Wednesday, 13 April 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ரிசபம்

ரிசபம்;

ரிசபம் ராசியினரின் சிறப்பே அழகான முகமும்,இனிமையான குனமும் தான்...துன்பம் வரும் வேளையிலும் சிரிப்புதான் இவர்கள் தனிச்சிறப்பு ..தானும் சந்தோசமாக இருக்க வேண்டும் தன்னை சார்ந்தவர்களும் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்...சுக்கிரனின் ராசியை கொண்டவர்கள் என்றால் அழகுக்கும்,சுகவாசத்துக்கும் குறைவே இல்லை அலங்காரம் செய்துகொள்வதில்,அழகாக உடை உடுத்துவதில்,ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக விருப்பம் உடையவர்கள்... அதற்கு ஏற்றவாறு சுலபமாக பணம் சம்பாதிப்பதிலும் சமர்த்தர்கள்.. 

நல்ல பேச்சு திறமை...நச்சுன்னு பாய்ண்ட் பாய்ண்டா பேசுவாங்க...நிறைய ஆசைகள் ,கனவுகள் வெச்சிருப்பீங்க...பைக் தவணை பயமுறுத்திக்கொண்டிருந்தாலும் பென்ஸ் கார் வாங்கினா என்ன கலர் வாங்கலாம் என கனவு காணும் தைரியம் இவர்களுக்கு மட்டுமே உண்டு...

ராசிக்கு கடந்த ஒன்றரை வருடமாகவே  கண்டக சன நடந்து வருகிறது...கண்டக சனி உங்கள் இயல்பை  மாற்றி விட்டது..இதுவரை பார்க்காத மருத்துவமனை வாசம் எல்லாம் அனுபவித்திருப்பீர்கள்...சிலர் தொழில் மந்த நிலையை அனுபவித்திருப்பீர்கள். சனி ராசிக்கு ஏழில் வந்தால் தொழிலுக்கு தொழில் ஸ்தானம் பாதிப்பதால் தொழிலில் மந்தம்,நஷ்டம்,வருமான இழப்பு உண்டாக்கும்....ராசிக்கு குருவும் சாதகமான நிலையில் இல்லாததால் சிலர் கலக்கால் வைத்து ,ஆடம்பர வீடு கட்டி அது லோன் மூலம் சிக்கலை சந்தித்து கொண்டிருப்பார்கள்..சிலர் மனை வாங்கியதில் கடன் நெருக்கடியை அனுபவித்துக்கொண்டிருப்பார்கள் குரு 4ல் வந்தபோது பலரும் வீடு,வாகனம் வாங்கினார்கள்..அதில் பலரும் கடன் நெருக்கடியில் தான் இருக்கிறார்கள்...

வரும் ஆகஸ்ட் மாதம் குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிக சாதகமான நிலையை உண்டாக்கும்.. தடையாக இருந்த  வருமானம் அதிகரித்து கடன் பிரச்சினையை தீர்க்கும்.. தொழிலில் முன்னேற்றம்,வளர்ச்சியை உண்டாக்கும்..விரக்தி,உற்சாகமின்மை எதனால் வருகிறது..? வரவை விட செலவு அதிகரித்தல்,உறவுகள் பகை,தண்டச்செலவுகள் தானே....இது மட்டுமில்லாமல் தேவையற்ற எதிர்கால பயத்தையும் கண்டக சனி உங்களுக்கு கொடுத்து விட்டது.தொழில் தள்ளாடுதே ,வெளிநாட்டில் இனியும் பணிபுரிய முடியுமா...இதை நம்பி இன்னும் எத்தனை நாள் இருப்பது என சிலரும்,எதிர்பாராத சில அதிர்ச்சியால் பலரும்,தினசரி குழப்பத்தில் தவிக்கிறார்கள்...

கண்டக சனி வந்தது முதல் ரிசப ராசியினர் பலருக்கு மன நிம்மதி இல்லை அடுத்து என்ன செய்வது இனி என்னதான் நடக்கும் என்ற மன இறுக்கத்திலேயே இருக்கிறார்கள் ..அவையெல்லாம் குருப்பெயர்ச்சி வந்தால் மாறும்....மீண்டும் சந்தோசமான இயல்பான நிலைக்கு வருவீர்கள்.. சிலருக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும்.. பணி புரியும் இடத்தில் பதவி உயர்வும் கிடைக்கும்..

ராசிக்கு 7ஆம் இடத்தில் செவ்வாய் சனியுடன் சேர்ந்து இருப்பதால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்குள் பிரச்சினை,பிரிவினை சிலருக்கு உண்டாகியிருக்கும்...நன்றாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் சூன்யம் வெச்சது யாரு என புலம்புவீர்கள்..செவ்வாய் ஆவணி மாதம் வரை இருப்பதால் வாழ்க்கை துணைவருடன் அடக்கி வாசிப்பது நலம்...இல்லையெனில் சிறு பிரச்சினையும் எரிமலையாய் வெடிக்கும்....

11.8.2016 க்கு பின் எல்லா குழப்பங்களும்,எல்லா தடைகளும் நீங்கும்...வருமானம் உயரும்..மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி பெருகும்...இதுவரை அதிகம் கோயில் செல்லாத நீங்கள் இப்போது அதிகம் கோயில்கள் பக்கம் தென்படுகிறீர்கள் குலதெய்வம் கோயிலில் 16 அபிசேகங்கள் செய்து அரச்சனை வழிபாடு செய்யுங்கள் ...தானம்,தர்மம் செய்யுங்கள் சனிக்கு அதுதான் பிடிக்கும்...திருப்பதி அல்லது திருச்செந்தூர் சென்று அதிகாலையில் பொறுமையாக வழிபடுங்கள்..!!


சித்ரா பெளர்ணமி அன்னதானம்;

சித்திரை மாதத்தின் பெரும் சிறப்பு, சித்ரா பெள்ர்ணமி தினமாகும்..புராண‌க் கதைக‌ளி‌ன்படி, ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண‌ணிய‌க் கண‌க்குகளை எழுது‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌ன்றுதா‌ன்....அன்று நாம் செய்யும் புண்ணிய காரியங்கள் பல ம்டங்கு பலன்களை கொடுக்கும்...

சித்ரா பெளர்ணமி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு வழக்கம் போல அன்னதானம்,ஆடைதானம் செய்ய இருக்கிறோம்..இணைந்து செய்ய விரும்புவோர், மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com cell;9443499003

No comments: