Monday, 22 August 2016

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தரும் கிரக அமைப்புகள்

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வாழ உதவும் கிரகங்கள் சந்திரன் ,சுக்கிரன் தான் உதவுகிறது..காதல்,அன்பு,உல்லாசம் இவற்றுக்கெல்லாம் இவர்களே அதிபதியாக இருக்கிறார்கள்.சந்திரன் 6,8,12ல் மறையாமல் இருந்தால் பணம் இருக்கோ இல்லையோ நிம்மதி இருக்கும்..பாவ கிரகங்கள் சனி,செவ்வாய்,ராகு,கேது கூடாமல் பார்க்காமல் இருக்கனும்.
சந்திரன்,சுக்கிரன் கெடாமல் இருந்தாலே அழகான மனைவி,கைநிறைய பணம்,ஆடம்பர வாழ்க்கை,அறிவான குழந்தைகள் அமைந்து விடும்.இவங்க கடுமையான உழைப்பாளிகள் அல்ல.பணம் சம்பாதிக்க சிரம்படுவோர் அல்ல.அப்பா சம்பாதிச்சு வெச்சிருப்பார்.மனைவி பக்கம் நிறைய சொத்தோடு வந்திருப்பாங்க...தாத்தா சொத்தே பல தலைமுறை காணும் எனும் ரகம் இவர்கள்...
ரிசபம்,துலாம் ராசியினருக்கு ராசிநாதனும்,சந்திரனும் லக்னத்துக்கு மறையாமல் இருந்தால் இப்படி வாழ்வார்கள். இல்லை எனில் நல்லா சாப்பிட்டு ஆடம்பர செலவை கடன் வாங்கி செய்துவிட்டு சந்தோசமா இருப்பாங்க.


புதன் அறிவை குறித்தால் மூளையை குருபகவான் குறிக்கிறார்....குரு கெடக்கூடாது புதனும் கெடக்கூடாது...குரு பலமாக இருப்பவர்களுக்கு மூளை உழைப்பு அதிகம்...மூளை எனில் நுணுக்கமான சிந்தனையில் விளையும் திறமையை குறிக்கும்..குரு திசை நடப்போருக்கு ,குரு பலவீனமாக இருந்தால் ,மூலை சார்ந்த பாதிப்புகள்,சிறுநீரக பாதிப்பு,இருதய கோளாறு அறுவை சிகிச்சை சந்தித்துதான் ஆக வேண்டி இருக்கிறது..புதன் என்பது சாமர்த்தியமான அறிவை குறிக்கும்....கில்லாடி எனப்படுவோர் புதன் ஆதிக்கம் உடையோர்தான்.புதன் ராசியினரான மிதுனம்,கன்னி ராசியினரையும் சொல்லலாம்

ஒவ்வொரு கடவுளும் ஒரு சின்னத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்..சின்னம் அதிர்ஷ்டம் தரும்..பெரிய நிறுவனங்களின் சின்னம் லோகோ வை பார்க்கும்போதெல்லாம் அதை பற்றி நிறைய யோசிப்பேன்...ஆடி கார் சின்னம் வளையம் வளையமாக நான்கு சக்கரங்களை நினைவுபடுத்தும்..அவர்களின் தொழிலுக்கும் சின்னத்துக்கும் பொருந்தி போகிரது ஜாகுவார் சின்னம் சிறுத்தை..அவர்களது வாகனம் சிறுத்தை வேகத்தை நினைவுபடுத்தும்படி வடிவமைத்து இருக்கின்றனர்.
தேர்சக்கரம்,சக்கராயுதம்,தேர் ஓட்டி என பகவான் கிருஷ்ணரை சுற்றி சுற்றி இவை ஏன் வருகிறது என பார்த்தால் அவர் நட்சத்திரம் ரோகிணி..அதன் அமைப்பு சக்கரம் போன்றது...தேர் போன்றது.
சிவன் கையில் இருக்கும் மான் சின்னத்துக்கும் திருவாதிரைக்கும் சம்பந்தம் உண்டு.சிங்கத்தின் மீது இருக்கும் காளி ,முருகனிடம் இருக்கும் வேல்,வினாயகரின் காலடியில் மூஞ்சூரு எலி என எல்லாமே லோகோ போன்றவை..அவர்கள் வாகனம் ஒவ்வொன்றிலும் ஒரு கணக்கு இரு
முழுமையான வளர்ச்சியை அடையாதவை எல்லாம் புதன் அம்சமே.அரவாணிகள் முழு வளர்ச்சி இல்லாதவர்கள்.அவர்களை கிண்டல் செய்தால் தோசம் உண்டாகும் அர்த்தநாரி அம்சமான அவர்களை தொழில் செய்யும் இடத்துக்கு அழைத்து விருந்து செய்தால் தொழில் முடக்கம் தீரும்.மக்கள் வசியம் உண்டாகும்...
ஒரு அரவாணி என்னிடம் பத்து ரூபா கொடுப்பா என்றார் முடியாது என்றேன்.ஹீரோ மாதிரி இருந்துட்டு ஜீரோ மாதிரி இல்லைன்னு சொல்றியே என்றார்.அந்த வார்த்தை விளையாட்டை ரசித்தேன்.பத்து ரூபா கம்மி.இன்னும் தரேன்.முதல்ல சாப்பிடுங்கன்னு ஓட்டலில் சாப்பிட வெச்சி என் அலுவலகம் அழைத்து 100 ரூபாய் கொடுத்தேன்.ரூபாயை மடித்து என்னை மூணு முறை திருஷ்டி சுற்றிய அழகே தனி.சந்தோசமாக வாழ்த்திட்டு போனார்.
இதுபோல சூட்சும பரிகாரங்கள் தான் நம்மை உயர்த்தும்.


Wednesday, 3 August 2016

ஆடி அமாவாசை அன்னதானம் 2016

ஆடி அமாவாசை அன்னதானம் 2016

நேற்று முப்பெரும் திருவிழாவாக அமைந்து விட்டது....ஆடி 18க்கு நிறைய பெண்கள் ஆற்று மணலில் கன்னிமார் பொம்மைகள் செய்து காதோலை கருகமணி வைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்...அம்பிகை கருவுற்றிருப்பதாக ஐதீகம் என்பதால் ஆடி 18 ஐ,காவிரிப்பெண்ணுக்கு பூஜித்து வழிபட்டனர் இன்னும் பல பெண்கள் ..புதுத்தாலி கட்டிக்கொண்ட புதுத்தம்பதிகள் இன்னொரு பக்கம் என ஆடி 18 காவிரி,தாமிரபரணி ,பவானி நதிக்கரைகளில் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது..

குருப்பெயர்ச்சி என்பதால் காலை முதல் யாகங்களும்,வழிபாடுகளும் என சிவ ஆலயங்கள் அமர்க்களப்பட்டன...நான் நமது நண்பர்கள் அவர்கள் குடும்பத்தார் உட்பட அனைவரும் நலம் வாழ சிறப்பு அர்ச்சனை வழிபாட்டுக்கு இரண்டு கோயில்களில் பெரிய பெயர் லிஸ்ட் கொடுத்து ,மலர் மாலைகள் கொடுத்து பூஜைக்கு ஏற்பாடு செய்தேன்.பாவம் ஐயர்கள் கூட்டத்தில் யாரை கவனிப்பது என திணறிக்கொண்டிருந்தனர்.

ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பனம் புஜை பவானி ,கொடுமுடி ,திருச்சி அம்மா மண்டபத்தில் மக்கள் வரிசை கட்டி அமர்ந்திருந்தனர்...பிராமணர்கள் முறைப்படி மந்திரம் சொல்லி திதி கொடுக்க முடியாத அளவு திதி நெரிசல் அதிகம் இருந்தது....

ஒவ்வொரு முக்கிய கோயில்கலிலும் லட்சக்கணக்கான மக்கள் என தமிழகம் முழுக்க எல்லா கோயில்களிலும் மக்கள் வெள்ளம்தான்..நிம்மதியாக தரிசனம் செய்வது அரிது என்றாலும் ,நல்ல நாளில் கோயிலுக்கு போகாமல் இருந்து நமக்கு பழக்கமில்லையே ...கோயிலில் கால் வைத்து விட்டு வந்தால் போதும் என்ற மனநிலைதான் நேற்று எல்லோருக்கும் இருந்திருக்கும்...
காவிரி போன்ற புனித நதிகளில் நீராடினாலே பெரும் புண்ணியம் என்பதால் நேற்று அதிகாலையில் காவிரியில் குளித்து சூரியனை சிவமாக பாவித்து வந்தாலே மிக சிறப்பு.

அன்னதானம் செய்வதாக நாம் சொன்னதும் வழக்கமாக அன்னதானம் செய்ய நன்கொடை அளித்து உதவும் நண்பர்கள் ,இந்த முறையும் நன்கொடை அனுப்பி நன்றாக செய்யுங்கள் என ஊக்கமளித்தனர்.புதிய நண்பர்களும் இணைந்து கொண்டனர்.

ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் இரண்டு ,ஊனமுற்ற குழந்தைகள் ,கண் பார்வையற்றோர் க்கு ஆடி அமாவாசை அன்று அன்னதானம் செய்யப்பட்டது..

நன்கொடை வழங்கிய நண்பர்கள் அவர்களது குடும்பத்தினர் பெயரில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபவான் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை வழிபாடு பிரார்த்தனை செய்யப்பட்டது...அடுத்த அன்னதானம்,ஆடைதானம் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்று நடைபெறும்.

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.