Friday, 14 October 2016

உங்க ராசிப்படி நீங்க எப்படி ? 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை


உங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை;

சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம்


வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென்று போய்க்கொண்டே இருக்கும் ராசிகள் சர ராசிகள் எனப்படும்..அந்தளவு வேகம் நிறைந்தவர்கள் ..ஒரே பாட்டில் பணக்காரன் ஆக வேண்டும் என்பது போல பம்பரமாக சுழலக்கூடியவர்கள்...

இவர்களுக்கு குடும்பம் என்பது அடிக்கடி மறந்து போய்விடும்..வீட்டை விட வெளியில் இருக்கத்தான் அதிகம் பிரியப்படுவார்கள்...போனில்தான் பெரும்பாலும் இவர்களை பிடிக்க முடியும்.பெரும்பாலும் என்னைப்போல வேகம் இல்லை...எனக்கு ஆப்போசிட்டான குணம் இருக்குறதை கட்டி வெச்சிட்டாங்க என புலம்புவது வாடிக்கை. 

மேசம் ராசியினருக்கு ரொம்ப நாகரீகம்,அழகான,ஆடம்பர செலவு செய்யும் வாழ்க்கை துணை அமையும்..ஊட்டி போலாமா கொடைக்கானல் போகலாமா..கார் எப்போ வாங்கலாம் என்ற ரீதியில்தான் பேச்சு இருக்கும்..செலவு கொஞ்சம் கூட செய்வார்கள்..ஆனாலும் மத்தவங்க கிட்ட பெருமையா சொல்லிக்குற மாதிரி துணைதான் அமையும்..எப்பவாவது ஜாலின்னா பரவாயில்லை..எப்பவுமே ஆட்டம் பாட்டம்ன்னா எப்படி..?ன்னு எதிர்பார்ட்டி புலம்பும்.

துலாம் ராசியினருக்கு அதிகாரமா பேசக்கூடிய,கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கை துணை அமையும்.எல்லோரும் என் பேச்சை கேளுங்க..நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்..விட்டுக்கொடுத்து போனாதான் கெட்டு போகாம வாழலாம்..

கடகம் ராசியினருக்கு குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் திருப்தி அளிப்பதில்லை காரணம் 7ஆம் வீடாக சனி வீடு வருவதால் பல சிக்கல்கள் வருகிறது.பல கடக ராசியினர் ஏமாந்து விட்டேன் என புலம்புவதுதான் அதிகம்..எட்டுக்குடையவனும் அவர்தான் என்பதால் ,நஷ்டம் ஆவதும் ,போராடுவதுமாக இருக்கு.திருமன விசயத்தில் நிதானமாக முடிவெடுத்தால் நல்லது நடக்கும்..சனி பாதிக்காமல் இருந்தால் அமைதியான வாழ்க்கையாக இருக்கும்.

மகரம் ராசியினருக்கு ஊருக்குள்ள நல்ல செல்வாக்கு இருக்கும் வாழ்க்கை துணை அமையும்.அழகான அன்பான துணைதான் பெரும்பாலோனோர்க்கு அமைந்து இருக்கிறது.மனைவி வந்த நேரம்தான் நான் நல்லாருக்கேன் என சொல்லும் மகர ராசியினர் அதிகம்...சந்திரன் கெட்டால் மட்டுமே சிக்கலாகி விடுகிறது.

ஸ்திர ராசிகள் ;எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர்கள்..நிலையான எண்ணமும் செயலும் கொண்டவர்கள் இந்த ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ...இவர்களுக்கு வாழ்க்கை துணை எப்படி அமையும்...இது லக்னத்துக்கும் பொருந்தும்.ராசிக்கும் பொருந்தும்...பொதுவான கருத்துக்கள்தான்...ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறலாம்...ஆனால் அடிப்படை மாறாது.முடிந்தவரை இருப்பதை சொல்கிறேன்.

ரிசபம்-இவங்களும் ஸ்திர ராசி...வாழ்க்கை துணையும் ச்திரம் என்பதால் இருவருமே பிடிவாத கரர்கள்தான் சண்டை வந்தால் விடியும் வரை தீராது.ரிசபம் பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம்.வாழ்க்கை துணை அடிக்கடி மருத்துவ செலவை வைக்கும்.எதுவும் இல்லை எனில் புலம்ப ஆரம்பிச்சுருவாங்க..குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்டவர்கள் தான் இருவருமே என்பதால் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவு குடும்பம் நடக்கும்..ஆனால் இருவருக்குள்ள் அடிக்கடி பனிப்போர் நடக்கும்..
.
சிம்மம்;சிங்கத்து கிட்ட மாட்டிக்கிட்ட புள்ளி மானா தவிக்கிறேன்னு வாழ்க்கை துணை புலம்பல் தினசரி எதிரொலித்தாலும் தன் வால்யூமை குறிச்சுக்கவே மாட்டார்.அடிக்கடி சிங்க அவதாரம் எடுப்பதால் குடும்பம் அடிக்கடி டேஞ்சர் ஜோனுக்கு போய்தான் திரும்பும்.தொழில் மீது நல்ல பக்தி உடையவர்.வாழ்க்கை துணை அடிமை போல இருக்கனும் என்பார்..ஆனால் நல்ல மனுசன்..கோபம் இருக்குற இடத்துல குணமும் இருக்கும்...சிம்ம ராசிக்காரங்க பலாப்பழம் மாதிரி மேலதான் முள்ளு இருக்கும் உள்ளே முழுக்க இனிப்புதான் என்பதால் வாழ்க்கை துணை இவரை சரியா புரிஞ்சு வெச்சிருப்பாங்க..இருப்பினும் இவர்கள் அடிக்கடி மட்டம் தட்டுவதை ரசிக்க மாட்டாங்க..கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.ஆன்மீகம்,கடவுள் பக்தி கொண்டவர்களாக வாழ்க்கை துனை அமையும்.

விருச்சிகம்;இவங்களுக்கு வாழ்க்கை துணை நன்ராக அமையும்..ஆனா இவங்களே அடிக்கடி அதை துன்புறுத்தி பார்ப்பாங்க...நல்ல அழகு,இனிமை,சம்பாதிக்கும் திறன் இருக்கும் துணை அமைந்தாலும் அவங்க சொந்தக்காரங்க கிட்ட அவங்க காட்டும் ஈடுப்பாடு நமக்கு பிடிக்கிறதில்லை.மாமியார் பிரச்சினை அடிக்கடி தலை காட்டும்.அமைதியான வாழ்க்கை துணை அமையும்..அன்பும்,பாசமும் அதிகம்.நாகரீகமா நடந்துக்குவாங்க...அவங்க மாமனார் மாமியாரை மதிப்பாங்க ஆனா இவருக்குதான் அவங்க ஆளுகளை பிடிக்காது எல்லாம் சுயநலம் என்பார்கள்

கும்பம்;ரொம்ப கரெக்டா நடந்துக்குற வாழ்க்கை துணை அமையும்..கொஞ்சம் ஆணவமா பேசுவாங்க...ஆனா நல்லவங்கதான் ...நேர்மை,நியாயம் விரும்பும் வாழ்க்கை துணையாக இருக்கும்.குடும்ப வாழ்வில் அடிக்கடி ஈகோ பிரச்சினை தலைகாட்டும் இருவருமே சரிக்கு சரி பலமானவர்கள் என்பதால் யாரேனும் விட்டுகொடுத்தால் குடும்பம் கெட்டு போகாது.மாமனார்,மாமியார் பிரச்சினை இருக்கும்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.சமூகத்தில் நல்ல மதிப்பு கொண்டவர்கள் வாழ்க்கை துணையாய் அமையும்.கோபத்தை குறைச்சுக்குங்க உடம்புக்கும்,வீட்டுக்கும் நல்லது என வாழ்க்கை துணையிடம் அடிக்கடி சொல்ல வேண்டி வரும்.
உங்க ராசிப்படி நீங்க எப்படி ..4 மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்

உபய ராசிகள் என்பது மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகும்..இவை நான்கும் ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ராசிகளாகும்..நான்கு மூலைகளிலும் போய் சந்தில் மாட்டிக்கொள்கின்றன...அது போலவே இந்த ராசியினரும் எப்போதும் அடைபட்டு இருக்கும் குணமுடையவர்.

ஒரு பிரச்சினை என்றால் மனசு கஷ்டமாகி படுத்துக்கொள்வர்.அதிகம் செயல்படாத ராசி.வீடு தான் இவர்களுக்கு உலகம்.அலுவலகம் விட்டால் வீடு.குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பர்.நான் வாழ்வதே குழந்தைகளுக்காக என்பர்.அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்து விடுவர்.யார் என்ன சொன்னாலும் நம்புவர்.ஏமாந்தும் விடுவர்....வரவு செலவுக்கு இவங்க ஒத்து வர மாட்டாங்க..கடன் இவங்க யாருக்காவது கொடுத்தா திரும்பி வராது....பிஞ்சு மூஞ்சி என்பது இவர்களுக்குதான்.ஆனா சவுண்ட் பலமா இருக்கும்.

இன்னொரு உபய ராசியினரை கல்யாணம் செய்துகிட்டா பிரச்சினை இல்லை..ஆனா சர ராச்யினரை கல்யாணம் செய்துகிட்டா அவங்க என்ன சொல்றாங்களோ அதைதான் கேட்கனும்.மனைவி சொல்லே மந்திரம் என வாழ்வது இவர்கள்தான்.மாமனார் மாமியார்க்கு கட்டுப்பட்ட மாப்பிள்ளை...கல்யாணம் வரைக்கும் அம்மா,அக்கா,அண்ணன் தான் தெய்வம்..கல்யாணத்துக்கு அப்புறம் மனைவி,மாமனார் ,மாமியார்தான் தெய்வம் என வாழ்வது இந்த ராசியினர்தான்..பாசக்காரங்க...மென்மையானவங்க..
கடும் சொல் தாங்காதவர்கள்...கடுமையா உழைக்கவும் முடியாது...

மிகப்பெரும் அறிவாளிகள்..அறிவால்தான் சம்பாதிப்பர்.உடல் அழைப்பு ஆகாது.அது இவங்களுக்கு தெரியாது.....நிறைய சம்பாதிக்கும் வித்தை இவர்களுக்குதான் தெரியும்...பங்கு வர்த்தகம்,வங்கி பணி,ஆன்மீகம் சார்ந்தவை,பைனான்ஸ்,வியாபாரம் போன்றவற்றில் இவர்களே இருக்கின்ரனர்.உட்கார்ந்து சம்பாதிக்கும் எல்லா துறைகளிலும் இவர்களை பார்க்கலாம் ..

மிதுனம் ராசியினர் மனைவி /கணவன் சொல் மட்டும் கேட்டு நடந்து கொண்டால் எந்த ஆபத்தும் இல்லை.குடும்பம் நல்லாருக்கும்...மாமியாரால் ஆதாயம் உண்டு.
 
கன்னி ராசியினர் மனைவி ஆன்மீகம் கடவுள் பக்தி கொண்டவர். நல்லவர்.மாமனார்தான் அடிக்கடி வம்பிழுப்பார்.
 
தனுசு ராசியினர் மனைவி/கணவர் அறிவாளி.அவர்கள் சொல்படி செயல்படுவது உத்தம பலன் தரும்.
மீனம் ராசியினர் கணவன் /மனைவி கலகலப்பானவர் செல்வாக்கானவர்.உங்கள் கடும் சொல்தான் அடிக்கடி அவரை கடுப்பாக்கும்.மாமனாரால் ஆதாயம் உண்டு.#ஜோதிடம் #astrology

-ஆர்.கே.சதீஷ்குமார்,ஜோதிடர்,ஈரோடு 9443499003

No comments: