும்...

ராசிக்கு 9ல் குரு இருப்பது தந்தை வழியில் சங்கடம்,விரயங்களை உண்டாக்கினாலும் குலதெய்வ ஆசி இருக்கிறது...தைப்பூசம் தை அமாவாசையில் குலதெய்வ வழிபாடு சிறப்பு பங்காளி வகையில் பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதால் நெருக்கம் வேண்டாம் வாக்குவாதம் தவிர்க்கவும் தொழில் மந்தமாக இருப்பினும் வருட மத்தியில் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையும்..ராகு ராசிக்கு 6ல் இருப்பதால் எதிரிகளையும்,கடன் பிரச்சினைகளையும்,தொழில் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம்...நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ராகுவின் தயவால் வெற்றி அடையும்..

 திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..
No comments: