Tuesday, 19 April 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம் 

விசாகம் 4 ,அனுஷம்,கேட்டை போன்ற நட்சத்திரங்களை கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே....அன்பு,மனிதாபிமானம்,இரக்க சுபாவம் அதிகம் கொண்டவர் நீங்கள்...எல்லோரும் நல்லாருக்கனும் என நினைப்பவர்.வாழ்வில் அதிகம் போராட்டம்,சோதனைகளையே சந்தித்துகொண்டிருப்பதும் விருச்சிகம் ராசிக்காரர்தான்...எவ்வளவு துன்பம் வந்தாலும் நான் சிரித்துக்கொண்டே அழுகிறேன் டைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்...

பொதுத்தொண்டு,மக்கள் தொண்டு,ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் கடினமாக உழைப்பவர்....குடும்ப வாழ்வில் முரணான வாழ்க்கை துணை அமைந்து ,ஏட்டிக்கு போட்டியாக குடும்ப வாழ்க்கை அமைந்தாலும் உங்களைப்போல யாரும் அனுசரித்து செல்ல மாட்டார்கள்..மன உறுதி,வைராக்கியம் அதிகம் இருப்பதால் எவ்வளவு சோதனைகளையும் தாங்குகிறீர்கள். அதனாலோ என்னவோ, கடவுள் உங்களையே அதிக பாரம் சுமக்க வைக்கிறார்..

உங்க ராசிக்கு ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று விருச்சிகம் ராசியிலியே இருப்பதால் தன்னம்பிக்கை பலப்படும். ஆவணி மாதம் வரை அவர் அங்கேயே இருப்பதால் துணிச்சலுடன் பல காரியங்களை செய்து மற்றவர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள்...தனாதிபதி குரு 10ல் இருப்பதால் சிலர் வேறு கம்பெனிக்கு மாறியிருப்பார்கள். சிலர் முயற்சி செய்வர்..இடமாறுதல் செய்வதால் தொழில் முன்னேற்றம் அடையும்...சிலர் வீடு மாறுவார்கள்..ஜென்ம சனியில் வீடு மாறிக்கொள்வது நல்லது...தொழிலில் பிரச்சினை ஏற்பட்டு சிலர் வெளியூர் ,வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படும்...10ல் குரு இருப்பதால் பணிபுரியும் இடத்தில் பல தொல்லைகள்,சங்கடங்கள் இருக்கும். சொந்த தொழில் மந்தமாக காணப்படும் முதலீடு செய்தல்,தொழிலை விரிவாக்கம் செய்தல் போன்ற புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது...

கூட்டு வியாபாரத்தில் பிரிவினை உண்டாக நிறைய வாய்ப்பிருக்கிரது...பார்ட்னரால் ஏமாற்றம் உண்டாகும் என்பதால் வரவு செலவை கண்காணிப்பது அவசியம்..கண்மூடித்தனமாக நம்பினால் யாரை பெரிதும் நம்புகிறீர்களே அவர்களால் பெரிய ஏமாற்றத்தை சந்திக்கப்போகிறீர்கள் என அர்த்தம்...உறவினர்கள்,நண்பர்கள் பகை இருந்துகொண்டே இருக்கும். நம்மை அவர்களும் புரிந்துகொள்ள மாட்டார்கள்..நாமும் அவர்களை புரிந்துகொள்ள மாட்டோம்..ஏதோ ஒரு சிக்கல் தகவல் தொடர்பில் இருந்துகொண்டே இருக்கும். கடினமான வார்த்தைகளை யார்மீதும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது

ஆடி மாதம் குருப்பெயர்ச்சி ஆனால் வருமானம் பல மடங்கு பெருகும் கடன்கள் அடைபடும் தொழில் பயம் நீங்கும்.பதவி உயர்வு தேடி வரும். அடகு வைக்கப்பட்ட நகைகள் மீட்கப்படும் ...ஆகஸ்ட் மாதம் வரை வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை. அலைச்சல் நிறைய இருக்கும்...சனி ஜென்ம ராசியில் இருப்பதால் தொட்ட காரியங்கள் ஒரு சில தடைகளுக்கு பின்னர் மெதுவாகத்தான் நடக்கும்....பதட்டமாகி கொண்டே இருந்தால் உடல் ஆரோக்கியம்தான் பாதிக்கப்படும். 

வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாட்டுக்கு பஞ்சம் இல்லை குழந்தைகளுக்காக வாழ்வதுதான் விருச்சிகம் ராசியின் அடிப்படை இயல்பு..குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் துடித்துப்போய்விடுவார்கள்..வாழ்க்கை துணை கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு,வீட்டில் வயதானோர்க்கு உடல்பாதிப்பு,இவை வரிசையாக வந்து தொல்லை செய்யும். மன உறுதியுடன் ,சகிப்புதன்மையுடன் இந்த சோதனைகளை எல்லாம் தாண்டி வரவேண்டும் பண நெருக்கடி ,வருமான குறைவு பயமுறுத்தினாலும் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் தன்னம்பிக்கையுடன் எல்லா சோதனைகளையும் வெல்வீர்கள்..

செவ்வாய் தோறும் முருகனை வழிபடுங்கள்..நேர்த்திகடன்களை செலுத்துங்கள் குலதெய்வத்தை வழிபடுங்கள் நல்லதே நடக்கும்...!!

No comments: