Friday, 27 January 2017

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன்

ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..!!

வணக்கம் நண்பர்களே...சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி மாதமே வருகிறது வாக்கிய பஞ்சாங்க ப்படி இந்த ஆண்டு கடைசியில் டிசம்பரில் தமிழுக்கு மார்கழியில் வருகிறது. இந்த முறை மட்டும் இரு பஞ்சாங்கம் இடையே இவ்வளவு வித்தியாசம் வருவதால் எப்போது சனிப்பெயர்ச்சி எதை முறையாக எடுத்துக்கொள்வது என மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

திருநள்ளாறு கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் சொல்லும் நாளில்தான் சனிபெயர்ச்சி விழா நடத்துவர்.எல்லா சனி சன்னதிகளிலும் 19.12.2017 அன்றுதான் சனிபெயர்ச்சி.திருக்கணிதம் எனும் திருத்தப்பட்ட பஞ்சாங்க அடிப்படையில் சனி அதற்கு முன்பாகவே அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார் 26.1.2017முதல் சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிட்டார்.

திருக்கணிதப்படி முறையான சனி பெயர்ச்சி 25.10.2017 அன்று வருகிறது...என்பதை கவனத்தில் வைக்கவும்.அதுவரை அதிசாரத்தில் மட்டுமே சனி தனுசுக்கு வருகிறார்.அதிசாரம் எனப்படுவது இதற்கு நேர் மாறாக ஒரு கிரகம் முன்னோக்கிப் போவது போன்ற தோற்றத்தை தருவதாகும்.

வாக்கிய பஞ்சாங்கப்படி இப்போது விருச்சிகத்தில்தான் சனி நிலையாக இருக்கிறார்...19.12.2017 அன்றுதான் சரியாக தனுசு ராசிக்கு செல்கிறார்.இருப்பினும் ஒரு காலை  மட்டும் வீட்டுக்குள் வெச்ச மாதிரி சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிடுவதால் சனிப்பெயர்ச்சி யாக எடுத்துக்கொண்டு பலன்கள் பார்க்கலாம்.இதுவே அக்டோபர் மாதம் திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சியானாலும் ,டிசம்பர் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி தனுசுக்கு மாறினாலும் இந்த பலன்கள் பொருந்தும்.இருப்பினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே பலன்களை கணித்து வெளியிடுகிறேன்.

சனியால் உண்டான பாதிப்புகள் குறைய,சனிக்கிழமை காகத்துக்கு சாதம் வைத்து விரதம் இருத்தல்,ஊனமுற்றோர்க்கு உதவுதல்,முதியோர்க்கு அன்னதானம்,வஸ்திர தானம்,சொர்னதானம் செய்தல் ,திருக்கொள்ளிக்காடு, குச்ச்னுர்சனி கோயில் சென்று வழிபட்டு வரலாம்.

சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது.மற்ற எல்லா ஸ்தானத்துக்கும் பகை,தீமைதான்.அஷ்டம சனி,ஏழரை சனி,கண்டக சனி ,விரய சனி,பாத சனி அதிக பாதிப்பை தரும்.வக்கீலை பார்த்தல்,டாக்டரை பார்த்தல்,கோர்ட் வாசலை மிதித்தல்,போலீஸ் ஸ்டேசன் வாசலை மிதித்தல்,வழக்கு,சிறைவாசம்,வெட்டியானை பார்த்தல்,கொள்ளி வைத்தல்,அறுத்தல்,கிழித்தல்,தையல் போடுதல் எல்லாம் சனியால்தான் நடக்கிறது.குரு மங்கள் காரியம்.சனி அசுப காரியம்.அதனால்தான் சனிப்பெயர்ச்சியை கண்டு மிரட்சியடைகிறோம்.

ஜாதகத்தில் கிரகங்களின் பலத்தை பொறுத்துதான் சனியோ ,குருவோ பலனை தர முடியும்.கண்டக சனி நடக்கும்போது ஆறுக்குடையவன் திசை நடந்தால் ஆபரேசன் நடக்கும்.அஷ்டம சனி,ஏழரை சனி  நடக்கும்போது ஜாதகத்தில் எட்டுக்குடையவன் திசை நடந்தால் நஷ்டத்தை சந்தித்தாக வேண்டும்.வழக்கை சந்தித்தாக வேண்டும்.

அஷ்டம சனி,ஏழரை சனி நடக்கும்போது யோகமான திசாபுத்தி நடந்தால் கல்யாணம் ,காதுகுத்து ,வீடுகட்டுதல் என சுப செலவாக மாற்றி சுப விரயமாக ஏழரை சனி மாற்றி விடும்.


தனுசு,கன்னி,விருச்சிகம்,ரிசபம்,மகரம்  ராசி குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் கைக்குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு சளி,காய்ச்சல்,வயிற்றுப்போக்கும் குழந்தையின் தாய்க்கு உடல் பாதிப்பும்,தந்தைக்கு பண விரயமும் அதிகமாக இருக்கும்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் சனி இருக்கும்போது படிப்பில் கவனம் குறையும். குறும்புத்தனம் அதிகமாக இருக்கும் எதையாவது உடைப்பது,நெருப்பில் சுட்டுக்கொள்வது,மின்சாரத்தை தொடுவது,கீழே விழுந்து அடிபடுதல்,காய்ச்சல் மற்றும் சீசன் நோய்கள் உடனே பாதிக்கும்.குழந்தைகளை நொந்து கொள்ளாதீர்கள்.பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

பருவ வயது குழந்தைகள் என்றால் 21 வயதுக்குள் எனில் புதிய நண்பர்கள் சேர்க்கை,கெட்ட சகவாசத்தால் கெட்ட பழக்கங்களை கற்றுக்கொள்வர்.வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவர்.அடுத்தவர் செய்த தப்பு இவர்கள் மேல் விழும்.பக்கத்து வீட்டாரோடு சண்டையிடும் நிலை வரும்.புது பாய்பிரண்ட் ,கேர்ள் ப்ரெண்டு கொடுத்து, கெடுத்து வைக்கும்.கவனமாக கண்காணியுங்கள்.

40 வயதுக்கு மேல் இருக்கும் தனுசு,ரிசபம்,விருச்சிகம்,மகரம் ராசியினர் மற்றும் கன்னி ராசியினர் உடல்நலனில் அதிக கவனம் வைக்கவும்.முழு செக்கப் செய்து கொள்ளுங்கள்..உணவு விசயத்தில் கவனம் தேவை.சுகர்,பிரசர் போன்ற மருத்துவத்துக்கு கட்டுபடாத நோய்கள் உண்டாகும் காலம்.நடுத்தர வயதினர் குடும்பத்தினரிடம் அனுசரித்து போங்கள். வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.குடிப்பழக்கம் இருப்பவர்கள் அதிக கவனமுடன் இருங்கள்..குடிப்பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

12 ராசியினருக்கு  சனி பெயர்ச்சி செய்யும் நன்மை தீமைகள் பற்றி சுருக்கமாக பார்க்கலாம் 

மேசம் ராசிக்கு அஷ்டம சனி முடிந்து விடுகிறது.பாக்ய சனி துவங்குகிறது.சனி இதுவரை துன்பம் தந்ததால் இனி சில பாக்யங்களை அதிர்ஷ்டத்தை தருவார்.

அஷ்டம சனி முடிவதால் இதுவரை இருந்து வந்த தொழில் தடைகள் விலகும்..பணப்பிரச்சினைகள் தீர்ந்து,.கடன் பிரச்சினைகள் தீரும் மருத்துவ செலவினங்கள் குறையும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சீரடையும்.புதிய முயற்சிகள் முதலீடுகள் ஜாதகத்தில் திசாபுத்தி ஒத்து வந்தால் இனி செய்யலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் புதிய பொருள்கள் வாங்குவீர்கள் .வருமானம் பெருகும்.தனலாபம்,பெண்களால் லாபம்,மகிழ்ச்சி உண்டாகும்.

ரிசபம் அஷ்டம சனி தொடங்குகிறது.பண விரயம்,கடன்,கெட்ட செலவு அதிகம் தருவது அஷ்டம சனி.
ரிசபம் ராசியினருக்கு சனி யோகாதிபதி என்பதால் ரிசபம் ராசியினரை சனி பாதிப்பதில்லை.ஆனால் உங்களை சுற்றி இருப்போரை பாதிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு அவர்களால் சங்கடம்,நெருங்கிய உறவுகளை இழத்தல்,உறவினர்களுக்கு அறுவை சிகிச்சை,பொருள் காணாமல் போதல்,தொழில் முடக்கம் அல்லது மந்தம் காணப்படும்.வருமானம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும்.புதிய முதலீடு செய்தால் திரும்பி வருதல் கடினம்.கவனமாக முதலீடு செய்தல் நல்லது.

 அஷ்டம சனி நல்லது செய்யாதா..? இல்லைங்களே.சனி என்பது இருள் கிரகம்.குரு போல ஒளி கிரகம் அல்ல.சனி வறுமையை தருபவர்.மனதை குழப்பி தெளிவான முடிவெடுக்க முடியாமல் செய்து ,உணர்ச்சிக்கு ஏற்ப செயல்பட வைப்பவர்.

சனி என்பது  தொழில் கிரகம்.அவர் நம் ராசிக்கு மறைகிறார்.உழைப்புக்கு காரகம்.உடல் ஆரோக்கியம் குறையும்.உடல் பலம்,மன பலம் குறையும்.தந்தைக்கு 12ல் மறைகிறார் தந்தைக்கு ஆயுள் பாவம் கெடுகிறது.

சனிக்கிழமை அனுமனை வழிபடுங்க..நவகிரகங்களை வழிபடுங்க. காக்கைக்கு சாதம் வைங்க.உஷாரா இருங்க..ராசிக்கு குரு பலம் இருக்கு.அதனால் இப்போது பாதகம் இல்லை.ஆகஸ்ட் மாதம் குரு ராசிக்கு ஆறில் ருணம்,ரோகம் என மாறுவார்.அப்போதுதான் அதிக சிரமம் தரும்.மிதுனம் ராசியினருக்கு 7ல் சனி வருகிறார்.......இது நல்லதுதான்...நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.கூட்டாளிகளால் லாபம் உண்டாகும்..தொழில் வளம் அடையும்.பொது தொண்டில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும்.சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் வியாபாரத்தில் புதிய யுத்துடம் இருமடங்கு லாபம் காண்பீர்கள்.பதவி உயர்வு கிடக்கும்.7ல் சனி என்பது கணவன் அல்லது மனைவி ஸ்தானத்துக்கு சனி வருவது.எனவே குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும் என்பதால் அனுசரித்து செல்லவும்.எட்டுக்கு  12ல் சனி மறைவதால் ,சிறுநீரகம்,கர்ப்பபை சார்ந்த பிரச்சினைகள் தருவார்.சிலர் வெளியூர் ,வெளிநாடு செல்வர்.

கடகம் ;ஆறில் சனி .ஆஹா பொன்னான காலம்.எதிரி ஒழிந்தான்.கடன் தீர்ந்தது. தொழில் உயர்கிறது.அடிச்சது லக்.. என பிறர் பேசுமளவு ஒரு யோகம் வந்து சேரும் .பெண்களால் யோகம்.பணம் எவ்வளவு வந்தாலும் தானம்,தர்மம் செய்துவிடும் பொன்னான மனம் கொண்டவரே, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்...சனி நல்லது செய்வார்.புதிய முயற்சிகள்,முதலீடுகள் துணிந்து செய்யலாம்.எதிரிகளை வெல்லலாம்.வெற்றிகள் குவியும்.திசாபுத்தி நன்றாக இருந்தால் இது அப்படியே நடக்கும்.

சிம்மம் ராசியினருக்கு  புண்ணிய சனி ஆரம்பிக்கிறது.கண்டக சனியில் இருந்து தப்பி விட்டீர்கள் ...இனி அலைச்சல் இருக்காது.மருத்துவ செலவுகள் இருக்காது.பணவிரயம் குறைந்து சேமிப்பு அதிகமாகும்.ஐந்தாமிட சனி அத்தை,மாமன் வர்க்க பகை உண்டாக்கும்.குழந்தைகள் சம்பந்தமான கவலைகள் ஏற்படும்.அவர்களால் விரய செலவும் காணப்படும்.சிலர் மனைவி,குழந்தைகளை பிரிந்து தொழிலுக்காக வெளியூர் ,வெளிநாடு செல்ல நேரும்..புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்..தாத்தா வகையில் பகை,குலதெய்வ கோயில் பங்காளி வகையில் பகை,பூர்வீக சொத்து சார்ந்த சங்கடம்,தடங்கல்,சிக்கல் உண்டாகும்.

கன்னி ராசியினருக்கு கண்டக சனி ஆரம்பிக்கிறது.நாலில் சனி நாய்படாத பாடு என சொல்வார்கள் .அலைச்சலைதான் அப்படி சொல்லி இருக்கிறார்கள் ..நார்கால் பிராணிகளிடம் கவனம் தேவை.வாகனத்தில் கவனம் தேவை.வாகனத்தால் செலவு உண்டு.தாய்க்கு பாதிப்பை தரும் சொத்து சம்பந்தமான தடங்கல்கள்,பிரச்சினைகள் தரும்.உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.மருத்துவ செலவு ஒன்று காத்திருக்கிறது.இடம் மாறுதல்,ஊர்மாறுதல்,வீடு மாறுதல்,கம்பெனி மாறுதல்  உண்டாகும்.தாய் வழியில் பகை உண்டாக்கும்.வெளிநாடு சிலர் செல்வர்.சிலர் வேறு நாடு,வேறு மாநிலம்  மாறுதல் செய்வர்.
உடல் ஊனமுற்றோர்க்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் உணவு,செருப்பு,ஊன்றுகோல்  வாங்கி கொடுங்கள். 

துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முழுவதும் முடிகிறது.இனி மகிழ்ச்சிதானே..ஏழு வருசமா பட்ட பாடுக்கு சனி பதில் சொல்ல மாட்டார்.அவர் கடமை முடிந்து கிளம்பிவிட்டார். பெற்ற அனுபவங்கள்,பாடங்கள் உங்கள் வாழ்வை இனி நீங்கள்தான் இனிமையாக்கிக்கொள்ள வேண்டும்.

வாழ்வை எப்போதும் மகிழ்ச்சியாக அணுகுவதுதான் உங்கள் பாணி.இனி கொண்டாட்டம் அதிகரிக்கும்படி நல்ல செய்திகள் தேடி வரும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்./தன லாபம் அதிகரிக்கும்.கடவுளையே நம்பி இருப்பது உங்க பாணி அல்ல.சிறிது உழைப்பு அதிக லாபம் கொண்டவர்.இனி தொழில் படிப்படியாக முன்னேற்றம் காணும் புதிய முயற்சிகள் ,முதலீடுகள் செய்யலாம்..ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்றவாறு முன்னேற்றம் இருக்கும்.புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள் ,புதிய வாகனம் வாங்குவீர்கள்.வீடு சீரமைப்பீர்கள்.விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.பாத சனி தொடங்குகிறது.

பாத சனி நடக்கும்போது மெதுவா நடக்கனும்.பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது.சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது.எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை.

சனி ராசிக்கு இரண்டில் வருகிறது ...நமக்கு எதிரி நம் வாய்தான்.நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும்.பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே நாலு வருசம் அப்படித்தான் இருக்கு என்கிறீர்களா.அதுவும் சரிதான் ஆனா..இரண்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம்.கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வரும்... டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க, பெருமை பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க.எல்லோரையும் மதிச்சு நடங்க.குடும்பத்தில் அனுசரித்து போங்க.எப்பவும் புலம்பாதீங்க..பயப்படாதீங்க.கோள் சொல்லாதீங்க.உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்துங்க..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நீங்கதான் அதிகம் வெளிப்படுத்துவீங்க..முகத்தை சோர்வாக வைத்திருப்பது,அதிக கவலை,முகம் சுளித்தல் இவற்றை தவிர்க்கவும்.மந்திரங்கள் படிங்க, போதும்.,தூரமா இருக்குற கோயிலுக்கெல்லாம் கஷ்டப்பட்டு போய் வழிபட்டாதான் பிரச்சினை தீரும் என கிளம்பி போய் காலை உடைத்துக்கொண்டவர்கள்தான் அதிகம். ஏற்கனவே ஏகப்பட்ட வழிபாடுகளை செய்துட்டுதான் இருக்கீங்க. அப்படியே மனுசாளையும் கொஞ்சம் வழிபடுங்க எந்த பிரச்சினையும் வராது.

தனுசு;ராசியினருக்கு ஜென்ம சனி வருகிறது..சந்திரனும் சனியும் இங்கு ஒன்று சேர்கிறது.மனதில் இருள் புகுந்தால் என்னாகும்..உணர்ச்சி போராட்டம் அதிகரிக்கும்.மனம் இனி அறிவு சொன்னபடி வேலை செய்யாது.மனசு சொன்னபடிதான் எல்லாம் நடக்கும்.குழப்பம் அதிகரிக்கும் குழப்பத்தோடு செய்யும் காரியங்கள் எல்லாம் சொதப்பலாகத்தானே முடியும்.இதனால் குடும்பத்திலும் நிம்மதி இழப்பு,தொழில் செய்யுமிடமும் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு இருக்கு.சனியும் சந்திரனும் சேரும் போது சந்திரன் உடல்காரகன் என்பதால் இனி உடலும் ஒத்துழைக்காது.சோம்பல் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் கெடும்.எனவே கவனமாக செயல்படுங்கள் .இது பொதுவாக சொன்னதுதான்.பயப்பட வேண்டாம்.எல்லோருக்கும் தனித்தனி ஜாதகம் இருக்கும்.நான்காம் அதிபதி சுபர் இருந்து,கெடாமல் இருந்தால் பெரிதாக பாதிக்காது.

உடலுக்கும்,மனதுக்கும் ,உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான்   இருக்கும்.சமாளிக்கலாம்.

நெருப்பால் கண்டம் இருக்கு.அவமானம்,பழிசொல் ஏற்பட வாய்ப்பிருக்கு..புதிய ஆட்களிடமும் பழைய நட்புகளாக இருந்தாலும் கவனம் தேவை.குடும்பத்தில் விண் வாக்குவாதம் தவிருங்கள் எடுக்கும் முடிவுகளை பத்து முறை அலசியபின் செயல்படுத்துங்கள்.

மகரம் ராசியினருக்கு விரய சனி எனும்  ஏழரை சனி ஆரம்பிக்கிறது.ராசிக்கு 12ல் சனி வருவது தொழில் முடக்கம்,நஷ்டத்தை தரும்..என முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர்.பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும்.போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும்.அகலக்கால் வைக்க வேண்டாம்.சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம்.உறவுகள்,நட்புகள் பகையாகும்.மருத்துவ செலவுகள் புதிதாக வருகிறது.அலுவலகத்திலும்,வீட்டிலும் செல்வாக்கு குறைகிறது.தவறுகள் அதிகமாகின்றன.சிலர் தூரமான ஊர்களுக்கு தொழிலுக்காக செல்வர்.அலைச்சல் அதிகரிக்கும்.தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.

கும்பம் ராசியினருக்கு லாப சனி ஆரம்பிக்கிறது...தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும்.நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம்.அண்ணனுக்கு,பாட்டிக்கு  பாதிப்பு.வீட்டில் சுபகாரியம் நடைபெறும்.

மீனம் ராசியினருக்கு கர்ம சனி ஆரம்பிக்கிறது.பத்தில் சனி தொழிலில் இடைஞ்சல்.உறவினர்களுக்கு கர்மகாரியம்.பங்காளி வகையில் இழப்பு.தொழிலில் லாபம்.வருமான உயர்வு உண்டாகும்.வேலை பார்க்கும் இடத்தில் போராடினாலும் லாபம் உண்டாகும்.இருதய கோளாறுகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வீர்கள்.தந்தையால் விரயம்.சமூகத்தில் அந்தஸ்து ,புகழ் உண்டாகும்.கடுமையான உழைப்பு உண்டாகும்.

ஹரிஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை!!Tuesday, 24 January 2017

தை அமாவாசை அன்னதானமும்,வஸ்திரதானமும் 27.1.2017


தை அமாவாசை அன்னதானம் 2017

நணபர்களே வணக்கம் ,

முன்னோர்களுக்குரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை. இந்தநாளில் முன்னோர்களை நினைத்து புனித நீர் நிலையில் தர்ப்பணங்கள் செய்தால் பிதுர்தோஷம் நிவர்த்தியாவதுடன், முன்னோரின் ஆசியும் கிட்டுமென்று தர்மநூல்கள் கூறுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் மிகவும் சிறப்பானவை. இதில் மகாளயபட்ச அமாவாசையென்று சொல்லப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கு கூடுதல் சிறப்புண்டு.
அது என்னவென்றால், அமாவாசை திதியில் மட்டுமின்றி, அதற்கு முன்னுள் தேய்பிறை நாட்கள் அனைத்திலுமே முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த பூர்வபட்ச நாட்களில் நம் மூதாதையர் பூமியை மிக நெருங்கி வருவதாக ஐதீகம்..அன்றைய நாளில் நம் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்..நம் துன்பங்கள் தீரும்..இத்தயக புண்ணிய நாளில் தான தர்மம் செய்வதும் அன்னதானம் செய்வதும் அளவில்லாத நன்மைகளை வாரிவழங்கும் பல மடங்கு புண்ணியத்தை தரும்...அன்னதானம்,வஸ்திரதானம் மட்டுமே நம் உயிரை காக்கும்.

அன்றைய நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் ,உடல் ஊனமுற்றோர்களுக்கும் அன்னதானம்,ஆடை தானம் 5 வது ஆண்டாக இந்த ஆண்டும் செய்ய இருக்கிறோம்..நண்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம் உங்களால் முடிந்தளவு அவர்களுக்கு உதவி செய்யலாம்...நமது பழைய பதிவுகளை பாருங்கள்..போன வருட தை அமாவாசை அன்னதானம் படங்கள்,செய்திகள் கிடைக்கும்..

கலந்து கொள்ள விரும்புவோர் மெயில் அனுப்ப sathishastro77@gmail.com

நன்கொடை அனுப்ப;

k.sathishkumar 20010801181 State bank of India ,chithode,Ifsc;sbin0000971

தை அமாவாசை அன்னதானம் அப்டேட்;

தை அமாவாசை அன்று ஆதரவற்ற முதியோர்கள் ,குழந்தைகள்,ஊனமுற்றோர் 200 பேருக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் வழங்கப்பட்டது ஒத்துழைப்பு நல்கிய பங்களிப்பு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...நண்பர்கள் குடும்பத்தார் பெயரில் சங்கமேஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சனை அபிசேகம் வழிபாடு செய்யப்பட்டது..

Monday, 16 January 2017

ஏன் அமாவாசையில் கார்,பைக் வாங்க கூடாது..?

ஏன் அமாவாசையில் கார்,பைக் வாங்க கூடாது..?
பஞ்சாங்கத்தில் நேத்திரம்,ஜீவன் என்ற கணக்கு ஒன்று உண்டு...அதாவது கண்கள் ,உயிர் என பொருள்படும்..நேத்திரம் என்றால் கண்...இது பஞ்சாங்கத்தில் 2-1,1-0 என்ற வரிசையில் தினசரி குறிக்கப்பட்டிருக்கும்..அமாவாசை தினத்தில் மட்டும் 0-0 என குறிக்கப்பட்டிருக்கும்.எனவே அமாவாசை நேத்திர ஜீவன் இல்லாத நாளாகும்.
கண்களும்,உயிரும் இல்லாத நாள் அமாவாசை.நேத்திர ஜீவன் இல்லாத நாளில் தொடங்கும் காரியம் தோல்வி அடையும்.வாங்கும் பொருள் நிலைக்காது.விபத்து உண்டாகும்.எனவே கண்ணில்லாத அமாவாசை தினத்தில் கோயிலில் வழிபடலாமே தவிர வாகனங்களை வாங்கி பூஜை போடுதல் தவறு.அது நிலையில்லாதது.கண்ணில்லாமல் வண்டி ஓட்டுவதை போன்றது