Thursday, 22 June 2017

திருமண பொருத்தம் -அதிர்ஷ்டமான கணவன் மனைவி- ஜோதிடம்


திருமண பொருத்தம் -அதிர்ஷ்டமான கணவன் மனைவி- ஜோதிடம்திருமண பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் தகப்பனார், பையனின் தகப்பனார் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்..பையனும் டாக்டர் பொண்ணும் டாக்டர் ...பொருத்தம் லேசா வந்தா போதும் ஜோசியரே...எங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு.பொண்ணும் பையனும் விரும்புறாங்க..நீங்க எதுக்கும் ஜாதகத்தை ஒரு பார்வை பார்த்துடுங்க என்று ஆரம்பிப்பவர்கள் தான் அதிகம்.இதுக்கு என்ன அர்த்தம்னா ஜாதகம் இரண்டும் சூப்பர்...முதல் தரமான பொருத்தம்னு நான் சொல்லிட்டா போதும் என்பதுதான் அவங்க விருப்பம்.அப்புறம் எதுக்கு ஜாதக கட்டத்தில் கிரகங்கள்,நட்சத்திரம்,திசாபுத்தி ரஜ்ஜு யோனி பொருத்தமெல்லாம் இருக்கோ தெரியல.

3ஆம் அதிபதியும் கெட்டு 3ல் சூரியனும் அமைந்த வசதியான அழகான பையனுக்கு தேற்வதை மாதிரி அழகான பொண்ணை கட்டிக்கொடுத்தாங்க...பெண் வீடு கோடீஸ்வர குடும்பம்...கல்யாணம் ஆகி பத்து நாள் கூட ஆகலை..பொண்ணு டைவர்ஸ் கேட்டுச்சு.காரணம் பையனுக்கு ஆண்மையே இல்லை...முதலிரவில் குறட்டை விட்டு தூங்கினா எந்த பொண்ணுதான் சகிப்பா..? இரவில் நல்ல  உறவு இல்லையேல் கள்ளக்காதல் அல்லது டைவர்ஸ்தான் முடிவு இன்றைய காலம் அப்படித்தான் இருக்கிறது.

ஜாதகத்தை நன்கு அலசுங்கள்....கிரக அமைப்பை நன்கு பாருங்கள்...பொறுமையா பார்த்து சொல்லுங்கள் என்று ஜாதகங்களை கொடுத்தால் ஜோதிடருக்கும் ஒரு ஆர்வம் வரும் தான் கற்ற ஜோதிட அறிவை வைத்து நன்குபலன் பார்த்து சேர்க்க உதவுவார்....டநட்சத்திர பொருத்தம் ஒன்பது இருக்கு ..ஜோசியரும் ஆஹா ஓஹோன்னுதான் சொன்னார் அப்புறம் எப்படி பிரிஞ்சாங்க..? திசாபுத்தி சரியில்லை...அஷ்டமாதிபதி திசை ,மாரகாதிபதி ,பாதகாதிபதி திசை ,நடக்கும் ஜாதகத்தை சேர்த்தால் பிரியத்தான் செய்வார்கள்...

பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரமாக இருந்தாலும் பத்தாம் அதிபதி வலிமையாக இருப்பின் மாமியாருக்கு ஒன்றும் ஆகாது ஆயுள் கெட்டி.

மூலம் நட்சத்திரமாக இருப்பினும் மூன்றாம் இடம் மாமனார் ஸ்தானம் வலிமையாக அமைந்தால் மாமனார் செல்வாக்காக இருப்பார் தீர்க்காயுளுடன் வாழ்வார்....மருமகள் வந்த பின் புகழும் செல்வாக்கும் அவருக்கு கூடும்.

நல்ல நட்சத்திரமாக இருந்தும் மாமனார் மாமியார் ஸ்தானம் கெட்டு ,கர்மாதிபதி திசை நடந்தால் குடும்பத்தோடு விபத்தை சந்திப்பார்கள் நிறைய ஜாதகங்களில் இதை பார்த்திருக்கிறோம்...

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் யோனி பொருத்தம் கொடுத்திருக்காங்க...அதை நன்கு கவனித்து சேர்த்தனும்....புலியோடு (விசாகம்)  ஆட்டை சேர்க்க முடியாது...(பூசம்)..அடித்து சாப்பிட்டு விடும்.

எருமையோடு (சுவாதி) எருமையை (அஸ்தம்)சேர்க்க கூடாது..இரண்டும் குட்டையில் கிடக்கும் எருமை போல கிடந்து வீடு குட்டி சுவராகிவிடும்.

யோனி என்பது தாம்பத்யம் எப்படி இரவில் உறவு எப்படி திருப்தியான தாம்பத்யமா என சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம் அதை நன்கு கவனித்து சேர்க்க வேண்டும்..


அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பசு
ரேவதி - பெண் யானை


ஆண்,பெண் இருவருடைய யோனி வித்தியாசங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.

மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.


பூனை, புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.
யானை,நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.
அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் செக்ஸ் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.


நாயும் குரங்கும் சேர்த்தால் என்னாகும்..? 

குரங்கினை கண்டால் நாய் எப்படி துரத்தும் என பார்த்திருப்போம்..பூனையும் அப்படித்தான் நாய்க்கு ஆகாது...

எலியை கண்டால் பூனை விடாது ..பாம்பும் விடாது..இவை எல்லாம் இயற்கையில் பகை.

இப்படி இயற்கையான பகை விலங்குகளை சேர்ப்பது நிஜ வாழ்வில் அவர்களை ஒற்றுமையில்லாமல் ஆக்கிவிடும்.

ஒரே நட்சத்திரக்காரர்களை சேர்க்க கூடாது என்ன காரணம்..? இருவருக்கும் ஒரே திசை கடைசி வரை தொடரும் அவை வாழ்வில் கடும் சோதனைகளை தரும் 

எனவே ஒரே நட்சத்திரங்கள் வாழ்வில் முன்னேற்றம் தருவதில்லை திடுக்கிடும் திருப்பங்களை வாழ்வில் தந்துவிடும் அல்லது கிணற்றில் போட்ட கல்லாக வாழ்க்கை மிக மந்தமாக நகரும்.இதுவே ரஜ்ஜு பொருத்தம் எனப்படும்..

ஜாதகத்தில் இருவருக்கும் என்ன திசை நடக்கிறது என்பதை கவனித்து சேர்க்க வேண்டும்...

.கணவருக்கு இந்த திசை என்ன செய்யும் மாமனார்க்கு என்ன செய்யும் மாமியாருக்கு என்ன செய்யும் என்பதை கவனிக்க வேண்டும்.

இருவருக்கும் குடும்ப ஸ்தானம் கெட்டிருக்கிறதா இருவருக்கும் கணவன் மனைவி ஸ்தானம் நன்றாக இருக்கிறதா என்பதை ஆராய்வது முக்கியம்.

7ஆம் இடத்தில் ஒருவருக்கு பல கிரகங்கள் இருந்து இன்னொருவருக்கு 7 சுத்தமாக இருப்பின் ஒத்து வராது...தாம்பத்யம் சிறக்காது ..ஒருவர் செக்ஸ் ஆசை அதிகமுடையவர் இன்னொருவர் ஆசையே இல்லாதவர்....ஒருநாள் தாம்பத்யம் வைத்துக்கொண்டதும் என்னால முடியல 15 நாளைக்கு கிட்டயே வராதீங்க என்று சொன்னால் கணவன் என்ன செய்வான்..? 

ஆண்பெண் இருவருக்கும் யாரையும் பாதிக்காத நல்ல திசை நடப்பது முக்கியம்..எதிரெதிர் திசைகள் நடப்பதும் ஆகாது..ஒருவருக்கு சந்திர திசை இன்னொருவருக்கு ராகு திசை இது கிரகணம் போன்றதாகும். இவை வாழ்வை இருளாக்கிவிடும்.

ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் இருக்கும் ராசியில் இன்னொருவருக்கு கேது இருந்தால் ஒருநாளும் சந்தோசம் இருக்காது.

சுக்கிரன் குரு சந்திரன் இருவருக்கும் எப்படி என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது..

திருமண பொருத்தம் பற்றி நிரைய கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்...தேடி அதையும் படித்து பாருங்கள்..நிதானமாக நன்கு ஆராய்ந்து பொருத்தம் பாருங்கள் அவசரப்பட்டால் காலம் முழுக்க கண்ணீர் சிந்த வேண்டி வரும்.
1 comment:

Unknown said...

பெண் எலி
பெண் குரங்கு
திருமணம் செய்யலாமா?