Tuesday, 14 November 2017

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா
நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..?
சிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக அந்த ராணி யாரும் நினைத்து பார்க்க முடியாத உத்தரவை பிறப்பித்தாள்
என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் ..அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை அவிழ்த்துவிடுங்கள் அப்போதுதான் குழந்தை பிறக்க வேண்டும் என சொல்ல அதன்படி செய்யப்பட்டது..தலைகீழாக இருந்து பிறந்ததால் அக்குழந்தை கண்கள் ரத்தமாக இருந்தன..அவர்தான் செங்கண் சோழன் ..சோழ ராஜ்ஜியத்தில் பெரும் சாதனைகளை செய்த மன்னன்..
என்னதான் சிசேரியனுக்கு நால் குறித்தாளும் ,பெரும் கிரகங்களான சனியும்,குருவும் இருக்கும் ராசியை மாற்ற முடியாது..லக்னத்தை மாற்றலாம்..ராசியை மாற்றலாம்..பூர்வபுண்ணியம்,வம்சாவழி தோசங்களை நீக்க முடியாது..அக்குழந்தை யோகசாலியாக இருப்பான் என அவன் விதி இருந்தால்தான் சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க முடியும் இதுவும் விதிப்படியே நடக்கும்
விதியை நீ மதியால் வெல்வாய் என்பதே உன் விதியாய் இருந்திருக்கும்..!!!

உங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம்
கிராமங்களில் பச்சை வைத்தல் எனும் சம்பிரதாயம் உண்டு...அதாவது ஒருவருக்கு வீட்டில் உடல்நலம் சரியில்லாமல் மோசமாக இருந்தால் ஆட்டையோ கோழியையோ அந்த ஊர் எல்லையில் இருக்கும் தெய்வத்துக்கு பழி கொடுத்து ஊரில் இருக்கும் எல்லோருக்கும் சாப்பாடு போடுவது ஆகும்...பசியோடு இருப்பவருக்கு சாப்பாடு போடுவது போன்ற உன்னதமான பரிகாரத்துக்கு நிகர் எதுவும் இல்லை..
அமெரிக்காவின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றவர் ராக் பெல்லர்.இவர் மகா கஞ்சன்.பணத்தை பெருக்குவதில் திறமைசாலி இவர் ஒருமுறை நடக்க முடியாமல் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் இருந்தார். உலகின் புகழ்பெற்ற மருத்துவர்கள் எல்லோரும் பார்த்துவிட்டார்கள் ஒன்றும் பலன் இல்லை..
அப்போது அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் யதார்த்தமாக யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள்..கஞ்சன்..யாருக்கும் காசு கொடுக்காம இவனும் திங்காம இருந்தான் இப்படி கிடக்கிரான் என சொல்ல ராக் பெல்லர் மனதில் அது இடி போல இறங்கியது உடனே தன் செயலாளர்களை அழைத்து பல கோடி டாலர்களை ஏழைகளின் நலனுக்காக செலவிட உத்தரவிட்டார்...அடுத்த நாளே படுக்கையில் இருந்து எழுந்தார் முன் போல சுறுசுறுப்பாக செயல்பட்டார் ..அப்போது அவர் ஆரம்பித்ததுதான் உலகின் மிகப்பெரிய எழைகளின் தொண்டு நிறுவனமான ,ராக்பெல்லர் பவுண்டேசன்.
உலகின் கோடீஸ்வரர்கள் எல்லோரும் இதர்கு நிதி உதவி செய்கிறார்கள் உலகில் இருக்கும் அடித்தட்டு மக்களை எல்லாம் தேடி சென்று இந்த பவுண்டேசன் உதவி செய்வதாக சொல்கிறார்கள்..அக்காலத்தில் நம் தமிழர்களில் பெரும் செல்வந்தர்களாக இருந்தவர்கள் எல்லாம் இறுதி காலத்தில் தர்ம சத்திரம் கட்டிதான் தங்கள் மன இறுக்கத்தை போக்கிக்கொண்டார்கள்...
பெரிய கோடீஸ்வரர்கள் எல்லோருக்கும் இறுதி காலத்தில் ஒரு பெரும் குழப்பம் வரும்..இவ்வளவு சம்பாதித்தோம்..எதற்காக ..இனி இவை என்ன ஆகும் என்ன இதனால் சாதித்தோம் என நினைக்க வைக்கும்..அதற்கு ஒரே வழி நம் தமிழ் செல்வந்தர்கள் கன்னியாகுமரி முதல் காசி வரை கட்டி வைத்த தர்ம சத்திரங்கள் அன்னதான கூடங்கள் வழி காட்டும்..!!!

Wednesday, 8 November 2017

விருச்சிகம் ராசியினருக்கு சனி என்ன பலன் தருகிறார்? 2017


விருச்சிகம் ராசியினருக்கு சனி முடியும் வரை நல்ல பலன் சொல்வதற்கு இல்லை என்றாலும் எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கு..இப்போ உங்களுக்கு நாக்கில் சனி இருக்கிறார்..முன்பு போலவே இப்போதும் ஜாடை பேசறது,இடித்து ,பழித்து பேசுவது எல்லாம் செய்தால் சனி நல்லா வெச்சி செய்வார்...இரக்கமில்லையா உனக்கு என கேட்டாலும் விட மாட்டார்.
உறவுகள் நிரந்தர பகையாகும் காலம்..பழிக்கு பழி என உங்க எதிரிகள் உங்களை சூழ்ந்து நிற்கும் காலம் இது.பத்து வருசத்துக்கு முன்னாடி நடந்த தன் வினை எல்லாம் தன்னை சுடும் காலம்..வருமானம் எல்லாம் பெருசா எதிர்பார்க்க வெண்டாம் வந்தாலும் தங்காது.செலவு நிறைய இருக்கு.கடன் இருந்துட்டு போகட்டும்..மேலும் வாங்காம இருந்தா போதும்.குடும்பத்தில் வாக்குவாதம் என ஆரம்பிச்சா ஒரு வாரம் அனல் பறக்கும்..சில சமயம் சண்டை முடிய ஒரு மாசமும் ஆகலாம் ..கோபம் வந்துச்சின்னா அதிக சேதாரம் உங்களுக்குதான்...முறைச்சாலும் சேதாரம் உங்களுக்குதான்
.புத்தி மதி யாருக்காவது சொன்னா நீங்க எப்படி என கேட்கப்படும் காலம்.மவுனமா இருந்தாலும் பிரச்சினை வரும் என்னங்க சொல்றீங்க..ஆமா மவுனமா இருந்தாலும் பிரச்சினை வரும்..ஏன்னா நம்மை எல்லோரும் விசமாகவே பார்க்கப்படும் நேரம்...கனிவா பேசுங்க..அவமானம் வந்தா அந்த இடத்தை விட்டு போயிடுங்க..கனிவா பேசலைன்னாலும் கோபம் மட்டும் வரவே கூடாது.வந்தால் பெரு நஷ்டம்.
குழந்தைகளுக்காகவே வாழும் நீங்கள் ,குழந்தைதான் என் உயிர் என நினைக்கும் நீங்கதான் இந்த சமயத்துல அவர்களை வெளுத்து வாங்குவீங்க..கடும் சொல்லால் வாட்டுவீங்க...உங்க குழந்தைகள் இந்த சமயத்துல உங்க பேச்சை கேட்காது விட்டுடுங்க..சின்ன குழந்தைகள் இந்த ராசி என்றால் இப்போ சமர்த்தா இருக்க மாட்டாங்க..குறும்பு அதிகம்..படிக்க உட்காரவே கஷ்டப்படுவாங்க.சொந்த தொழில் செய்பவர்கள் பணப்பிரச்சினையில் அல்லாடும் காலம்.சனி இருப்பது தன ஸ்தானத்தில்..எனவே புதிய முதலீடுகள் ,புதிய முயற்சிகள் தோல்விகளை தழுவ வாய்ப்புகள் அதிகம்.இருப்பதை வைத்து சமாளிப்பதே உத்தமம்..

உடல் ஆரோக்கியம் எப்படி என கேட்பவர் கவனத்துக்கு .....சனி இப்போது காலுக்கு வந்திருக்கிறார் காலில் அடிபடும் காலம்..பணம் ,பொருள் தொலையும் காலம் ,அறுவை சிகிச்சை நடக்கும் காலம்..சனி முடியும் வரை மருத்துவ சிகிச்சை தொடரும்..சரியான மருத்துவமோ மருத்துவரோ கிடைக்காத துரதிர்ஷ்டமான காலம் மட்டுமல்ல..உங்கள் உடல்நலத்தை நீங்களே சரிவர பார்த்துக்கொள்ள முடியாத சோம்பலையும்,அலட்சியத்தையும் சனி உண்டாக்குவார்..எனவே சும்மா இருந்தா சனி இன்னும் அழுத்துவார்..உழைப்பு,முயற்சி,சோம்பியிராமல் இருப்பது,எப்போதும் விழிப்புடன் இருப்பதுதான் சனியை சமாளிக்கும் வழிகள்... சனி முடியும் வரை இதை மீண்டும் மீண்டும் படிச்சுக்குங்க.