Tuesday, 2 February 2016

மேசம்,விருச்சிகம்,துலாம்,தனுசு ராசியினர் சனியின் பாதிப்பிலிருந்து விலக பரிகாரம்

       மேசம்,விருச்சிகம்,துலாம்,தனுசு ராசியினர் சனியின் பாதிப்பிலிருந்து விலக பரிகாரம்
     
பல விதக் கொடுமைகளுக்கும் ,துன்பங்களுக்கும் அதிபதி சனி என்று நினைக்க வேண்டாம். சனி கெடுதலை மட்டும் செய்வதில்லை.சாதனையாளர்களாகவும் ஆக்குவார்.சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக வாழ, பிறர்க்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார்கள். இவர் ஒரு நியாயமான கிரகம். மனிதர்களின் பிறவிப்பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே.
            

             ஜாதகங்களில் சனி

    சனிபகவான் துலாராசியில் உச்சமாகின்றார். மகரம், கும்பம், இவரது ஆட்சி வீடாகும். இவர் பூசம், அனு~ம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆவார். நீண்டகால வாழ்வுக்கு மரணத்திற்கும் காரகன் சனி ஆவார். சனி பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெற வாய்ப்பு உண்டு. உழைப்பவர்களையும், சுயநலமற்ற  தியாகிகளையும், மாபெரும் தேசத்தொண்டர்களையும், சமூக நல ஊழியர்களையும் உருவாக்கும் ஆற்றல் சனிக்கு உண்டு. 

மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும் பொருட்களை வெளிக் கொண்டு வரும் தகுதியையும் (புதையல் யோகம்) அந்தத் துறையில் அறிவையும் அளிப்பவன் சனி. ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால் அந்த ஜாதகர் ஒரு நாட்டுக்குத் தலைவராக வாய்ப்பு உண்டு. ஒரு நகரத்திற்காகவது தலைமை தாங்கும் தகுதி பெறுவார். புலம் பெற்ற சனி ஒருவருக்கு உலகியல் அறிவை வழங்குவான். வெளிநாட்டு மொழிகளில் பாண்டித்தியம் உண்டாகச் செய்வான் விஞ்ஞானத்தில் தேர்ச்சி உண்டாக்குவான்;. நீண்ட காலம் வாழ வைப்பான். நீண்டகால வாழ்வுக்கு, மரணத்திற்கும் காரகன் சனி ஆவார். இயந்திரங்களை ஈடுபடுத்துவான். 

பெரிய இயந்திரச் சாலைகளை இயக்குவோரின் ஜாதகங்களில் இந்தச் சனியின் பலம் நிறைந்திருக்கவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஜாதகத்தில் உச்சமாகவோ ஆட்சியாகவோ இருந்து சுபக்கிரக சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று சுப ஆதிபத்தியம் அடைந்து சுப வீடுகளில் இருந்தால் அப்படிப்பட்ட ஜாதகர்களை இமாலய உச்சி என்பார்களே அந்த அளவுக்கு உயர்த்தி விடுவான் சனி. இவனை யாரும் தவறாக எடைப்போட்டு விட வேண்டாம். சனி ஆதிக்கம் பெற்ற எவரும் யாருக்கும் பயப்படாதவர்கள். எவரையும் நடுங்க வைக்கக்கூடிய ராஜதந்திரம் கொண்டவர்கள். மற்றவர்கள் தன்னை மதித்தால் மதிப்பர். இல்லையேல் அவர்களை மறப்பர். 

உண்மையை பேசக்கூடியவர்கள், பொய் பேசத் தெரியாதவர்கள்.  பொய் நலனுக்காக பாடுபடுவார்கள். இந்த சனி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாயால் எதையும் பேசுவதைவிட செயலில் காட்டக்கூடியவர்கள். இவர்களுக்கு என்று தனிபாதை உண்டு. அப்பாதையில் செல்வர். மேலும் சனி ஆதிக்கம் பெற்றவ்ர்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்யும் இடத்தில் இருந்து கொண்டு தவறு செய்பவர்களின் செயல்களை பகிரங்கமாக எதிர்த்து மக்கள் மத்தியில் தலைகுனிய செய்து விடுவார்கள். சனிக்கு என்று ஒரு சக்தி உண்டு. சனியின் ஆதிக்கம் ஒருவருக்கு வல்லமையாக இருந்தால் அவரை எதிர்க்க அனைவரும். அஞ்சுவர். 

      சனி சரியில்லாத ஜாதகங்கள்

     வறுமை, கலகம், நோய், அவமரியாதை இவற்றையெல்லாம் ஒருவர் அடைவதற்கு இந்தச் சனியின் சுபலமற்ற நிலை தான் காரணம் ஆகும். கொடிய மனத்தோன், கல்நெஞ்சன் என்றெல்லாம் கூறப்படும். சனி சாதாரணமாக 2, 7, 8இடங்களில் இருப்பதும்,நீமாக இருப்பதும்,  உச்சமாக இருந்து வக்ரமாகப் போயிருப்பதும்;, பாவக்கிரகங்களுடன் சேர்ந்து இருப்பதும், கோச்சார முறையில் ஏழரைச்சனி, கண்டக சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச்சனி, ஆகியவற்றின் பிடியில் சிக்கி இன்னலுற்றோர் ஏராளம். விபத்துக்களால் இடதுகாலில் அடிபடும். இடது காலில் அதிக வலி ஏற்படும் இரண்டு கால்களின் மூட்டுகளில் துன்பம் வரும்.

 வயிற்றில் கிருமி சம்பந்தப்பட்ட நோய் வரும். அமீபியா, நோய் தாக்கும் இரத்தத்தில் அணுக்களால் தொல்லைகள், மூச்சுவிடச்சிரமப்படுதல்,  கண்சம்பந்தப்பட்ட நோய்கள் காரணமில்;லாமல் நோய்கள் தோன்றி மறைதல் ஏற்படும். கைப்பொருள்கள் திருடு போகும்.

பெரிய கம்பெனி நடத்துபவர்களுக்கு வேலையாட்களால் தொல்லைகள் ஏற்படுவது. கம்பெனி பொருட்கள் களவு போவது. பாம்புகள் விஷப்பூச்சிகள் வசிக்கின்ற இடத்தில் வாழ்வது, நெல், கரும்பு, பூமியில் நஷ்டம் வருவது, விவசாயத்தினால் நஷ்டம் உண்டாகுவது. 
கடல் பொருள்களால் மீன், இறால், உப்பு பொருள்களால் நஷ்டம் அடைவது அரசாங்க அதிகாரிகளுடன் நேரிடையாக மோதல் உண்டாவது. உடன் பிறந்தவர்களால் தொல்லை, கறுப்பாக இருக்கக்கூடிய பெண்களால் துன்பம்;. மேலும் அடிமைத் தொழில், அடிக்கடி சிறைபடுதல், வெட்டிபேச்சு, மயக்கமான நிலை, மயக்கபோஜனம், சித்தபிரமை, அவயக்குறைவு, இரத்த கொதிப்பு (லோ பிரசர்) போன்றவற்றிற்கு எல்லாம் சனி சரியில்லாததே காரணமாகும். -

            சனியின் ஆற்றல் பெற

     இவர் ஒரு நியாயமான கிரகம். நாம் நியாயமாக வாழ்ந்தால் இவரின் கருணையை பெறலாம். சனி தோசம் உள்ளவர்கள் சனிஸ்வர பகவான் கோயில் கொண்டுள்ள திருநள்ளாறு சென்று எண்ணை ஸ்தானம் செய்து பிறகு சனீஸ்வரபகவானை வணங்கி வரலாம். சனி பகவானுக்கு உரிய நாளான சனிக்கிழமை அன்று நீலம் அல்லது கருநீலம் அல்லது கறுப்பு வஸ்திரம் அணிந்து நல்லெண்ணெய் தீபமிட்டு (எள்பொட்டலம் இட்டு) சனிபகவானை வணங்கலாம், 

காக்கைக்கு எள் கலந்த சோறு வைக்கலாம். எள் கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்தாலும் நல்லது. திருநள்ளாறு அடுத்து திருநாகேஸ்வரம், திருவாதவூர் குச்சானூர் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். சனியின் அதிதேவதையான எமதர்மனை (திருக்கடையூர் சென்று) வணங்கினாலும் சனியின் அருள் பெறலாம். 

சனிபகவானின் கருணைபெற நீலநிற பூக்களை சார்த்தலாம். வன்னி இலை இவரக்கு பிடித்தது. வன்னி இலையால் அர்ச்சனை செய்யலாம். கருங்குவளை மலர்களாலும் இவரை அர்ச்சனை செய்யலாம். வன்னி மரக்கன்றுகளை நட்டு அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றலாம், ஊர் எல்லையில் உள்ள எல்லை தெய்வமாகிய அய்யனார், அகோரவீரபத்திரர், வீரானார், கருப்பர், சன்னாசி போன்ற காவல் தெய்வங்களை வழிபாடு செய்யலாம். 

ஊர் எல்லையில் புளிய மரங்களை நட்டு வைக்கலாம். ஏழரைச்சனி அஷ்டமத்துச்சனி நடக்கும் காலகட்டங்களில் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை வழிபட்டு வருவது சனி பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். 

சனி கிரகம் பூமிக்கு சாம்பல் நிறமான கதிர்களை அனுப்பி கொண்டு இருக்கிறது. ஆகையால் ஆடைவகைகளில் சாம்பல் நிற ஆடைகளை பயன்படுத்தினால் சனி பாதிப்புகள் நீங்கி சனியின் அருள் பெறலாம். சனிபகவானுக்கு விசேசமான ரத்தினமாக நீலம் கருதப்படுகிறது. இதில் இந்திரநீலம் மிகவும் உயர்ந்தது. இந்தக் கல்லை அணிபவர்களுக்கு ஆயுள், செல்வம், அதிக அளவு சேரும், மேலும் நரம்பு சம்பந்தமான நோய்கள், தசை, தோல், எலும்பு போன்ற உறுப்புகளில் உள்ள கோளாறை நீக்கி கொள்ளலாம். இவற்றிற்கு மேலாக கண்பார்வையற்றோர், ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்தல் ஜீவராசிகளுக்கும், விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் உணவு இடுதல் போன்றவற்றை செய்து வந்தால் சனியின் பரிபூரண கருணையை பெறலாம். சனி தவம் செய்தே சனீஸ்வரன் ஆனார். ஆகையால் சனிகிரகத்தை நட்பு உணர்வோடு இடைவிடாமல் தியானம் செய்வோருக்கு நிச்சயமாக நலன்கள் உண்டாகும்;


     பலவிதக் கொடுமைகளுக்கும் காரணபூதனாக உள்ள சனியை வழிபட்டுப் போறறினால் குறையாது வயது. குன்றாத வளமும் நலனும், வற்றாத செல்வமும் கிடைக்கும். சனீஸ்வரனின் அருளை வேண்டி பிரார்த்னை செய்வோம் சந்தோசமாக வாழ்வோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன். 

தை அமாவாசை அன்னதானம்;

வருகின்ற 8.2.2016 திங்கள் கிழமை தை அமாவாசை வருகிறது.அன்று போன வருடம் போலவே இந்த வருடமும் ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்களுக்கு அன்னதானம்,நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறோம்..தை அமாவாசை தானங்கள் பெரும் புண்ணியங்கள் தரவல்லது.பலருடன் கூடி அதை செய்யும்போது இன்னும் பல மடங்கு சக்தி பெருகிறது.எங்களுடன் இனைந்து செயல்பட விரும்புவோர் நன்கொடைகள் அனுப்பலாம்..உங்கள் குடும்பத்தார் பெயரில் அன்று சிறப்பு அர்ச்சனை வழிபாடு பிரார்த்தனைகள் செய்யப்படும் நன்றி.மெயில்;sathishastro77@gmail.com       

No comments: