Monday, 22 February 2016

உங்கள் ராசிப்படி செவ்வாய் சனி சேர்க்கை ராசிபலன்


செவ்வாயும் ,சனியும் விருச்சிகம் ராசியில் கோட்சாரப்படி இப்போது சேர்ந்து இருக்கிறார்கள்..பொதுவாக செவ்வாய், சனி சேர்க்கை பற்றி ஜோதிடம் நல்லவிதமாக சொல்லவில்லை..

இப்படி ஒருவர் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால் செவ்வாய்,சனி திசையோ புத்தியோநடக்கும்போதுமிகுந்ததுயரினைஅவர்அடைவார்..விபத்து,ஆபரேசன்,
சிறைவாசம்,வீண் பழி,தீவிபத்து,உறவினர் அனைவரும் பகைஅரசாங்கஎதிர்ப்பு,பூமிதோசம்,சாபம் நிறைந்த நிலத்தை வாங்கி அவதிபடுவது,வாகனத்தால் கண்டம் என பட்டியல் நீள்கிறது....

கோட்சாரப்படி இப்படி சேர்ந்து இருக்கும்போது மேற்ச்சொன்ன பிரச்சினைகள் உலகிலும் நடக்கும்தானே..அதிக மக்கள் கூடும் இடங்களில் கலவரம்,தீவிரவாதிகளால் ஆபத்து,ரயில்,விமான விபத்துகள்,நாடுகளுக்குள் சண்டைகள்,தீவிபத்துகளை இந்த சேர்க்கை குறிக்கிறது....மார்ச் மாத மத்தியில் சனி வக்ரமாகும் வரை இந்த நிலை நீடிக்கும்..

மேசம் ராசியினருக்கு  8-ல் செவ்வாய்-சனி இருக்கிறது..அஷ்டம சனி போதாது என இப்போது ராசி அதிபதியும் மறைகிறார்.. அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். முன்கோபம் தவிர்க்க முடியாமல் அதனால் துன்பமே உண்டாகும். பணத்தட்டுப்பாடு அதிகம் காணப்படும்.

ரிசபம் ராசியினருக்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கை,வருவதால், திருமண பேச்சில் தடங்கல் உண்டாக்கும். . கூட்டு தொழிலில் விரோதம் வளரும். மனைவி (அ) கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் வாக்குவாதம் உண்டாக்கும்..

மிதுனம் ராசியினருக்கு 6-ல் செவ்வாய்-சனி இருப்பதால் தேவை இல்லாமல் கடன் பெருக செய்கிறது. விரோதங்கள் தொடர செய்கிறது. உடல்நலனில் ஒருமுறை அறுவை சிகிச்சை செய்து வைக்கிறது. 

கடகம் ராசியினருக்கு 5-ல் செவ்வாய்-சனி இருப்பதால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் பிரச்சினை உண்டாக்கும்.. இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

சிம்மம் ராசிக்கு 4-ல் செவ்வாய்-சனி இருப்பதால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை. 

கன்னி ராசியினருக்கு  3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. மாமனாருக்கு பாதிப்பு..அலைச்சல்,வாகனத்தால் பாதிப்பு,உடல்நலனில் தொண்டை பகுதியை பாதிக்கிறது. புகழ், கௌரவத்தை பாதிக்கச் செய்கிறது. 

துலாம் ராசியினருக்கு செவ்வாய்-சனி 2ல் சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது. கண் உபாதை உண்டாக்குகிறது.

விருச்சிகம் ராசியினருக்கு செவ்வாய் சனி சேர்க்கையால், உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உளைச்சல் கொடுக்கிறது. 

தனுசு ராசியினருக்கு 12-ல் செவ்வாய்-சனி இணைவதால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது. என்னடா வாழ்க்கை என்று சலிக்க வைக்கும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். விரயங்கள் விரைந்து வரும். தூர பயணத்தில் வெகு கவனம் தேவை


 மகரம் ராசியினருக்கு 11-ல் செவ்வாய்-சனி இருப்பதால்மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம். தொழில், வேலைகளில் இரண்டிலும், ஏன் அயல்நாட்டு தொடர்பு வைத்தோம் என்று கலங்க வைக்கும். ஜாதகருக்கே உடல்நிலை சீராக வைக்காது.

 கும்பம் ராசியினருக்கு  10-ல் செவ்வாய்-சனி இருப்பதால் தொழில்துறையில் வளர்ச்சியில் நிதானம் செய்யும். போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். அதேபோல் உத்தியோகத்தில் மேல்பதவி கிடைப்பது அரிது. மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிலை இல்லா தொழிலே அமையும்.

 மீனம் ராசியினருக்கு  9-ல் செவ்வாய்-சனி இணைவதால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தை – மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும்.தொழிலில் சிக்கல் இருக்கும்.

பரிகாரம்;செவ்வாய் தோறும் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பு...முருகனுக்கு திரிசதை அர்ச்சனை செய்து வழிபடுவது இன்னும் நல்லது..செவ்வாய் அல்லது வியாழக்கிழமையிலும் வழிபடலாம்..No comments: