Wednesday, 13 July 2016

ஆடி மாசம் என்ன விசேஷம்..? இதுவரை அறியப்படாத தகவல்கள்

 வரும் சனிக்கிழமை ஆடி மாசம் பிறக்குது...ஆடி 1 தலையாடி என சொல்வாங்க...ஆடி மாசம் சூரியன் கடகம் ராசியில் நிற்கும்...அது சந்திரனின் ராசி...தாயும் தந்தையும் ஒண்ணா இருப்பது போல...ஆனாலும் சந்திரன் நீர் கிரகம்,மென்மையான கிரகம் ஆச்சே..சூரியனின் வெப்பம் தாங்குமா...தண்ணீருக்குள் நெருப்பை போட்டால் கொதிக்குமே...


ஆடி மாசத்தில் தொற்று நோய்கள் நிறைய உருவாகும்...சின்ன பூச்சிகள் ,எறும்புகள் தொல்லை அதிகம் காணப்படும்..பூமிக்குள் இருக்க முடியாமலோ என்னவோ.நுண் கிருமிகள் காற்றில் அதிகம் பரவும்.அதனால் அம்மன் அவதாரம் எடுக்க வேண்டிய காலமாகிறது....

அம்மனுக்கு வேப்பிலை சாற்றி ,மஞ்சளால் குளிப்பாட்டி பூஜை செய்கிறோம்..இவையெல்லாம் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகள் என அறியவும்., அம்மனை வழிபட உகந்த மாதம் ஆடி மாதம்.

 ஒரே நாளில் 3 விசே‌ஷங்கள்:

ஆகஸ்டு 2–ந்தேதி
ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி
இந்த வருடம் ஆகஸ்டு 2–ந்தேதி அன்று ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி போன்ற முக்கிய 3 விசேஷங்களும் சேர்ந்து வருகிறது.

ஓவ்வொரு மாதமும் அமாவாசை வருவது இயல்பு. இதேசமயம் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையை சிறப்பாக போற்றுகிறார்கள்.
இந்த நாளில் சிவலாயங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சதுரகிரிமலை, ராமேசுவரம், அழகர் கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் குவிவார்கள். மேலும் மறைந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்பணம் செய்யக் கூடிய நாளாகவும் ஆடி அமாவாசை திகழ்கிறது.

ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசே‌ஷத்திலும் விசே‌ஷமாகும். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிக்கு ஏற்ப இந்த நன்நாளில் கிராமங்களில் பெரும்பாலோனோர் தங்களது வீடுகள் முன்பு உள்ள காலி இடங்களில் விதைபோட்டு (பயிர்குழிஅமைத்து) வீட்டு தோட்டம் போடுவார்கள். மேலும் விவசாயத்திற்கு உகந்த நாளாகவும் போற்றப்படுகிறது.

இதே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த கள்ளழகருக்கு தீர்த்த உற்சவம் நடைபெறுவதும் தனி சிறப்பு. இதோடு சாமியாடிகள் மற்றும் பக்தர்கள் அழகர்கோவிலில் நூபுரகங்கையில் தீர்த்தமாடி வீடுகளுக்கு புனித தீர்த்தம் எடுத்து செல்வார்கள்.

 --------------------------------------------
 
 நம் உடல் செல்கள் சிதையாமல் பாதுகாப்புடன் இருக்க ,ஆடி மாதத்தில் சீதோஸ்ண நிலை மாறுவதால் ,நெஞ்சுசளி ,காய்ச்சல் போன்ற அவதிகளில் இருந்து தப்பிக்க ஒரு வழி...

காபி,டீ குடிப்பதற்கு பதிலாக இதை பயன்படுத்தவும்...

கொத்தமல்லி யை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.காய்ந்த இஞ்சியை சுக்கு தோலை நீக்கி விட்டு தட்டி பொடியாக்கிக்கொள்ளவும்...பனை வெல்லம் வாங்கி வைத்துக்கொள்ளவும்..மூண்றையும் தன்னீரில் போட்டு கொதிக்க வைத்து அதை காலை மாலை அருந்தவும்..வாசனைக்காக ஏலக்காய் சேர்க்கலாம்...இவற்றை பொடியாக்கி வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்..

காபி,டீ குடிக்கும்போது நல்லாருக்கும்.ஆனால் விரைவில் நரம்புகள் தளர்ந்து விடும்....செல்கள் சிதையும் .செல்கள் சிதைந்தால் முதுமை தோற்றம் விரைவில் வந்து விடும்..

பால் சேர்க்காமல் குடிப்பது நல்லது...வர சுக்குமல்லி காபி இதுதான்...

-நல்ல நேரம் சதீஷ்குமார்

No comments: