Monday, 8 February 2016

உங்கள் நட்சத்திரப்படி பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் -விசாகம் முதல் ரேவதி வரை

 விசாகம்
      
       விசாக நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
கபிஸ்தலம்: தஞ்சை மாவட்டம், பாபநாசத்துக்கு வடக்கே 3கி.மீ. தெ;hலைவில், கும்பகோணம் - திருவையாறு சாலையில் அமைந்த வைணவ திவ்ய தேசம். விளா மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கபிஸ்தலம் என்று பெயர்பெற்றது. வாலிக்கு எம்பெருமான் காட்சியளித்த தலம். மூலவர், கஜேந்திரவரதப் பெருமாள், கிழக்கு நோக்கி, பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளார். தாயார் ரமாமணிவல்லி. தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரணி.

அத்தாளநல்லூர்: நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்கு வடகிழக்கே 7கி.மீட்டரில் அமைந்துள்ளது. ஆனைக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவரதப் பெருமாள் சேவை சாதிக்கிறார். இவர், வழிப்போக்கருக்கு ‘அத்தாழம்’ என்ற இரவு உணவை அருளியவர்.
தீயத்தூர்: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலுக்கு அருகில் உள்ளது. தீயும் (அக்னி) அயனும் (பிரம்மா) வழிபட்ட திருத்தலம். சகஸ்ரலட்சுமீசுவரர் அருள் பாலிக்கிறார்.

திருநின்றியூர்: மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் வடகரையில் உள்ளது. திருமகள் வழிபட்டு நிலைபேறு எய்திய தலம். லட்சுமிபுரீசுவரர் - உலகநாயகி அருள் பாலிக்கும் தலம்.

               
    அதிதேவதை மந்திரம் 
  இந்திராக்னி ஸீபதௌஸ்யாதாம்
   விசாகா தேவதே உபௌ|
  வராவேகரதாரூடௌ வராரபீதி கராம் புஜௌ||
      ~ண்முக காயத்ரி
   ஓம் தத்புரு~hய வித்மஹே மஹாஸேனாய தீமஹி|
   தந்நோ ~ண்முக ப்ரசோதயாத்||

                               அனுசம்
   

     அனுசம்  நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
திருவொற்றியூர்: சென்னைக்கு வடக்கே 8கி.மீ. தெ;hலைவில் உள்ளது. புற்றிடங்கொண்டார். ஆதிபுரீசுவரராக அருள் பாலிக்கும் தலம். தலவிருட்சம் - மகிழ மரம்.

திருவண்ணாமலை: திருமாலும், நான்முகனும் அடி – முடி தேடியபோது, அவர்களுக்கு எட்டாமல், அண்ணாமலையாக இறைவன் தோன்றிய தலம். அஷ்டவசுக்கள், பிரம்மா, திருமால் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருப்புனவாசல்: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென்கிழக்கே 38கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு யுகங்களுக்கு நான்கு தல விருட்சங்கள் உள்ள பதி. தஞ்சை பிரகதீசுவரருக்கு அடுத்ததாக பெரிய லிங்கத் திருமேனி. ஆகண்டல விநாயகர், சதுர்முக லிங்கம், விநாயகர் சபை, குடவரை காளி ஆகிய சிறப்புச் சந்நிதிகள் கொண்ட கோயில்.  

திருக்கண்ணமங்கை: திருவாரூருக்கு வடமேற்கில் 7கி.மீ. தொலைவில் உள்ளது. தல விருட்சம் - மகிழ மரம். முப்பத்து முக்கோடி தேவர்களும் தேனீக்களாக வந்து சேவிக்கும் திருத்தலம். பக்தவத்சலப் பெருமாளும், அபிசேகவல்லித் தாயாரும் சேவை சாதிக்கும் ஸப்தாம்ருத சேத்திரம்.

நீடூர்: மயிலாடுதுறைக்கு வடக்கே 5கி.மீ தொலைவில் மகிழ வனம் கொண்டது. ஊழிக்; காலத்தும் அழியாததால், நீடூர் ஆனது. லட்சுமிநாராயணபெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

நாச்சியார்கோயில்: கும்பகோணத்துக்கு தென்கிழக்கே 9கி.மீ.தொலைவில், திருமலைராயன் ஆற்றின் வடகரையில் உள்ளது. திருநறையூர், தல மரம்-மகிழ மரம். மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள், தாயாருக்கு மாலையிடும் நிலையில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கல் கருடன் ஆகியவை சிறப்புச் சந்நதிகள்.
         
    அதிதேவதை மந்திரம்
 மித்ரம் பத்மாசனாரூடம் அனூராதேஸ்வரம் பஜே|
சூலாங்கு ச தரம் பாஹ்வோ: தேவம் ஸோநித வர்ணகம்||
     சூர்ய காயத்ரி
 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
 தந்நோ சூர்ய ப்ரசோதயாத்||
             
             கேட்டை
       

      கேட்டை நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
பிட்சாணடார் கோயில்: திருச்சிக்கு வடக்கில் 6கி.மீ தொலைவில் உள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் உண்டு. உத்தமர் கோயில் எனப்படும் மும்மூர்த்தித் தலம். பிட்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு நோக்கியும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். திருமகளே ஈசுவரனுக்கு பிட்சை அளித்ததாக தல புராணம் கூறுகிறது. சப்த குருத்தலம் என்றும் பெருமை கொண்டது. சரஸ்வதி தேவிக்கு இங்கே தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள புத்திரகாமேஷ்டீஸ்வரர், தசரதனால் வழிபடப்பட்டவர். இவர், மக்கட்பேறு வழங்கிடும் மகேசன்.

வழுவூர்: ஈசன், யானையை உரித்து, முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்த திருத்தலம். மயிலாடுதுறைக்கு தெற்கே 8கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்த்தம் இரண்டும் தனிச்சிறப்பு கொண்டவை. ஈசன் ‘கிருத்திவாசன்’ என்று திருநாமம் கொண்டுள்ளார். ‘கஜ சம்ஹார மூர்த்தி’ தரிசனத்தை இங்கு மட்டுமே காண முடியும். அமாவாசை நாட்களில் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். வில்லேந்;திய கோலத்தில் சனீஸ்வரனை இங்கு வழிபடலாம்.
      
  அதிதேவதை மந்திரம்
   இந்திரம் கஜவராரூடம் வஜ்ரபாச வசபயம்|
   கரே: சதுர்பி: ததம் ஜ்யேஷ்டாதீச்வர மாஸ்ரயே||

  வராஹ காயத்ரி
 
பூவராஹாய வித்மஹே வஜ்ர ரூபாய தீமஹி|
   தந்நோ வராஹ ப்ரசோதயாத்||

              மூலம்
    
          மூல நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
திருமாந்துறை: திருச்சி மாவட்டம் லால்குடிக்கு மேற்கில் 5கி.மீ தொலைவில் உள்ள வடகரை மாந்துரை எனப்படும் தலம். ஆம்ரவன ஈசுவரரே திருமாந்துறை நாதர்: அன்னை அழகம்மை.

ஆச்சாள்புரம்: சீர்காழிக்கு அ;ருகில் உள்ள திருத்தலம், சிவலோகத் தியாகேசர் அருள் பாலிக்கும் தலம். இந்தக் கோயிலில் திருஞானசம்பந்கர் திருமணம் மற்றும் சிவஜோதி தரிசன ஐக்கிய நிகழ்ச்சிகள், வைகாசி மூல நட்சத்திரத் திருநாளில் நடைபெறுகின்றன.

மயிலாடுதுறை: மயூரநாதர், அபயாம்பிகையுடன் அருள் பாலிக்கும் திருத்தலம். இங்கே முடவன் முழக்கு, துலா ஸ்நானம் தனிச்சிறப்பு பெற்றவை.

பாமணி: பாதாளேச்சுரம் எனப்படும் இந்தத் திருத்தலம் மன்னார்குடியிலிருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. பாதாளத்திலிருந்து ஆதிசே~ன் தனஞ்ஜெய முனிவராக வெளிப்பட்ட தலம். சர்ப்ப தோ~ம் நீக்கும் தலம். மூலவர் கருவறையில் புற்று உள்ளது.

கோயிலூர்: திருத்துறைப்பூண்டி – ஓரத்தநாடு வழியில் உள்ள தலம். ராமபிரான், சேதுப் பாலம் கட்டுவதற்கு முன்பு, இறைவனிடம் இந்தத் தலத்திலதான் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு, மந்திரபுரீசுவரர் - பெரிய நாயகி அருள் பாலிக்கும் தலம். ‘சூதவனம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

குலசேகரப்பட்டினம்: திருச்செந்தூருக்கு 14கி.மீ. தொலைவில் உள்ளது. விஜயகாசிகொண்ட பாண்டீசுவரர் - அறம் வளர்த்த நாயகி அருள் பாலிக்கும் தலம்.

பொழிச்சலூர் சென்னைக்கு தெற்கில், பல்லாவரத்துக்கு மேற்கில் 3கி.மீ தொலைவில் அகஸ்தீசுவரர் - ஆனந்தவல்லி அருள் பாலிக்கும் தலம்.
              
     நட்சத்திர மந்திரம்
     கராள வதனம் க்ருஷ்ணம் ந்ருவாகனம்|
     ஊர்த்வகேசம் விருபனாஷ்ம் பஜே மூலாதி தேவதாம்||
     
ஆஞ்சநேய காயத்ரி
     ஸ்ரீஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி|
     தந்நோ அனுமத் ப்ரசோதயாத்||

 பூராடம்;
      
        
 பூராட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

நகர்: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம். அப்பிரதீசுவரர் அருளாசி வழங்கும் அற்புதத் தலம்.

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தலம். பழைமையும் பெருமையும் வாய்ந்த சிவத்தலம். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தை குறிக்கும் தலம். ‘சிதம்பர ரகசியம்’ இங்கே விசே~ம். சபாநாயகராக அருள்; பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவகாம சுந்தரி அருளாசி வழங்குகிறாள்.
கடுவெளி: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு வடக்கில் 3கி.மீ தூரத்ததில், கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ளது. ஆகாசபுரீசுவரர் அருள் பாலிக்கும் திருத்தலம்.
              
    பூராட நட்சத்திர மந்திரம்
   அஷ்டா தேவதா: நித்யம் ஆப: ஸந்து ஸீபப்ரதா|   சமுத்ரகா: தரங்கிண்ய: பாலின்ய: ஸர்வதேஹிநாம்||
   (அஷ்டா ஸ்ரீ பூர்வாஷ்டா ஸ்ரீ பூராடம்)
 
   வருண காயத்ரி
   ஓம் பஸ்சிமேசாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி|
   தந்நோ வருண ப்ரசோதயாத்||
   
               உத்திராடம்
      
   
 உத்திராட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

கோயம்பேடு: சென்னைக்கு மேற்கில் 8கி.மீ குறுங்காலீசுவரர் - தர்மசம்வர்த்தனி அருள்பாலிக்கும் தலம். லவ குசர்கள் மண்ணை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்ட கோயில். வடக்கு திசை நோக்கிய சந்நிதி;. தலமரம் - பலா.

காங்கேயநல்லூர்: காட்பாடிக்கு தென் கிழக்கே 4கி.மீ காங்கேசுவரர் - பாலகுஜாம்பிகை அருள்பாலிக்கும் திருத்தலம். முருகப் பெருமான் வழிபட்டதால் இத்தல இறைவன் ‘காங்கேசப் பெருமான்’ என அழைக்கப்படுகறார்.
பே;ர்: சேலத்துக்கு கிழக்கே 32கி.மீ கணம்புல்ல நாயனார் இத்திருத்தலத்தைச் சேர்ந்தவர். சுயம்புலிங்கமாக தான்தோன்றீசுசரர், அறம் வளர்த்த அம்மையுடன் அருள்;;பாலிக்கும் தலம்.

திருஇன்னம்பூர்: கும்பகோணத்துக்கு வடமேற்கே 6கி.மீ. எழுத்தறி நாதேசுவரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தலம். ஐராவதம் வழிபட்ட தலம். அன்னை சுகந்த குந்தளாம்பிகை. நித்திய கல்யாணி என்றும் தனியாக அன்னையின் சந்நிதி உள்ளது.
திருப்பூவனூர்: மன்னார்குடிக்கு வடக்கே 10கி.மீ. சதுரங்க வல்லபநாதர் அருள்பாலிக்கும் தலம். கற்பகவல்லி, ராஜராஜேசுவரி என இறைவி சந்நிதிகள் இரண்டு.
திருக்கடிக்குளம்: திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 12கி.மீ. ராமபிரான் ‘சேது பந்தனம்’ செய்ய முற்பட்டபோது, இங்குள்ள கற்பகநாதரை வழிபட்டு அருள்பெற்றார். அன்னை சௌந்தரநாயகி.

திருப்பூவணம்;: திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 12கி.மீ ராமபிரான் ‘சேது பந்தனம்’ செய்ய முற்பட்டபோது, இங்குள்ள கற்பகநாதரை வழிபட்டு அருள்பெற்றார். அன்னை சௌந்தரநாயகி.
திருக்கோ~;டியூர்: சிவகங்கையிலிருந்து 19 கி.மீ அ~;டாங்க விமானம் அமைந்த வைணவ திவ்ய தேசம். தேவர்கள் ஒன்றாகக் கூடி, பரந்தாமனை வேண்டி, இரணியனை சம்ஹரித்திடக் கோரிய தலம். உலகோருக்கு ஸ்ரீராமானுஜர், தளங்களில் நாராயணன் சேவை சாதிக்கிறார்.

            
நட்சத்திர மந்திரம்

விஸ்வாந் தேவாநஹம் வந்தே அஷ்டா நட்சத்திரவதா|  ஸ்ரீபுஷ்டி கீர்த்தி: தீதாரூன் ஸர்வ பாபாபனுத்ரயே||
(ஆஷ்டா – உத்திராடம்)

வினாயக காயத்ரி
ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி|
தந்நோ தந்தீ ப்ரசோதயாத்||

              திருவோணம்
  
     அம்பு வடிவில் புலியை நோக்கிப் பாய்ந்த அந்த மூன்று நட்சத்திரத் தொகுப்பே திரவோண நட்சத்திரமாகும். நாராயணனின் அவதாரத் திருநட்சத்திரமும் இதுதான் என்பதால், திருவோண நட்சத்திர அன்பர்கள் திருப்பதி பெருமாளை வழிபடலாம்.
     திருவோண நட்சத்திர அன்பர்கள் வழிபடக் கூடிய இன்னொரு கோயிலும் உண்டு. அது, திருமுல்லைவாயில், சென்னைக்கு மேற்கில் உள்ள ஆவடியை ஒட்டியுள்ள திருத்தலம். மாசிலாமணி நாதர் அருள் பாலிக்கும் இந்தத் திருத்தலத்தில், இரண்டு அதிசய ‘வெள்ளெருக்கு தூண்கள்’ உள்ளன. மூலவர் சந்நிதியின் இருபறமும் உள்ள இந்தத் தூண்கள், தொண்டைமான் சக்கரவர்த்தியால் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டதாம்.
     எருக்கஞ்செடியை தல விருட்சமாகக் கொண்டே கோயில்களோடு, கொடியிடை நாயகி – மாசிலாமணீசுவரர் அருள் பாலிக்கும் இந்த திருமுல்லைவாயில் திருத்தலத்தையும் வணங்கலாம்.
          
  திருவோண நட்சத்திர மந்திரம்
   சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம் ச்ரவண நட்சத்திர வல்லபம்|
   விஷ்ணும் கமலபத்ராகூம் த்யாயேத் கருட வாகனம்||
   (ச்ரவண – திருவோணம்)
   நாராயண காயத்ரி
   ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி|
   தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்||
            
அவிட்டம்
      
      அவிட்ட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம். இங்குள்ள பழமையான வன்னிமரத்தை வலம் வருவதே நற்பலன்களைத் தரும். அன்னை பாலாம்பிகை, விருத்தாம்பிகை என்று இரண்டு சந்நிதிகள். மூலவர் விருத்தகிரீசுவரர்;.
திருவான்மியூர்: சென்னைக்கு தெற்கில் 8கி.மீ. தெ;hலைவில் உள்ள கடற்கரைத் தலம். வன்மீகர், மருந்தீசுவரர், பால்வண்ணநாதர் என்ற பெயர் கொண்டு ஈசன் அருள்பாலிக்கும் தலம். அன்னை திரிபுரசுந்தரி. மார்க்கண்டேயருக்கு வன்னிமரத்தடியில் இறைவன் ரி~பாரூடராகக் காட்சி தந்த தலம்.
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ அக்னீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம்.

திருப்பூந்துருத்தி: திருவையாற்றுக்கு மேற்கில் 5கி.மீ சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்று. பு~;பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள்பாலிக்கும் தலம்.

திருக்கொள்ளிக்காடு: திருவாரூர் மாவட்டம், கச்சனத்துக்கு மேற்கே 8 கி.மீ அக்னீசுவரர் அருள்பாலிக்கும் தலம், சனி பகவான் சந்நிதி தனிச்சிறப்பு கொண்டது.

திருமறைக்காடு: தஞ்சாவூருக்கு தென்கிழக்கில் 100கி.மீ. வேதாரண்யம் என்ற கடற்கரைத் தலம். வேதங்கள் வழிபட்டு, திருக்காப்பிட்டுக் கொண்ட கோயில், சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று.
                 

கொடுமுடி: ‘பாண்டிக் கொடுமுடி’ என்று அ;ழைக்கப்படும் கொங்கு நாட்டுத் தலம். மகுடேஸ்வரர் - சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். வன்னிமரத்தடியில் பிரம்மா காட்சி தருகிறார். பிரம்மதீர்த்தம் சிறப்பு கொண்டது.
       
நட்சத்திர மந்திரம்
ஸ்ரவிஷ்;டா தேவதா: வந்தே வஸீந் ரதவராஸ்ரிதான்|
சங்கம் சக்ராங்கித கரான் கிரீடோஜ்வல மஸ்தகான்||

(ஸ்ரவிஷ்டா – அவிட்டம்)                       விஷ்ணு காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே வாஸீதெவாய தீமஹி|
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்||

                 சதயம்
 
    சதய நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
கடம்பனூர்: சூரபத்மனை அழித்ததால் ஏற்பட்ட சூரஹத்தி தோ~ம் நீங்க, முருகப் பெருமான் ஐந்து தலங்களில் சிவபிரதி~;டை செய்து வழிபட்டார். அந்த திருத்தலங்கள் நாகை மாவட்டத்தில் உள்ளன. ஆவை கோவில் கடம்பனூர், அங்கெல்லாம் வடக்கு நோக்கி, எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமான். சுதய நட்சத்திர அன்பர்கள் அருள் வேண்டி முரகனை இங்கு வழிபடலாம்.
கடம்பர்கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் அமைந்துள்ள கடம்பை, தட்சிணகாசி என அழைக்கப்படும் தலம். தல விருட்சம் கடம்ப மரம். கடம்பவனநாதராக, ஈசன் முலையம்மையோடு அருள் பாலிக்கும் திருத்லதம்.

மேலக்கடம்பூர்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலுக்கு தென்மேற்கில் 5கி.மீ தொலைவில் தேர் வடிவில் அமைந்த திருத்தலம். அமிர்தகடேஸ்வரராக ஈசன் அருள் பாலிக்கிறார். இந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்;த இந்திரன், தன் தாயார் தினமும் விழிபடுவதற்காக, தேருக்குச் சக்கரங்களை மாட்டி குதிரைகளைப் பூட்டி இழுத்துச் செல்ல முற்படுகையி;ல், விநாயகர் கட்டை விரலால் அழுத்திட, அது நின்றுவிட்டது. அப்போது கோடிலிங்கங்களை பிரதிஷ்டை செய்யுமாறு இந்திரனைப் பணித்தார் விநாயகர். அருகிலேயே ருத்ரகோடீசுவரரை பிரதிஷ்டை செய்து விமோசனம் பெற்றான் இந்திரன்.

பிட்சாண்டார் கோயில்: திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6கி.மீ. தொலைவில் உத்தமர்கோவில் என அழைக்கப்படும் வைணவத்தலமும் அமைந்துள்ள மும்மூர்த்தித் தலம். பிரம்மா, சரஸ்வதிக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

கூடல்: மதுரை மாநகரில் அமைந்துள்ள வைணவ திவ்யதேசம். ‘கிருத மாலா’ எனும் ஆறு இரண்டாகப் பிரிந்து இந்தத் தலத்தை மாலைபோல் சுற்றி வந்து மீண்டும் ஒன்று சேருவதால், கூடல் என்று பெயர் பெற்றது. கடம்ப மரம், தல விரட்சம். அஷ்டாங்க விமானத்தில் வீற்றிருந்த, நின்ற மற்றும் சூரிய நாராயணன் ஆக மூன்று கோலங்களில் சேவை சாதிக்கிறார் வைகுந்தநாதர். தாயார்:மதுரவல்லி.
               
  நட்சத்திர மந்திரம்
 
வருணம் வரதம் வந்தே ஸீதாகலச தாரிணம்|
  பாசஹஸ்தம் சதபி~க் தேவதாம் தேவ வந்தி தம்||
  
 மிருத்யுஞ்சய மந்திரம்
  மிருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பN;வ|
  அமிர்தேச்வராய சர்வாய மகாதேவாய நம||
     
               பூரட்டாதி
    
     ‘திருக்கோளிலி’ எனப்படும் திருக்குவளை திருத்தலம், தஞ்சை மண்டலத்தில் பிரதானமான ஏழு சிவத்தலங்களில் ஒன்று. இவற்றை சப்தவிடங்கத்தலம் என்பார்கள். கோள்களின் (நவக்கிரகங்களின்) குற்றங்களைப் பொறுத்து அருள் செய்ததால் ‘கோளிலிநாதர்’ என்றும் இவருக்கு பெயர். நவக்கிரக தோ~ங்களை அகற்றும் பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது.
   
இந்தத் தலத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்டு, பேருவகை கொண்ட நட்சத்திரம் பூரட்டாதி. அதுதான் குபேரன் பிறந்த நட்சத்திரம். வுhனில் இரண்டு நட்சத்திரத் தொகுதியாக விளங்குகிறது. இது. இரவில் வானம் தெளிவாக விளங்கும் காலத்தில் இந்த நட்சத்திரத்தைக் காண முடியும் என்பார்கள். அன்னை வண்டமர் பூங்குழலி என்று அழகுப் பெயர் பூண்டிருக்கிறார். ‘தேற்றா’ மரமே இங்கு தல விருட்சம். பூரட்டாதி நட்சத்திரத்தின் விருட்சமும் அதுவே.
   
தியாகராஜப் பெருமான், அவனிவிடங்கராக (உலகப் பாதுகாவலராக) இங்கே அருள் பாலிக்கிறார். இந்தத் தலத்து விநாயகர் தியாக விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
   
சுந்தரரின் அன்னதான சேவைக்காக குபேரன் நெல் வாரி வழங்கிய சம்பவத்தை, ‘நெல் அட்டிச் செல்லும் திருவிழா’ வாக, மாசிமக தினத்தன்று மிகவும் சிறப்பாக திருக்குவளையில் கொண்டாடுகிறார்கள். திருக்குவளை, திருவாரூர் மாவட்டத்தில், கச்சனம் அருகே உள்ளது.

             
  நட்சத்திர மந்திரம்
  ஸிரஸாஹம் அஜம் வந்தே ஏகபாதம் தமோபஹம்|
  தேவம் ப்ரோஷ்டபதேசானம் ஸர்வ தேவ நமஸ்க்ருத்||

  குபேர காயத்ரி

 ஓம் யகூராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி|
   தந்நோ குபேர ப்ரசோதயாத்||
                          உத்திரட்டாதி
         
     திருநாங்கூர் எனும் வைணவ திவ்ய தேசத்தில், பராசவனம் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் 11 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்தப் பதினோரு கோயில்களிலும் வீற்றிருக்கும் கருடாழ்வார்கள் அனைவரும் திருநாங்கூரில் கூடி, பக்தர்களுக்கு தரிசனம் அளித்து மகிழ்விக்கிறார்கள். இந்த வைபவம் தை அமாவாசைக்கு மறு நாள் நிகழும். இந்தப் பதினோரு கருட சேவைகை; கண்டு மகிழ, லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர்.
   
  திருநாங்கூரில் எம்பெருமான், நின்ற கோலத்தில், நிலமகள், திருமகளோடு, புருஷோத்தம பெருமாள் என்ற திருநாமம் கொண்டு சேவை சாதிக்கிறார். தாயார் புருஷோத்தம் நாயகி, தனி சந்நிதி கொண்டுள்ளாள். திருக்கோயிலின் வடக்கே உள்ள திருக்குளமே திருப்பாற்கடல் ஆகும். தல விருட்சம் வேம்பு.
   
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்விக்கப்பட்ட திருக்கோயில் இது. எதிரில் ‘நம்பினார்க்கன்பன்’ கோயில் என்ற சிவாலயம் உள்ளது. மகாதேவ பீடம் என்று அதனை அழைப்பர். இந்தக் கோயில் தவிர வேறு பல சிவன் கோயில்களும் இந்தத் தலத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கின்றன. அதாவது பதினோரு வைணவக் கோயில்களுக்குச் சமமாக, பதினோரு சிவாலயங்கள் இருக்கின்றன. சைவமும் வைணவமும் ஒன்றுக்கொன்று இயைந்து தழைத்தோங்கிய திருத்தலம் இது. திருநாங்கூர் திருத்தலம் நாகை மாவட்டம், சீர்காழிக்கு தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது. அதன் அருகில் திருவெண்காடு, பூம்புகார் ஆகிய திருத்தலங்களும் உள்ளன.
   
உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு இன்னொரு பரிகாரக் கோயிலும் உள்ளது. அது, வைத்தீஸ்வரன் கோயில், புள்ளிருக்குவே;ர் என அழைக்கப்படும் தேவாரத் திருத்தலம் நாகை மாவட்டத்தில் உள்ளது. ‘செவ்வாய்’ பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள செல்வமுத்துக் குமாரசுவாமி, தனிச்சிறப்பு பெற்றவர். இந்தத் திருத்தலத்தில் உள்ள வேம்படி ஆதி வைத்தியநாதரும், சித்தாமிர்த தீர்த்தமும் திருச்சாந்ருண்டை என்ற பிரசாதமும், எல்லா நோய்களையும் வினைகளையும் தீர்க்க வல்லவை என்கிறார்கள்.
       
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை அஹிர்புத்னீயர். திருமாலின் அம்சத்துடன், சங்கு – சக்ரதாரியாகக் காட்சி தருபவரே அஹிர்புத்னீயர். அர்த்தநாரீசுவரர் என்று சிவசக்தி சொரூபத்தைக் கூறுவது போல, திருமாலும் திருமகளும் இணைந்த வடிவமாகவும் இதைக் கூறுகிறது. சிவபெருமானைத் துதித்து, ‘சுதர்சனம்’ என்ற சக்ராயுதம் பெற்றார் திருமால். ஜலந்திரன் என்ற அசுரனைஅழித்திட எம்பெருமான், தனது கால்விரல் நகத்தினால் பூமியில் வட்டமாகக் கிழிக்க, அதை அசுரன் பெயர்த்தெடுத்தபோது, அதுவே ஆயிரமாயிரம் பற்கள் கொண்ட சக்ராயுதமாக மாறி, அவன் தலையைக் கொய்ததாம். அந்த சக்ராயுதமே ‘சுதர்சனம்’. சுதர்சன ஹோமம் நடத்துவது பற்றிய விதிமுறைகள், ‘அஹிர்புத்னீய சம்ஹிதை’ என்ற வடமொழி நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
   
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை, விஷ்ணுவின் அம்சமானதால், திருமாலையும், திருமகளையும், காமதேனுவையும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இஷ்டதெய்வங்களாகக் கொள்ளலாம்.      
                
    நட்சத்திர மந்திரம் 
   அஹிர்மே புத்னியோ பூயாத்முதே ப்ரோஷ்டபதேச்வர:|
   சங்க சக்ராங்கித கர: கிரீடோஜ்வல் மௌலிமான்||
   
காமதேனு காயத்ரி
   ஓம் காம காமாய வித்மஹே சர்வஜித்யை ச தீமஹி|
   தந்நோ தேனு ப்ரசோதயாத்|
                               
 ரேவதி
   
   
ரேவதி நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்  

இலுப்பைப்பட்டு: நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு மேற்கில் 13கி.மீ தொலைவில் மணல்மேடு என்ற ஊரக்கு அருகில் உள்ளது. தலவிருட்சம் இலுப்பை ஆனதால் இலுப்பைப்பட்டு என வழங்கப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் பூஜித்த ஐந்து லிங்கங்கள் இங்கு உள்ளன. இதில் தருமபுத்திரர் பூஜித்த லிங்கம் நீலகண்டேசுவரர். அம்மன் - அமுதகரவல்லி.
இரும்பை மாகாளம்: திண்டிவனத்திலிருந்து 30கி.மீ தொலைவில்
உள்ளது. கடுவெளிச்சித்தர் தவம்புரிந்த தலம். இலுப்பை என்பதே இரும்பை என்று ஆயிற்று என்பர்.

திருவனந்தபுரம்: கேரள மாநிலத் தலைநகரம். அனந்தபத்மநாப
சுவாமி ஆலயம். தல விருட்சம் இலுப்பை.
            
   நட்சத்திர மந்திரம்
    பூஷ்ணம் பரமம் வந்தே ரேவதீசம் ச ம்ருத்யே|
    வராப யோஜ்வயகரம் ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்||;
    
 மகாவிஷ்ணு காயத்ரி
    ஓம் நாராயணாய வித்மஹே வாஸீதேவாய தீமஹி|
    தந்நோ வி~;ணு ப்ரசோதயாத்||  

No comments: