Tuesday, 1 August 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 கன்னி முதல் மீனம் வரை

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 கன்னி முதல் மீனம் வரைமேசம் முதல் சிம்மம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 


கன்னி - கன்னி ராசியினருக்கு பதினொன்றாம் வீடாகிய லாப ஸ்தானத்துக்கு ராகு சென்றிருக்கிறார்...பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ஆம் ராசிக்கு கேது செல்கிறார் ..லாபத்தில் ராகு வந்தால் அருளும் பொருளும் குறைவின்றி வந்து சேரும்...தடைக்கற்கள்  அனைத்தும் தவிடுபொடியாகும்..நினைத்த காரியம் தாமதமின்றி நிறைவேறும் வர வேண்டிய பணம் வீடு தேடி வந்து சேரும்.தொட்டது அனைத்தும் துலங்கும். லாபங்கள் அதிகளவில் வந்து சேரும். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்..தொழில் முடக்கம் முற்றிலும் விலகும்.வீட்டில் சுபகாரியம் ஒன்று நடைபெறும்...கடன்கள் அடைபடும் நோய்கள் விரைந்து தீரும்.

ஏழரை சனி முடிந்து ரொம்ப நாளாகியும் பிரச்சினை தீரவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.நிம்மதி அடைவீர்கள்

துலாம் -உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு வருகிறார் நான்காம் இடத்தில் கேது வருகிறார்..தொழிலுக்கு பாதகம் இல்லை.வருமானத்துக்கு குறைவில்லை. பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும் என்று சொல்வார்கள். கேட்காமலே உதவிகள் கிடைத்திடும். தாமதமான முன்னேற்றம் இனி தடங்கலின்றி வந்து சேரும். அன்பானவர்கள் தானாக வந்து சந்தோசப்படுத்துவார்கள்..நட்புகள் ஒன்று சேரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் தாய்க்கு பாதகமான காலம்.

சொத்துக்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை.நீண்ட தூர பயணத்தில் எச்சரிக்கை தேவை.சிலர் வீடு மாறுவர்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இப்போதுதான் மருத்துவ சிகிச்சை முடிந்தது ஆனாலும் மருத்துவ சிகிச்சை சிறிய அளவில் மீண்டும் ஒன்று காத்திருக்கிறது.வாகனத்தில் கவனம் தேவை..ஏழரை சனி முடியப்போகும் பொன்னான காலகட்டத்தில் தொல்லைகள் பெரிதாக ஒன்றும் இல்லை ராகு கேதுக்கள் உங்களை பெரிதாக தொந்தரவு செய்ய மாட்டார்கள் லாபத்தில் குறை வைக்க மாட்டார்கள். 

விருச்சிகம் -அல்லல் கொடுக்கும் சனி பகவான் பிடியில் இருந்து தப்பிக்க வழிபார்த்து விழி கலங்கி நிற்கும் விருச்சிகம் ரசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பெரிதாக பயமுறுத்தவில்லை..ஒன்பதாம் ராசிக்கு செல்லும் ராகு தந்தை வழியில் தொழ்ந்தரவும் மன சங்கடங்களையும் தருவார் சுற்றார் மூலம் கவலைகளை தருவார்...தொழிலில் இருந்து வந்த சில சங்கடங்கள் விலகும் வருமானத்துக்கு குறைவில்லை..குடும்பத்தில் மனக்கசப்புகள் விலகும் சொத்துக்கள் சிலர் வாங்குவர் கடன் பாக்கிகள் குறையும்.மருத்துவ பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும்..

மூன்றாம் இடத்து கேது சகோதர வழியில் சிலருக்கு நிம்மதி குறைவை உண்டாக்கும்..மறைந்த கேது நிறைந்த வாழ்வை தருவார் மங்களகரமான நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறும்..நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது.ராகு கேது உள்ள வினாயகரை வழிபட்டால் வீண் பயம்,கவலைகள் தீர்ந்து தெளிவு பிறக்கும்.

தனுசு -ஏழரை சனி செய்ய வேண்டியதை இந்நேரம் செய்து குழப்பத்தில் உங்களை ஆழ்த்தியிருக்கும் இக்காலகட்டத்தில் ராகு கேதுக்கள் நல்ல பலன்களை தருவார்கள் என எதிர்பார்க்க வேண்டாம்..எட்டாமிடத்து ராகு கஷ்டத்தை கொடுப்பார்..துஷ்டன் என பெயர் வாங்க வைப்பார்.இஷ்டமுடன் செய்யும் காரியம் கஷ்டத்துடன் முடியும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது...குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக வரப்போவதால் ஆறுதல் அடையலாம் எட்டாம் இடத்து ராகு விசப்புச்சிகளால் கண்டம்..அரசால் பாதகம்..பணி புரியும் இடத்தில் உங்கள் மதிப்பு குறைய நிரைய வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்..கேது தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமான தடை ,பண முடக்கம் காணப்படும் என்றாலும் புரட்டாசி மாதத்துக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது இக்காலகட்டத்தில் முக்கியம். ராகு கேது திசை நடப்பவர்கள் ராகு ஸ்தலம் சென்று வழிபாடு செய்து கொள்ளுங்கள்..

மகரம் -உங்கள் ராசிக்கு 7வது ராசிக்கு செல்கிறார் ராகு...கேது  ஜென்ம ராசிக்கு வந்திருக்கிறார்...மனைவி/கனவன் ஸ்தானத்துக்கு வரும் ராகு இல்வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்த தயங்க மாட்டார் ...ஏழரை சனியும் இப்போது தொடங்கவிருப்பதால் வீண் சர்ச்சைகளை உங்கள் மூலம் ஆரம்பித்துவிடாதபடி பொறுமையை கடைபிடிப்பது அவசியம். 7ல் வரும் ராகு வாழ்க்கை துணைக்கு மருத்துவ சிகிச்சையை செய்ய காத்திருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை ஜென்மத்துக்கு வரும் கேது முன்கோபம்,பிடிவாதம்,அவசரப்படுதல் போன்ற குணங்களை தூண்டுவார்...ஆன்மீகம்,கடவுள் பக்தி,தியானம்,யோகா ஆகியவற்றை கடைபிடிப்பது இக்காலகட்டத்தில் நல்லது.

7ஆம் இடத்து ராகு கூட்டாளிகளால் நண்பர்களால் குழப்பத்தை ஏற்படுத்துவார்...நஷ்டத்தை ஏற்படுத்துவார் பங்கு தொழிலில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது

கும்பம் -உங்களுக்கு ஜென்மத்தில் இருந்து வந்த கேது விரய ஸ்தானத்துக்கு சென்று விட்டதால் நிம்மதி பெருமூச்சு விடலாம் தலையில் இருந்து பாரம் இறங்கியது போல நிம்மதி அடையும்படி நீண்ட நாள் கவலைகள் தீரப்போகிறது....6ஆம் இடத்துக்கு ராகு நகர்ந்து விட்டதால் குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதியற்ற போக்கு இனி தீர்ந்து சந்தோசமான சம்பவங்கள் நடைபெறும்...6ஆமிடத்து ராகு எதிரிகளை ஒழிக்கும் கடன்களை தீர்க்கும் நோய்களை போக்கும் என்கிறது ஜோதிடம்.மறைந்த ராகு யோகமான ராகுவாகும்...தொழில் அபிவிருத்தி உண்டாகும் வருமானம் அதிகரிக்கும் பணப்பிரச்சினைகல் தீரும்..வழக்குகள் தீரும்.மனைவி.கணவன் ஒற்றுமை உண்டாகும். சிலர் புதிதாக சொத்துக்கள் வாங்குவர்.பழைய கடன்கள் அடைபடும் உறவுகள் நட்புகள் ஒன்று சேர்வர்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்..

மீனம் -உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு ராகு வருகிறார் வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடையில்லாமல் செல்ல வாய்ப்புண்டாகும் ..5ஆம் இடம் வெற்றி ஸ்தானம்,,குழந்தைகள் ஸ்தானம் அங்கு ராகு வருவதால் வெற்றிகள் தள்ளிப்போகும். குழந்தைகள் வழியில் ஆரோக்கியம் பாதிக்கப்படும்..இருப்பினும் கேது லாப ஸ்தானத்துக்கு வருவது நல்ல பலன்களை செய்யும்.லாபத்தில் பாம்பு வந்தால் பதவிகள் கிடைக்கும் வருமானம் பெருக்கும்..ஆதாயம் அதிகரிக்கும் கடன்கள் தீரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

உங்கள் ராசிக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருப்பினும் ராகு பெயர்ச்சி உங்களை பாதிக்காமல் லாபம் தரும்படியே அமைந்திருக்கிறது.