Thursday, 4 February 2016

உங்கள் பிறந்த நட்சத்திரப்படி செல்லவேண்டிய கோயில்கள் -மந்திரங்கள்-அசுவினி முதல் ரோகிணி வரை

27 நட்சத்திரத்திற்கு பரிகாரத் தலங்கள்;மற்றும் மந்திரங்கள்;.

அஸ்வினி நட்சத்திரம்

 
தன்வந்த்ரி பகவான் சந்நிதி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இடம்பெற்றிருக்கும் இந்த தன்வந்திரிதான் பாற்கடலிலிருந்து அமுதம் கொண்டு வந்தவர். இவர் கொடுத்த அமுதத்தால்தான் அஸ்வினி தேவர்கள் அஸ்வினி நட்சத்திரர்களைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்தப் பணிக்கு மூலாதாரமாக விளங்கிய தன்வந்த்ரி, சங்கு – சக்கரதாரியாக அமிர்த கலசம் ஏந்தியபடி இங்கு சேவை சாதிக்கிறார். இவரை உளமார வழிபடலாம்.
     
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற சிற்றூரிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அதுவும் அவரவர் பிறந்த நட்சத்திர நாளன்று சென்று பிரார்த்தித்துக் கொண்டால் நல்லது.
     
கொல்லிமலை எட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எட்டி மரத்தை வழிபடுவதும், அதற்கு நீருற்றுவதும் சிறந்த பரிகாரச் செயல்களாகும்.        
                                                      தம் எதிர்மறை குணங்கள் விலக அல்லது அவற்றால் பாதிப்பு எதுவும் வராமல் இருக்க, அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் இந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வாருங்கள்.

           அஸ்வினி  மந்திரம்

        அஸ்வின{ தேவதே ஸ்வேத வர்ணௌ
            தாவஸ்விநௌ துமஹ:
         சுதா சம்பூர்ண கலச கராலஜௌ
            அஸ்வ வாசு கநௌ
           சரஸ்வதி தேவி காயத்ரி மந்திரம்
          ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
             விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
          தன்னோ வாணீ ப்ரசோதயாத்.
               
               பரணி நட்சத்திரம்;
       
திருநெல்லிக்கா: தேவர் உலகத்து கற்பகம் முதலிய பஞ்ச தருக்கள், திருநெல்லிக்கா தலத்தில் நெல்லிமரங்களாக விளங்குவதாக, தல புராணம் குறிப்பிடுகிறது. நெல்லி மரத்தையே தல மரமாகக் கொண்டதால், திருநெல்லக்கா என்று அழைக்கப்படுகிறது. துர்வாச மகரிஷியின் கோபம் நீக்கியருளிய தலம். ஈசன் திருநெல்லிவனநாதர் எனத் திருநாமம் கொண்டுள்ளார். அன்னை மங்கள நாயகி. இங்கு சூரிய, சந்திர, பிரம்ம, சக்கர, ரோக நிவாரண தீர்த்தங்கள் சிறப்புமிக்கவை. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் கச்சனத்துக்குக் கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ளது.
  
பழையாறை வடதளி: பட்டீசுவரத்துக்குத் தென்கிழக்கில் 2கீ.மீ. தொலைவில் உள்ளது. ஆறை வடதளி – சோழ மாளிகை. நெல்லி வனம் என்றும் பெயர் கொண்டது. முடிகொண்டான் ஆற்றின் கரையில் உள்ளது. கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கிட, தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தைப் பெற்றுக்கொண்டு இந்தத் தலம் வழியே வந்தபோது, அசுரர்களோடு சண்டையிட நேரிட்டது. அமிர்த கலசத்திலிருந்து மூன்று துளிகள் இந்தத் தலத்தில் வீழ்ந்து, சிவலிங்கம், அம்பிகை மற்றும் தீர்த்தம் என்று ஆகினவாம். கருடன், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபட்டு உயர்வு அடைந்தார். மேலும் அமர்நீதி நாயனார் அவதரித்த தலம் இது. கும்பகோணத்திலிருந்து சுமார் 8கி.மீ தொலைவில் உள்ளது.

திருஆவினன்குடி: அறுபடை வீடுகளில் மூன்றாவது திருஆவினன்குடி ஆகும். சண்முக நதிக் கரையில் அமைந்துள்ளது. குழந்தை வேலாயுதசுவாமி, இந்தத் திருக்கோயிலில் பிரதான மூர்த்தி ஆவார். மூலவர் மீனாட்சி சுந்தரேசுவரர். திருமகள், காமதேனு, சூரியன், பூமி, அக்னி ஆகியோர் வழிபட்ட தலம் ஆனதால், இத்தலத்துக்கு திருஆவினன்குடி எனப்; பெயர் வந்தது. அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற திருத்தலம். துல மரம்: நெல்லி.

பரணி மந்திரம்;

ஓம் ஹ்ரீம் தும் ஜ்வல ஜ்வல துர்கே தூம்ரலோசனீ
சண்ட சம்ஹாரி ஐம் ஹ்ரீம் க்லீம் நமோ பகவதீ
மஹா துக்கே ஹூம் பட் ஸ்வாஹா :

சத்ரு பயம், பெரும் பகை, மறைமுக எதிர்ப்புகள், ஜாதக ரீதியான தொல்லைகள் அனைத்தும் மேற்கண்ட மந்திரத்தை துர்கையை தியானித்து 108 முறை கூறி வர பனி போல் விலகும்
            
              கார்த்திகை நட்சத்திரம்;
           
      கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கான பரிகார தல விருட்சம்;, அத்தி, அதனால், ஆதி அத்தி வரதரை காஞ்சி சென்று வணங்குவது நற்பலன்களை அள்ளித் தரும்.
     
மயிலாடுதுறைக்கு அருகில் உ;ள்ள கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள் மூலவர் சிலை அத்தி மரத்தாலானதே.
     
அத்தி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டிருக்கும், கோயில்களுக்குச் சென்று கார்த்திகை  நட்சத்திரக்காரர்கள் வழிபடலாம்.

     கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிதேவதை, அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவரான அக்னிதேவன் ஆவான். ‘அக்னிமூலை’ என்று சொல்லப்படும் தென்கிழக்கு மூலையே, அவனது இருப்பிடம். அதனால்தான் திருக்கோயிலின் மடைப்பள்ளி மற்றும் வீட்டின் சமையலறை ஆகியவற்றை இந்த மூலையிலேயே அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

     பிரஜாபதிக்கும், சாண்டிலிக்கும் பிறந்தவன் அக்னிதேவன். குமரனது கொடியில் கோழியாக நின்றவன். இவனது வாகனம் செம்மறிஆடு. வேள்;விகளில் அக்னிதேவன் மூலமாகவே அவிர்பாகம் சமர்ப்பிக்கப்படுகிறது. வேள்விகளில் பயன்படுத்தப்படும் ‘ஸ்ருக் - ஸ்ருவம்’தான் இவனது ஆயதம். உற்சவமூர்த்திகளில், தீச்சுடர்களை மகுடமாகக் கொண்டு இரண்டு முகங்களோடும் மூன்று கால்களோடும் ஏழு தீச்சுடர்கள் ஏந்திய ஏழு கரங்களோடும் காட்சி தருகிறான். திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் அக்னீசுவரர் திருக்கோயிலிலும், கீரனூர் சிவலோகநாதர் திருக்கோயிலிலும் அக்னிதேவனின் அழகிய பஞ்சலோக உற்சவத் திருமேனிகளைக் காணலாம். அக்னிபகவான் ஈசுவரனை வழிபட்ட தலங்களில், எம்பெருமான் அக்னீசுவரர் என்று திருநாமம் கொண்டுள்ளார்.
     
கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தெய்வம் முருகப்பெருமான். ஆகவே, முருகன் உறையும் தலங்கள் எல்லாமே இந்த நட்சத்திரக்காரர்களுக்குப் பரிகாரத் தலங்கள்தான். குறிப்பாக திருச்செந்தூர் முரகனை தரிசனம் செய்வது, இவர்களுக்கு அபரிமிதமான, அபூர்வ பலன்கள் கிடைக்க வழி காட்டும்.

               கார்த்திகை மந்திரம்!

            கிருத்திகா அக்னிதேவத்யா:
             மேஷ வாகன சம்ஸ்திதா:
           ஸ்ருக் ஸ்ருவாவபீ திவரத்ரு:
             சதுர்ஹஸ்தா நமாம்யளஹம்|
               அக்னி காயத்ரி மந்திரம்
             ஓம் மஹாஜவாலாய வித்மஹே
                அக்னிமக்னாய தீமஹி:
              தந்நோ அக்னி ப்ரசோதயாத்:  

     ரோகிணி நட்சத்திர பரிகார தலங்கள்

கழுகுமலை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு மேற்கில் 19கி.மீ. தொலைவில், ஜம்புநாத ஈசுவரர் - அகிலாண்டேசுவரி அருள் பாலிக்கும் திருத்தலம். துல மரம் - நாவல்.

செம்பாக்கம்: செங்கல்பட்டுக்குக் கிழக்கே, திருப்போரூர் சாலையில் 18கி.மீ  தொலைவிலுள்ள தலம். வதம் செய்யப்பட்ட சூரனின் சிரம் விழுந்ததால் சிரம்பாக்கம் என்றானது. பின்னர் அது செம்பாக்கமாக மருவியது. மூலவர் - ஜம்புகேசுவரர்.

கொரட்டூர்: சென்னைக்கு மேற்கில் 10கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவும் ஜம்புகேசுவரர் திருக்கோயிலே.

நெல்லிச்சேரி: தஞ்சாவூருக்கு வடக்கே, கும்பகோணம் சாலையில் 11கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஜம்புநாதர் திருக்கோயில்.
கிருஷ்ணனின் திருநட்சத்திரம் ரோகிணி ஆனதால் கண்ணன் குடி கொண்டுள்ள தலங்களிலும் வழிபடலாம். 

அவற்றில் சில:

மன்னார்குடி:திருவாரூருக்கு தென்மேற்கில் 27கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். வாசுதேவபுரி, தட்சிண துவாரகை என்றும் இது அழைக்கப்படுகிறது.

பெருமாள் அகரம்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரிக்கு தெற்கே 3கி.மீ. தொலைவில் உள்ளது. ருக்மணி – சத்யபாமா சமேதராக ஸ்ரீ வேணுகோபாலன் சேவை சாதிக்கிறார்.
திருவரங்கம்: திருக்கோவிலூர் அருகில், பெண்ணாற்றங்கரையில், அமைந்துள்ள ரங்கநாதப் பெருமாள் கோயில்.
திருக்கண்ணமங்கை: திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி என்ற பஞ்ச கிருஷ்ணத் தலங்களும் இவ்வாறு வழிபட உகந்தவை. 

     
           ரோகிணி நட்சத்திர மந்திரம்

      பிரஜாபதி: சதுர்பாஹீ: கமண்டலு அஸ ஸ{த்ர த்ருத்”
              வரா அபயகர: ப்ரத: ரோகிணி தேவதா அஸ்து மே,
          
பிரம்ம காயத்ரி மந்திரம்

      வேதாத்மநாய வித்மஹே ஹிரண்ய கர்ப்பாய தீமஹி,
       தந்தோ பிரம்ம ப்ரசோதயாத்.

No comments: