Saturday, 2 September 2017

குருப்பெயர்ச்சி பலன்கள் 2017-2018

அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 

குரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

                        

வாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.

மேசம் முதல் துலாம் ராசி வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 


செவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிகம் ராசி நண்பர்களே...நீங்கள் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு ஆற்றலுடன் செயல்படக்கூடியவர்கள்...தவறு நடந்தா அது யார் எவர் என பார்க்காமல் உடனே தட்டிக்கேட்கும் குணம் உங்கள் பலவீனம்..பேச்சில் பல சமயம் கடுமை காட்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்.


உங்கள் ராசிக்கு இதுவரை லாபத்தில்  சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்போது ராசிக்கு விரயத்தில் மறைகிறார்..இது கோட்சாரப்படி நல்ல பலன் இல்லை.விரய குரு என்ன செய்யும் என பழைய ஜோதிட நூல்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் ,விரயம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் கெடும் செல்வாக்கு சரியும். உறவும் நட்பும் பகையாகும் தொழில் மந்தமடையும் என்பதுதான்.உடல் ஆரோக்கியம் ஏற்கனவே பாதித்தவர்களுக்கும் பண நெருக்கடியில் இருப்போருக்கும் இது நல்ல செய்தி அல்ல என்றாலும் உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்தி நடந்தால் உங்களுக்கு கைகொடுக்கும்படியாகவே குரு வழி செய்வார் ..

குருபார்வை எப்படியிருக்கும் என பார்த்தால் குரு தனது ஐந்தாம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சொத்து சிக்கல்கள் தீரும்.7ஆம் பார்வையாக ஆறாம் இடம் ருண ரோகத்தை பார்வை செய்வதால் கடன் தொல்லைகள் குறையும் நெருக்கடிகள் தீரும்.ஒன்பதாம் பார்வையாக எட்டாமிடம் அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் எதிரிகள் தொல்லை குறையும் ராசிக்கு குரு பாதகமாக அமைந்தாலும் குரு பார்வை ஆறுதல்தரும்படியாகவே இருப்பதால் நம்பிக்கையுடன் இதனை தாண்டி வாருங்கள் 

செவ்வாய் தோறும் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள் தினசரி காலை கந்த சஷ்டி கவசம் படித்து வரவும்.


குருவின் ராசியை கொண்ட நீங்கள் அன்பு,அமைதி,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி என சாத்வீக குணத்தை கொண்டவர்.சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.ஒரு வில் ஒரு சொல் என சொல்வார்கள் அது போல வெச்ச குறி தப்பாது என காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் என வில் அம்பை சின்னமாக கொடுத்திருக்கின்றனர்..வில்லுக்கு அரசன் அர்ஜுனன் பிறந்த ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரை சனி வந்ததும் கொஞ்சம் ஆடிப்போக வைத்திருக்கலாம் ,.அதே சமயம் ஆறுதல் தரும்படி உங்களை உற்சாகப்படுத்தும்படி குரு பெயர்ச்சி வந்திருக்கிறது...

லபஸ்தானத்தில் குரு இருப்பது அதுவும் ராசி அதிபதி லாபத்தில் வருவது உங்களுக்கு மட்டும்தான் லாபத்தில் குரு வந்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்கள் தீரும். சேமிப்பு அதிகரிக்கும். தொட்ட காரியம் தடங்கலின்றி நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் ,கனவுகள் நிறைவேறும்.குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் குடும்பம் அமையும்.

குரு பார்வை உங்க ராசிக்கு எப்படி என பார்த்தால் மூன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். நிறைய புது முயற்சிகள் செய்து வருமானத்தை பெருக்குவீர்கள் .

பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.களத்திரஸ்தானத்தை குரு பார்ப்பதால் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும் மனைவியால் ஆதாயம் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் நடைபெறும்.

வியாழக்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.சனியை அதிபதியாக கொண்ட ராசி மகரம்.சர ராசி என்பதால் எப்போதும் துள்ளும் வேகத்துடன் இருப்பீர்கள் என்பதால் ஆடு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது...கடுமையான உழைப்பினை கொண்ட ராசி உங்களுடையது .அடுத்தவருக்காக உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்.உங்கள் ராசிக்கு ஏழரை சனி துவங்கும் நிலையில் வரப்போகும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என பார்க்கலாம்

இதுவரை ராசிக்கு ஒன்பதில் சஞ்சரித்து வந்த குரு இனி ராசிக்கு பத்தில் சஞ்சரிக்கப்போகிறார் குரு பத்தில் வருவது பதவிக்கு இடற்பாடு என சொல்வார்கள் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம் என்பதால் தொழில் பணி புரியும் இடத்தில் பல சிக்கல்கள் வரலாம் என்பது ஜோதிடம் கூறும் கோட்சாரப்பலன் ஆகும் இது கர்ம குருவாக வருவதால் உறவுகள் ,நட்புகள் இவற்றில் கர்மத்தை செய்யும் குருவாக வருகிறது. எனவே சில நெருங்கிய உறவுகளை இழக்கும் சூழல் உண்டாகும்.பத்தில் குரு வந்தால் பண விரயம் அதிகமாகும் காரிய தடை உண்டாகும் குடும்பத்தில் குழப்பம் காணப்படும் என சொல்லப்பட்டாலும் உங்கள் ஜாதக திசாபுத்தியும் ஜீவன ஸ்தானமும் வலிமையாக இருப்பின் தொழிலுக்கு பாதகம் வராது.

குருபார்வை எப்படி இருக்கும் என பார்ப்போம்..ராசிக்கு இரண்டாம் இடத்தை தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வருமானம் அதிகரிக்கும் .கடன் நெருக்கடிகள் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.ஏழாம் பார்வையாக குரு சுக ச்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஒன்பதாம் பார்வையாக குரு ராசிக்கு பாக்யஸ்தானத்தை பார்ப்பதால் தந்தை வழி ஆதாயம் உண்டாகும்..

புதன் கிழமை அன்று மதுரை மீனாட்சி சொக்கநாதரை சென்று வழிபட்டு வரவும்.

குன்றில் இட்ட விளக்கு போல எரிந்து அனைவருக்கும் வழிகாட்டும் ராசி கும்பம் ராசி..கும்பத்து குரு சம்பத்து கொடுக்கும் என்பார்கள் ...நிலையான புகழும்,செல்வாக்கும் ,பல தலைமுறைக்கும் புகழ் சேர்த்துவிட்டு ராசியினர் கும்பம் நீர் தழும்பாது என்பதற்கேற்றவாறு திறமைகள் தகுதிகள் பல இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் தன் கடமையை செய்யும் குணம் கொண்டவர்கள் கும்பம் ராசியினர் என்பதால் கலசம் சின்னம் உங்கள் ராசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


உங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த குரு,இஷ்டமுடன் காரியம் செய்ய கஷ்டம் வந்து சேரும் நஷ்டம் வந்து சேரும் என சோதனை செய்து கொண்டிருந்தார்  இப்போது ராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார் ...பாக்யஸ்தான குரு அளவில்லாத நன்மைகளை தரும் இடமாகும் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பார்கள் பிரச்சினையில இருந்து தப்பிப்பது அவ்வாறு சொல்வர்.ஒன்பதாம் இடத்து குரு மாலை ,மரியாதைகளை பெற்று தரும் தர்மகாரியங்களை முன்னிலைபடுத்தி செய்ய வைக்கும் கல்வெட்டில் பெயர் வரும்.பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் அதிர்ஷ்டம் உண்டாகும் குருபலம் இருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.ராசிக்கு குருபலமாய் பலம் பெறும் குரு தொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாக்குவார்...பதவி உயர்வு கொடுப்பார்...முதலீடு நல்ல லாபம் கொடுக்கும் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும்..பழைய கடன்கள் தீரும் வரவேண்டிய பணம் வந்து சேரும் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.


ராசிக்கு குரு பார்வை எப்படி என பார்த்தால் லக்னத்தை குரு பார்ப்பதால் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்..மூன்றாமிடமாகிய வீரிய ச்தானத்தை குரு பார்ப்பதால் முயற்சிகள் பல செய்து வெற்றிகளை குவிப்பீர்கள் ...ஒன்பதாம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் முன்னோர்கள் ஆசியால் பல வெற்றிகள் உண்டாகும் 

புதன் கிழமையில் சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட்டு வரவும் 
குருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...இதுவரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் குருபலத்துடன் இருந்துவந்த குரு பகவான் இப்போது ராசிக்கு எட்டாம் இடத்துக்கு மாறியிருக்கிறார்...

ராசிக்கு அஷ்டமத்தில் குரு வந்தால் இஷ்டமுடன் செய்யும் காரியம் நஷ்டம் வந்து சேரும்..கஷ்டத்துடன் உதவினாலும் துஷ்டன் என பெயர் வரும் என்பார்கள் எனவெ உங்கள் தொழில் குடும்பத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் பிறர் விசயத்தில் தலையிடுவதோ வாக்குவாதம் செய்வதையோ முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை எட்டில் குரு பொட்டில் அடிபடும் என்பார்கள் ..அதாவது நொடிபொழுதில் அடிபடுவதையும் இது குறிக்கும் .

செல்வாக்கு சொல்வாக்கு சரியும் காலம் என்பதால் யாரையும் நம்பவேண்டாம் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம் கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துதல் கடினம் .குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிருங்கள் .

உங்கள் ராசிக்கு குருபார்வை எப்படி என பார்த்தால் ராசிக்கு இரண்டை குரு பார்ப்பதால் தன வரவில் குறைவிருக்காது பனம் ஏதேனும் வழியில் வந்து கொண்டே இருக்கும் விரய செலவுகளை மட்டும் கட்டுப்படுத்தினால் நல்லது.சுக ச்தானத்தை குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும்.

வியாழன் தோறும் முருகனை தரிசனம் செய்து வழிபடவும்.

No comments: