Tuesday, 19 December 2017

ஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..? சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020

அஷ்டம சனி,ஜென்ம சனி,கண்டக சனி என்ன செய்யும்..? சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020


வணக்கம் இன்று 19.12.2017 வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.58 க்கு சனி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்..

சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பாக இருக்கிறது என பார்த்தால் ரிசபம் ராசியினருக்கு அஷ்டம சனி ,மிதுனம் ராசியினருக்கு கண்டக சனி,கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி,விருச்சிக ராசியினருக்கு பாத சனி,தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ,மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது..

துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிகிறது சிம்மம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி முடிகிறது..விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது...கும்பம் ராசியினருக்கு கர்ம சனி முடிந்து லாப சனி ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கு பாக்ய சனி முடிந்து கர்ம சனி ஆரம்பிக்கிறது கடகம் ராசியினருக்கு ஜெய சனி ஆரம்பம்..சிம்ம ராசியினருக்கு பஞ்சம சனி ஆரம்பம்

ஜெய சனி ,பஞ்சம சனி ,லாப சனி இவையெல்லாம் நல்ல யோகத்தை தரும் துலாம் ராசியினருக்கு சனி மூன்றாம் ராசிக்கு செல்வதால் அது இனி நல்ல யோக பலன்களை கொடுக்கும்

அஷ்டம சனி என்பது தந்தைக்கு விரய ஸ்தானம் தந்தை வழியில் கர்ம காரியங்கள் மருத்துவ செலவினம் சமூகத்தில் மதிப்பு மரியாதையை கெடுத்தல் ,பணம் நஷ்டம் தொழில் மந்தம் இவற்றை அஷ்டம சனி தரும் சமூகம் என்பது உறவையும் குறிக்கும் சனி 3 மாதங்களுக்கு முன்பே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார் ...அஷ்டம சனி என்றால் எல்லோரும் பயப்படக்காரணம் சனி தொழில் காரகன் ..அவர் ராசிக்கு மறைந்தால் காலில் அடிபடுதல் சனிக்குண்டான தொழிலில் வசியம் இல்லாமல் போதல் போன்ற பலன்களை கொடுக்கும் என்பதாலும் நம்மை விட தாழ்ந்தவர்களால் அவமானம் உண்டாக்கும் என்பதால்தான்.

.தொழிலாளி என்பது சனி ..அவர் மறைந்தால் வேலைக்காரர்கள் இல்லாமல் ஒரு முதலாளி என்ன செய்ய முடியும்..சரி அடிமையாக இருப்போருக்கு ..? அவர்களுக்கு கையும் காலும் தான் வேலைக்காரன்...கை கால்கள் சோர்ந்து போனால் முதலாளி என்ன செய்ய முடியும்..கைகால்களில் பிரச்சினை உண்டானால் என்ன செய்ய முடியும்..? நான் பயமுறுத்துகிறேன் என எண்ண வேண்டாம் எச்சரிக்கையாக நீங்கள் இருக்க வெண்டும் என்பதற்காக சொல்கிறேன்.உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்திகள் நடப்பின் உங்களை பெரிதாக சனி பாதிக்க மாட்டார்..

ஏழரை சனியில் இரண்டாம் சுற்று பொங்கு சனி எனப்படும் இதில் கடுமையாக உழைத்தால் மட்டும் முன்னேறலாம் இதுதான் பெரும்பாலோனோர்க்கு நடக்கும் குழந்தையாக இருக்கும்போதே முதல் சுற்று முடிந்திருக்கும்...பொங்கு சனியில் நீங்கள் அதிகம் உடல் உழைப்பில்லாதவர் என்றால் உங்களை ஒரு வழி செய்யாமல் சனி போகமாட்டார்...சனிக்கு தேவை கடுமையான உழைப்பு அது இல்லாதவர்களுக்கு அதற்கு சமமாக அலைச்சலையோ சோதனையோ தராமல் போக மாட்டார்..ஒருத்தன் கேஸ் போட்டுட்ட்டான் எங்கியோ ஒரு கிராமத்தில் சுகமாக அதுவரை வாழ்ந்தவர் நகரத்துக்கு வழக்குக்காக அலைந்து அலைந்து ஒரு வழி ஆகிவிட்டார்..எல்லோருக்கும் இப்படி ஆகும் என சொல்ல முடியாது அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றவாரு சனி வேலை வாங்குவார் .எது சொன்னாலும் கேட்கலைன்னா  நான் சுகவாசியாதான் இருப்பேன்னு சொன்னாதான்  காலை கையை முடக்கம் செய்கிறார்

கண்டக சனி என்பது மனைவி அல்லது கணவன் வழியில் வரும் மன உளைச்சல் ..கணவனுக்கு அறுவை சிகிச்சை அல்லது மனைவி செய்து வந்த தொழிலில் நஷ்டம் என்பதால் கணவனுக்கு பன விரயம் ஆகிரதுய் என்றால் அது கண்டக சனியாகும்

அர்த்தாஷ்டம சனி என்பது ராசிக்கு நான்கில் வருவதால் இது தாய்க்கு பாதிப்பு நான்கு என்பதால் நம் உடல் சுகத்துக்கும்பாதிப்பு சிலர் வெளிநாடும் வெளிமாநிலமும் வெளியூரும் செல்வர் அப்படி சென்றால் தாய் தந்தைக்கு பாதிப்பு குறையும் இல்லையேலிருவருக்கும் மாறி மாரி மருத்துவ செலவு பங்காளி வகையில் இறப்பு,சிலர் வீடு கட்ட கடன் வாங்குவர் ...அல்லது நஷ்டத்துக்கு சொத்தை விற்பர் ..சிலர் குடும்பத்தில் எதிர்பாராத திருப்பங்கள் பிரச்சினைகள் உண்டாகும்..இது கன்னி ராசியினருக்கு இப்போது ஆரம்பத்திருக்கிறது ஏற்கனவே சோதனையில் தானே இருக்கோம் என்றாலும் சனி நகரும் ராசிக்கு ஏற்ற பலனை கொடுக்கத்தான் செய்வார்

சனிக்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்யுங்கள் ...


Monday, 18 December 2017

சனிப்பெயர்ச்சி 2017 -2020 உங்க ராசிக்கு நல்லது கெட்டது தெரிஞ்சுக்குங்கசனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 12 ராசிக்கும் சுருக்கமாக தெளிவாக ஏற்கனவே எழுதி இருக்கிறேன் அதை படிக்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் சென்று படிக்கவும்                        http://www.astrosuper.com/2017/01/2017-2020.html

மேசம் ராசிக்கு அஷ்டம சனி முடிகிறது..ரிசப ராசியினருக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கிறது..!!!.துலாம் ராசியினருக்கு ஏழரை சனி விலகுகிறது....மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்..விருட்சிக ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ஆரம்பம் ஆகிறது!! மிதுனம் ராசிக்கு கண்டக சனி ஆரம்பம்
துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது நல்ல விசயம்..அடுத்த ஐப்பசியில் ஜென்ம குருவும் முடிந்தால்தான் முழு நிம்மதி கிடைக்கும்.ஜென்ம குரு அலைச்சல்,விரயம்,பண முடக்கம்,வருமான தடையை உண்டாக்கும்..நல்ல பெயர் மட்டும் வாங்கி என்ன செய்றது அரிசி பருப்பா வாங்க முடியும் நிலைதான்


சிம்ம ராசியினருக்கு சனி ராசிக்கு 5ல் வருகிறார் இது கெடுதலான இடம் அல்ல..கடந்த இரண்டரை ஆண்டு அர்த்தாஷ்டம சனியுடன் ஒப்பிட்டால் இனி வரும் காலம் நிம்மதியான காலமே....!!

சோம்பலும் ,சலிப்பும் சனியின் நண்பர்கள்...சனியின் தாக்கம் குறைய உங்கள் வீட்டுக்கு மேற்கு திசையில் இருக்கும் பிரபலமான கோயில் சென்று வழிபடுங்கள்..அது எந்த கோயிலாக இருந்தாலும் சரி.சனிக்கிழமையில் அல்லது அமாவாசை ,பெளர்ணமியில் போகலாம்...பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயில் செல்வது ஆயுள் பலம் தரும்.


விருச்சிகம் ராசியினருக்கு பாத சனி நடக்கிறது...பாத தரிசனம் செய்தால் சனியின் பாதிப்புகள் குறையும்..தாய் தந்தைக்கோ அல்லது குருவுக்கோ பாத பூஜை செய்தாலும் பாதிப்புகள் குறையும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் எல்லா பெருமாள் கோயிலிலும் சனிக்கிழமையில் இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..ஸ்ரீரங்கம் சென்றால் இன்னும் சிறப்பு.
பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.
தமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரையும் சனிக்கிழமையில் வழிபடலாம்

Wednesday, 6 December 2017

சுபகாரியம் செய்ய நல்லநாள் பார்த்து செய்யுங்கள்மனிதன் இறக்கும் பொழுதும் ,பிறக்கும் பொழுதும் திதி ,,நட்சத்திரம் பார்த்து சடங்கு சாங்கியும் செய்யபடுகிறது .
மனித வாழ்வில் இவைகள் முக்கிய பங்கு கொண்டு இருக்கிறது என்று
கவனித்தால் புரியும் .

திதிகளை எப்படி பிரித்து உள்ளார்கள் என்று புரிந்து கொள்ளல் வேண்டும் .
1.குருட்டு திதி
2.ஒரு கண்ணுள்ள திதி
3.இரு கண்ணுள்ள திதி
4.நந்தை திதி
5.பத்ரை திதி
6.சபை திதி
7.பூரண திதி
என்றும்
அமரபட்சம் என்னும் தேய்பிறை
பூர்வபட்சம் என்னும் வளர்பிறை

இப்படி பிரித்து உள்ளார்கள் .
1.குருட்டு திதி என்பது
தேய்பிறையில் வரும் ஏகாதசி ,துவாதசி ,த்ரியோதசி,சதுர்தசி,
அமாவசை .

2.ஒரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் அஷ்டமி ,நவமி ,
வளர்பிறையில் வரும் பஞ்சமி ,சஷ்டி ,சதுர்தசி.

3.இரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் துவிதியை ,திரிதியை ,சதுர்த்தி ,பஞ்சமி ,சஷ்டி ,சப்தமி .
வளர்பிறையில் வரும் அஷ்டமி ,நவமி ,தசமி ,ஏகாதசி ,துவாதசி ,த்ரியோதசி

4.நந்தை திதி என்பது பிரதமை ,சஷ்டி,ஏகாதசி
5.பத்ரை திதி என்பது துவிதியை,சப்தமி,துவாதசி
6.சபை திதி என்பது திரிதியை,அஷ்டமி,த்ரியோதசி
7.பூரண திதி என்பது பஞ்சமி,தசமி,பௌர்ணமி .
குருட்டு திதியில்–சுப காரியம் செய்ய கூடாது .
ஒரு கண்ணுள்ள திதியில்-செய்யும் காரியும் அரை பலன்
இரு கண்ணுள்ள திதியில்–முழு பலன்
.நந்தை திதியில்–கலைகள் ,திருவிழா செய்ய
பத்ரை திதியில்–வாகனம் வாங்க, பிரயாணம் செய்ய
சபை திதியில்–கொடி மரம்,பந்தல் கால் நட
பூரண திதியில்–திருமணம் ,யாத்திரை செய்ய .
இப்படி வகுக்க பட்டது திதிகள் .
சுபகாரியம் செய்ய திதிகளை நன்கு கவனித்து செய்யுங்கள் சிறப்பான முன்னேற்ம் உண்டாகும்...

Tuesday, 14 November 2017

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா
நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..?
சிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக அந்த ராணி யாரும் நினைத்து பார்க்க முடியாத உத்தரவை பிறப்பித்தாள்
என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் ..அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை அவிழ்த்துவிடுங்கள் அப்போதுதான் குழந்தை பிறக்க வேண்டும் என சொல்ல அதன்படி செய்யப்பட்டது..தலைகீழாக இருந்து பிறந்ததால் அக்குழந்தை கண்கள் ரத்தமாக இருந்தன..அவர்தான் செங்கண் சோழன் ..சோழ ராஜ்ஜியத்தில் பெரும் சாதனைகளை செய்த மன்னன்..
என்னதான் சிசேரியனுக்கு நால் குறித்தாளும் ,பெரும் கிரகங்களான சனியும்,குருவும் இருக்கும் ராசியை மாற்ற முடியாது..லக்னத்தை மாற்றலாம்..ராசியை மாற்றலாம்..பூர்வபுண்ணியம்,வம்சாவழி தோசங்களை நீக்க முடியாது..அக்குழந்தை யோகசாலியாக இருப்பான் என அவன் விதி இருந்தால்தான் சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க முடியும் இதுவும் விதிப்படியே நடக்கும்
விதியை நீ மதியால் வெல்வாய் என்பதே உன் விதியாய் இருந்திருக்கும்..!!!

உங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம்
கிராமங்களில் பச்சை வைத்தல் எனும் சம்பிரதாயம் உண்டு...அதாவது ஒருவருக்கு வீட்டில் உடல்நலம் சரியில்லாமல் மோசமாக இருந்தால் ஆட்டையோ கோழியையோ அந்த ஊர் எல்லையில் இருக்கும் தெய்வத்துக்கு பழி கொடுத்து ஊரில் இருக்கும் எல்லோருக்கும் சாப்பாடு போடுவது ஆகும்...பசியோடு இருப்பவருக்கு சாப்பாடு போடுவது போன்ற உன்னதமான பரிகாரத்துக்கு நிகர் எதுவும் இல்லை..
அமெரிக்காவின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றவர் ராக் பெல்லர்.இவர் மகா கஞ்சன்.பணத்தை பெருக்குவதில் திறமைசாலி இவர் ஒருமுறை நடக்க முடியாமல் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் இருந்தார். உலகின் புகழ்பெற்ற மருத்துவர்கள் எல்லோரும் பார்த்துவிட்டார்கள் ஒன்றும் பலன் இல்லை..
அப்போது அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் யதார்த்தமாக யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள்..கஞ்சன்..யாருக்கும் காசு கொடுக்காம இவனும் திங்காம இருந்தான் இப்படி கிடக்கிரான் என சொல்ல ராக் பெல்லர் மனதில் அது இடி போல இறங்கியது உடனே தன் செயலாளர்களை அழைத்து பல கோடி டாலர்களை ஏழைகளின் நலனுக்காக செலவிட உத்தரவிட்டார்...அடுத்த நாளே படுக்கையில் இருந்து எழுந்தார் முன் போல சுறுசுறுப்பாக செயல்பட்டார் ..அப்போது அவர் ஆரம்பித்ததுதான் உலகின் மிகப்பெரிய எழைகளின் தொண்டு நிறுவனமான ,ராக்பெல்லர் பவுண்டேசன்.
உலகின் கோடீஸ்வரர்கள் எல்லோரும் இதர்கு நிதி உதவி செய்கிறார்கள் உலகில் இருக்கும் அடித்தட்டு மக்களை எல்லாம் தேடி சென்று இந்த பவுண்டேசன் உதவி செய்வதாக சொல்கிறார்கள்..அக்காலத்தில் நம் தமிழர்களில் பெரும் செல்வந்தர்களாக இருந்தவர்கள் எல்லாம் இறுதி காலத்தில் தர்ம சத்திரம் கட்டிதான் தங்கள் மன இறுக்கத்தை போக்கிக்கொண்டார்கள்...
பெரிய கோடீஸ்வரர்கள் எல்லோருக்கும் இறுதி காலத்தில் ஒரு பெரும் குழப்பம் வரும்..இவ்வளவு சம்பாதித்தோம்..எதற்காக ..இனி இவை என்ன ஆகும் என்ன இதனால் சாதித்தோம் என நினைக்க வைக்கும்..அதற்கு ஒரே வழி நம் தமிழ் செல்வந்தர்கள் கன்னியாகுமரி முதல் காசி வரை கட்டி வைத்த தர்ம சத்திரங்கள் அன்னதான கூடங்கள் வழி காட்டும்..!!!

Wednesday, 8 November 2017

விருச்சிகம் ராசியினருக்கு சனி என்ன பலன் தருகிறார்? 2017


விருச்சிகம் ராசியினருக்கு சனி முடியும் வரை நல்ல பலன் சொல்வதற்கு இல்லை என்றாலும் எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கு..இப்போ உங்களுக்கு நாக்கில் சனி இருக்கிறார்..முன்பு போலவே இப்போதும் ஜாடை பேசறது,இடித்து ,பழித்து பேசுவது எல்லாம் செய்தால் சனி நல்லா வெச்சி செய்வார்...இரக்கமில்லையா உனக்கு என கேட்டாலும் விட மாட்டார்.
உறவுகள் நிரந்தர பகையாகும் காலம்..பழிக்கு பழி என உங்க எதிரிகள் உங்களை சூழ்ந்து நிற்கும் காலம் இது.பத்து வருசத்துக்கு முன்னாடி நடந்த தன் வினை எல்லாம் தன்னை சுடும் காலம்..வருமானம் எல்லாம் பெருசா எதிர்பார்க்க வெண்டாம் வந்தாலும் தங்காது.செலவு நிறைய இருக்கு.கடன் இருந்துட்டு போகட்டும்..மேலும் வாங்காம இருந்தா போதும்.குடும்பத்தில் வாக்குவாதம் என ஆரம்பிச்சா ஒரு வாரம் அனல் பறக்கும்..சில சமயம் சண்டை முடிய ஒரு மாசமும் ஆகலாம் ..கோபம் வந்துச்சின்னா அதிக சேதாரம் உங்களுக்குதான்...முறைச்சாலும் சேதாரம் உங்களுக்குதான்
.புத்தி மதி யாருக்காவது சொன்னா நீங்க எப்படி என கேட்கப்படும் காலம்.மவுனமா இருந்தாலும் பிரச்சினை வரும் என்னங்க சொல்றீங்க..ஆமா மவுனமா இருந்தாலும் பிரச்சினை வரும்..ஏன்னா நம்மை எல்லோரும் விசமாகவே பார்க்கப்படும் நேரம்...கனிவா பேசுங்க..அவமானம் வந்தா அந்த இடத்தை விட்டு போயிடுங்க..கனிவா பேசலைன்னாலும் கோபம் மட்டும் வரவே கூடாது.வந்தால் பெரு நஷ்டம்.
குழந்தைகளுக்காகவே வாழும் நீங்கள் ,குழந்தைதான் என் உயிர் என நினைக்கும் நீங்கதான் இந்த சமயத்துல அவர்களை வெளுத்து வாங்குவீங்க..கடும் சொல்லால் வாட்டுவீங்க...உங்க குழந்தைகள் இந்த சமயத்துல உங்க பேச்சை கேட்காது விட்டுடுங்க..சின்ன குழந்தைகள் இந்த ராசி என்றால் இப்போ சமர்த்தா இருக்க மாட்டாங்க..குறும்பு அதிகம்..படிக்க உட்காரவே கஷ்டப்படுவாங்க.சொந்த தொழில் செய்பவர்கள் பணப்பிரச்சினையில் அல்லாடும் காலம்.சனி இருப்பது தன ஸ்தானத்தில்..எனவே புதிய முதலீடுகள் ,புதிய முயற்சிகள் தோல்விகளை தழுவ வாய்ப்புகள் அதிகம்.இருப்பதை வைத்து சமாளிப்பதே உத்தமம்..

உடல் ஆரோக்கியம் எப்படி என கேட்பவர் கவனத்துக்கு .....சனி இப்போது காலுக்கு வந்திருக்கிறார் காலில் அடிபடும் காலம்..பணம் ,பொருள் தொலையும் காலம் ,அறுவை சிகிச்சை நடக்கும் காலம்..சனி முடியும் வரை மருத்துவ சிகிச்சை தொடரும்..சரியான மருத்துவமோ மருத்துவரோ கிடைக்காத துரதிர்ஷ்டமான காலம் மட்டுமல்ல..உங்கள் உடல்நலத்தை நீங்களே சரிவர பார்த்துக்கொள்ள முடியாத சோம்பலையும்,அலட்சியத்தையும் சனி உண்டாக்குவார்..எனவே சும்மா இருந்தா சனி இன்னும் அழுத்துவார்..உழைப்பு,முயற்சி,சோம்பியிராமல் இருப்பது,எப்போதும் விழிப்புடன் இருப்பதுதான் சனியை சமாளிக்கும் வழிகள்... சனி முடியும் வரை இதை மீண்டும் மீண்டும் படிச்சுக்குங்க.

Saturday, 2 September 2017

குருப்பெயர்ச்சி பலன்கள் 2017-2018

அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 

குரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

                        

வாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.

மேசம் முதல் துலாம் ராசி வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 


செவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிகம் ராசி நண்பர்களே...நீங்கள் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு ஆற்றலுடன் செயல்படக்கூடியவர்கள்...தவறு நடந்தா அது யார் எவர் என பார்க்காமல் உடனே தட்டிக்கேட்கும் குணம் உங்கள் பலவீனம்..பேச்சில் பல சமயம் கடுமை காட்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்.


உங்கள் ராசிக்கு இதுவரை லாபத்தில்  சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்போது ராசிக்கு விரயத்தில் மறைகிறார்..இது கோட்சாரப்படி நல்ல பலன் இல்லை.விரய குரு என்ன செய்யும் என பழைய ஜோதிட நூல்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் ,விரயம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் கெடும் செல்வாக்கு சரியும். உறவும் நட்பும் பகையாகும் தொழில் மந்தமடையும் என்பதுதான்.உடல் ஆரோக்கியம் ஏற்கனவே பாதித்தவர்களுக்கும் பண நெருக்கடியில் இருப்போருக்கும் இது நல்ல செய்தி அல்ல என்றாலும் உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்தி நடந்தால் உங்களுக்கு கைகொடுக்கும்படியாகவே குரு வழி செய்வார் ..

குருபார்வை எப்படியிருக்கும் என பார்த்தால் குரு தனது ஐந்தாம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சொத்து சிக்கல்கள் தீரும்.7ஆம் பார்வையாக ஆறாம் இடம் ருண ரோகத்தை பார்வை செய்வதால் கடன் தொல்லைகள் குறையும் நெருக்கடிகள் தீரும்.ஒன்பதாம் பார்வையாக எட்டாமிடம் அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் எதிரிகள் தொல்லை குறையும் ராசிக்கு குரு பாதகமாக அமைந்தாலும் குரு பார்வை ஆறுதல்தரும்படியாகவே இருப்பதால் நம்பிக்கையுடன் இதனை தாண்டி வாருங்கள் 

செவ்வாய் தோறும் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள் தினசரி காலை கந்த சஷ்டி கவசம் படித்து வரவும்.


குருவின் ராசியை கொண்ட நீங்கள் அன்பு,அமைதி,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி என சாத்வீக குணத்தை கொண்டவர்.சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.ஒரு வில் ஒரு சொல் என சொல்வார்கள் அது போல வெச்ச குறி தப்பாது என காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் என வில் அம்பை சின்னமாக கொடுத்திருக்கின்றனர்..வில்லுக்கு அரசன் அர்ஜுனன் பிறந்த ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரை சனி வந்ததும் கொஞ்சம் ஆடிப்போக வைத்திருக்கலாம் ,.அதே சமயம் ஆறுதல் தரும்படி உங்களை உற்சாகப்படுத்தும்படி குரு பெயர்ச்சி வந்திருக்கிறது...

லபஸ்தானத்தில் குரு இருப்பது அதுவும் ராசி அதிபதி லாபத்தில் வருவது உங்களுக்கு மட்டும்தான் லாபத்தில் குரு வந்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்கள் தீரும். சேமிப்பு அதிகரிக்கும். தொட்ட காரியம் தடங்கலின்றி நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் ,கனவுகள் நிறைவேறும்.குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் குடும்பம் அமையும்.

குரு பார்வை உங்க ராசிக்கு எப்படி என பார்த்தால் மூன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். நிறைய புது முயற்சிகள் செய்து வருமானத்தை பெருக்குவீர்கள் .

பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.களத்திரஸ்தானத்தை குரு பார்ப்பதால் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும் மனைவியால் ஆதாயம் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் நடைபெறும்.

வியாழக்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.சனியை அதிபதியாக கொண்ட ராசி மகரம்.சர ராசி என்பதால் எப்போதும் துள்ளும் வேகத்துடன் இருப்பீர்கள் என்பதால் ஆடு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது...கடுமையான உழைப்பினை கொண்ட ராசி உங்களுடையது .அடுத்தவருக்காக உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்.உங்கள் ராசிக்கு ஏழரை சனி துவங்கும் நிலையில் வரப்போகும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என பார்க்கலாம்

இதுவரை ராசிக்கு ஒன்பதில் சஞ்சரித்து வந்த குரு இனி ராசிக்கு பத்தில் சஞ்சரிக்கப்போகிறார் குரு பத்தில் வருவது பதவிக்கு இடற்பாடு என சொல்வார்கள் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம் என்பதால் தொழில் பணி புரியும் இடத்தில் பல சிக்கல்கள் வரலாம் என்பது ஜோதிடம் கூறும் கோட்சாரப்பலன் ஆகும் இது கர்ம குருவாக வருவதால் உறவுகள் ,நட்புகள் இவற்றில் கர்மத்தை செய்யும் குருவாக வருகிறது. எனவே சில நெருங்கிய உறவுகளை இழக்கும் சூழல் உண்டாகும்.பத்தில் குரு வந்தால் பண விரயம் அதிகமாகும் காரிய தடை உண்டாகும் குடும்பத்தில் குழப்பம் காணப்படும் என சொல்லப்பட்டாலும் உங்கள் ஜாதக திசாபுத்தியும் ஜீவன ஸ்தானமும் வலிமையாக இருப்பின் தொழிலுக்கு பாதகம் வராது.

குருபார்வை எப்படி இருக்கும் என பார்ப்போம்..ராசிக்கு இரண்டாம் இடத்தை தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வருமானம் அதிகரிக்கும் .கடன் நெருக்கடிகள் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.ஏழாம் பார்வையாக குரு சுக ச்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஒன்பதாம் பார்வையாக குரு ராசிக்கு பாக்யஸ்தானத்தை பார்ப்பதால் தந்தை வழி ஆதாயம் உண்டாகும்..

புதன் கிழமை அன்று மதுரை மீனாட்சி சொக்கநாதரை சென்று வழிபட்டு வரவும்.

குன்றில் இட்ட விளக்கு போல எரிந்து அனைவருக்கும் வழிகாட்டும் ராசி கும்பம் ராசி..கும்பத்து குரு சம்பத்து கொடுக்கும் என்பார்கள் ...நிலையான புகழும்,செல்வாக்கும் ,பல தலைமுறைக்கும் புகழ் சேர்த்துவிட்டு ராசியினர் கும்பம் நீர் தழும்பாது என்பதற்கேற்றவாறு திறமைகள் தகுதிகள் பல இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் தன் கடமையை செய்யும் குணம் கொண்டவர்கள் கும்பம் ராசியினர் என்பதால் கலசம் சின்னம் உங்கள் ராசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


உங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த குரு,இஷ்டமுடன் காரியம் செய்ய கஷ்டம் வந்து சேரும் நஷ்டம் வந்து சேரும் என சோதனை செய்து கொண்டிருந்தார்  இப்போது ராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார் ...பாக்யஸ்தான குரு அளவில்லாத நன்மைகளை தரும் இடமாகும் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பார்கள் பிரச்சினையில இருந்து தப்பிப்பது அவ்வாறு சொல்வர்.ஒன்பதாம் இடத்து குரு மாலை ,மரியாதைகளை பெற்று தரும் தர்மகாரியங்களை முன்னிலைபடுத்தி செய்ய வைக்கும் கல்வெட்டில் பெயர் வரும்.பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் அதிர்ஷ்டம் உண்டாகும் குருபலம் இருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.ராசிக்கு குருபலமாய் பலம் பெறும் குரு தொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாக்குவார்...பதவி உயர்வு கொடுப்பார்...முதலீடு நல்ல லாபம் கொடுக்கும் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும்..பழைய கடன்கள் தீரும் வரவேண்டிய பணம் வந்து சேரும் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.


ராசிக்கு குரு பார்வை எப்படி என பார்த்தால் லக்னத்தை குரு பார்ப்பதால் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்..மூன்றாமிடமாகிய வீரிய ச்தானத்தை குரு பார்ப்பதால் முயற்சிகள் பல செய்து வெற்றிகளை குவிப்பீர்கள் ...ஒன்பதாம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் முன்னோர்கள் ஆசியால் பல வெற்றிகள் உண்டாகும் 

புதன் கிழமையில் சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட்டு வரவும் 
குருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...இதுவரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் குருபலத்துடன் இருந்துவந்த குரு பகவான் இப்போது ராசிக்கு எட்டாம் இடத்துக்கு மாறியிருக்கிறார்...

ராசிக்கு அஷ்டமத்தில் குரு வந்தால் இஷ்டமுடன் செய்யும் காரியம் நஷ்டம் வந்து சேரும்..கஷ்டத்துடன் உதவினாலும் துஷ்டன் என பெயர் வரும் என்பார்கள் எனவெ உங்கள் தொழில் குடும்பத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் பிறர் விசயத்தில் தலையிடுவதோ வாக்குவாதம் செய்வதையோ முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை எட்டில் குரு பொட்டில் அடிபடும் என்பார்கள் ..அதாவது நொடிபொழுதில் அடிபடுவதையும் இது குறிக்கும் .

செல்வாக்கு சொல்வாக்கு சரியும் காலம் என்பதால் யாரையும் நம்பவேண்டாம் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம் கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துதல் கடினம் .குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிருங்கள் .

உங்கள் ராசிக்கு குருபார்வை எப்படி என பார்த்தால் ராசிக்கு இரண்டை குரு பார்ப்பதால் தன வரவில் குறைவிருக்காது பனம் ஏதேனும் வழியில் வந்து கொண்டே இருக்கும் விரய செலவுகளை மட்டும் கட்டுப்படுத்தினால் நல்லது.சுக ச்தானத்தை குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும்.

வியாழன் தோறும் முருகனை தரிசனம் செய்து வழிபடவும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018

குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018


அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 

குரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.

கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் எனக்கு தொழில் கற்றுகொடுத்த குரு என்கிறோம்..ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.

சூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..

மிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனால்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.

முழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.

குருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.

பொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.


யாருக்கு நன்மை யாருக்கு தீமை..?

2017 செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சியால்

குரு இரண்டாம் இடத்துக்கு வருவதால் கன்னி ராசிக்காரர்களுக்கும் 
குரு ஐந்தாம் இடத்துக்கு வருவதால் மிதுன ராசிக்காரர்களுக்கும் 
குரு ஏழாம் இடத்துக்கு வருவதால் மேசம் ராசிக்கரர்களுக்கும் 
குரு ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் கும்ப ராசிக்காரர்களுக்கும் 
குரு பதினொன்றாம் இடத்துக்கு வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்கள் நடக்க இருக்கிறது இவர்களுக்கே குரு பலம் தொடங்குகிறது..

அசுப பலன்கள் யாருக்கு..? 

குரு ஜென்ம ராசிக்கு வருவதால் துலாம் ராசிக்கும்,
குரு மூன்றாமிடத்துக்கு வருவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கும், 
குரு நான்காம் இடத்துக்கு வருவதால் கடக ராசிக்காரர்களுக்கும், 
குரு ஆறாம் ராசிக்கு வருவதால் ரிசபம் ராசிக்காரர்களுக்கும், 
குரு எட்டாம் இடத்துக்கு வருவதால் மீனம் ராசிக்காரர்களுக்கும்,
 குரு பத்தாம் இடத்துக்கு வருவதனால் மகரம் ராசிக்காரர்களுக்கும் 

குரு பனிரெண்டாம் இடத்துக்கு வருவதனால் விருச்சிகம் ராசிகாரர்களுக்கும் தீமையான பலன்கள் உண்டாகும் 

இவர்களுக்கு அப்படியே கெட்ட பலன் தான் நடக்குமா..? இல்லை நல்ல பலன்கள் நிச்சயம் நடக்கும் ஒரு ராசிக்கு குரு மறைந்தாலும் அதன் பார்வை நல்ல ஸ்தானங்களில் விழுகிறது..சில விசயங்கள் கிடைக்காமல் போகலாம் அதற்காக எதுவும் கிடைக்காமல் போய்விடும் என அர்த்தமில்லை.மீனம் ராசியினருக்கு எட்டாம் இடத்துக்கு குரு வருகிறார்..எட்டாம் இடம் விபத்து,நஷ்டம் இவற்றை குறிக்கிறது அதே சமயம் எட்டாம் இடத்தில் இருக்கும் குரு 7ஆம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு நன்றாக இருக்கும்...

ஆயிரம் ரூபா வந்தால் 900 செல்வாகுது என்ன வந்து என்ன செய்வது என புலம்புவதால் பலன் இல்லை.செலவுக்கேற்ற பணம் வந்துவிடுகிறது..பணமே வராமல் போய்விடும் எட்டாமிடம் மிக மோசம் என எடுத்துக்கொள்ள வேண்டாம்.இதே போலதான் எல்லா ராசியினருக்கும் ஒரு இடத்தை குரு அடைத்தால் பல கதவுகளை திறந்து வைப்பார்.ஒரு சிலரை நீங்கள் புரிந்து கொள்ளவும் வாழ்வில் பல சுவாரஸ்யங்களை அனுபவிக்க வைப்பதுவும் குருதான் அதனை எதிர்கொள்ள பழகுங்கள்.

உங்கள் லக்னத்தை பொறுத்தும் பலன்கள் மாறும். இப்போது உங்கள் ஜாதகத்தில் யோகமான திசாபுத்தி நடந்தால் குருபெயர்ச்சி உங்க ராசிக்கு மோசமாக இருந்தாலும் பாதிக்காது...குரு திசை குரு புத்தி நடந்து உங்களுக்கு மீனம் ராசியாக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்..ராகு திசை ராகு புத்தி சனி திசை சனி புத்தி ,சூரிய திசை சூரிய புத்தி ,கேது திசை கேது புத்தி இவை நடந்து குருவும் ராசிக்கு மோசமான இடத்தில் அமர்ந்தால் பலன்கள் மோசமாக இருக்கும் ..செல்வாக்கு சரியும்.. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாது.

சனி தரித்திரத்தை கொடுக்கும் குரு தரித்திரத்தை துரத்தும்..
சனி அருவெறுப்பானவர்... குரு ஆச்சாரமானவர்
சனி டாஸ்மாக் என்றால் குரு கோயில்.
சனியை ஊரே தூற்றும், குருவை ஊரே போற்றும்.
சனி உடல் உழைப்பு.குரு மூளை உழைப்பு.
சனி வழியை உருவாக்குபவர் .. குரு வழியை காட்டுபவர்

குருவும் சனியும் குணத்தால் எதிரும் புதிருமானவர்கள்...ஆனால் முக்கியமானவர்கள்..குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெற காரணம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவர்கள்...வருடக்கோள்கள் என்பதால்தான்.நல்லாருந்தா ஒரு வருடத்துக்கு சந்தோசம்.கஷ்டமா இருந்தால் ஒரு வருசத்துக்கு அல்லல்படனுமே என்பதால்தான்.

இப்போது ஒவ்வொரு ராசியினருக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.செவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் உழைப்பையே முதலீடாக கருதுவீர்கள்..ஏதேனும் முயற்சி செய்து கொண்டே இருப்பதுதான் உங்கள் குணம் எட்டாததையும் எட்டி பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால்தான் உங்க ராசிக்கு ஆடு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி தொல்லை ஒருபுறம் ஆறாமிடத்து குரு ஒருபுறம் என மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல கடந்த இரண்டு வருசமா தவிச்சுக்கிட்டு இருந்தீங்க..இந்த வருடம் குரு,சனி இருவரும் உங்களை சந்தோசப்படுத்தும்படி நல்ல செய்தி சொல்கிறார்கள்...ராசிக்கு 7ஆம் இடத்து குரு உங்களுக்கு நன்மையை செய்ய இருக்கிறார் ...களத்திர ஸ்தானத்து குரு திருமண முயற்சி செய்வோர்களுக்கு திருமணம் நடத்திவைப்பார் கடன் பிரச்சினையில் இருப்போருக்கு தொல்லைகளை குறைக்கிறார் வருமானத்தை அதிகம் கொடுப்பார்.மருத்துவ செலவினம் குறையும் சேமிப்பு அதிகரிக்கும் வரவு செலவு இதுவரை சரியாக இருந்தது இனி வருமானம் சேமிப்பு அதிகரிக்கும்.உறவுகள் ,நட்புகள் மத்தியில் செல்வாக்கு ,புகழ் அதிகரிக்கும்.

திருமகள் கிருபை உண்டு தீர்த்த யாத்திரை உண்டு தரும தானங்கள் உண்டு தந்தை தாய் உதவி உண்டு அரசால் ஆதாயம் உண்டு பொன் பொருள் சேர்க்கை உண்டு என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...

செவ்வாய் கிழமை காலையில் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள்சுக்கிரனின் ராசியை சேர்ந்தவர் நீங்கள் ...திறமையே உயர்வு தரும் என நம்பிக்கையுடன் வாழ்பவர்..சாதுவாக உங்கள் பணியை மட்டும் செய்து கொண்டு இருப்பதால்தான் பசுவின் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் ராசிக்கு அஷ்டம சனி வரப்போகிறது. குருவும் தொல்லை தரப்போகிறார் போலிருக்கே என குழப்பத்தில் இருப்பீர்கள்..சுக்கிரன் ராசியை கொண்டவர்களுக்கு எப்போதும் பெரிய பாதகத்தை சனியோ குருவோ தருவதில்லை என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நம் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு வருகிறார் குடும்பத்தினர் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும்படி குரு வருகிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் வரவு செலவுகளில் எச்சரிக்கையாக இருங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது..கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துவது கடினம் என்பதை மறக்க வேண்டாம்..மனைவிக்கு மருத்துவ செலவு,சகோதரனுடன் பகை ,உறவுகள்,நட்புகள் பகை உண்டாகும் காலம் என்பதால் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்..

புலிப்பாணி முனிவர் பாடல் எல்லாம் படித்தால் வீண் மன பயம் அதிகரிக்கும் ..உங்க ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் பாதிப்பு குறைவுதான்.மனைவி,மக்களே பகையாவர் என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..பேச்சில் நிதானம் கடைபிடித்தால் போதும்.வருமானத்தில் தடை, சேமிப்பு கரைதல் என இருப்பதால் ஆக்க வழியில் வருமானத்தை இப்போதே பத்திரப்படுத்திக்கொள்வது நல்லது.

சனிக்கிழமை தோறும் மாலையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.


மதியூகி புதனை ராசிக்காரராக கொண்ட மிதுனம் ராசி நண்பர்களே..புத்திசாதூர்யம்தான் உங்கள் முதலீடு..எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர் நீங்கள் ..எப்போதும் இரட்டை லாபம் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர் என்பதால்தான் இரட்டையர் படம் உங்க சின்னம்.

உங்கள் ராசிக்கு குரு நான்காம் இடத்தில் இருந்து பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்துக்கு செல்கிறார் சிறப்பான குருபலம் இது..தொட்ட காரியம் வெற்றியை தரும்.நினைத்த காரியம் தடங்கலின்றி முடியும்.நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் பண வரவு தடையில்லாமல் வந்து சேரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியம் நடந்தேறும்...கடன் பிரச்சினைகள் பண நெருக்கடிகள் விலகும்.

 ஐந்தில் குரு வரும்போது புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். இதனால் உங்கள் திறமைகள் அதிகளவில் வெளிப்படும்.நண்பர்கள்,உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.இடம்,வீடு வாங்க நினைத்தவர்கள் இப்போது வாங்கும் வாய்ப்பு தேடி வரும்.குருபலம் வந்தால் பணபலம் வந்துவிடும்.குழந்தைகள் கல்வி மேம்படும்...உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும் தொழிலில் நல்ல லாபமும், சிலருக்கு விரும்பிய இடமாறுதலும் பதவி உயர்வும் கிடைக்கும்..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் ..

திருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள் வளர்பிறை திங்கள் கிழமை செல்வது நல்லது.
உழைப்பும் உயர்வும் கொண்ட கடக ராசிக்காரர்கள் எப்போதும் யாரையேனும் நண்பர்கள் ஆக்கிகொண்டே இருப்பார்கள் நண்டு நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பு கொண்டது அதைப்போல இவர்கள் எத்தையக சூழ்நிலையிலும் வாழும் மன வலிமை கொண்டவர்கள் என்பதால்தான் இவர்கள் ராசிக்கு நண்டு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் ஒரே ராசியாக கொண்டவர் நீங்கள் என்பதால் அன்பும் பாசமும் அதிகளவில் கொண்டவர் நீங்கள் சந்திரன் சக்தியை அதிகமாக கிரக்கிப்பதால் எப்போதும் தாய்மை உள்ளம் அன்பு கருணை அதிகம் காணப்படும் இதுவே சில சமயம் ஏமாற்றத்துக்கும் வழிவகுத்துவிடும்.இருப்பினும் அதையும் கடந்து பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

உங்கள் ராசிக்கு குரு இதுவரை மூன்றாம் ராசியில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதித்தும் அலைச்சலை உண்டாக்கியும் பண விரயத்தை கொடுத்தும் வந்தது இப்போது ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு மாறியிருக்கிறது .இது சுகத்தை கொடுக்கும் சந்தோசத்தை கொடுக்கும்..சுகஸ்தான குரு வாகனம்,சொத்து வாங்க வைப்பார் முதலீடு செய்ய வைப்பார் போன வருடம் போல் குருவை விட இந்த குரு பெயர்ச்சி யோகமாகவே இருக்கிறது மோசம் இல்லை.உடல் ஆரோக்கியத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள் .தாயார் மூலம் ஆதாயம் கிடைக்கும் .எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியம் நடந்தேறும். எதிர்பாராத பண வரவு வந்து சேரும்..

எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் தொல்லை விலகும் தொழில் ஸ்தானத்தை எழாம் பார்வையாக குரு பார்ப்பதால் பதவி உயர்வு கிடைக்கும் தொழில் மந்தம் நீங்கும்..ஒன்பதாம் பார்வையாக அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டகும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியுண்டாகும்.

வியாழக்கிழமையில் குருபகவானுக்கு சுண்டல் கடலை மாலை அணிவித்து குரு ஓரையில் வழிபடவும்.
சூரியனின் ஒரே ராசி சிம்மமாக கொண்ட நீங்கள் ,சிறந்த நிர்வாகதிறன் கொண்டவர்..எதிலும் தனித்து நின்று காரியத்தை சாதிப்பதில் வல்லவர் என்பதால்தான் சிங்கம் படம் சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.கோபம்,பிடிவாதம் உங்கள் பலவீனமாக இருப்பினும் அது நல்லதற்கே என்பதை மற்றவர் புரிந்து கொள்வது சிரமம்.எடுத்த காரியத்தை சிரமப்பட்டாவது முடித்து விடும் உறுதியான மனம் கொண்டவர் நீங்கள் .

உங்கள் ராசிக்கு குரு இதுவரை இரண்டாம் இடமாகிய தன ச்தானத்தில் சஞ்சரித்து வந்தார் இப்போது மூன்றாம் இடமாகிய தைரிய வீரிய ஸ்தானத்துக்கு செல்கிறார் உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சோதித்து பார்ப்பது போல குருபகவான் சில சவால்களை இப்போதே கொடுக்க ஆரம்பித்து இருப்பார் ..அலைச்சல் அதிகம்..பண விரயம் அதிகம்.,குடும்பத்தில் குழப்பங்களை கொண்டு வந்து கொட்டும்படி குருவின் சஞ்சாரம் இருந்தாலும் ,குரு பார்வை கோடி தோசம் போக்கும் என தன்னம்பிக்கையுடன் இருங்கள் 

உங்கள் ராசிக்கு 5ஆம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செலுத்துவதால் முன்னோர்களின் ஆசியால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள் ...7ஆம் பார்வையாக குரு பாக்யஸ்தானத்தையும் குரு பார்க்கிறார் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் தந்தை வழி ஆதரவு கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் வருமானம் ஆரம்பத்தில் தடை செய்தாலும் ஏதேனும் வழியில் பனம் வந்து சேரும் விரயத்தை சமாளிக்கலாம் 

குலதெய்வம் கோயிலுக்கு சென்று 16 வித அபிசேகம் செய்து வழிபாடு செய்து வரவும்.
மென்மையான மனம் கொண்ட கன்னி ராசி நண்பர்களே...மென்மையாக பேசுவதும்,எல்லோரிடத்திலும் அறிவார்ந்த அன்பான பேச்சையும் நடத்தையையும்,வெகுளிதனமான குணத்தையும்  கொண்டவர் நீங்கள் என்பதால்தான் கன்னி ராசியினருக்கு கன்னிப்பெண் சின்னம் கொடுத்திருப்பார்கள் ..

உங்கள் ராசிக்கு எழரை சனியும் இல்லை ...கடந்த வருடத்தில் வாட்டி வதைத்த ஜென்ம குருவும் முடிந்துவிட்டது தன ஸ்தானத்தில் குரு வருகிறார் குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருகிறார் பணப்பிரச்சினையில் வாடி இருப்போருக்கு தனத்தை அள்ளி வழங்கும்படி குரு வந்து சேர்ந்திருக்கிறார் இப்போதே நல்ல சகுனம் தென்பட ஆரம்பித்திருக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் தீரும் பண முடக்கம் நீங்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நிரந்தர தொழில் அமையும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடைகள் விலகும் உங்கள் பேச்சுக்கு அதிக மதிப்பு உண்டாகும் சிலர் இடம் வீடு வாங்குவர் தங்கம் சேரும்.வாகனம் வாங்க அருமையான காலம்.இரண்டில் குரு 12 வருடத்துக்கு ஒருமுறைதான் வரும்.தன ச்தானத்துக்கு வருவதால் இரட்டிப்பு வருமானத்தை நிச்சயம் கொடுப்பார் உற்சாகமுடன் செயல்படுங்கள் ..உறவுகள்,நட்புகள் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தை பார்ப்பதால் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவினம் குறையும் கடன் தீரும்.7ஆம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் நஷ்டங்கள் விலகி லாபங்கள் பெருகும்.தொழில் ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் நிரந்தர தொழில், பதவி உயர்வு ,தொழில் அபிவிருத்தி உண்டாகும்.

ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வரவும்..
துலாம் ராசியில் சூரியன் வரும் ஐப்பசி மாதம் இரவும் பகலும் சமமாக இருக்கும்...அதுபோல இன்பம்,துன்பம் இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனபலம் கொண்டவர்கள் துலாம் ராசியினர் என்பதால் தராசு சின்னம் நடுநிலையாக நிற்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது பிறரை ஆழமாக ஊடுருவி கவனிப்பதில் வல்லவர்கள் இவர்கள் ..ராசிக்கு ஏழரை சனி முடியப்போகிறது.இதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிர்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆரோக்கியம் கெடும்.

சரி ஜென்ம குரு என்ன செய்வார்..? ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது இருப்பினும் சனி முடியப்போவதால் இதுவரை ராசிக்கு பின்பக்கமே இருந்த குரு ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் நல்ல எதிர்காலம் உண்டு என தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் 

ஜென்ம குருவில் விரய குரு அளவு மோசமில்லாமல் பண வரவு இருக்கும்.புலிப்பாணி ஜோதிட பாடல் ஜென்ம குருவுக்கு பலன் என்ன சொல்கிறது என பார்த்தால் பண விரயம் உண்டாகும்..நஷ்டம்,கவலைகள்,அரசாங்க சிக்கல்கள் வரும்.இடமாருதல் உண்டாகும் என்பதுதான் நான்கு வரி பலன்கள் ..இருப்பினும் உங்க ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கும்னு பார்ப்போம்.

ராசிக்கு ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதல் பூர்வபுண்ணிய பலனால் பல சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் வெற்றியாகும்..கூட்டு தொழில் லாபம் கிடைக்கும்.ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழி உறவுகள் ஆதாயம் கிடைக்கும்.

திருப்பதி ஒருமுறை சென்று பெருமாளை சனிக்கிழமையில் வழிபட்டு வரவும்.

விருச்சிகம் முதல் மீனம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

Tuesday, 1 August 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 கன்னி முதல் மீனம் வரை

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 கன்னி முதல் மீனம் வரைமேசம் முதல் சிம்மம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 


கன்னி - கன்னி ராசியினருக்கு பதினொன்றாம் வீடாகிய லாப ஸ்தானத்துக்கு ராகு சென்றிருக்கிறார்...பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ஆம் ராசிக்கு கேது செல்கிறார் ..லாபத்தில் ராகு வந்தால் அருளும் பொருளும் குறைவின்றி வந்து சேரும்...தடைக்கற்கள்  அனைத்தும் தவிடுபொடியாகும்..நினைத்த காரியம் தாமதமின்றி நிறைவேறும் வர வேண்டிய பணம் வீடு தேடி வந்து சேரும்.தொட்டது அனைத்தும் துலங்கும். லாபங்கள் அதிகளவில் வந்து சேரும். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்..தொழில் முடக்கம் முற்றிலும் விலகும்.வீட்டில் சுபகாரியம் ஒன்று நடைபெறும்...கடன்கள் அடைபடும் நோய்கள் விரைந்து தீரும்.

ஏழரை சனி முடிந்து ரொம்ப நாளாகியும் பிரச்சினை தீரவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.நிம்மதி அடைவீர்கள்

துலாம் -உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு வருகிறார் நான்காம் இடத்தில் கேது வருகிறார்..தொழிலுக்கு பாதகம் இல்லை.வருமானத்துக்கு குறைவில்லை. பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும் என்று சொல்வார்கள். கேட்காமலே உதவிகள் கிடைத்திடும். தாமதமான முன்னேற்றம் இனி தடங்கலின்றி வந்து சேரும். அன்பானவர்கள் தானாக வந்து சந்தோசப்படுத்துவார்கள்..நட்புகள் ஒன்று சேரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் தாய்க்கு பாதகமான காலம்.

சொத்துக்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை.நீண்ட தூர பயணத்தில் எச்சரிக்கை தேவை.சிலர் வீடு மாறுவர்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இப்போதுதான் மருத்துவ சிகிச்சை முடிந்தது ஆனாலும் மருத்துவ சிகிச்சை சிறிய அளவில் மீண்டும் ஒன்று காத்திருக்கிறது.வாகனத்தில் கவனம் தேவை..ஏழரை சனி முடியப்போகும் பொன்னான காலகட்டத்தில் தொல்லைகள் பெரிதாக ஒன்றும் இல்லை ராகு கேதுக்கள் உங்களை பெரிதாக தொந்தரவு செய்ய மாட்டார்கள் லாபத்தில் குறை வைக்க மாட்டார்கள். 

விருச்சிகம் -அல்லல் கொடுக்கும் சனி பகவான் பிடியில் இருந்து தப்பிக்க வழிபார்த்து விழி கலங்கி நிற்கும் விருச்சிகம் ரசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பெரிதாக பயமுறுத்தவில்லை..ஒன்பதாம் ராசிக்கு செல்லும் ராகு தந்தை வழியில் தொழ்ந்தரவும் மன சங்கடங்களையும் தருவார் சுற்றார் மூலம் கவலைகளை தருவார்...தொழிலில் இருந்து வந்த சில சங்கடங்கள் விலகும் வருமானத்துக்கு குறைவில்லை..குடும்பத்தில் மனக்கசப்புகள் விலகும் சொத்துக்கள் சிலர் வாங்குவர் கடன் பாக்கிகள் குறையும்.மருத்துவ பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும்..

மூன்றாம் இடத்து கேது சகோதர வழியில் சிலருக்கு நிம்மதி குறைவை உண்டாக்கும்..மறைந்த கேது நிறைந்த வாழ்வை தருவார் மங்களகரமான நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறும்..நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது.ராகு கேது உள்ள வினாயகரை வழிபட்டால் வீண் பயம்,கவலைகள் தீர்ந்து தெளிவு பிறக்கும்.

தனுசு -ஏழரை சனி செய்ய வேண்டியதை இந்நேரம் செய்து குழப்பத்தில் உங்களை ஆழ்த்தியிருக்கும் இக்காலகட்டத்தில் ராகு கேதுக்கள் நல்ல பலன்களை தருவார்கள் என எதிர்பார்க்க வேண்டாம்..எட்டாமிடத்து ராகு கஷ்டத்தை கொடுப்பார்..துஷ்டன் என பெயர் வாங்க வைப்பார்.இஷ்டமுடன் செய்யும் காரியம் கஷ்டத்துடன் முடியும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது...குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக வரப்போவதால் ஆறுதல் அடையலாம் எட்டாம் இடத்து ராகு விசப்புச்சிகளால் கண்டம்..அரசால் பாதகம்..பணி புரியும் இடத்தில் உங்கள் மதிப்பு குறைய நிரைய வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்..கேது தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமான தடை ,பண முடக்கம் காணப்படும் என்றாலும் புரட்டாசி மாதத்துக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது இக்காலகட்டத்தில் முக்கியம். ராகு கேது திசை நடப்பவர்கள் ராகு ஸ்தலம் சென்று வழிபாடு செய்து கொள்ளுங்கள்..

மகரம் -உங்கள் ராசிக்கு 7வது ராசிக்கு செல்கிறார் ராகு...கேது  ஜென்ம ராசிக்கு வந்திருக்கிறார்...மனைவி/கனவன் ஸ்தானத்துக்கு வரும் ராகு இல்வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்த தயங்க மாட்டார் ...ஏழரை சனியும் இப்போது தொடங்கவிருப்பதால் வீண் சர்ச்சைகளை உங்கள் மூலம் ஆரம்பித்துவிடாதபடி பொறுமையை கடைபிடிப்பது அவசியம். 7ல் வரும் ராகு வாழ்க்கை துணைக்கு மருத்துவ சிகிச்சையை செய்ய காத்திருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை ஜென்மத்துக்கு வரும் கேது முன்கோபம்,பிடிவாதம்,அவசரப்படுதல் போன்ற குணங்களை தூண்டுவார்...ஆன்மீகம்,கடவுள் பக்தி,தியானம்,யோகா ஆகியவற்றை கடைபிடிப்பது இக்காலகட்டத்தில் நல்லது.

7ஆம் இடத்து ராகு கூட்டாளிகளால் நண்பர்களால் குழப்பத்தை ஏற்படுத்துவார்...நஷ்டத்தை ஏற்படுத்துவார் பங்கு தொழிலில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது

கும்பம் -உங்களுக்கு ஜென்மத்தில் இருந்து வந்த கேது விரய ஸ்தானத்துக்கு சென்று விட்டதால் நிம்மதி பெருமூச்சு விடலாம் தலையில் இருந்து பாரம் இறங்கியது போல நிம்மதி அடையும்படி நீண்ட நாள் கவலைகள் தீரப்போகிறது....6ஆம் இடத்துக்கு ராகு நகர்ந்து விட்டதால் குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதியற்ற போக்கு இனி தீர்ந்து சந்தோசமான சம்பவங்கள் நடைபெறும்...6ஆமிடத்து ராகு எதிரிகளை ஒழிக்கும் கடன்களை தீர்க்கும் நோய்களை போக்கும் என்கிறது ஜோதிடம்.மறைந்த ராகு யோகமான ராகுவாகும்...தொழில் அபிவிருத்தி உண்டாகும் வருமானம் அதிகரிக்கும் பணப்பிரச்சினைகல் தீரும்..வழக்குகள் தீரும்.மனைவி.கணவன் ஒற்றுமை உண்டாகும். சிலர் புதிதாக சொத்துக்கள் வாங்குவர்.பழைய கடன்கள் அடைபடும் உறவுகள் நட்புகள் ஒன்று சேர்வர்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்..

மீனம் -உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு ராகு வருகிறார் வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடையில்லாமல் செல்ல வாய்ப்புண்டாகும் ..5ஆம் இடம் வெற்றி ஸ்தானம்,,குழந்தைகள் ஸ்தானம் அங்கு ராகு வருவதால் வெற்றிகள் தள்ளிப்போகும். குழந்தைகள் வழியில் ஆரோக்கியம் பாதிக்கப்படும்..இருப்பினும் கேது லாப ஸ்தானத்துக்கு வருவது நல்ல பலன்களை செய்யும்.லாபத்தில் பாம்பு வந்தால் பதவிகள் கிடைக்கும் வருமானம் பெருக்கும்..ஆதாயம் அதிகரிக்கும் கடன்கள் தீரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

உங்கள் ராசிக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருப்பினும் ராகு பெயர்ச்சி உங்களை பாதிக்காமல் லாபம் தரும்படியே அமைந்திருக்கிறது.


Wednesday, 26 July 2017

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2017-2019

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2017-2019 மேசம் முதல் சிம்மம் வரைவாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி வருகின்ற 27.7.2017 அன்று நடக்கிறது..சிம்ம ராசியில் இருந்து ராகு பெயர்ச்சியாகி கடகம் ராசிக்கு செல்கிறார் கேது கும்பம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு செல்கிறார்..திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி  ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.


.இதன் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக மட்டும் பார்ப்போம்...

பொதுவாக ராகு கேது என்பது கிரகங்கள் இல்லை...இவை நிழல் கிரகங்கள் எனப்படும்...சூரியன்,சந்திரனையே மறைக்கும் நிழல்கள்...எல்லா கிரகங்களையும் சூரியனும் சந்திரனும் வெற்றி கொள்வர்..இவர்களை ராகு கேது வெல்வர்..சூரியனுடன் ராகு கேது ஜாதகத்தில் இருந்தால் பிதுர் தோசம் என சொல்வது வழக்கம்..தந்தை வர்க்கத்துக்கு ஆகாது.சந்திரனுடன் இருந்தால் மாதுரு தோசம்...தாய் வர்க்கத்துக்கு ஆகாது.

ராகு கேதுக்கள் ஜாதகத்தில் நன்றாக அமைந்தால் அதன் திசாபுத்தியில் நல்ல பலன்களை கொடுப்பர் ராகுவை போல கொடுப்பார் இல்லை கேதுவை போல கெடுப்பார் இல்லை இருவரும் எதிரெதிர் குணங்கள்..ராகு முரட்டுதனம் ,துணிச்சலால் நிறைய சம்பாதித்து கொடுத்துவிடுவார்.. கேது பயம் தாழ்வு மனப்பான்மை விரக்தியால் வாழ்வில் துவள வைத்துவிடுவார்..கேது தனிமையில் அமர்ந்து வாழ்க்கை அனுபவத்தை யோசித்து யோசித்து முக்தி அடைய செய்பவர்...ராகு ஆராய்ச்சி,செயல்,வேகம்,குறுக்கு வழியில் பயணிக்க வைத்து வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வைக்கும் போகக்காரகன்..அவருக்கு நேர்வழி, குறுக்கு வழி பற்றி கவலை இல்லை...

ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் ஜாதகத்தில் அவர்கள் இருக்குமிடம் நிழல் போல மறையும்..லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் இருளில் மறைந்தார்போல தன் வலிமை அறியாமல் இருப்பார்...திறமை இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிப்பார்...இது போல ராகு கேதுக்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த ஸ்தானம் பாதிக்கப்படும்...ராகு வீரியம் எனில் கேது பலவீனம்...4ல் கேது இருப்பின் உடல் ஆரோக்கியம் பலவீனம்...4ல் ராகு இருப்பின் அதிக ஒழுக்க குறைப்பாட்டை உண்டாக்கி கெட்ட பெயரை உண்டாக்கும்...கேது படுக்க வைக்கும் எனில் ராகு ஊர் சுத்த வைக்கும்.

இந்த ராகு கேது பெயர்ச்சியால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் தரும் என பார்த்தால் காலப்புருச லக்னத்துக்கு பாக்யத்துக்கு எட்டில் ராகு வருவதால் மதம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் உண்டாக வாய்ப்புகள் அதிகம்..அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சினை பெரிய அளவில் மாறும்..

ராகு கேதுவை பொறுத்தவரை ஜாதகத்தில் சரி கோட்சாரத்திலும் சரி 3,6,8,10,11 ,12ல் இருப்பது நல்லது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது நிழல் கிரகங்கள் மறைந்து இருப்பது நல்ல பலனை தரும்...சுபர் பார்வையில் இருந்தால் நல்லது. சுபருடன் சேர்ந்தால் கெட்டது இதுதான் அடிப்படை.இதன் அடிப்படையில் மட்டும் பலன்கள் கொடுத்திருக்கிறேன்.

ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை வருவதாகும்..ராகு கேதுக்கள் பின்னால் சுற்றுபவை..முன் ராசிக்கு செல்ல மாட்டார்கள் ...அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகாமல் பின்னுள்ள ராசிக்கு செல்வார்கள்.ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் பலன் கொடுப்பர்..

மேசம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்..

மேசம் - உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் ராகுவும் பத்தாம் ராசிக்கு கேதுவும் மாற இருக்கிறார்கள் ..நான்கில் ராகு சுகத்தை கெடுக்கும் தாய்க்கு மருத்துவ செலவினம் தரும்...பத்தில் வரும் கேது தொழிலில் கொஞ்சம் பாதிப்பு தருவதால்  புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது .சொத்துக்கள் சார்ந்த வில்லங்கம்,சிக்கல் உண்டாக்கும் என்பதால் வீடு ,வாகனம் சார்ந்த விசயத்தில் கூடுதல் கவனம் தேவை.

அலைச்சல் அதிகரிக்கும்..பண வரவில் குறை இருக்காது....வரும் டிசம்பர் மாதத்துடன் அஷ்டம சனி முடிகிறது...ஆவணி 10 முதல் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு யோகமாகவே இருக்கிறது...இதனால் பல நல்ல மாற்ரங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் எதிர்பார்க்கலாம் பல பிரச்சினைகள் இந்த வருடக்கடைசிக்குள் தீரும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வீட்டில் சுபகாரியம் நடைபெறும்..செவ்வாய் தோறும் முருகன் வழிபாடு நல்லது.

ரிசபம் -உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார்..மூன்றாமிடத்து ராகு யோகமானது என பழைய ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன...மூன்றில் ராகு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பெரிய லாபங்களை அடைவீர்கள்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்..கேது ஒன்பதாவது ராசிக்கு வருகிறார்..

 இது தந்தைக்கு மருத்துவ செலவினத்தை உண்டாக்கும்..மகான்களின் ஆசி கிடைக்கும் நீண்ட நாள் விரும்பிய தீர்த்த யாத்திரைக்கு செல்வீர்கள்.பண வரவு திருப்தி தரும்.அஷ்டம சனி பற்றி பெரிதாக கவலை வேண்டாம்...சுக்கிரன் ராசியினருக்கு பெரிதாக சனி கெடுதல் செய்ய மாட்டார்..குரு சாதகமற்ற நிலையில்தான் வருகிறார் உடல்நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டாகும் காலம் என்பதால் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்களால் சிக்கல்கள் நேரும் என்பதால் பங்குதாரர்களிடன் கவனம் தேவை.

 புதிய ஆட்களிடம் எசரிக்கையாக இருங்கள் வீட்டில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள் மனைவி /கணவனுக்கு உடல் ஆரோக்கியம் பாதித்து மருத்துவ செலவு செய்யக்கூடும்..புதிதாக இடம் வீடு சொத்துக்கள் சிலர் வாங்குவர் அஷ்டம சனி வரும்போது பண முடக்கம் இப்படி சுப செலவாக செய்து கொண்டால் நல்லது...தான் சகோதரர்கள் வழியில் விரய செலவுகள் காணப்படும்... பெளர்ணமி தினத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு நல்லது

மிதுனம் -உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்துக்கு ராகு வருகிறார்..கேது ராசிக்கு எட்டில் வருகிறார் ..இது வாழ்க்கை துணைக்கு அதிக பாதிப்புகளை தரும்...பெரிய மருத்துவ சிகிச்சை ஒன்று காத்திருக்கிறது...குடும்பத்தில் சின்ன வாக்குவாதங்கள் பெரிய பிரச்சினையில் கொண்டு போய் முடிக்கும்.

தன ஸ்தானத்தில் ராகு வருவது கடக ராகுவாக வருவதால் வருமானத்தை பல மடங்கு பெருக்கும்.அதே சமயம் உங்கள் பேச்சால் பல குழப்பங்களும் குடும்பத்தில் உண்டாக்கும்.பணம் நிறைய வரும்.. தண்ட செலவும் அதே அளவில் வரும்.காரணம் ராகு நிழல் கிரகம்...

தன ஸ்தானத்தை நிழல் போல் மறைப்பதால் சேமிப்பில் இருந்த பணத்துக்கு ஆபத்து உண்டாக்கும் காலம் .நம்பிக்கையான முதலீடுகள் பிரச்சினை இல்லை..தந்தைக்கு விரயத்தில் கேது வருவதால் தந்தைக்கு அதிக மருத்துவ செலவுகள் உண்டாக்கும் எட்டாம் இட கேது சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் தரும் பெண்களுக்கு கர்ப்பபை சார்ந்த பாதிப்புகளை தரும்.

ராசிக்கு அஷ்டம சனி ஏழரை சனி எதுவும் இல்லை.குருபெயர்ச்சியும் நன்றாக இருக்கிறது அதனால் பெரிய அளவில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை பாதிக்காது.சனி தோறும் பெருமாளை வழிபடுவதும் கண்ணனை வழிபடுவதும் நல்லது.

கடகம் -உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது நல்ல பலன் என சொல்ல இயலாது. மனக்குழப்பம்,கவலை அதிகரிக்கும்.. உங்கள் திறமைகள் மதிக்கப்படாது.நம் சொல் அம்பலத்தில் ஏறவில்லையே என்ற வருத்தம் உண்டாக்கும்.தன்னம்பிக்கை, தைரியம் குறைவு உண்டாக்கும் காலம் என்பதால் பிறர் விமர்சனங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்...பணம் கொடுத்தால் திரும்பாது. பணம் வாங்கினால் கட்டுவது கடினம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பாசமாக பழகுவதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை.உண்மையாக அன்பு காட்டினால் அவர்களுக்கு எதையும் செய்வீர்கள் விட்டு கொடுப்போர் கெட்டுப்போவதில்லை என்பீர்கள்...மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டீர்கள் ஆனால் உங்களின் இந்த நல்ல குணத்தையே அசைத்து பார்க்கும்படி வருகிறது ஜென்ம ராகு.

ராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது அதிக பதட்டம்,முன்கோபத்தை உண்டாக்கும்..உணர்ச்சிவசப்பட்டு பிறர் மனம் நோகும்படி பேசிவிட நேரும் பேச்சில் கவனம் தேவை.கடகம் சந்திரனின் ராசி அதனுடன் ராகு சேரும்போது கிரகண தோசம் ஆகிறது.இதனால் குழப்பங்கள் தடைகள் ,கெட்ட பெயர் உண்டாகிறது.

ராசிக்கு எழரை சனி ,அஷ்டம சனி இல்லை அதனால் பெரிய பாதிப்பு இல்லை.குருபெயர்ச்சியும் உங்க ராசிக்கு ஆறுதல் தரும்படி இருப்பதால் கவலை வேண்டாம்.7ஆம் இடத்துக்கு வரும் கேது குடும்பத்தில் குழப்பத்தையும் வாக்குவாதத்தை உண்டாக்குவார் மனைவிக்கு மருத்துவ செலவை உண்டாக்குவார் நண்பர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.கவனமாக செயல்படுங்கள்...வெள்ளிதோறும் அம்பாளை வழிபடுங்கள்சிம்மம் -இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் இருந்து வந்த ராகு விலகிவிட்டார் ..இப்பவாவது வழிவிட்டாயே என நிம்மதி பெருமூச்சு விடும்படி இனி அடுத்தடுத்து நல்ல பலன்கள் நடக்கும்..புதிதாக சொத்து ஒன்றை வாங்கப்போகிறீர்கள் இடம்,வீடு ,வாகனம் வாங்கும் யோகம் விரைவில் வர இருக்கிறது...

ராசியில் நின்ற ராகு உங்கள் திறமைகளை பிறர் குறைத்து மதிப்பிட வைத்துவிட்டது சில அவமான நிகழ்வுகள் ,மன அழுத்தம்,கவலைகளை கடந்த காலங்களில் ஜென்ம ராகு உண்டாக்கியது.இனி அந்த மனக்கஷ்டங்கள் அனைத்தும் விலகும்..ராசிக்கு 12ல் செல்லும் ராகு திடீர் அதிர்ஷ்டங்களை உண்டாக்குவார் பண வரவை அதிகபடுத்துவார் ..பயம் விலகி துணிச்சல் தைரியம் உண்டாக்குவார் ..

இழந்த நட்புகள் ,பகையான உறவுகள் ஒன்று சேர்வர்.நீண்ட நாள் வராது இருந்து வந்த தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்..தொழில் செய்யுமிடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.6ஆம் ராசிக்கு செல்லும் கேது சில உடல் பாதிப்புகள் தந்தாலும் அவை விரைவில் குணமாகும்.வருமானம் அதிகரிப்[பதால் சேமிப்புகள் உண்டாகும் காலம்..சிவ வழிபாடு சிறப்பு தரும்.


Wednesday, 28 June 2017

எந்த பிரச்சினைக்கு எந்த கோயில் போகலாம்..? சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள்


பிரச்சனைகளை தீர்க்கும்அற்புத கும்பகோணம் ஆலயங்கள்..


நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த  மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும் போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும். 

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம்.ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்... 

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்த படியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம். 

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப் பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன. 

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே விட்டுப் போவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான்.  இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் :

சிவ பெருமான் தன்னைதானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத்திருக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம். 

புற்றுநோய் தீர்க்கும் " திருந்து தேவன் குடி அருமருந்தம்மை :

புற்று நோய் தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில். 
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்து அம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கடன் தொல்லைகள் தீர்க்கும்  திருச்சேறைருண விமோச்சனர் :

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனம் உருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
      
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழி படுபவரது வறுமையும், கடன்களும் தீரும். 

இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.  

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம்  சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:
      
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழி படலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய  ‘ஸ்ரீவாஞ்சியம்’ :
      
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், 

கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழி பட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:
    
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது.
குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும், வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :
        
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,
கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

 தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :
      
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக் கொள்ள நோய்கள் தீருகின்றன. 

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":
      
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". 

ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:
      
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழி பட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". 

நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.