Friday, 22 February 2019

ராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு பாதிப்பு

ராகு கேது பெயர்ச்சி 

. மிதுனம் ராசிக்கு ராகு வருகிறார் மிதுனம்,தனுசு, விருசிகம்,ரிசபம்,மீனம் ,கன்னி ராசியினருக்கு மன உளைச்சல் மன அழுத்தம் உடல் ஆரோக்ய பாதிப்பு சற்று அதிகம் காணப்படும்...வாழ்க்கை துணை கருத்து வேறுபாடுகள் ஏறகனவே இருக்கும் சூழலில் கவனம் அதிகம் தேவை.. கோபம்,டென்சனை குறைக்க வேண்டும்..மருத்துவ செலவுகள் காத்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

விருச்சிகம் ராசியினரை பாம்பு,தேள் கடிக்கும் இரண்டும் இல்லைனா நாயாவது கடிக்கும்னு சொன்னா செம கடுப்பாயிடுவாங்க..நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம் யாரு உங்களை இப்போ கேட்டானு டென்சனாயிடுவாங்க..இருந்தாலும் சொல்லிடுறேன்.
அரசு வேலையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையா இருக்கனும் செய்த தவறோ செய்யாத தவறோ ,வழக்கு தேடி வரும் காலம் அஷ்டமத்தில் ராகு தரும்.சனி படுத்திய பாடு கொஞ்சநஞ்சமில்ல நெகடிவாக இருப்பினும் சொல்வது என் கடமை.ஃபுட் பாய்சன் உபத்திரவத்தில் அதிக மருத்துவ செலவுகள் எட்டில் ராகு வந்த போது பலருக்கு நடந்திருக்கிறது...கணவன் அல்லது மனைவிக்கு பண விசயத்தில் பெரிதாஅக ஏமாந்தோ அல்லது கடன் அல்லது அறேஉவை சிகிச்சை சிலருக்கு நடந்திருக்கு.எட்டில் ராகு வந்தபோது சில அரசாங்க ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கி கொண்டார்கள் ..

எட்டில் கேது உட்காருற இடத்தில் கட்டி இது ரிசபம் ராசிக்கு..கட்டி,புண்,காலில் காயம் உண்டாக வாய்ப்பிருக்கு..அது உங்கள் வாழ்க்கை துணைக்காகவும் இருக்கலாம்..ஆண்களுக்கு இரண்யா,மூலம் சம்பந்தமான பிரச்சினைகளும் பெண்களுக்கு கர்ப்பபை,இடுப்பு,முதுகெலும்பு கீழ்பகுதி சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகும்

ராகு கேது பெயர்ச்சி;மேசம்,துலாம் ராசியினருக்கு உங்களுக்கு நல்லாருக்கும்..மாமனார் மற்றும் தம்பி,தங்கைக்கு ஆகாது அவர்களுக்கு உடல் பாதிப்பு,தொழில் பாதிப்பு அல்லது அவர்கள் வழியில் கருத்து வேறுபாடு, பிரிவு உண்டாகும் 

ராகு கேது ஒரு நிழல் கிரகங்கள்..அதாவது இருள்.இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்துக்கு வரப்போகும் ராசியினர் மேசம்,கடகம்,சிம்மம்,மகரம் தடைகள் விலகும் மனக்குழப்பங்கள் தீரம் தன்னம்பிக்கை அதிகமாகும்...எதிரிகளை வெல்வீர்கள்...வருமானம் அதிகமாகும்.தொழில் அபிவிருத்தி ஆகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குழந்தையின் ஜாதகம் பார்க்கலாமா..?

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கும்போது தாய்,தந்தை நிலை ,மாமன் நிலை,தாத்தா ,பாட்டிக்கு எப்படி எனும் விபரமும் குழந்தையின் ஆரோக்ய விபரம் மட்டும் பார்க்கலாம்...
குழந்தைக்கு செவ்வாய் தோசம் இருக்கா ,களத்திர தோசம் இருக்கா..என்ன படிப்பு படிக்கும்...கல்யாணம் எப்போ ஆகும் என்றெல்லாம் கேட்டு ஜோசியரை அதிர்ச்சியாக்காதீங்க..அது குழந்தை..
12 வயது வரை நான் மேலே சொன்ன விசயங்களையும் 12 வயதுக்கு மேல் கல்வி சம்பந்தமானவற்றையும் ,ஆயுள் ஆரோக்கியம்,தாய் தந்தைக்கு உதவியா உபத்திரவமா என்பதையும் ,ஆஸ்டலில் படிக்கலாமா என்பதையும் பார்க்கலாம் ..
20 வயதுக்கு மேல்தான் செவ்வாய் தோசம்,நாகதோசம்,களத்திர தோசம் எல்லாம் யோசிக்கனும் 2 வயசு குழந்தைக்கு திருமண வாழ்க்கை எப்படி என்று கேட்டவருக்கு நேற்று நான் சொன்ன பதில்.

தை அமாவாசை அன்னதானம் நன்றிஆதரவற்றகுழந்தைகள் ,முதியவர்கள்,ஊனமுற்றோர்க்கு அன்னதானம் ,ஆடை தானம் நண்பர்கள் பங்களிப்புடன் வழங்கப்பட்டது
ஆதரவளித்த நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் நீடூழி வாழ அனைவரும் வாழ்த்தினர் ..கோயில்களிலும் சிறப்பு அர்ச்சனை வழிபாடு அவர்கள் பெயரில் செய்ய இருக்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் 
Image may contain: 2 people, people eating and people sittingImage may contain: one or more people, people standing, food and indoor